Sunday, September 10, 2017

இந்துக்களின் தாய்மதம்

இந்து மதத்தில் இருந்து வெளியேறி கிறிஸ்துவம் போன்ற வற்றில் இனைந்து பின் மீண்டும் இந்து மதத்துக்கு திரும்புவதை தாய் மதம்  திரும்புதல் என்று குறிப்பிடுகின்றனர்.அத்தையவர்களை இந்து மதத்துக்கு அழைப்பதை  தாய் மதம் திரும்புவதற்கான அழைப்பு என்று கூறுகின்றனர் . அது போல் ஹிந்துத்துவ வாதிகள்  முஸ்லிம்கள் மீது தாக்குதல்  தொடுப்பதற்கு காரணமாக அவர்கள் தாய் மதமான இந்து மதத்தை   விட்டு விட்டு அண்ணிய மதத்தில் இறுப்பதுதான்  என்ற கருத்தும் பரவலாக கூறப்படுகிறது.
நாம் சிறிது ஆய்வு  செய்து பார்த்தால் இந்துக்களின்  தாய் மதமே இஸ்லாம் தான் என்பதை  எளிதாக புரிந்து கொள்ளலாம்.அதாவது இஸ்லாம்  கூறும் எல்லாம் வல்ல இறைவன்  ஒருவனை மட்டுமே வணங்கி வழிபடும் நடைமுறை தான் முற்காலத்து   இடைசெருகல்  இல்லாத இந்து மதத்தின் நடைமுறையும்! பிற்காலத்தில் தான் மனிதன் உள்ளிட்ட  படைக்கப்பட்ட வற்றைவணங்கும் பாவச்செயல் இந்து மதத்தில் புகுத்தப்பட்டது.
மனித கருத்துக்களால் மாற்றத்துக்கு ஆளாவதற்கு முன்பு எல்லாம் வல்ல இறைவன் ஒருவனை மட்டுமே வணங்கி  வழிபட வேண்டும் என்பது தான் இந்து மத கொள்கையாக இருந்தது என்பதற்கு இந்து மதத்தின் வேதங்களில்  ஆதாரம் உள்ளது.
அத்தகைய வேத வசனங்களில் சிலவற்றை காண்போம்;
ரிக்வேதம் :
மானோ ஹிம்ஜுஜ நிதாயஹ் ப்ருதிவ்யா
யோ வா திவம் சத்ய தர்மா ஜஜான
யவிசர் பஷ்ச்சந்தரா  ப்ருஹதீர் ஜஜான
கஸ்மை தேவாய ஹவிஷ விதமே
(ரிக்வேதம்  10:121:9)

பொருள் : எவர் பூமியை உண்டாக்கினாரோ, அதுபோல் உண்மையை நியாயமாக்கி  வைத்து கொண்டு இருக்கும்  எவர்  தெய்வாமிர்தத்தை உண்டாக்கினாரோ,எவர் நீரையும் பிரகாசத்தையும் உண்டாக்கினாரோ அந்த படைப்பாலனே நம்மை பரிபாளிகின்றான்.அதனால் அவனை மட்டுமே வழிபடுக!

ஹிரன்ய ஹர்பஹ ஸமவர்த்த தாக்கரே
பூதஸ்ய ஜாதஹ பரிதேச ஆஸித்
ஸதாதார பிரதிவீம் தியாமு தேமாம்
கஸ்மை தேவாய ஹவிஷா விதேம்
(ரிக்வேதம் 10:121:1)

பொருள் : ஆதியில் ஹிரன்ய ஹர்பன் மட்டுமே இருந்தது.அவன்தான் சகலவாத ஒளிரும் வஸ்துக்களுக்கு ஆதாரமானவன்.அவன்தான் பூமியையும்,சூரிய சொர்க்க லோகங்கள் அனைத்தையும்  படைத்தது பரிபாலித்து வருபவன்.அவனிடமிருந்து தான் சகல வஸ்துக்களும் உண்டானது.உலகம் அனைத்தும் அவன் கட்டளை படியே இயங்கும்.அதனால் அவனை மட்டுமே வழிபடுக.

பகவத் கீதை:
பிதாஸி  லோகாஸ்ய  சராசஸ்ய த்வமய புஷ்யச்ய குரூர்
கரியான் நத்வத்சுமோ ஸத எப்பதிக
குதோ ன்யா லோகத்தரயே ப்யப்ரதமி ப்ரபாவ
தஸ்மாத் ப்ரனம்ய ப்ரணீதாய காயப்
பிரஸாதயே த்வா மஹ மீஸ மீட்யம்
(பகவத் கீதை 11:43:44)

பொருள் : ஒப்புயர்வில்லாத பெருமை வாய்ந்தவனே! நீ இந்த அசைவதும் அசையாததுமாகிய உலகத்திற்கு தகப்பனும் பூஜித்ததற்குரியவனும்,பெரியவர்க்கு பெரியவனும் ஆகின்றாய்.மூவுலகிலும் உனக்கு சமமானவர் இல்லை.இன்னும் மேலானவர் எங்ஙனம் தேவா! ஆகையால் நான் உடலை தாழக்கிடத்தி  நமஸ்கரித்து பூஜிதத்தர்க்குரிய இறைவனாகிய உன்னை இறையஞ்சுகிறேன்.
இந்த வசனங்களும் இந்த கருத்தில் அமைந்த வேறு வேத வசனங்களும் இந்து மதத்தின் சரியான,பூர்வீக நம்பிக்கை ஓர் இறைவனை மட்டுமே நம்பி,வணங்கி வழிபடுவதுதான் என்பதை உணர்துகின்றன.

இடைச்செருகல்  : 
அப்படியானால் பல தெய்வங்களை நம்பி வழிபடுவது எப்படி  நுழைந்தது?
மனிதர்கள் இந்து மதத்தில் செய்த இடைச்செருகல்  மூலமாகத்தான் பல தெய்வ நம்பிக்கை தோன்றியது. யாரேனும் மறுத்தால்,ஹிந்துக்களின் நிகழ்கால  செயல் பாடுகளில்  இருந்தே பல தெய்வ நம்பிக்கை இடைச்செருகல்தான் என்பதை நம்மால் நிறுவ முடியும் .
எப்படியெனில் இப்போது இந்துக்கள் அனைவரும் (அல்லது பெரும்பாலானோர் ) ஜாதி வேற்றுமை கூடாது,அது தவறு என்று கூறுகின்றார்கள்.மனிதர்கள் அனைவரும் சமம் என்கிறார்கள்.
ஆனால் இந்து மதத்தின் அடிப்படை நம்பிக்கயையும் சட்டங்களையும் போதிக்கும் மனுதர்மத்தில் ஜாதி வேற்றுமை உண்டென்று கூறப்பட்டுள்ளது.உயர் ஜாதியினர்கான சட்டமும் கீழ் ஜாதியினர்கான சட்டமும் அதில் விளக்கபடுகிறது.
அப்படியானால் ஜாதி வேற்றுமை கூடாது என்றும்  குலங்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வு இல்லை என்றும் கூறும் அணைத்து ஹிந்துக்களும்,மனுதர்மத்தில் உள்ளவை மனிதர்களால் உருவாக்கப்பட்டு மதத்தில் இடைசெருகல் செய்யப்பட்டது என்று கூறுகின்றனர்.
இதன்படி வேத வசனங்கள் பலவற்றில் இறைவன் ஒருவன்தான் என்றும் அவனைமட்டும் தான் வணங்கி வழிபட வேண்டும் என்று  கூறப்பட்டிருக்கும் நிலையில்,மக்களின் நடைமுறையில் பல தெய்வ நம்பிக்கை இருக்கிறதென்றால் இந்த நடைமுறைதான் இடையில் புகுத்தப்பட்ட தவறு என்பதை இலகுவாக அறிந்து கொள்ளலாம்.
முரண்பாட்டுக்குத் தீர்வு: 
ஹிந்து மத வேதங்களில் சில வசனங்கள் பல தெய்வ நம்பிக்கையை ஆதரிக்கும் விதத்தில் இருந்தால் அவற்றை இடைசெருகல் செய்யபட்டவையாகத்தான் எடுத்துக்கு கொள்ள வேண்டும்.ஏனென்றால்,ஒரே கடவுள் தான் இருகின்றான் என்ற கருத்தையும் பல கடவுள்கள் இருகின்றனர் என்ற கருத்தையும் ஒரே வேதம் சொல்லும் போது முரண்பாடு ஏற்படுகிறது.இப்போது கடவுள் மனிதனுக்கு கொடுத்துள்ள அறிவைப் பயன்படுத்தி முடிவு செய்ய வேண்டும்.
அறிவைப் பயன்படுத்திப் பார்த்தால்,பல கடவுளர்கள் இருப்பது சாத்தியமில்லை என்ற முடிவுதான் கிடைக்கிறது.ஏனென்றால் பல கடவுளர்கள் இருந்திருந்தால் அவரவர் தாம் நாடுவதை செய்ய முற்படுவார்கள் அப்போது அவர்களுக்குள் போட்டி வந்து பிரபஞ்சத்தை நாசம் செய்திருப்பார்கள் .
நடைமுறை ஆதாரம்:
ஆகவே ஓரே இறைவனைத் தவிர வேறு தெய்வம் இல்லை,இதற்கு ஹிந்துக்களின் நடைமுறையிலிருந்தும் நாம் ஆதாரம் காட்ட முடியும்.
இறைவனின் தன்மை குறித்து “எல்லாம் வல்ல இறைவன்” என்று கூறுகின்றனர்.”இறைவன்கள்” என்று சொல்வதில்லை.இறைவன் என்று ஒருமையாக குறிபிடுகின்றனர் அத்துடன் அவன் எல்லாம் செய்ய வல்லவன் என்றும் வர்ணிக்கின்றனர் .எனவே அதே தகுதியில் வேறொருவர் இல்லை என்ற நம்பிக்கையையே இதில் வெளிபடுத்துகின்றனர்.இவ்வாறு இறைவன் ஒருவன் தான் என்பதை குறிப்பிடும் வார்த்தைகளை இந்துக்களின் பேச்சு நடைமுறையில் காணலாம்.
தாய்மதம் திரும்புக :  
ஆக இந்துக்களின் பூர்வீகமான இறைநம்பிக்கையான ஓரிறைக் கொள்கையை இஸ்லாத்தின் வேதம் திரு குர்ஆன்  இவ்வாறு கூறுகிறது:
கூறுவீராக! இறைவன் அவன் ஒருவனே.இறைவன் (எவரிடமும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெற்றெடுக்கவுமில்லை.(எவராலும்) பெற்றெடுக்கபடவும் இல்லை.அவனுக்கு நிகராக எவருமில்லை.
(அத்தியாயம் 112)
இதுபோல் இந்து மதத்தினரின் பூர்வீக நம்பிக்கையான ஓரிறைக் கொள்கையை வலியுறுத்தும் வசனங்கள் ஏராளம் உள்ளன.
ஆகவே இந்துக்கள் தங்களின் பூர்வீக இறைநம்பிக்கையை ஏற்பதன் மூலம் தங்களின் தாய்மதமான இஸ்லாத்திற்கு திரும்ப வேண்டும்.

முஸ்லிம்கள் கஃபாவை ஏன் வணங்குகின்றனர்?

கேள்வி
இஸ்லாம் சிலை வணக்கத்தை எதிர்க்கிறது இருப்பினும் முஸ்லீம்கள் ஏன் கஃபாவைத் தொழுகிறனர்?

பதில்
முஸ்லீம்கள் தொழுகையில் கஃபாவை வணங்கவில்லை மாறாக கஃபா இருக்கும் திசை நோக்கி தம் முகத்தை வைத்துக் கொண்டு தொழுகின்றனர். (முன்னோக்கியவர்களாக) இது இஸ்லாமியர்களின் வணக்க வழிபாடுகள் ஒரே சீராக இருக்க வேண்டும் என்பதற்காக இரட்சகனின் விருப்பப்படி நடக்கிறது.
நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம் எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம் ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பித் தொழுங்கள் நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள்இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள் அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை. (2:144)

ஆகவே கிழக்கு பாகங்களில் இருப்போர் கஃபா இருக்கும் மேற்கு நோக்கியும் மேற்கில் இருப்போர் கஃபா இருக்கும் கிழக்கு நோக்கியும் தொழுவர்.

முதன் முதலில் உலக வரைபடத்தைத் தந்தவர்கள் முஸ்லீம்களே. அவர்களின் வரைபடத்தில் தெற்கு மேலும் வடக்கு கீழும் கஃபா எனும் இறையாலயம் வரைபடத்தின் நடுவிலும் இருந்தது. பின்னரே மேற்கத்தியர்கள் வரைபடத்தை மாற்றியமைத்தனர். வடக்கை மேற்புறமும் தெற்கை கீழ் புறமுமாக மாற்றினர். இருப்பினும் இவ்வரை படத்திலும் கபா உலகின் மையமாக உள்ளது.

·பாவை வலம் வருவது ஓரிறைக்கொள்கையை உணர்த்துவதற்கே. மக்காவிலுள்ள கஃபாவை முஸ்லீம்கள் வலம் வருவர்இதற்கு தவாப் என்று பெயர். ஒவ்வொரு வட்டத்துக்கும் ஒரு மையம் (Center) இருப்பது போல் ஒட்டு மொத்த உலக படைப்புகளுக்கம் ஒரு இரட்சகன் உள்ளான் என்பதை பறைசாற்றுவதாக உள்ளது.

நீ ஒரு கல்லாக உள்ளாய். உன்னால் எனக்கு எந்த பயனையோதீங்கைபோ செய்யவியலாது. நபி(ஸல்) அவர்கள் உன்னை தொட்டு முத்தமிடுவதை நான் கண்டிராவிடில் உன்னை நான் ஒரு போதும் தொட்டிருக்கமாட்டேன் (முத்தமிட) என்று உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்கள் கூறுகிற செய்தியை ஹதீஸ் புகாரியில் காண்கிறோம்.

நாம் முஸ்லிம்கள் கஃபாவை வணங்குவதில்லை. மாறாக கஃபாவை படைத்த அல்லாஹ்வையே வணங்குகிறோம். மேலும் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் பிலால்(ரலி) அவர்கள் கஃபா மீது ஏறி பாங்கோசை ஒலித்ததை ஹதீஸ்களில் காண்கிறோம்.

சிலை வணக்கம் மனதை ஒரு நிலைப்படுத்தவே

கேள்வி:
இந்து மதக்குருக்களும், அறிஞர்களும் சிலை வணக்கத்தை வேதங்களும், ஸ்ருதிகளும் தடுத்திருக்க இந்துக்கள் சிலை வணக்கத்தை ஏன் மேற்கொண்டுள்ளனர் என்ற கேள்விக்கு கடளை வழிபாடு செய்வதில் மன நிலையை உறுதியாக ஒரு முகப்படுத்த சிலை வணக்க வழிபாடு அத்தியாவசியமாகிறது எனக் கூறுகின்றனர். முஸ்லிம்கள் மட்டும் எவ்வாறு உருவமின்றி மனதை ஒருமைப்படுத்த முடிகிறது?

பதில்:
இந்துப் பண்டிதர்களும் அறிஞர்களும் இறை வழிபாட்டில் மனதை ஒரு நிலைப்படுத்த மட்டுமேசிலை தேவைப்படுகிறது. ஒரு நிலைப்படுத்துப் பட்டபின் சிலையின் அவசியமில்லை எனக்கருத்துக் கூறுகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ உருவமற்ற இறைவனை அவனின் தன்மைகளை (சிபத்துகளை) மனதில் கொண்டு வணக்க வழிபாடகளின் போது நாம் சக்திமிகு படைத்த வல்லோனுடன் உரையாடுகிறோம் எனும் தூய எண்ணத்துடன் தம் மனதை ஒரு நிலைப் படுத்திவிடுகின்றனர். சிலைகள் போன்ற உருவங்களின் அவசியம் முஸ்லீம்களுக்கு தேவைப்படுவதில்லை.

குழந்தை இடி ஏன் முழங்குகிறது எனக் நம்மிடம் கேட்டால்நாம் அக்குழந்தைகளிடம் பாட்டி வானில் மாவு ஆட்டுகிறாள் ஆகவே அவ்வாறு சப்தம் கேட்கிறது என்று பதில் கூறகிறோம். அக்கேள்விக் குறிய இப்பதிலைக் குறித்து அக்குழந்தைகள் ஆழமாக சிந்திக்க வியலாததால் நம் பதிலில் திருப்தியுறுவது போல் ஆரம்பத்தில் இறை வழிபாட்டில் மனதை ஒரு நிலைப்படுத்த சிலை வணக்கம் அவசியப்படுகிறது என்று ஸ்வாமி ஒருவர் சிலைவழிபாட்டை நியாயப் படுத்துகிறார். ஆனால் இஸ்லாமமோ தெளிவாக எந்த ஒரு விஷயத்தையும் தெரிந்துபோல் பொய்யாகக் கூறுவதையும் தடைசெய்கிறது. குழந்தையிடம் கூறும் அப்பொய்க்காரணம் அக்குழந்தை பள்ளிக்கு செல்லும் நாளில் அங்கு ஆசிரியர் கற்பிக்கும் போது ''இடியனது மின்னலுக்கு பின் ஏற்படுகிறது" என்ற செய்தியைக் கேட்டதும் ஆசிரியர் பொய்சொல்கிறார் அல்லது நம் பெற்றோர் நமக்குச் சொன்னது பொய்யாஎன்ற ஆராய்ச்சியில் இறங்கும். ஆகவே சுருக்கமாக குழந்தைகளுக்கு இந்தப் பதிலை பொய் கலவாமல் கூற வேண்டியது. நமக்கு பதில் தெரியாத பட்சத்தில் தெரியவில்லை என்ற உண்மைப் பதிலையே கூற முயற்சிப்பது பெற்றோரின் கடமை.

மனதை ஓர்மைப் படுத்த சிலை வணக்கம் நாடுவோரின் மனோதத்துவம் சரியாமனதை ஒரு நிலைப் படுத்த ஆரம்பத்தில் சிலை தேவைப்படுகிறது என வாதிவோர் கூற்று முற்றிலும் அபத்தமானது. சில இந்து மதப் பண்டிதர்கள் சிலை வணக்க வழிபாட்டை சரியென வாதிடும்போது மனதை ஆரம்பத்தில் ஒரு நிலைப் படுத்த சிலை அவசியமாகிறது. ஒருமைப்படுத்தப்பட்ட பின் சிலை தேவையில்லை என்று கூறுகின்றனர். ஆரம்பத்தில் வணக்க வழிபாட்டுக்கு பயிற்று விக்கப்படும் மாணவன் ஒருவனுக்கு இச்சிலை தேவைப்படுகிறது. பின்னர் அவசியமில்லை என்று அழகாக கூறுகின்றனர். ஆனால் ஆரம்ப நிலையில் மாணவனுக்கு கற்றுக் கொடுக்கப்படும் இரண்டும் இரண்டும் 4 என்ற நிலை தான் அவன் முதல் வகுப்பிலிருந்து ஆயு படிக்கும் வரை இறக்கும் வரை தொடர்கிறது. ஆகவே அடிப்படை என்றும் மாறுவதில்லை. ஆரம்பத்தில் இருக்கும் அடிப்படையே அஸ்திவாரம் அது என்றென்றும் பின் பற்றக் கூடிய ஒன்றே. ஆகவே சிலை வணக்கம் என்ற தவறான கொள்கை மனதை ஒருநிலைப்படுத்த என்று கொள்வது மிகமிக அபத்தமானது வேதங்கள் இறைவனைப் பற்றிக் கூறும் போது அவன் உருவமற்றவன் ஏகன் என்றே கூறுகின்றன. இன்னும் உங்களின் மாணவன் இரண்டும் இரண்டும் 5 எனக் கூறினால் அவனை அப்பொழுதே 4 எனத் திருத்துவது போல் சிலைவணக்கம் என்பதையும் திருத்த இந்துப் பண்டிதர்கள் முற்படவேண்டடும்.

பிறக்கும் குழந்தைகள் சில ஆரோக்கியமானவையாகவும் சில அங்கஹீன மாகவும் பிறக்கின்றனவே ஏன்? கடவுள் நீதி செலுத்துபவர் தானா?

கேள்வி :
பிறக்கும் குழந்தைகள் சில ஆரோக்கியமானவையாகவும் சில அங்கஹீன மாகவும் பிறக்கின்றனவே ஏன்? கடவுள் நீதி செலுத்துபவர் தானா?

பதில்:
அல்லாஹ் மனிதனை பல்வேறு சோதனைக் களம் என்று குர்ஆன் குறிப்பிடுகிறது.
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன்மரணத்தையும் வாழ்வையும் படைத்தான் மேலும்அவன் (யாவரையும்) மிகைத்தவன் மிக மன்னிப்பவன்.(67:2)

அல்லாஹ் மனிதனை பல்வேறுவழிகளில் சோதிக்கிறான் பள்ளிகளில் நிகழும் தேர்வுகளில் வினாத்தாள்கள் ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு கேள்விகள் மாற்றி மாற்றி கேட்கப்படுகின்றன. அதுபோன்று மனிதனை படைத்த இரட்சகன் பல்வேறு வழிகளில் சோதிக்கின்றான் அதாவது சில குழந்தைகளை நோயுற்றதாகவும் சில குழந்தைகளை செல்வ நிலையுடனும் சிலதை வறுமையுடனும் பிறக்க வைக்கிறான்.

சோதனைகளில் எதிர்கொள்ளும் துன்பத்தைப் பொறுத்தே தீர்ப்பு வழங்கப்படுகிறது.
அல்லாஹ் தன் படைப்புகளை அதிகம் சோதித்தால் அச்சோதனையின் கடினத்தைப் பொறுத்து அதன் மீது வழங்கும் தீர்வில் எளிமையைக் கையாள்கிறான். இதனை எளிதில் நாம் புரிந்து கொள்ளலாம். அதாவது ஏழ்மையில் உழலும் ஒருவன்தான் சுய தேவையைப் பூர்ததி செய்யவே மிக அல்லலும் துன்பமும் படுகிறான். எனவே ஜக்காத் அவன் மீது சுமத்தப்படவில்லை. ஆகவே ஜக்காத் என்னும் இஸ்லாமியக் கடமையைப் பொறுத்தவரை இந்த ஏழை நூறு சதவீத பலனை நுகர்கிறான். மாறாக பணம் படைத்து செல்வந்தனோ ஜக்காத் வகையில் பல கேள்விகளுக்கு இறைவனிடம் ஆளாகி ஏழை பெற்றது போல் முழுப்பலனையும் பெற முடியாமல் சிக்கித் தவிக்கிறான். ஆக சோதனையின் கடினம் ஒருவனின் மறுமை வாழ்வில் தீர்வில் எளிமையை வழங்குகிறது.

சிலரை அல்லாஹ் குருர்களாசெவிடர்களாக அங்கஹீனனாகப் படைப்பதன் காரணம் அக்குழந்தை செய்த எந்தத் தீங்கும் அல்ல மாறாக அதன் பெற்றோர்கள் அல்லாஹ்வின் சோதனைக்குள்ளாக்கப் பட்டிருக்கின்றனர். என்றே பொருள் கொள்ளவேண்டும். இச்சோதனையில் அப்பெற்றோர்கள். ஈமானிய உறுதியுடன் பொறுமை காக்கின்றனராபுலம்பித்தீர்க்கின்றனரா என சோதித்தறியவே. இதை கீழ்கண்ட அருள் மறை வசனம் தெளிவுபடுத்துகிறது.

''நிச்சயமாக உங்கள் செல்வமும்உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன் நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு"" என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள். (8:28)

ராமரும், கிருஷ்ணரும் இறைவனின் திருத்தூதர்களா? இறைத்தூதர்கள் ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும், ஒவ்வொரு மொழியிலும் உலகெங்கும் அனுப்பட்டிருக்கும் போது இந்தியாவுக்கு அனுப்பட்டிருப்பார்கள். ஆகவே ராமரையும், கிருஷ்ணரையும் இறைத்தூதர்களாக ஏற்றுக் கொள்ளளாமா?


கேள்வி:
ராமரும், கிருஷ்ணரும் இறைவனின் திருத்தூதர்களா? இறைத்தூதர்கள் ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும், ஒவ்வொரு மொழியிலும் உலகெங்கும் அனுப்பட்டிருக்கும் போது இந்தியாவுக்கு அனுப்பட்டிருப்பார்கள். ஆகவே ராமரையும், கிருஷ்ணரையும் இறைத்தூதர்களாக ஏற்றுக் கொள்ளளாமா?

பதில்: இதனை கீழ் கண்ட குர்ஆன் வசனங்கள் தெளிவுபடுத்துகிறது.

நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டுநன்மாராயங் கூறுபவராகவும்அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத எந்த சமுதாயத்தவரும் (பூமியில்) இல்லை (35:24)

இன்னும் (நபியே! உம்மைப்பற்றி இந்நிராகரிப்போர் ''அவருக்கு அவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்பும்) அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?" என்று கூறுகிறார்கள் நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரே ஆவீர்மேலும்ஒவ்வொரு சமூகத்தவருக்கும் ஒரு நேர்வழி காட்டியுண்டு(13:7)

இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம் இன்னும் (வேறு) தூதர்கள் (பரரையும் நாம் அனுப்பினோம் ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை. இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்.(4:164)

திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம் அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம் இன்னும் எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ (அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர்; (இவ்விருசாராரில்) எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த அத்தாட்சியையும் கொண்டு வருவதற்கு (அதிகாரமும்) இல்லை. ஆகவே அல்லாஹ்வுடைய கட்டளை வரும் போது, (அனைவருக்கும்) நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும் அன்றியும்அந்த இடத்தில் பொய்யர்கள் தாம் நஷ்டமடைவார்கள்.(40:78)

25 நபிமார்கள் பெயரே குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. (உ-ம்) ஆதம்(அலை), நூஹ்(அலை), இப்ராஹீம்(அலை), மூஸா(அலை), தாவூத்(அலை), சுலைமான்(அலை), ஈஸா(அலை)முஹம்மது(ஸல்) போன்ற இறைத்தூதர்கள்.

ஹதீஸின்படி உலகிற்கு இதுவல்லாமல் பல நபிமார்கள் இறைவனால் அனுப்பபட்டதை தெளிவுபடுத்துகிறது. அவ்வாறு அனுப்பட்ட இறைத்தூதர்கள் அவர்கள் சார்ந்திருந்த சமூகத்தை ஒரு குறிப்பிட்ட காலம் வாழும் வரை நேர் வழிப்படுத்தவே வந்தனர். அருள்மறை குர்ஆன் கூறுகிறது:

இஸ்ராயீலின் சந்ததியனருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான் இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்) ''நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன் நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன் அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும்வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன் அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோதையும் உயிர்ப்பிப்பேன் நீங்கள் உண்பவற்றையும்நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்ற நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவென். நீங்கள் முமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது" (என்று கூறினார்). (3:49)

நபி முஹம்மது(ஸல்) இறுதி இறைத்தூதராவார் என்பதை கீழ்கண்ட குர்ஆனி வசனம் தெளிவுபடுத்துகிறது.

முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லைஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும்நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.(33:40)

நபி முஹம்மது(ஸல்) ஒட்டுமொத்த மனித சமுதாயத்துக்கும் நபி ஆவார் என்பதை கீழ்கண்ட குர்ஆனி வசனம் தெளிவுபடுத்துகிறது.

(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (21:107)

இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லைஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.(34:28)

ஹதீஸ்: ஒவ்வொரு நபிமார்களும் அவர்களின் சமுதாய மக்களுக்காக மட்டுமே அனுப்பபட்டனர். நான் மனித சமுதாயம் அனைத்துக்கும் நபியாவேன். (புகாரி:ஜாபிர்(ரலி))

குர்ஆனிலோ அல்லது ஸஹீஹான எந்த நபி மொழிகளிலும் தெளிவான ஆதாரங்கள் எதுவும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் குறித்து காணப்பட்வில்லை. மேலும்இராமர் குறித்தோ கிருஷ்ணர் குறித்தோ எந்தப் பெயரும் கூட குர்ஆன்ஹதீஸ்களில் தென்படவில்லை. ஆகவே அவர்கள் இறைத்தூதர்களாக இருக்கவும் செய்யலாம் இல்லாமலும் இருக்கலாம். உறுதியாக இருவரும் இறைத்தூதர்கள் தான் என்று எவரும் கூற வியலாது. சில முஸ்லீம்கள் அரசியல்வாதிகள் மாற்று மதத்தாரின் ஓட்டுக்களைப் பெற அவர்களின் மனதில் இடம் பிடிக்க ராம்(அலை) எனக்கூறி வருகின்றனர். இது முற்றிலும் தவறே. ஏனெனில் ராம் இறைத்தூதராஏன்பதே தெளிவு செய்யப்பட்டாத போது குர்ஆன் ஹதீஸின் தெளிவின்றி மனோ இச்சைப் பிரகாரம் இவ்வாறு கூறுவது முரணானது. அநேகமாக அவர்களும் இறைத்தூதர்களாக இருந்திருக்கலாம்அல்லாஹ் அறிந்தவன் என்றே கூறவேண்டும்.

இராமரும்கிருஷ்ணரும் இறைத்தூதர்களாகயிருந்தாலும் கூட இன்றும் நாம் முஹம்மது (ஸல்) அவர்களையே பின்பற்றுதல் வேண்டும். ஏனெனில் இராமரும்,கிருஷ்ணரும் இறைத்தூதர்களாக இருந்திருப்பினும் அவர்கள் குறிப்பிட்ட கால கட்டத்துக்கு குறிப்பிட்ட சமுதாய மக்களுக்கே இறைத்தூதர்களாக இருந்திருப்பார்கள். ஆனால் இன்றோ ஒட்டு மொத்த உலக மனித சமுதாயத்தாருக்கும் (இந்தியா உட்பட) இறுதி இறைத்தூதராக அனுப்பப்பட்ட முஹம்மது(ஸல்) அவர்களையே பின்பற்றுதல் வேண்டும்.

வேதங்கள் இறைவாக்காக இருந்தாலும் கூட குர்ஆனைப் பின்பற்ற வேண்டுமா?

கேள்வி:
வேதங்கள் இறைவாக்காக இருந்தாலும் கூட குர்ஆனைப் பின்பற்ற வேண்டுமா?

பதில்: வேதங்களும்புராணங்களும் கடவுளினால் அருளப்பட்ட உண்மை வேத வாக்குகளாக இருந்தாலும் கூட அவை அச்சமுதாய மக்களை நேர்வழிப் படுத்த அந்த நேரத்தில் அருளப்பட்ட இறைவாக்குகளாகும். இருப்பினும் குர்ஆனோ பழைய வேதங்களை உண்மைப்படுத்தி ஒட்டு மொத்த உலக சமுதாயம் பின்பற்றுவதற்காக அருளப்பட்டது. மேலும் பழைய வேதங்கள் இன்றையவும் முழுமையாகப் பாதுகாக்கப்படவில்லை. அவைகள் அருளப்பட்ட மூல நிலையிலுமில்லை. தம்மை இறைவேதம் எனும் வாதிடும் எந்த வேதமும் அதன் மூலமொழியில் பாதுகாக்கப்படவில்லை. கால சூழ்நிலைகளுக்கேற்ப மாறுதல்,கூட்டுதல்குறைத்தல்திரித்தல்கழித்தல்சேர்த்தல்நீக்குதல் ஆகியவை நிகழ்ந்துள்ளன. இது போன்ற குறைகள் நேராமல் குர்ஆனை மட்டும் பாதுகாத்து இருப்பதாக அல்லாஹ் கூறுவதைக் கீழ்கண்ட குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகிறது.

நிச்சயமாக நாம்தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம் நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். (15:9)

ஒவ்வொரு காலகட்டத்திலும் அல்லாஹ் வேதங்களை அருளினானா? இந்தியாவுக்கு எந்த வேதம் அருளப்பட்டது? வேதங்களையும் இதர புராணங்களையும் அல்லாஹ்விடம் இருந்து அருளப்பட்ட வாக்குகளாகக் கொள்ளலாமா?

கேள்வி:
ஒவ்வொரு காலகட்டத்திலும் அல்லாஹ் வேதங்களை அருளினானா? இந்தியாவுக்கு எந்த வேதம் அருளப்பட்டது? வேதங்களையும் இதர புராணங்களையும் அல்லாஹ்விடம் இருந்து அருளப்பட்ட வாக்குகளாகக் கொள்ளலாமா?

பதில்: வேதவாக்குகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் அருளப்பட்டன. குர்ஆன் கூறுகிறது:

(நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னரும்நாம் தூதர்களை அனுப்பி வைத்தோம் அவர்களுக்கும் மனைவியரையும்சந்ததிகளையும் நாம் ஏற்படுத்தியிருந்தோம் மேலும்எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமிதியில்லாமல் எந்த அத்தாட்சியையும் கொண்டுவந்ததில்லை. ஒவ்வொரு தவணைக்கும் ஒரு (பதிவு) ஏடு உள்ளது.(13:38)

நான்கு வேதங்கள் பற்றி குர்ஆன் கூறுவது தெளராத், ஸபூர், இன்ஜீல், குர்ஆன்.
தவ்ராத் - மூஸா(அலை)
ஸபூர் - தாவூத்(அலை)
இன்ஜீல் - ஈஸா(அலை)
குர்ஆன் - முஹம்மது(அலை)

முந்திய எல்லா வேதங்களும் அந்ததந்த சமுதாய மக்களுக்கு அருளப்பட்டன. குர்ஆனுக்கு முன்பு அருளப்பட்ட வேதங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமே அருளப்பட்டது. குர்ஆன் மட்டும் ஒட்டு மொத்த உலக சமுதாயத்தாருக்கும் அருளப்பட்டது. குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்ட இறுதி வேதம். இது முஸ்லிம்களுக்கு மட்டும் வேதநூல்அரபிகளுக்கு மட்டுமே வேதநூல் என்ற வாதங்கள் தவறு குர்ஆன் கீழ்கண்ட வசனங்களில் குறிப்பிடுகிறது.

அலிப்லாம்றா. (நபியே! இது) வேதமாகும் மனிதர்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு இருள்களிலிருந்து வெளியேற்றப் பிரகாசத்தின் பால் நீர் கொண்டுவருவதற்காக இ(வ் வேதத்)தை நாமே உம்மீது இறக்கியிருக்கின்றோம் புகழுக்குரியவனும்வல்லமை மிக்கோனுமாகிய (அல்லாஹ்வின்) பாதையில் (அவர்களை நீர் கொண்டுவருவீராக!)(14:1)

இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப் படுவதற்காகவும் (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன் தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும் மனிதர்களுக்கு இது ஓர் அறிவிப்பாகும்.(14:52)

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும்தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. (2:185)

நிச்சயமாக நாம் மனிதர்களுக்காக உண்மையைக் கொண்டு இந்த வேதத்தை உம்மீது இறக்கியருளினோம் எனவேஎவர் (இந்த) நேர்வழியைப் பின்பற்றி நடக்கிறாரோஅது அவருக்கே (நல்லது) எவர் வழிதவறி கெடுகிறாரோ அவர் தனக்கு பாதகமாகவே வழி கெட்டுப் போகிறார்அன்றியும் நீர் அவர்கள் மீது பாதுகாவலர் அல்லர். (39:41)

வேதங்களில் ஒன்றினைந்து போரிட்ட போர் குறித்து

அகழ்போர் பற்றி அதர்வன வேதம்
அதர்வனவேதம் நூல் 20அத்தியாயம் 21சுலோகம் 6, ''விசுவாசிகளின் இறைவன்போர்க்களத்தில் பத்தாயிரம் எதிரிகளை எதிர்கொள்வதில் அவர்களின் பிரார்த்தனைக்குப் பதிலளித்து போரின்றி வெற்றியை வழங்கினான். எதிரிகள் ஆடல் பாடலுடன் போர்க்களத்தில் திளைத்திருந்தும் கூட"

1. அகழ்ப்போரில் இறைத்தூதருக்கு வழங்கிய இனிய வெற்றியை அதர்வனவேதம் மேற்கண்டவாறு கூறுகிறது.
குர்ஆன் கூறுகிறது:
அன்றியும்முமின்கள் எதிரிகளின் கூட்டுப் படைகளைக் கண்டபோது, ''இது தான்அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எங்களுக்கு வாக்களித்தது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே உரைத்தார்கள்" என்று கூறினார்கள். இன்னும் அது அவர்களுடைய ஈமானையும், (இறைவனுக்கு) முற்றிலும் வழிபடுவதையும் அதிகப்படுத்தாமல் இல்லை.(அல்குர்ஆன் 33:22)

2. சமஸ்கிருத சுலோகத்தில் இடம் பெறும் வார்த்தை ''கரோ" அரபியில் மொழியாக்கம் செய்தால் அஹ்மத் எனும் இறைத்தூதரின் மற்றொரு பெயரைக் குறிக்கும்.

3. அகழ்ப்போரில் 10 ஆயிரம் எதிரிப்படையை சந்தித்த முஸ்லிம் போர் வீரர்கள் 3 ஆயிரம் பேர் மட்டுமே.

4. சுலோகத்தின் சமஸ்கிரத வார்த்தை ''அப்ரதினி பஷ்யாஹ்" என்பதன் பொருள் போரிடாமல் எதிரிகள் விரட்டப்பட்டு வெற்றி எனப்பொருள்.

ரிக் வேதம்
ரிக் வேதம் நூல் 1அத்தியாயம் 53சுலோகம் 9, ''அஹ்மத் தம் இரட்சகனிடமிருந்து அறிவையும்மார்க்க சட்டங்களையும் சூரியனிலிருந்து வரும் ஒளிபோல் பெற்றார். அவருக்கு மார்க்க சட்டம் (ஷரிஅத்) வழங்கப்பட்டது".

குர்ஆன் கூறுகிறது:
இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமேயன்றி (வேறு எதற்கும்) அனுப்பவில்லை. ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் (அல்குர்ஆன் 34:28)

http://www.islamkalvi.com/religions/islam_hindu_comparision_06.htm

இந்து மதத்தில் அவதாரங்களும், இறைத்தூதர்களும்

இறைத்தூதர்களுக்கென இந்து மதத்தில் எந்தக் கோட்பாடும் இல்லை. இருப்பினும் அவதாரங்கள் என்று கோட்பாடு உள்ளது. ''அவ்தார்" என்னும் சமஸ்கிருத வார்த்தைக்கு ''கீழே இறங்கி வருதல் "எனப் பொருள். அவ்தார் என்னும் சொல்லுக்கு ஆக்ஸ்போர்டு அகராதியில் இந்து இதிகாசாங்கள் படி கடவுள் பூமிக்கு உடல் உருவம் கொண்டு இறங்கி வருதல் எனப் பொருள். சுருக்கமாக கடவுள் பூமிக்கு ஏதேனும் உருவம் கொண்டு இறங்கிவருதல் என உணரலாம். இந்து மத விசுவாசப் படி கடவுள் மதத்தைப் பாதுகாக்க நீதியை நிலை நாட்ட சட்டங்களை அமுல் படுத்த மனித சமுதாயத்துக்கு உணர்த்த சில உருவங்களில் அவதாரம் எடுத்து பூமிக்கு இறங்கி வந்தார் என்பதாகும். வேதங்களில் அவதாரங்கள் பற்றி எந்த குறிப்பீடுகளும் இல்லை. குறிப்பாக ஸ்ருதிகளில் எதுவும் குறிப்பிடவில்லை. இருப்பினும் ஸ்ருதிகளில் அவதாரங்கள் குறித்த செய்திகள் உள்ளன. புராணங்களிலும் இதிகாசங்களிலும் அவதராங்கள் பற்றிய செய்திகள் மலிந்து காணப்படுகின்றன. பகவத் கீதையில் 4ம் பக்கம் ஸலோகம் 7-8 கூறுகிறது. எங்கெல்லாம் அநீதி தலை தூக்கி தர்மம் சரிகிறதோ அங்கெல்லாம் தர்மத்தை நிலை நாட்ட நான் இறங்குவேன் என கடவுள் கூறுகிறார். நீதியை நிலைநாட்டஅநீதியை ஒழிக்கமார்க்க சட்டங்களை நிலை நிறுத்த நானே பூவுலகுக்கு வருவேன். ஆக பகவத் கீதையின் பிரகாரம் கடவுள் அவதாரம் எடுத்து பூமிக்கு வருகிறார். பூமியின் நீதியை நிலைநாட்டிஅநீதியை அகற்றி மார்க்கச் சட்டங்களை நிலை நிறுத்த கடவுளுக்கு அவதாரம் தேவைப்படுகிறது. புராணங்களின் படியே கடவுள் நூற்றுக்கணக்கான அவதாரங்கள் எடுத்ததை அழகுபடக் கூறுகிறது. விஷ்ணு பகவான் (ஜீவராசிகளை இரட்சித்து உணவு வழங்கும் கடவுள்). பத்து அவதாரங்களை எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன.

அவையாவன
1) மதஸ்ய அவ்தார் – மீன் அவதராம்
2) குர்ம் அவ்தார் – ஆமை அவதாரம்
3) வரஹ் அவ்தார் – பன்றி அவதாரம்
4) நரஷிம்ம அவ்தார் – பாதி மனிதன் பாதி சிம்ம அவதராம்
5) வாமண அவ்தார் – பிராமன் அவதாரம்
6) பரஷராம் அவ்தார் – பரசுராமன் அவதாரம்
7) ராம் அவ்தார் – ராமரின் (ராமாயண) அவதாரம்
8) கிருஷ்ணா அவ்தார் – பகவத் கீதையின் கிருஷ்ணர் அவதாரம்
9) புத்த அவ்தார் – கெளதம் புத்தரின் அவதாரம்
10) கல்கி அவ்தார் – கல்கியின் அவதாரம் (ஆதாரம்: ரிக் வேதம் சம்ஹித் பாகம்-12 பக்கம் 4309 ஸ்வாமி சத்ய பிரகாஷ் சரஸ்வதி)

ஆக வேதங்களிலிருந்து கூறும் சத்தியப் பாதையிலிருந்து கொஞ்சம் கொச்சமாக உண்மைக்குப் புறம்பான வழிகளுக்கு அழைத்துச் செல்லும் அவதாரங்கள் இவைகள் தாம்.

1. மனிதனைப் புரிந்து கொள்ள கடவுளுக்கு மனித உருவெடுக்க வேண்டிய அவசியமில்லை. பெரும்பாலான மதஙகள் பூமிக்கு கடவுளின் மனித உருவ வருகையை நம்பிக்கை கொண்டுள்ளன. அதற்கு சரியான மனோதத்துவ முறைப்படியான சமாதானத்தை அம்மதங்கள் கூறுகின்றன சர்வ வல்லமை படைத்த கடவுள் அதிக புனிதமானவன். எனவே அவனுக்கு கடினங்கள்கஷ்டங்கள்துன்ப துயரங்கள்பின் விளைவுகள் (மனிதனுக்கு நேர்பவை) பற்றிய அனுபவங்கள் சிந்தனைகளை அவன் அறியமாட்டான். ஒரு மனிதன் மனவேதனையின் போது எப்படி சிரமப்படுகிறான் என்பதை கடவுள் அறியமாட்டார். எனவே துன்பக் கடலில் நீந்தும் மனித சமுதாய மத்தியில் மனித உருவில் தோன்றி மனிதனின் குறை நலன்களுடன் கூடிய கடவுள் மனித அவதாரம் எடுத்து வருகிறார் என மிக லாவகமாக அவதாரங்களை நியாயப்படுத்கின்றன புராணஙய்கள்.

2. படைப்பவர் உபயோகிக்கும் முறை தயார் செய்தல்: ஒரு டேப் ரிக்கார்டர் தயாரிக்கும் உற்பத்தியாளர் (படைப்பவர்) அதனை இயக்குவது எவ்வாறுஎந்த பட்டனை அழுத்தினால் ஒலி நாடா முன்பாக செல்லும்பின்னால் செல்லும்நிற்கும், , இயங்கும்பாடும் மற்றும் பதிவு செய்யும் என்ற செய்முறைகளைத்தெரிவிக்கும் ஒரு விபரத்தை கருவியுடன் சேர்த்து தருவார் அந்த விபரத்தில் என்னென்ன செய்யக் கூடாதுஎன்று முழுவிபரங்களும் அதில் இருக்கும். இந்த டேப் ரிகார்ட்ரைத் தயாரிப்பவர்அதற்காக டேப் ரிகார்டர் அவதாரம் எடுக்கவேண்டிய அவசியமில்லை. அதற்குரிய செயல்முறைகளை விவரித்து ஒரு பிரசுரம் கருவியுடன் வைத்தால் போதும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆக மனிதனுக்கு நீதியைக் கற்றுக் கொடுக்க அநீதியை அகற்றமார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க இறைவனின் தூதர்களை மனித உருவில் மனித சமுதாயத்துக்கு அனுப்பி வைத்தால் போதும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆக மனிதனுக்கு நீதியைக் கற்றுக் கொடுக்க அநீதியை அகற்றமார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க இறைவனின் தூதர்களை மனித உருவில் மனித சமுதாயத்துக்கு அனுப்பி வைத்தான். அத்தூதர்களுக்கு வேதங்களையும் இறக்கியருளினான். அவ்வாறு இறக்கியருளப்பட்ட இறுதி நபிக்கு இறங்கிய இறை வேதமே குர்ஆன் படைத்த இரட்சகனால் வாழும் முறையையும் அவ்வாழ்வின் சுவையை இனிமையுடன் சுவைக்கும் மறுமைப் பேற்றையும் தவறினால் கிட்டும் நரகவேதனையையும் விவரமாக விளக்கும் வாழ்க்கை நடைமுறைத்திட்டமே அருள் மறை குர்ஆன் எது நல்லதுஎது கெட்டதுஎனப்பிரித்தறிவிக்கும் அல்லாஹ்வின் செய்முறை விளக்கமே குர்ஆன். கடவுளே மனித உருவில் அவதாரம் எடுக்க வேண்டிய அவசியமில்லை. மனித சமுதாயத்தில் கடவுளுக்கு எவர் விருப்பமானவரோ அவரை கடவுள் தன் இடத்துக்கு தேர்வு செய்து அவரைத் தூதராக்கி அவர் மூலமாக தான் நாடும் செய்திகளைத் தன் படைப்பினங்கள் வரை கொண்டு சேர்க்கும் திறன் கடவுளுக்கு உண்டு அவ்வாறு கடவுளால் தேர்வு செய்யப்பட்ட மனித சமுதாயத்தைச் சார்ந்த தூதர்களே இறைத்தூதர்களாவார்கள்.

மரணத்திற்கு பின் உள்ள வாழ்க்கை (மறுமை)
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான் பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான் மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான் இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.(2:28)

இஸ்லாம் கூறுகிறது மனிதன் இப்பூவுலகுக்கு ஒரே ஒரு முறை மட்டும்தான் வருகிறான். வாழ்ந்து மரணித்த மனிதன் அடக்கஸ்தலத்தில் ஒரு வாழ்வைச் சந்திக்கிறான் (மண்ணறை வாழ்வு) அதன் பின் ஒரு நாள் அவன் தன் இரட்சகனால் உயிர் கொடுக்கப்பட்டு மீண்டும் எழுப்பப்படுகிறனான். மண்ணறையிலிருந்து. பின்னர் அவன் அணு அளவும் மோசம் செய்யப்படாமல் விசாரிக்கப்பட்டு நன்மைகள் அதிகம் செய்திருந்தால் சுவனத்துக்கம் தீமைகள் அதிகம் செய்திருந்தால் நரகுக்கும் அனுப்பப்படுகிறான்.

இவ்வுலக வாழ்வு மறுமை வாழ்வுக்கு ஒரு சோதனைக் களமே
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன்மரணத்தையும் வாழ்வையும் படைத்தான் மேலும்அவன் (யாவரையும்) மிகைத்தவன் மிக மன்னிப்பவன்.(67:2)

படைத்த இரட்சகனின் கட்டளைக்கு அடிபணிந்து உலக வாழ்வில் நடந்தால் இத்தேர்வில் வெற்றிபெறுவான். சுவனில் நுழைவான். கட்டளைக்கு மாறு செய்தல் இத்தேர்வில் தேர்வு பெற மாட்டான். நரகில் நுழைவான்.

மறுமையில் கூலி கொடுக்கப்படுகிறான்
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும் அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான்உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும் எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.(3:185)

எனவேஎவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். (99:7)

அன்றியும்எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும்அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான். (99:8)

சுவனம்
இதனை அரபியில் "ஜன்னத்" என்பர் சகல செழிப்புகளும் வளங்களும் அடங்கிய நந்தவனம் என்று இதன் பொருள். குர்ஆன் வசனம் சுவனம் பற்றிக் கூறும் போது சுவனத்தின் அடியில் நதிகள் ஒடுவதாக கூறுகிறது. அந்நதிகள் பால்தேன் போன்றவைகள். பலதரப்பட்ட கனி வகைகளின் சோலைகளால் ஆனது. எவரும் முதுமையடைய மாட்டார்கள். கெட்டவார்த்தைகளைக் கேட்டகமாட்டார்கள். அங்கு சாந்தியும் சாந்தமும் மட்டுமே நிலவும்.

நரகம்
இதனை அரபியில் "ஜஹன்னம்" என்பர். நெருப்பினால் வேதனை செய்யப்படும் இடம் என்று பொருள். இந்நரக நெருப்பின் எரிபொருட்கள் மனிதர்களும் கற்களும் அருள் மறையின் கீழ்கண்ட வசனம் கூறுகிறது. (66:10)

பூர்ண ஜன்மம்(மறுபிறவி எடுத்தல்)
சமஸ்கிருதத்தில் புனர் ஜன்மம் அல்லது பூரண ஜன்மம் என்று கூறுவர். மரணத்துக்கு பின் மீண்டும் மறுபிறவி எடுத்தல் எனதே இதன் மையக்கருத்து. வேதங்களிலோ உபநிஷங்களிலோ மறுபிறவி பற்றிக் கூறப்படவில்லை. பகவத்கீதையில் மரணத்துக்கு பின் உள்ள வாழ்வு குறித்து கூறப்பட்டுள்ளதேயில்லாமல் மீண்டும் மீண்டும் ஜன்மம் எடுக்கும் மறுபிறவி பற்றிக் கூறப்படவில்லை. மறுபிறவிமனிதன் மிருகமாக ஜன்மம் எடுத்தல்மிருகம் மனிதனாக ஜன்மம் எடுத்தல்,என்று பின்னால் வந்த வேதாதிகள் உருவாக்கிய சித்தாந்த மேயன்றி இந்து மதப் புனிதங்களில் எதுவும் மறுபிறவி பற்றிய தெளிவு எதுவுமில்லை. மேலும் மறுபிறவி எடுக்கும் எந்த படைப்பிணத்துக்கும் அது எதற்காக அவ்வாறு ஒரு சிறப்பபை அல்லது தண்டனையைப் பெற்றது என்று அறியாது. இவ்வாறு மறு பிறவி தத்துவம் படைத்த இரட்சகனின் நீதித்தன்மைக்குப் பங்கம் விளைவிக்கக் கூடியதாக உள்ளது.

ரிக் வேதம் நூல் 10, அத்தியாயம் 16, ஸ்லோகம் 4 கூறுகிறது சமஸ்கிருத வார்த்தை ''சுக்ரிதம் யு லோகம்" என்பதன் பொருள் உண்மை நிரந்தர உலகம் அல்லது பயபக்தியுடையோருக்குறிய உலகம் என்பதாகும். அதன் அடுத்த ஸலோகமோ இவ்வுலகவாழ்விற்குப் பின் மீண்டும் ஒர் வாழ்க்கை உரியது என்று உறுதிப்படுத்துகின்றது.

சுவர்க்கம் வேதங்களில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. அதர்வன வேதம் நூல் 4 அத்தியாயம் 34 ஸ்லோகம் 6
இவ்வுலக (சுவன) வாழ்வில் உங்களை மகிழ்விக்கும் வெண்ணெய்தேன்சுத்தமான நீர்பால்தயிர் போன்றவை உங்களின் ஆரோக்கியத்தைப் பலப்படுத்தி உங்களின் ஆன்மாவை மகிழ்விக்கின்றன. மேலும் பலன்தரும் பல சுகங்களும் இங்கு உண்டு. அதர்வண வேதம் நூல் 10 அத்தியாயம் 95 ஸ்லோகம் 18 சுவனத்தின் சிறப்பதைக் கூறுகிறது.

சமஸ்கிருத மொழியில் நரகத்தினை ''நரக ஸ்தானம்" என்பர். ரிக்வேதம் நூல் 4 அத்தியாயம் 5 ஸ்லோகம் 4 எவன் மனோ இச்சையைப் பின்பற்றி இரட்டசனின் கட்டளைக்கு மாறுசெய்தானோ அவன் தீயின் கொடிய வேதனைகளுக்கு ஆளாக்கப்படுவான். அதில் துன்பம் அனுபவிப்பான்.

ஒரு மனிதன் படைக்கப்படும் முன்பே படைப் பாளனாகிய இரட்சகன் அந்த மனிதன் எங்கு யாருக்கு எப்படி பிறப்பான். எவ்வாறு வாழ்வான் இறுதியில் எங்கு சென்று சேர்வான் என்பதைஆதி முதல் அந்தம் வரை அறிந்து வைத்துள்ளான்.

இரு மனிதர்களின் பிறப்பில் உள்ள பாகுபாடு இவ்வாறு வரையறை செய்யப்படுகிறது. ஒரு குழந்தை ஆரோக்கியமாகவும் மற்றொன்று அங்கஹீனமாகவும்ஒரு குழந்தை ஒரு பெரிய பணக்காரன் வீட்டிலும் மற்றொன்று ஒரு வக்கற்ற ஏழை வீட்டிலும் பிற்க்கிறது. இவ்வாறு அவை ஏற்றத்தாழ்வுடன் பிறப்பதற்கு காரணம் அவைகளின் (கர்மங்களின்) அடிப்படையிலேயே இப்பிறவியில் பாகுபாடு உள்ளதுஎன்பது இந்துமத சித்தாந்தம். ஆனால் மறு பிறவி என்பதற்கு எந்த ஆதாரப் பூர்வமான மதசம்மந்தமான தெளிவுகளும் இல்லை.

இஸ்லாம் கூறும் நல்ல தீய செயல்கள்(அமல்கள்) குறித்து அருள்மறைக் குர்ஆன் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது.

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன்மரணத்தையும் வாழ்வையும் படைத்தான் மேலும்அவன் (யாவரையும்) மிகைத்தவன் மிக மன்னிப்பவன்.(67:2)


நம்மை எப்படியெல்லாம் சோதிக்கிறான் என்பதற்கு சில ஆதாரங்களை கீழ் கண்ட அருள் மறை வசனம் தெளிவுபடுத்துகிறது.

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும்பசியாலும்பொருள்கள்உயிர்கள்விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம். ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (2:155)

''நிச்சயமாக உங்கள் செல்வமும்உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு" என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள். (8:28)

உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களாஅவர்களை (வறுமைபிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பிடித்தன.'அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்" என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள் ''நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது" (என்று நாம் ஆறுதல் கூறினோம்) -(2:214)

''நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்" என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா?-(29:2)

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது. பரீட்சைக்காக கெடுதியையும்நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர்நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (21:35)

மரணத்துக்குப் பின் உள்ள நிலை இந்து மதக்கூற்று
மரணத்துக்குப் பின் மறுபிறவி எடுத்தல்திருஅவதாரம் எடுத்தல் (தெய்வமாகுதல்) பிற உடலில் புகுந்து மீண்டும் ஜன்மம் எடுத்தல் ஆகியவை இந்து மதத்தின் சித்தாந்தமாகும். மறுபிறவி பற்றிய இந்து மதக்கோட்பாட்டில் கருத்துவேறுபாடுகள் உள்ளன. முன்பிறவியில் செய்த செயல்களின் விளைவாகவே இப்பிறவியில் பிறக்கும் குழந்தைகள் அழகுடன் அல்லது அங்கஹீனமாக பிறக்கின்றன (கர்மம்) அது போன்ற கருக்துக்களும் இந்து மதச் சித்தாந்தத்தில் உண்டு.
பகவத்கீதை அத்தியாயம் 2, ஸ்லோகம் 22 கூறுகிறது. புத்தாடை அணியும் ஒருவன் பழைய ஆடையை விட்டுவிடுவது போன்று ஆன்மா புதிய உடலை ஏற்றுக் கொண்டு பழைய உடலை (உபயோக மற்றதை) விட்டு விடுகிறது.

மறுபிறவி சித்தாந்தத்தை ப்ரக தரண்யா உபநிஷம் பாகம்’ 4 அத்தியாயம் 4 சுலோகம் 3 கூறுகிறது. ஒரு கம்பளிப்பூச்சி புல்லின் மேல் நுனியை வளைத்து நெளித்து ஓடித்துவிட்டால் அதிலிருந்து புதிய மேல்பாகம் முளைப்பிப்பது போல் ஒரு உடலிலிருந்து வெளிப்பட்ட ஆன்மா மற்றொரு உடலில்புகுந்து விடுவதால் திருப்தியுறுகிறது. கர்மம்(கர்மா)-காரணமும்விளைவிக்கும் வினை அவனது மனநிலையை எண்ணத்தைச் சார்ந்தது. இதற்கு கூறும் விளக்கம். வினை விதைப்பவன் வினை அறுப்பான். தினை விதைப்பவன் தினைஅறுப்பான். கோதுமை விதைத்தவன் எவ்வாறு அரிசியை அறுவடை செய்ய இயலாதோ அதுபோல இவ்வுலகில் செய்யும் நல்லறங்களின் கூலியை மறுபிறவியில் பெற்றுக் கொள்ளலாம் என்று விளக்க மளிக்கப்படுகிறது.

ஒருவர் புரியும் நல்லசெயல்கள் ''தர்மா" என அழைக்கப்படுகிறது. ஆகசிறந்த நல்லறங்கள் (கர்மங்கள்) புரிபவர் மறுபிறவியில் அதன் பலனை நுகர்ந்து கொள்வார். கெட்ட காரியங்களைச் செய்பவர் செய்த கர்மத்தின் விளைவை மறுபிறவியில் கண்டு கொள்வார். ஆக நல்லகெட்ட அறங்கள் இவ்வுலக வாழ்வில் அனுபவிப்பதோடு மறுபிறவியிலம் அதன் பாலை நுகர்வர் என்பது இச்சித்தாந்தத்தின் சுருக்கம்.

மோட்சம் (மறுபிவியிலிருந்து விடுதலை)
மோட்சம் என்பது மறுபிறவி போன்ற மீண்டும் ஜன்மம் எடுக்காமல் முக்தியடைவது இதனை ''சம்சாரா" எனக்கூறுவர். இந்து மத நம்பிக்கைப் பிரகாரம் ஒரு நாள் மறுஜன்மம் எடுக்கும் இந்நிலை முடிவுறும். அதாவது அந்த படைப்பினத்தின் மறுபிறவி எடுத்து தீர்க்கக் கூடிய எந்த கர்மமும் பாக்கி இல்லாது இருந்தால் மறுபிறவி எடுக்க மாட்டான் என்பது இதன் பொருள் மறு பிறவி(மீண்டும்) பிறவி (ஜன்மம்) எடுத்தல் வேதங்களில் குறிப்பிட படவில்லை. அதுபோன்று ஆன்மாக்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றில் பிவேசிக்கும் எந்தக் கருத்தும் வேதங்களில் குறிப்பிடப்படவில்லை.

http://www.islamkalvi.com/religions/islam_hindu_comparision_05.htm