வேதங்களில் இறைக்கோட்பாடு
ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் இந்து மதத்தின் மிகப் புனித வேதங்களாகும்.
யஜூர் வேதம் (32:3)
"ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி" அவனை உருவகிக்க முடியாது, அவன் தான் தோன்றி. நமது வணக்க வழிபாடுகளுக்கு தகுதியுள்ளவன். உருவமற்ற அவனின் கீர்த்தி மிகப்பெரிது. வானில் உள்ள அத்தனை கோள்களின் இயக்கங்களையும் தன்னகத்தே வைத்துள்ளவன். (தேவிசந்த் - யஜூர் வேதம் பக்கம் 377)
அவன் உருவமற்றவன். தூய்மையானவன். ஓளிமயமான உருவமற்ற, காயமற்ற, பாவங்களற்ற, தூய்மையான பாவங்கள் அண்டாத ஞான வடிவானவன். அவன் நித்திய ஜீவன். 40:8
(யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 538)
"அன்தாதம் ப்ரவிசன்த்தியே அசம்புத்தி முபாஸ்தே" இயற்கைப் பொருட்களை வணங்குவோர் இருளில் புகுவர் (காற்று, நீர், நெருப்பை வணங்குவோர்) அவர்கள் மேலும் இருளில் மூழ்குவர். எவர் படைக்கப்பட்ட பொருளை வணங்குகிறாரோ (மரம் சூரியன், சிலை வணங்குவோர்) இருளில் மூழ்குவர். 40:9
(யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் வு.ர். கிரிப்ட் பக்கம் 538)
'தேவ் மஹா ஓசி" கடவுள் மகா பெரியவன்
குர்ஆன் கூறுகிறது:
...அவன் மிகவும் பெரியவன் மிகவும் உயர்ந்தவன் (13:9)
மிகப் பழம்பெரும் வேதம், ரிக்வேதம் கற்றறிந்த துறவிகள் ஓரிறையை பல பெயர் கொண்டு அழைத்தனர். அவர்கள் கடவுளை வருணன், இந்திரன், மித்திரன், சூரியன், அக்னி என பல பெயர்களில் அழகுபட அழைத்தனர். இவை அனைத்தும் அவனின் தன்மைகளை சிறப்பை உணர்த்துவதாக இருந்தன. கடவுளின் 33 தன்மைகளை ரிக் வேதம் குறிப்பிடுகிறது. அதில் ஒரு தன்மை பிரம்மா(படைப்பவன்) என்ற தன்மையை 2:1:3ல் குறிப்பிடுகிறது.
குறிப்பு: இஸ்லாம் படைக்கும் தன்மையை "காலிக்" எனக் கூறுகிறது. ஆனால் சிலர் கூறுகிற பிரம்மாவுக்கு 4-தலைகளும் 4-கைகளும் உண்டு, என்ற இத்தோற்றத்தை உருவகத்தை இஸ்லாம் மறுக்கிறது. மேலும் யஜூர் வேதத்தின் 32:3-ன் கூற்றுப்படி ''அவனை உருவகிக்க முடியாது" என்ற சுலோகத்ததுக்கும் ப்ரம்மாவுக்கு 4-தலைகளும், 4-கைகளும் உள்ளன என்ற வாதம் முரண்படுகின்றது.
ரிக் வேதம் (2:2:3)
விஷ்ணு-பாதுகாப்பவன், உணவளிப்பவன் எனும் கடவுளின் தன்மையைக் கூறுகிறது. இஸ்லாம் இத்தன்மையை ''ரப்" என அரபியில் அழகுபட கூறுகிறது. ஆனால் சிலர் கூற்றுப்டி விஷ்ணு 4 கரங்களைக் கொண்டவன் ஒரு கையில் சக்கரம் மற்றொரு கையில் சூலம், பறவையை வாகனமாய் கொண்டவன் என்று உருவகப்படுத்துவதை இஸ்லாம் மறுக்கிறது.
குறிப்பு:- யஜூர் வேதத்தின் 40:8ன் படி அவன் உருவமற்றவன் என்ற விளக்கத்திற்கு முரணானது.
ரிக் வேதம் (8:1:1)
''மா சிதான்யதியா ஷன்ஸதா" அவனையன்றி யாரையும் வணங்காதீர்கள், அவன் மட்டுமே வணக்கத்திற்குரியவன்.
(ரிக் வேத சம்ஹிதி 9-ம்பாகம், பக்கம் 1, 2 சத்ய ப்ரகாஷ் சரஸ்வதி)
ரிக் வேதம் (5:81:1)
படைக்கும் அவன் மிகப்பெரும் கீர்த்தியாளன்.
(ரிக்வேத 6-ம்பாகம், பக்கம் 1802, 1803 சத்ய ப்ரகாஷ் சரஸ்வதி)
குர்ஆன் கூறுகிறது: (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் (1:2)
ரிக் வேதம் (3:34:1)
கடவுள் மிகப்பெரும் கொடைத் தன்மை கொண்டவன் எனக் கூறுகிறது.
குர்ஆன் கூறுகிறது: (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் (1:2)
யஜூர் வேதத்தின் (40:160)
எங்களை நல்வழியில் செலுத்து. எங்களின் பாவங்களைப் போக்கு, பாவங்கள் நரகில் சேர்க்கும் ''யஜூர் வெது சம்ஹிதி-ராலப்" (யஜீர்வேத சம்ஹிதி- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 541)
குர்ஆன் கூறுகிறது: நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!, அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல.நெறி தவறியோர் வழியுமல்ல. (குர்ஆன் 1:5, 6&7)
ரிக் வேதம் (6:45:16)
''யா எக்கா இட்டமுஸ்ததி" தனித்தவனான இணையற்ற அவனுக்கு எல்லாபுகழும்.
''ஏகம் ப்ரஹம் த்வித்ய நாஸ்தே எநன் நா நாங்தே கின்சான்" கடவுள் ஒருவனே, இருவர் இல்லை, இல்லவே இல்லை! இல்லவே இல்லை. சிறிது கூட இல்லை!
ஆக இந்துப் புனித வேதங்கள், புராணங்களைக் கற்றறிந்தால் கூட ஓரிறைக் கொள்கை உறுதியாகக் கூறப்பட்டதை நன்கு உணரலாம்.
மலக்குகள் அல்லது தேவதூதர்கள் (ANGELS)
மலக்குகள் என்பவைஅல்லாஹ்வின் படைப்பினங்களில் ஒன்று. ஒளியினால் படைக்கப்பட்டவை. நம்மால் காணவியலாது. தங்களின் விருப்பப்படி எதுவும் செய்வதில்லை. அல்லாஹ்வின் கட்டளைக்கு அப்படியே அடிபணியக்கூடியவை. பல்வேறுப்பட்ட காரியங்களுக்காக அவற்றை நிறைவேற்ற அல்லாஹ்வால் பணிக்கப்பட்ட மலக்குகள் உள்ளன.
உதாரணம்:
ஜிப்ராயீல்(அலை)-வஹீ என்னும் இறைச் செய்திகளை கொண்டு வரும் மலக்கு
மீக்காயீல்(அலை)-மழை கொண்டு வரும் மலக்கு
மலக்குகளுக்கு என்று எந்த கோட்பாடும் இல்லை. இருப்பினும் இவை மனிதர்களைக் காட்டிலும் மிகப் பலம் வாய்ந்தவை. மலக்குகளை சிலர் தெய்வங்களாக வழிபடுவதுமுண்டு.
http://www.islamkalvi.com/religions/islam_hindu_comparision_02.htm
வேதங்களில் இறைவனுக்கு உருவமில்லை என்கிறதா ?
ReplyDeleteஒரு சில முஸ்லிம்களும்,கிறிஸ்தவர்களும் நமது வேத இலக்கியங்களை அரைகுறையாக படித்துவிட்டு அதில் இறைவனுக்கு உருவம் இல்லையென வாதிடுகிறார்கள். அது முழுக்க முழுக்க பொய்யான கருத்து. எனவே தான் வேதங்களில் உருவ வழிபாடு பற்றிய தகவல்களை இங்கே வழங்கியுளேன்..
வேதங்கள் இறைவனை இரண்டு அம்சங்களை விவரிக்கிறது, அது
1. நிர்குணா பிரம்மம் (உருவமற்ற பிரம்மன்) -
குணங்கள் , சிறப்பு பண்புகள் இல்லாமல், உருவமற்ற, மாற்ற முடியாத, நித்தியமானது என்று நிர்குணா கடவுளை சொல்கிறது. இதை சதாஷிவ, பரமேஸ்வர, பரமாத்மா என்கிறார்கள்.
2. சகுண பிரம்மம் (உருவமுள்ள பகவான்)
இது குணங்கள், முழுமையான தனிப்பட்ட பண்புகளின் அம்சம் வந்தது.. இந்த சகுண பிரம்மனே உருவாக்குதல், பராமரிப்பு, அழிவு என்று பண்புகளுடன் கூறினார்கள்.
அதனால் கடவுள் நிர்குணா பிரம்மம் (உருவமற்ற) நிலையில் அவர் குணங்கள், உருவம், பண்புகள் இல்லாமல் இருக்கிறார்.
கடவுள் சகுன (உருவமுள்ள) நிலையில் குணம்,வடிவம்,பண்புகள் உடையவராக இருக்கிறார். அதாவது இந்த இரண்டு நிலைகளும் இறைவனின் அம்சம் தான்.
வேத இலக்கியங்களில் இறைவனின் நிலைகளை சொல்வது ....
dve vāva brahmaṇo rūpe, mūrtaṃ caivāmūrtaṃ ca [Brh. Up - 2.3.1]
God (Brahman) has two modes, formless (nirakara, asambhuta) as well as form (sakar, sambhuta).
இறைவன் (பிரம்மன்) என்பது இரண்டு நிலைகளில் அறியப்படுகிறது, அது உருவமில்லா தன்மை (asambuta) மற்றும் உருவமுள்ள தன்மை(sakar, sambhuta). - யஜுர் வேத 2.3.1 (ப்ரஹதாரண்ய உபநிஷத்)
அதாவது, ஒரே இறைவனின் இரண்டு வித அம்சங்களே இந்த நிர்குண, சகுன பிரமன் ஆகியவை. தனது பக்தர்ளுக்கும் மட்டுமே அவர் உருவமுள்ள சகுண பிரம்மனாக காட்சியளிக்கிறார். ஆனால் அறிவற்ற அபக்தர்களுக்கு அவர் தனது அந்தரங்க சக்தியால் (ப்ரஹ்ம ஜோதி எனும் ( இதுவே நிர்குண நிலை) திரையினால் மறைக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீமத் பாகவத்தில் (1.8.19), யோகமாயை எனும் திரையினால் பகவான் மறைக்கப்பட்டிருப்பதாகவும், சாதாரண மக்கள் அவரைப் புரிந்து கொள்ள முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இது வேத சாஸ்திரம்- ஈஷோபநிஷத்திலும் (மந்திரம் 15) உறுதி செய்யப்பட்டுள்ளது,
ஹிரண்மயேன பாத்ரேண ஸத்யஸ்யாபிஹிதம் முகம்,
தத் தவம் பூஷன்ன-அபாவ்ருணு ஸத்ய-தர்மாய த்ருஷ்டயே
“எம்பெருமானே, அகிலங்களை எல்லாம் பராமரிப்பவர் நீரே, உமக்கு பக்தித் தொண்டு ஆற்றுவதே அறக் கொள்கைகளில் தலைசிறந்தாகும். எனவே, என்னையும் பராமரிக்குமாறு உம்மிடம் வேண்டுகிறேன். உமது திவ்யமான ரூபம், யோக மாயையினால் மறைக்கப்பட்டுள்ளது. பிரம்மஜோதியே அந்தரங்க சக்தியின் திரையாகும். உமது ஸச்-சித்-ஆனந்த-விக்ரஹத்தை (நித்தியமான அறிவு நிறைந்த ஆனந்த ரூபத்தினை) காணவிடாமல் என்னைத் தடுக்கும் இந்தப் பேரொளியினை தயவு செய்து விலக்குவீராக.”
ஆனந்தமும் அறிவும் நிறைந்த பரம புருஷ பகவானின் திவ்ய ரூபம், அவரது அந்தரங்க சக்தியான பிரம்மஜோதியினால் கவரப்பட்டுள்ளதால், அறிவில் குன்றியவர்களான அருவவாதிகள் பரமனைக் காண முடியாது.
பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் தான் மறைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்....
Bg 7.25 — சிற்றறிவுடையோருக்கும் முட்டாளுக்கும் நான் ஒருபோதும் தோன்றுவதில்லை. நான் எனது (ப்ரம்ம ஜோதி எனும்) அந்தரங்க சக்தியால் மறைக்கப்பட்டுளேன், எனவே நான் பிறப்பற்றவன், அழிவற்றவன் என்பதை இவர்கள் அறிவதில்லை.
அதாவது, பகவான் கிருஷ்ணர் உருவமே - சகுன பிரம்மன் நிலைஆகும்..
அவரை காணவிடாமல் தடுக்கும் ப்ரஹம்ம ஜோதியே - நிர்குண பிரம்மன் நிலை ஆகும்.
பரம புருஷ பகவானை அவரது ரூபத்தின் மூலம் கோவிலில் வழிபடுவது சிலையை வழிபடுவதாகாது. ஆலயத்திற்குள் விக்ரஹத்தை வழிபடுதல் ஸகுண வழிபாடாகும், ஏனெனில், பகவான் பௌதிக குணங்களின் மூலம் அங்கே தோற்றமளிக்கின்றார். கல், மரம் அல்லது ஓவியம் போன்ற பௌதிக குணங்களின் மூலம் தோற்றமளிக்கும் போதிலும், பகவானது ரூபம் உண்மையில் பொளதிகமல்ல. இது பரம புருஷரின் பூரண தன்மையாகும்.
ReplyDeleteபண்படாத உதாரணம் ஒன்று இங்கு கொடுக்கப்படலாம். தெருவிலே நாம் சில தபால் பெட்டிகளை பார்க்கிறோம். நமது கடிதங்களை அந்தப் பெட்டிகளில் இட்டால், அவை செல்ல வேண்டிய இடத்திற்கு எவ்விதமான சிரமமும் இன்றி இயற்கையாகவே செல்கின்றன. ஆனால் ஏதாவதோரு பழைய பெட்டியிலோ, அஞ்சலகத்தால் வைக்கப்படாத ஒரு போலிப் பெட்டியிலோ நமது கடிதத்தை இட்டால், அது போய் சேராது. அது போலவே அர்சா-விக்ரஹம் இறைவனது அதிகாரப்பூர்வமான தோற்றமாகும். இந்த அர்சா-விக்ரஹம் பரம புருஷருடைய ஓர் அவதாரம். இவ்வுருவத்தின் மூலமாக இறைவன் சேவையை ஏற்றுக்கொள்கிறார். அவர் சர்வ சக்திமான், அனைத்து சக்திகளும் உடையவர்;
எனவே, பக்தனைப் பொறுத்தவரையில், பகவானை நேரடியாகவும் உடனடியாகவும் அணுகுவதில் சிரமம் ஏதும் இல்லை, ஆனால் ஆன்மீகத் தன்னுணர்விற்காக அருவத் தன்மையை பின்பற்றுபவர்களது வழி மிகவும் சிரமமானதாகும். அத்தகையோர் உபநிஷத்துகள் போன்ற வேத இலக்கியங்களின் மூலமாக பரமனின் தோன்றாத தன்மையினைப் புரிந்துகொள்ள வேண்டும்,
வேத மொழியினைக் கற்று எல்லையற்ற உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும்—மேலும், இவையனைத்தையும் உணரவும் வேண்டும். இது சாதாரண மனிதனுக்கு அவ்வளவு சுலபமானது அல்ல. மாறாக, கிருஷ்ண உணர்வில் இருப்பவன், அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவின் வழிகாட்டுதலைப் பின்பற்றுதல், விக்ரஹத்தினை நெறிப்படி வழிபடுதல், இறைவனது பெருமைகளைக் கேட்டல், இறைவனுக்குப் படைக்கப்பட்ட உணவுப் பொருள்களை பிரசாதமாக உண்ணுதல் போன்ற எளிமையான வழிமுறைகளின் மூலம் பக்தித் தொண்டில் ஈடுபட்டு பரம புருஷ பகவானை மிகவும் சுலபமாக உணர்ந்து கொள்கிறான்.
அருவவாதிகள், இறுதியில் பூரண உண்மையை உணராமல் போகலாம் என்ற அபாயம் இருக்கும்போதிலும், மிகவும் கடினமான பாதையை அவசியமின்றி பின்பற்றுகின்றனர் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
ஆனால் பக்தனோ, எவ்வித அபயமோ, சிக்கலோ, கடினமோ இன்றி முழுமுதற் கடவுளை நேரடியாக அணுகுகின்றான்.
வேதங்களில் விக்ரக வழிபாடு இல்லையா ?
ReplyDeleteஒரு சில முஸ்லிம்களும்,கிறிஸ்தவர்களும் நமது வேத இலக்கியங்களை அரைகுறையாக படித்துவிட்டு அதில் விக்ரக வழிபாடு இல்லையென வாதிடுகிறார்கள். அது முழுக்க முழுக்க பொய்யான கருத்து. எனவே தான் வேதங்களில் விக்ரக வழிபாடு பற்றிய தகவல்களை இங்கே வழங்கியுளேன்..
வேதங்கள் ரிக்,யஜுர், சாம,அதர்வண ஆகியவை. இந்த வேதங்கள் வேதாந்த சூத்திரத்தின் விளக்கங்கள் ஆகும். வேதாந்த சூத்திரத்தில், வசனங்கள் மிக சிறிய அளவில் உள்ளது. அதாவது '1.1.2 -'எங்கிருந்து எல்லாம் வந்தது, அதுவே இறைவன்" என்கிறது. வேதாந்திர சூத்திரத்தில் வசனங்கள் எல்லாமே சிறிய சூத்திர அளவில் கருத்தை சொல்கிறது.
ஆனால் அந்த இறைவனின் அம்சங்களை இன்னும் விரிவாக கூறுவது நான்கு வேதங்கள். அதில் இறைவனின் இரண்டு வித அம்சங்களை கூறுகிறது .
1. நிர்குண பிரம்மன் (உருவமமில்லா தன்மை) .
2. சகுன பிரம்மன் (உருவமுள்ள தனி தன்மை) .
இது வேத சாஸ்திரம்- ஈஷோபநிஷத்திலும் - மந்திரம் 15 உறுதி செய்யப்பட்டுள்ளது,
“உமது திவ்யமான ரூபம், யோக மாயையினால் மறைக்கப்பட்டுள்ளது. பிரம்மஜோதியே அந்தரங்க சக்தியின் திரையாகும். உமது ஸச்-சித்-ஆனந்த-விக்ரஹத்தை (நித்தியமான அறிவு நிறைந்த ஆனந்த ரூபத்தினை) காணவிடாமல் என்னைத் தடுக்கும் இந்தப் பேரொளியினை தயவு செய்து விலக்குவீராக.”
dve vāva brahmaṇo rūpe, mūrtaṃ caivāmūrtaṃ ca [Brh. Up - 2.3.1]
God (Brahman) has two modes, formless (nirakara, asambhuta) as well as form (sakar, sambhuta).
இறைவன் (பிரம்மன்) என்பது இரண்டு நிலைகளில் அறியப்படுகிறது, அது உருவமில்லா தன்மை (asambuta) மற்றும் உருவமுள்ள தன்மை(sakar, sambhuta).
vidyāṁ cāvidyāṁ ca yas tad vedobhayaṁ saha
avidyayā mṛtyuṁ tīrtvā vidyayāmṛtam aśnute [Isha Up. - 11] சுக்ல யஜுர் வேத 40-11
Only one who can learn the process of nescience (avidya) and that of transcendental knowledge (vidya) side by side can transcend the influence of repeated birth and death and enjoy the full blessings of immortality.
நீங்கள் ஒரே ஒரு செயல்முறையை அறியமுடியும், அவை அறிவின்மை (அவித்யம்) மற்றும் உண்மையான அறிவு (வித்யா), இத உண்மையான அறிவே ஒருவனை பிறப்பு,இறப்பு இல்லாமல் செய்யும், மேலும் உண்மையான ஆனந்தத்தை அனுபவிக்க முடியும்.
மேலும், நான்கு வேதங்களிலும் பகவானின் பெயர்கள் நாராயணர்,விஷ்ணு,கிருஷ்ணர்,வாமனர்,நரசிம்மர்,.... இப்படி பகவானை குறித்து பல உள்ளன . இந்த பகவானாவின் உருவங்கள் குறித்தும், அவரை குறித்துள்ள மந்திரங்களும் மட்டுமே வேதங்களில் கூறியுள்ளன. எனவே, உருவ வழிபாடு மற்றும் அவதாரம் குறித்து வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது .
வேதங்களில் விக்ரகவழிபாடு பற்றிய வசனங்கள் இதோ...
ReplyDelete” சம்வத்சரஸ்ய ப்ரதிமாம் யாம் த்வா ராத்ர்யுபாசதே ப்ரஜாம் சுவீராம் கருத்வாவிச்வ மாயுர் வியச்னவத் ப்ரஜாபத்யாம்” –
(5ஆம் கண்டம்,7ஆம் பிரசினம்,2ஆம் அநுவாகம்,யஜூர் வேதம்)
'காலரூபியாகிய உமது பிரதிமையை செய்து இருட்டறையில் உபாசிப்பவன் வலிமையுள்ள புத்திரனையும் பூரண ஆயுளும் அடைகிறான்..பிரஜைகளுக்கு எஜமானனாகுந் தன்மையையும் மடைகிறான்'…
“அச்மானம் ஆகணம் ப்ரபத்யே” -(4ஆம் பிரசினம்,யஜூர் வேத ஆரண்யகம்)
'நன்கு சித்திரிக்கப்பட்ட சிலையை வணங்குகிறேன்'
”ஏஹி அச்மானம் ஆதிஷ்ட அச்மாபவது தே தநூ : ”
– ( 1ஆம் காண்டம்,2ஆம் கற்பகம்,3ஆம் துவனி,அதர்வண வேதம்)
'சுவாமி வாரும் இந்த கற் பிரதிமையில் நில்லும் இந்தக் கற்பிரதிமையே உமக்குச் சரீர மாகுவதாக'
ஆக,வேதத்தில்,விக்கிரக வழிபாடு,சுருக்கமாக கூறப்பட்டிருக்கிறது.
அதன் பின்பு, இந்த வேதங்களின் விரிவான விளக்கங்களே புராணங்களும், இதிகாசங்களும் ஆகும். இது ஐந்தாவது வேதம் என்கிறது வேத சாஸ்திரம்.
'பொதுவாக, புராணங்களும், இதிஹாசங்களான ராமாயணமும், மகாபாரதமும் ஐந்தாவது வேதம் எனப்படுகிறது" - சாந்தோக்ய உபநிஷத் 7.1.4
பகவான் விஷ்ணுவின் வாமன கதை கதை ரிக்வேதப் பல பாசுரங்கள் ( ரிக் வேதம் 1.154.1,2,3,4,5.... & 2.54.24 ) காணப்படுகிறது.
ரிக்வேதம், 10 வது மண்டல் சில பாடல்களில், 22 சூக்தம் மீண்டும் மீண்டும் வாமன அவதாரம் குறிப்பிடுகிறது. நாம் புராணங்கள் பார்த்தாலும் அதே கதை. அதாவது வரலாற்றில் புராணங்கள் உதவியுடன், வேதங்கள் விரிவாக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. எனவே, புராணங்கள் 'வேத-பாஷ்ய' என அழைக்கப்படுகின்றன.
ஸ்ரீமத் பாகவதம்,விஷ்ணு புராணம், கருட புராணம்.... இப்படி பல புராணங்கள் இறைவனுடைய வடிவம், வழிபாடு செய்யும் முறைகள், விக்ரகங்கள் எதில் செய்து கொள்ள முடியும் என செயல்முறை விளக்கங்களை நமக்கு அளிக்கிறது.
இறைவனின் வடிவம் எட்டு வகையான பௌதீக பொருள்களில் தோன்றுவர் என்று கூறப்படுகிறது. அவைகள் கல், மரம், உலோகம், பூமி, ஓவியம், மணல், நகைகள் ஸ்ரீமத் பாகவதம் - 11.27.12]
na kāśṭhe vidyate devo na śilāyam na mrutsuca
bhāve hi vasate devastasmādbhāvo hi kāraṇam [Grd. Pu. - 2.28.11]
Deva (god) is neither present in the wood nor in the stone or in the soil (i.e. idols made of these things). He resides only in the emotion or feelings (bhava), hence bhava (devotion / emotion) is the only reason.
bhaktasya ca yathā-labdhair hṛdi bhāvena caiva hi [SB - 11.27.15]
A devotee may worship Me with whatever paraphernalia he is able to obtain, and may even worship Me within his heart with emotion.
ஆலயத்திற்குள் விக்ரஹத்தை வழிபடுதல் ஸகுண வழிபாடாகும், ஏனெனில், பகவான் பௌதிக குணங்களின் மூலம் அங்கே தோற்றமளிக்கின்றார். கல், மரம் அல்லது ஓவியம் போன்ற பௌதிக குணங்களின் மூலம் தோற்றமளிக்கும் போதிலும், பகவானது ரூபம் உண்மையில் பொளதிகமல்ல. இது பரம புருஷரின் பூரண தன்மையாகும்.
ReplyDeleteஇறைவனின் வடிவம் எட்டு வகையான பௌதீக பொருள்களில் தோன்றுவர் என்று கூறப்படுகிறது. அவைகள் கல், மரம், உலோகம், பூமி, ஓவியம், மணல், நகைகள் ஸ்ரீமத் பாகவதம் - 11.27.12]
na kāśṭhe vidyate devo na śilāyam na mrutsuca
bhāve hi vasate devastasmādbhāvo hi kāraṇam [Grd. Pu. - 2.28.11]
Deva (god) is neither present in the wood nor in the stone or in the soil (i.e. idols made of these things). He resides only in the emotion or feelings (bhava), hence bhava (devotion / emotion) is the only reason.
bhaktasya ca yathā-labdhair hṛdi bhāvena caiva hi [SB - 11.27.15]
A devotee may worship Me with whatever paraphernalia he is able to obtain, and may even worship Me within his heart with emotion.
ஆலயத்திற்குள் விக்ரஹத்தை வழிபடுதல் ஸகுண வழிபாடாகும், ஏனெனில், பகவான் பௌதிக குணங்களின் மூலம் அங்கே தோற்றமளிக்கின்றார். கல், மரம் அல்லது ஓவியம் போன்ற பௌதிக குணங்களின் மூலம் தோற்றமளிக்கும் போதிலும், பகவானது ரூபம் உண்மையில் பொளதிகமல்ல. இது பரம புருஷரின் பூரண தன்மையாகும்.
பண்படாத உதாரணம் ஒன்று இங்கு கொடுக்கப்படலாம். தெருவிலே நாம் சில தபால் பெட்டிகளை பார்க்கிறோம். நமது கடிதங்களை அந்தப் பெட்டிகளில் இட்டால், அவை செல்ல வேண்டிய இடத்திற்கு எவ்விதமான சிரமமும் இன்றி இயற்கையாகவே செல்கின்றன. ஆனால் ஏதாவதோரு பழைய பெட்டியிலோ, அஞ்சலகத்தால் வைக்கப்படாத ஒரு போலிப் பெட்டியிலோ நமது கடிதத்தை இட்டால், அது போய் சேராது. அது போலவே அர்சா-விக்ரஹம் இறைவனது அதிகாரப்பூர்வமான தோற்றமாகும். இந்த அர்சா-விக்ரஹம் பரம புருஷருடைய ஓர் அவதாரம். இவ்வுருவத்தின் மூலமாக இறைவன் சேவையை ஏற்றுக்கொள்கிறார். அவர் சர்வ சக்திமான், அனைத்து சக்திகளும் உடையவர்;
எனவே, கட்டுண்ட வாழ்விலிருக்கும் மனிதனின் வசதிக்காக, அவர் தனது அர்சா-விக்ரஹ அவதாரத்தின் மூலம் பக்தனுடைய சேவைகளை ஏற்றுக்கொள்கிறார்.
எனவே.
* வேதாங்க சூத்திரம் - சூத்திர வடிவில் இறைவனை சொல்கிறது.
* 4 வேதங்கள் - அந்த இறைவன் யார், அவரை வழிபட மந்திரங்கள் ஆகியவை கூறுகிறது
* 18 புராணங்கள் - இந்த வேதங்கள் கூறும் இறைவனை குறித்து இன்னும் விரிவாக சொல்கிறது. அவரின் அவதாரங்களையும் அவற்றினை எப்படி வழிபடுவது என்பதையும் கூறுகிறது.
எனவே, சனாதன தர்மத்தில் வேதாந்த சூத்திரம், நான்கு வேதங்கள், உப வேதங்களாகிய 18 புராணங்களும்,2 இதிஹாசங்களும் மற்றும் உப புராணங்களும் இவைகள் எல்லாமே சேர்த்தது தான் சனாதன தர்மத்தின் வேத சாஸ்திரம். இதில் ஒன்றினை மட்டும் எடுத்து கொண்டு, பிறதை புறக்கணித்தால் அது தவறு. இவ்வாறு சிலை வழிபாடு சனாதன தர்மத்தின் ஒரு அங்கமே. இவைகள் எல்லாமே சேர்ந்ததே சனாதன மதம்
சாகீர் நாயக் எனும் பெயரால் அழைக்கப்படும் முட்டாள் மாமேதைக்கும் இந்துமத ஆன்மிக வாதியும் உலக அமைதிக்கும் போறாடும் ரவிசங்கர் குருஜிக்கும் இடையில் “கடவுள் கோட்பாடு” எனும் தலைப்பில் நடைபெற்ற விவாதத்தை பார்த்து இருப்பீர்கள்.
ReplyDeleteஇந்துமக்கள் வேதங்களில் பெரிதாக பாண்டியத்தை பெற்றவர்கள் இல்லை இதனை கருத்திக்கொண்டு பலவாறான வார்த்தைகளை திரிபுபடுத்தி இந்துமதத்துக்கு கறை பூசுகின்றார் இந்த முட்டாள் மாமேதை. இதனை அறியாத பைத்தியக்கார கூட்டங்கள் விவாவதம் நடைபெற்ற நிகழ்சியை வீடியோவாக கடைகளிலும் பொது இடங்களிலும் விற்பனை செய்கின்றனர். இதனால் சிலர் இந்துமத நம்பிக்கையை விடுகின்றனர் அல்லது சிலர் மதம் மாறுகின்றனர்.
இப்படி எத்தனை பொய்யத்தான் சொல்லி மதம் மாற்றி இருப்பார்களோ தெரியல. அதர்மம் தலை தோங்கும் இடத்தில் தர்மம் நிலை காக்கும் என்றத்துக்கு அமைய சாகீர் நாயருக்கு "செருப்படி" கொடுக்கும் பதிவாக இது காணப்படுகின்றது. இப்படி பொய்யை சொல்லி மதம் மாற்றுபவர்கள் தான் இவ்வுலகில் நிறைய பேர். உமக்கு தைரியம் இருந்தால் உண்மையை சொல்லுங்கள் அதை விரும்பி மதம் மாறட்டும். இப்படி பொய் சொல்லி வெக்கம் கெட்டு மதம் மாற்றுகின்ற அவசியம் உமக்கு அழகல்ல எமக்கும் அவசியம் இல்லை.
இணையத்தில் சனாதன தர்மத்தை தேடும்போது இணைய கருத்தரங்குகளில் நாஸ்திகர்கள், கம்யூனிஸ்ட் எழுத்தாளர்கள், இஸ்லாமிய, கிறிஸ்துவ மதமாற்ற ஊழியர்களை எதிர்கொள்ள நேரும். அவர்கள் இலக்கு ஒரு பில்லியன் இந்துக்களை தம் மத மீது நம்பிக்கை இழக்க வைத்து, அவர்கள் மதம்தான் உண்மையானது அவர்கள் கூறும் செய்திதான் இறுதியானது என்று நம்ப வைத்து இந்துக்களை தங்கள் மதத்திற்கு இழுப்பது.
வேத நூல்களில் அவ்வளவு பாண்டித்தியம் இல்லாததால் அவர்கள் மற்ற மதங்களுக்கு இரையாகின்றனர்.
ஜாகிர் நாய்க் உபநிஷத்தின் சில வாசகங்களுக்கு எப்படி மாற்றீடு கொடுத்துள்ளார் என்பதை பாருங்கள்.
"ஹிந்து" என்கிற சொல்லுக்கு ஜாகிர் நாய்க் கொடுக்கும் விளக்கத்தை பார்போம்.
ஜாகிர் நாய்க் : "ஹிந்து" என்பது ஒரு பாரசீக சொல். அது சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்களை குறிக்கும்.
உண்மை: இந்து (தேவநாகரி:हिंदू) என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் மெய்யியல், சமயங்கள் மற்றும் பண்பாடு ஆகியவற்றைக் குறிக்கும் அடையாளச் சொல்லாகும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி "இந்து" என்பது இந்திய சமயங்களைக் குறிக்கிறது. (உதா: இந்து சமயம், சைவம், வைணவம், சமணம், பௌத்தம் அல்லது சீக்கியம்). பொதுவாக இந்து சமயத்தவரைக் குறிப்பிட இந்து என்ற சொல் பயன்படுகிறது.
செங்கிருதச் சொல்லான சிந்துவிலிருந்து இந்து மறுவியதாகும். முதன்முதலாக சிந்து என்ற சொல் இந்தியத் துணைக்கண்டத்தின் வடக்குப்பகுதி ஆறான சிந்து ஆற்றை குறிப்பிட ரிக் வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பிரகாஸ்பதி ஆகமத்தில்
हिमालयं समारभ्य यावदिंदुसरोवरम् ।
तं देवनिर्मितं देशं हिंदुस्थानं प्रचक्ष्यते ।।
ஹிமாலயன் ஸமாரப்ய யாவ்திந்துஸரோவரம் .
தன் தேவ்னிர்மிதன் தேஷன் ஹிந்துஸ்தானன் ப்ரசக்ஷ்யதே ..
பொருள்: கடவுள் படைத்த நிலப்பரப்பான இமயமலை முதல் தென் பெருங்கடல் வரை இந்துசுதான் என்று அழைக்கப்படுகிறது. இதில் இந்து என்கிற சொல் இந்துசுதானில் உள்ளது.
ஆதாரம்:
https://ta.wikipedia.org/…/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%A…
ஜாகிர் நாய்க் அவர்களே, இந்து வேதங்களை தயவு செய்து முதலில் படியுங்கள்.
ReplyDeleteஜாகிர் நாயக்: "ஏகம் ஏவம் அத்விதயம்"
பொருள்: அவன் ஒருவனே: வேறு எவரும் இல்லை
(சந்த்க்யோ உபநிஷத் 6:2:1)
உண்மை: "ஏகம் ஏவம் அத்விதயம் பிரம்மா"
பொருள்: பிரமன் ஒருவனே, ஒருவனேயன்றி வேறில்லை.
(சந்த்க்யோ உபநிஷத் 6:2:1)
அவன் நிகரில்லாத ஒருவனே. தயவு செய்து சரியான வாசகத்தை முழுதாக இடவும். அத்தோடு அவனை "பிரமன்" என்று குறிப்பிடவும்.
ஜாகிர் நாய்க்: “Na casya kascij janita na cadhipah.”
பொருள்: அவனுக்கு பெற்றோர்களோ ஆண்டவனோ இல்லை.
(ஸ்வதேஸ் வதரா உபநிஷத் 6:9)
உண்மை: “na tasya kaścit patir asti loke na ceśitā naiva ca tasya liṅgaṃ
sa kāraṇaṃ karaṇādhipādhipo na cāsya kaścij janitā na cādhipaḥ”
பொருள்: அவனுக்கு இவ்வுலகில் தலைவனோ ஆட்சியாளனோ போன்ற அதிகாரம் செலுத்தும் யாரும் கிடையாது. அவனே மூலகாரணம், அவனே உறுப்புகளின் தலையாயவன். அவனுக்கு மூதாதையரோ, கட்டளையிடுவோரோ இல்லாதவன். அவனுக்கு எந்த சின்னமும் இல்லை. எந்த சின்னத்தையும் கொண்டு அவனை குறிக்க வேண்டாம்.
(ஸ்வதேஸ் வதரா உபநிஷத் 6:9)
ஜாகிர் நாயக்கிற்கு மீண்டும் அறிவுரை கூறுகிறோம் முழு வாசகத்தையும் பயன்படுத்தவும்.
ஜாகிர் நாயிக்: “Na tasya pratima asti”
பொருள்: அவனை போல் உருவமில்லை
(ஸ்வதேஸ் வதரா உபநிஷத் 4:19)
உண்மை: “nainam ūrdhvaṃ na tiryañcaṃ na madhye parijagrabhat /
na tasya pratimā asti yasya nāma mahad yaśaḥ”
பொருள்: மேலிருந்தோ, பக்கமிருந்தோ நடுவிலிரிந்தோ அவனை யாரும் பிடிக்க முடியாது. அவனை போல் உருவமில்லை. அவன் நாமம் மகா கீர்த்தி. (Mahad Yasah).
(ஸ்வதேஸ் வதரா உபநிஷத் 4:19)
ஜாகிர் நாயக்கிற்கு மீண்டும் அறிவுரை கூறுகிறோம் மகாத் யசாவில் உள்ள வாசகங்களையும் அப்படியே கூறவும். மகாத் யசாவின் பெயரையும் சொல்லவும்.
ஜாகிர் நாய்க் “Na samdrse tisthati rupam asya, na caksusa pasyati kas canainam.”
பொருள்: அவன் உருவம் தெரியாது. யாரும் அவனை தம் கண்ணால் காண முடியாது.
(ஸ்வதேஸ் வதரா உபநிஷத் 4:20)
உண்மை: “na saṃdṛśe tiṣṭhati rūpam asya na cakṣuṣā paśyati kaścanainaṃ /
hṛdā hṛdisthaṃ manasā ya enam evaṃ vidur amṛtās te bhavanti “
பொருள்: அவன் உருவம் காண்பதற்கான பொருள் அல்ல. யாரும் அவனை கண்ணால் காண முடியாது. கூர்மையான அறிவாற்றலும், ஆழ்ந்த சிந்தனை தரும் ஒருமித்த ஞானமும் கொண்டோர் அவன் நெஞ்சத்தில் குடி இருப்பதை உணர்ந்து மரணமில்லாமல் வாழ்வர்.
(ஸ்வதேஸ் வதரா உபநிஷத் 4:20)
முழு வாசகத்தையும் மேற்கோள் காட்டி உண்மையை வெளிபடுத்தவும்.
ஜாகிர் நாய்க் முழு வாசகங்களை மேற்கோள் காட்ட மாட்டார். அப்படி செய்தால் அவருடைய ஆதரவாளர்களை அவர் இழந்து விடுவார் ஏனென்றால் முழு வாசகங்கள் அவருடைய மதத்திற்கு எதிராக இருக்கும்.
ஜாகீர் நாயக்: “நா தஸ்ய ப்ரதிமா அஸ்தி”
ReplyDeleteபொருள்: அவனுக்கு(இறைவனுக்கு) உருவம் கிடையாது
(யஜூர் வேதம் 32:3:5)
உண்மை: ”நா தஸ்ய ப்ரதிமா அஸ்தி, யஸ்ய நாம் மஹாத்யாஷ்
ஹிரண்யகர்ப் இதெஷ்ய மா மா ஹின்ஸிடித்யேஷ்ய யாஷ்மன்ன ஜத் இதேஷா”
பொருள்: "ஹிரண்யகர்ப், யஸ்மான்ன ஜட், மா மா ஹின்சிட்" போன்ற வாசகங்களில் முதன்மையான கடவுளின் பெயரும் புகழும் அதிகமானவை. ஆனால் அவருக்கு ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பு இல்லை -
(இதன் பொருள் - கடவுளுக்கு எந்த குறிப்பிட்ட கட்டமைப்பும் இல்லை ஆனால் உன்னுடைய தியான ஆற்றல் மூலம் அந்த கட்டமைப்பை உணரலாம். (இங்கே பிரதிமா என்கிற சொல் பிம்பத்தை குறிப்பது இல்லை கட்டமைப்பை குறிக்கின்றது)
(யஜூர் வேதம் 32:3:5)
ஜாகீர் நாயக்: “ ஷுதம போவாவிதம்”
பொருள்: அவன் உடம்பில்லாதவன், பரிசுத்தமானவன்
(யஜூர் வேதம் 40:8:6)
உண்மை: “ஸ பர்யகாசுக்ரம்கயம்வ்ரன்மஸ்னவீர் ஷுத்தம்பப்வித்தம் கவிர்மனிஷி பரிபுஹ் ஸ்வயம்புர்யதட்த்யடொர்தான் வ்யட்ஜச்ஹாஷ்வடிப்யாஹ் ஸமப்யாஹ்”
அவன் எங்கும் வியாபித்துள்ளான், அற்புதமானவன். அவனுக்கு உடம்பில்லை. நரம்பில்லை. தோல் துவாரங்கள் இல்லை. அவன் பரிசுத்தமானவன் பாவமற்றவன். அவன் கவிஞன் (இங்கே கவிஞன் என்பது அவன் நினைக்கிற எதையும் உருவாக முடியும் என்று பொருள்) அவனே மொழி ( சொற்கள் உதிக்கும் மனதை ஆட்சி செய்பவன்), வெற்றியாளன், தானே சிருஷ்டிதுக்கொண்டவன்(ள்). காலம் துவங்கியதிலிரித்து எல்லோரையும் தன் கட்டுபாட்டில் வைத்திருக்கும் தகுதியானவன்.
(யஜூர் வேதம் 40:8:6)
ஜாகீர் நாயக்: “அந்தடம ப்ரவிஷாந்தி யெ அசும்பூதி முபஸ்தே”
பொருள்: இயற்கையை(நீர்,நிலம், நெருப்பு போன்றவை) வணங்குபவர்கள் இருட்டிற்கு செல்கின்றனர். சம்பூதிகளை வணங்குபவர்கள் மேலும் ஆழ்ந்த இருட்டிற்கு செல்கின்றனர்.
குறிப்பு: சம்பூதி என்பது உருவாக்கப்படும் பொருள். எ-கா: மேஜை, நாற்காலி, சிலை போன்றவை.
(யஜூர் வேதம் 40:9:7)
உண்மை: “அந்தம் தமஹ ப்ர விஷாந்தி யேஷம்பூதியுபஸ்தே
த்தோ புய இவ தே தமோ ய ஓ சம்புத்யம் ரத”
பொருள்: எவரெல்லாம் பிரிவுகளையும் அழிவுகளையும் வணங்குகிறார்களோ, அதை மட்டுமே விளையாட்டாக செய்கிறார்களோ, அவர்கள் இருட்டிற்கு (இருட்டு என்பது அறியாமை) செல்கிறார்கள். அந்த அறியாமையில் மூழ்கி அதில் உருவாக்கப்படும் பொருட்களை வணங்குகிறவர்கள் மேலும் அறியாமையில் மூழ்குகின்றனர்.
(யஜூர் வேதம் 40:9:7)
குறிப்பு: இங்கு வழிபாடு என்பது எப்போதும் பக்தியில் மூழ்கி இருப்பதாகும். சம்பூதி என்றால் கூடுவது, அசம்பூதி என்பது பிரிவு மற்றும் புறவாழ்க்கையில் மூழ்கி இறைவனை வணங்க மறுப்பதாகும். இங்கே எங்கேயும் இயற்கை (காற்று, தண்ணீர், அக்னி போன்றவை) வணக்கம் பற்றி சொல்லவே இல்லை.
ஜாகீர் நாயக்: யசூர் வேதத்தில் இந்த வாசகம் உள்ளது.
"நம்மை நல்ல பாதையில் அழைத்து செல். தப்பான பாதையில் சென்று குழம்புவதற்கு காரணமாக இருக்கும் பாவத்தை நீக்குவாயாக."
(யஜூர் வேதம் 40:16:8)
உண்மை: "அக்னே நய சுபத ராய அஸ்மன்விஷ்வாணி தேவ்வாயுனானி வித்வான"
பொருள்: இறைவனே!! எங்களது அனைத்து செயல்களும் உங்களுக்கு தெரியும். தயவு கூர்ந்து எங்களை நல்வழிப்படுத்தி , வளமான ஆன்மீக பாதையில் எங்களை இட்டுச்செல்வாயாக..
(யஜூர் வேதம் 40:16:8)
ஜாகிர் நாய்க்: “Dev maha osi”
ReplyDeleteபொருள்: "கடவுள் மகத்தானவர்"
(அதர்வண வேதம் 20:58:3:9)
The truth: baṇ mahāṃ asi sūrya baḍ āditya mahāṃ asi
mahas te sato mahimā panasyate ‘ddhā deva mahāṃ asi .
உண்மையாக. இறைவனே! நீ உண்மையில் மகத்துவம் வாய்ந்தவன். ஆதித்ய நீ மகா வல்லவன், கடவுளே!
(அதர்வண வேதம் 20:58:3:9)
ஜாகிர் நாய்க்: ரிக் வேதத்தில் சொல்லபடுவது "ரிஷிகள் (வேத பண்டிதரர்கள்) இறைவனை பல பெயர்களில் அழைக்கின்றனர்.
(ரிக் வேதம் 1:164:46)
உண்மை: índram mitráṃ váruṇam agním āhur /
átho divyáḥ sá suparṇó garútmānékaṃ sád víprā bahudhâ vadanty /
agníṃ yamám mātaríśvānam āhuḥ
பொருள்: இந்திரா, மித்ரா, வருணம், அக்னி, திவ்யா, சுபர்ண, கருட்மான், யமா, மாட்ரிஷ்வா போன்ற பெயர்கள் அவனுக்கு உண்டு. இறைவன் ஒருவனே. அறிவுள்ளோர் பல பெயர்களில் அழைப்பர்.
(ரிக் வேதம் 1:164:46)
குறிப்பு: மேலே உள்ள வரிக்கு ஜாகிர் நாய்க் கொடுத்துள்ள மொழிபெயர்ப்பு அந்த வசனத்துக்கான பொருளே கிடையாது என்று தெரிந்துகொண்டுள்ளீர்கள். ஆனால் ஜாகிர் நாய்க் இந்த வசனத்துக்குக்கு பொருளை கூறினால் அவர் தம்முடைய ஆதரவாளர்களை இழந்துவிடுவார் என்பதற்காக இறைவன் (அல்லாவை தவிர) இந்திரா, மித்ரா வருணம், அக்னி, திவ்யா, சுபர்ண, கருட்மான், யம, மாட்ரிஷ்வா போன்ற பெயர்களை பயன்படுத்தவில்லை.
.
ஜாகிர் நாய்க்: அடுத்து பயன்படுத்துவது "பிரம்மாவும் விஷ்ணுவும் இறைவனின் தன்மையான படைத்தல், காத்தல் மட்டுமே."
(ரிக் வேதம் 2:1)
மேலே உள்ள பொருளுக்கு ஏன் வசனம் காட்ட வில்லை? பதில் கீழே உள்ள வரியில்.
உண்மை: tvamaghna indro vṛṣabhaḥ satāmasi tvaṃ viṣṇururughāyo namasyaḥ |
tvaṃ brahmā rayivid brahmaṇas pate tvaṃ vidhartaḥsacase purandhyā ||
வீரனுக்கு வீரனே, அக்னி நீதான், இந்திரன் நீயே, பீடு நடையுள்ளவனும் பெருமைக்குரியவனும் நீயே, நீயே செல்வமிக்க பிரமனஸ்பதி, பிரமன். காப்பவனே, உன் ஞானம் கொண்டு எங்களை அருள்வாய்.
(ரிக் வேதம் 2:1)
ஜாகிர் நாய்க்: “Ma cid anyad vi sansata sakhayo ma rishanyata"
"அன்பர்களே! அவனை தவிர வேறு யாரையும் வணங்காதீர். அவன் ஒருவனே புகழுக்குரியவன்.
(ரிக் வேதம் 8:1:1:10)
உண்மை: mā cidanyad vi śaṃsata sakhāyo mā riṣaṇyata |
indramitstotā vṛṣaṇaṃ sacā sute muhurukthā ca śaṃsata ||
பொருள்: "அன்பர்களே! அவனை தவிர வேறு யாரையும் வணங்காதீர். அவன் ஒருவனே புகழுக்குரியவன். அதனால் எந்த துயரமும் உங்களை அணுகாது. நீர் (தண்ணீர்) கொட்டும் போது வல்லமை பொருந்திய இந்திராவை புகழவும். உங்கள் பாராட்டுகளை தொடர்ந்து சொல்லவும்.
(ரிக் வேதம் 8:1:1:10)
ஜாகிர் நாய்க் என்ன சொல்ல நினைத்தார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இரண்டாவது வரியினை மிகவும் தந்திரமாக மறைத்து முதல் பாடலை மட்டும் காட்டி இருக்கிறார். ஜாகிர் நாய்க், இரண்டு வரியினைமுழுதாக பயன்படுத்த ஏன் பயப்படுகிறீர்கள்?
ReplyDeleteஜாகிர் நாய்க்: “Devasya samituk parishtutih”
பொருள்: உண்மையாக, புனித படைப்பாளனின் பெருமை மகத்துவமே.
(ரிக் வேதம் 5:1:81:11)
உண்மை: yuñjate mana uta yuñjate dhiyo viprā viprasya bṛhato vipaścitaḥ |
vi hotrā dadhe vayunāvid eka in mahī devasya savituḥ pariṣṭutiḥ ||
பொருள்: துதி பாடல்களில் தேர்ச்சிமிக்க அவனுடைய குருமார்கள் ஆன்மாவையும் புனித எண்ணங்களையும் ஒன்று குவிப்பார்கள். அவனுக்கு பணிவிடை ஒன்றே அவர்களுடைய திருப்பணி. இறை சவிதாவிற்கு கம்பீர பாராட்டுகள்.
(ரிக் வேதம் 5:1:81:11)
ஜாகிர் நாய்க்: "எவரெருவர் பரம்பொருளை தாமாக உண்டாக்கி வணங்குகிறாரோ அவர் பொய்யானவற்றையே வணங்குகிறார்".
பகவத் கீதை 7:20
வசனம் 7:20 பகவத் கீதையின் மொழிபெயர்ப்பு
"ஜட ஆசைகளால் அறிவை இழந்தவர்கள், தேவர்களிடம் சரணடைந்து, தங்களது இயற்கைக்கு ஏற்ற வழிபாட்டு முறைகளையும் நியமங்களையும் பின்பற்றுகின்றனர்."
இதில் பகவான் கிருஷணர் கூறுவது ஜட ஆசைகளுக்காக அறிவற்ற மக்கள் பிற தேவர்களான சிவன், முருகர், விநாயகர்...... இப்படி வழிபடுவதை தான் சொல்கிறார்.
கீதை, குரானைப் போன்று தொடர்ச்சியற்ற வசனங்களைக் கொண்ட நூல் அல்ல. தனித்தனி – ஆனால் தொடர்புடைய தலைப்புகளில் கோர்வையாக எழுதப்பட்டுள்ள நூல். குரானில் இருப்பதுபோன்று திடீரென்று மக்கா சூரா, திடீரென்று மதீனா சூரா, திடீரென்று முகமதின் வீட்டு விஷயம், திடீரென்று அரபிக்களின் வழக்கங்கள், திடீரென்று பொதுவான உபதேசம் என்று கலீஃபா ஒருவர் அவசர அவசரமாய் தொகுத்து, வேறுபட்ட குரான்களை தீயிட்டு கொளுத்தி இதுதான் குரான் என்று அவசரகதியில் தொகுத்த நூல் இல்லை அது.
இதை சொல்வது, குரானை விட கீதை உயர்வான நூல் என்பதை நிறுவுவதற்காக அல்ல. இப்படி திடீரென்று ஒரு வசனத்தை எடுத்து அதன் அர்த்தத்தை மாற்றி இது அல்லாஹ்வை உயர்த்துகிறது என்று இஸ்லாமிஸ்டுகள் ஜல்லியடிப்பதை சுட்டிக்காட்டவே இதைக் கூறுகிறேன்.
ஜாகிர் நாய்க் தான் ஒரு சமகால சமயங்களின் போதகர் என்று கூறிகொள்கிறார். அப்படியிருக்க, ஏன் அவர் நம் வேதங்களில் இருந்து மேற்கோள் காட்டும் போது, வாசகங்கள்/வரிகள் முழுதாக பயன் படுத்தாமல் அவர் விருப்பதிற்கேற்ப பகுதிபடுத்தி அவற்றின் பொருள்களை சிதைக்க வேண்டும்? ஒன்று அவர் திறமையற்றவராக இருக்கவேண்டும், இல்லையேல் அவர் கூச்சமிக்கவராக இருக்க வேண்டும்.
ஜாகிர் நாய்க்கிற்கு ஆலோசனை.
வேதங்களை பற்றி தெரிந்து கொள்ள உள்நோக்கத்துடன் கற்கும் நபர்களை அணுக கூடாது. மாறாக, இவர் வேதங்களை, ஒரு தேர்ச்சிபெற்ற ஆன்மீக வழியில் வந்த குருவிடம் முறையாக கற்க வேண்டும்.