Sunday, September 10, 2017

ராமரும், கிருஷ்ணரும் இறைவனின் திருத்தூதர்களா? இறைத்தூதர்கள் ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும், ஒவ்வொரு மொழியிலும் உலகெங்கும் அனுப்பட்டிருக்கும் போது இந்தியாவுக்கு அனுப்பட்டிருப்பார்கள். ஆகவே ராமரையும், கிருஷ்ணரையும் இறைத்தூதர்களாக ஏற்றுக் கொள்ளளாமா?


கேள்வி:
ராமரும், கிருஷ்ணரும் இறைவனின் திருத்தூதர்களா? இறைத்தூதர்கள் ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும், ஒவ்வொரு மொழியிலும் உலகெங்கும் அனுப்பட்டிருக்கும் போது இந்தியாவுக்கு அனுப்பட்டிருப்பார்கள். ஆகவே ராமரையும், கிருஷ்ணரையும் இறைத்தூதர்களாக ஏற்றுக் கொள்ளளாமா?

பதில்: இதனை கீழ் கண்ட குர்ஆன் வசனங்கள் தெளிவுபடுத்துகிறது.

நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டுநன்மாராயங் கூறுபவராகவும்அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத எந்த சமுதாயத்தவரும் (பூமியில்) இல்லை (35:24)

இன்னும் (நபியே! உம்மைப்பற்றி இந்நிராகரிப்போர் ''அவருக்கு அவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்பும்) அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?" என்று கூறுகிறார்கள் நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரே ஆவீர்மேலும்ஒவ்வொரு சமூகத்தவருக்கும் ஒரு நேர்வழி காட்டியுண்டு(13:7)

இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம் இன்னும் (வேறு) தூதர்கள் (பரரையும் நாம் அனுப்பினோம் ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை. இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்.(4:164)

திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம் அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம் இன்னும் எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ (அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர்; (இவ்விருசாராரில்) எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த அத்தாட்சியையும் கொண்டு வருவதற்கு (அதிகாரமும்) இல்லை. ஆகவே அல்லாஹ்வுடைய கட்டளை வரும் போது, (அனைவருக்கும்) நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும் அன்றியும்அந்த இடத்தில் பொய்யர்கள் தாம் நஷ்டமடைவார்கள்.(40:78)

25 நபிமார்கள் பெயரே குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. (உ-ம்) ஆதம்(அலை), நூஹ்(அலை), இப்ராஹீம்(அலை), மூஸா(அலை), தாவூத்(அலை), சுலைமான்(அலை), ஈஸா(அலை)முஹம்மது(ஸல்) போன்ற இறைத்தூதர்கள்.

ஹதீஸின்படி உலகிற்கு இதுவல்லாமல் பல நபிமார்கள் இறைவனால் அனுப்பபட்டதை தெளிவுபடுத்துகிறது. அவ்வாறு அனுப்பட்ட இறைத்தூதர்கள் அவர்கள் சார்ந்திருந்த சமூகத்தை ஒரு குறிப்பிட்ட காலம் வாழும் வரை நேர் வழிப்படுத்தவே வந்தனர். அருள்மறை குர்ஆன் கூறுகிறது:

இஸ்ராயீலின் சந்ததியனருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான் இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்) ''நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன் நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன் அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும்வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன் அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோதையும் உயிர்ப்பிப்பேன் நீங்கள் உண்பவற்றையும்நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்ற நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவென். நீங்கள் முமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது" (என்று கூறினார்). (3:49)

நபி முஹம்மது(ஸல்) இறுதி இறைத்தூதராவார் என்பதை கீழ்கண்ட குர்ஆனி வசனம் தெளிவுபடுத்துகிறது.

முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லைஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும்நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.(33:40)

நபி முஹம்மது(ஸல்) ஒட்டுமொத்த மனித சமுதாயத்துக்கும் நபி ஆவார் என்பதை கீழ்கண்ட குர்ஆனி வசனம் தெளிவுபடுத்துகிறது.

(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (21:107)

இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லைஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.(34:28)

ஹதீஸ்: ஒவ்வொரு நபிமார்களும் அவர்களின் சமுதாய மக்களுக்காக மட்டுமே அனுப்பபட்டனர். நான் மனித சமுதாயம் அனைத்துக்கும் நபியாவேன். (புகாரி:ஜாபிர்(ரலி))

குர்ஆனிலோ அல்லது ஸஹீஹான எந்த நபி மொழிகளிலும் தெளிவான ஆதாரங்கள் எதுவும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் குறித்து காணப்பட்வில்லை. மேலும்இராமர் குறித்தோ கிருஷ்ணர் குறித்தோ எந்தப் பெயரும் கூட குர்ஆன்ஹதீஸ்களில் தென்படவில்லை. ஆகவே அவர்கள் இறைத்தூதர்களாக இருக்கவும் செய்யலாம் இல்லாமலும் இருக்கலாம். உறுதியாக இருவரும் இறைத்தூதர்கள் தான் என்று எவரும் கூற வியலாது. சில முஸ்லீம்கள் அரசியல்வாதிகள் மாற்று மதத்தாரின் ஓட்டுக்களைப் பெற அவர்களின் மனதில் இடம் பிடிக்க ராம்(அலை) எனக்கூறி வருகின்றனர். இது முற்றிலும் தவறே. ஏனெனில் ராம் இறைத்தூதராஏன்பதே தெளிவு செய்யப்பட்டாத போது குர்ஆன் ஹதீஸின் தெளிவின்றி மனோ இச்சைப் பிரகாரம் இவ்வாறு கூறுவது முரணானது. அநேகமாக அவர்களும் இறைத்தூதர்களாக இருந்திருக்கலாம்அல்லாஹ் அறிந்தவன் என்றே கூறவேண்டும்.

இராமரும்கிருஷ்ணரும் இறைத்தூதர்களாகயிருந்தாலும் கூட இன்றும் நாம் முஹம்மது (ஸல்) அவர்களையே பின்பற்றுதல் வேண்டும். ஏனெனில் இராமரும்,கிருஷ்ணரும் இறைத்தூதர்களாக இருந்திருப்பினும் அவர்கள் குறிப்பிட்ட கால கட்டத்துக்கு குறிப்பிட்ட சமுதாய மக்களுக்கே இறைத்தூதர்களாக இருந்திருப்பார்கள். ஆனால் இன்றோ ஒட்டு மொத்த உலக மனித சமுதாயத்தாருக்கும் (இந்தியா உட்பட) இறுதி இறைத்தூதராக அனுப்பப்பட்ட முஹம்மது(ஸல்) அவர்களையே பின்பற்றுதல் வேண்டும்.

1 comment:

  1. அவதாரம் என்பதும் ' இறைத்தூதர் ' என்பது ஒண்றா ?

    ஜடவுலகில் தோன்றுவதற்காக, முழுமுதற் கடவுள் தனது திருநாட்டிலிருந்து கீழிறங்கி வருகிறார். அவ்வாறு அவர் தோன்றும்போது, 'அவதாரம் ' என்று அழைக்கப்படுகிறார். ஆன்மீக உலகில் நிரந்தரமாக உள்ள இந்த ரூபங்கள், பௌதிக்க படைப்பிற்குள் தோன்றும் போது 'அவதாரம் ' என்ற பெயரைப் பெறுகின்றனர்."

    அவதாரம் என்பது இறைவன் அவரது உலகிலிருந்து இறங்கி வருவதை தான் அவதாரம்(இறங்கி வருதல்) என்கிறது. ஆனால், இறைத்தூதர் என்பது இறைவனால் சக்தி அளிக்கப்பட்ட ஒரு சாதாரண மனிதனை தான் சொல்கிறது. அதாவது, அவதாரம் என்பது இறைவனே இறங்கி வருவது, தூதர் என்பது அந்த இறைவனின் சக்திஅளிக்கப்பட்ட ஒரு ஜீவாத்மா வருவதாகும்.

    இரண்டிற்கும் நேர் எதிர் வித்தியாசங்களை உடையது, தூதர் ஒரு நாளும் அவதாரமாகவோ/இறைவனாகவோ முடியாது. இப்படி வேத இலக்கியங்களில் இறைவனின் அவதாரமாக சொல்வது கிருஷ்ணர், ராமர், நரசிம்மர்,வராஹர்,..... இப்படி பல உள்ளன. வேத இலக்கியங்களில் இவர்களை எங்கேயும் தூதராகவோ/பிரதிநிதியாகவோ சொல்லவில்லை. இவர்களை வேதங்களில் இறைவனாக தான் சொல்கிறது.

    ஆனால், இறைத்தூதர்கள் / முனிவர்கள் ஆகியோர்கள் இந்தியாவில் ராமானுஜர்,மதவாச்சாரியார்,பிரபுபாதர்,... . இது போல் முகம்மது நபி, இயேசு கிறிஸ்து, குருநானக், .... இப்படி பலர் உள்ளார்கள்.

    வேத விதிகளை ஒருவன் முறையாகச் செயலாற்ற மறுக்கும்போது அஃது அதர்மமாகி விடுகிறது.

    “எப்போதெல்லாம் எங்கெல்லாம் தர்மம் சீர்குலைந்து அதர்மம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ, பரத குலத் தோன்றலே, அப்போதெல்லாம் நான் தோன்றுகின்றேன்” - பகவான் கிருஷ்ணர், பகவத் கீதா - 4.7

    “பக்தர்களைக் காத்து, துஷ்டர்களை அழித்து, தர்மத்தின் கொள்கைகளை மீண்டும் நிலைத்துவதற்காக, நானே யுகந்தோறும் தோன்றுகிறேன்” - பகவான் கிருஷ்ணர், பகவத் கீதா - 4.8

    எனவே, பகவானின் ஒவ்வொரு குறிப்பிட்ட அவதாரத்திலும் குறிப்பிட்ட நோக்கம் உண்டு, இவையனைத்தும் சாஸ்திரங்களில் விளக்கப்பட்டுள்ளன. சாஸ்திரங்களில் குறிப்பிடப்படாத எவரையும் அவதாரமாக ஏற்றுக்கொள்ளக் கூடாது.

    ஒவ்வொரு அவதாரத்திலும் அந்த குறிப்பிட்ட சந்தர்பத்திலுள்ள குறிப்பிட்ட மக்கள் புரிந்துகொள்ளக் கூடிய அளவிற்கு தர்மத்தைப் பற்றி அவர் உபதேசிக்கின்றார். ஆனால் நோக்கம் ஒன்றே—தர்ம நியதிக்குக் கீழ்ப்படிந்து இறையுணர்வுடன் வாழ்வதற்கு மக்களை வழிநடத்துதல் என்பதே அது. சில சமயங்களில் அவர் தாமே வருகிறார் (அவதாரம்), சில சமயங்களில் அவரால் அங்கீகரிக்கபட்ட பிரதிநிதியை (இறைத்தூதர் / நபி ) அனுப்புகிறார்.

    அசுரர்களை அவர் வதம் செய்கிறார் என்ற போதிலும், அவர்களை அழிப்பதற்காகத் தோன்ற வேண்டிய அவசியம் முழுமுதற் கடவுளுக்கு இல்லை. அசுரர்களை அழிக்கும் திறன்வாய்ந்த பிரதிநிதிகள் பலர் அவரிடம் உள்ளனர். லீலைகளைக் காண்பதற்குப் பேராவல் கொண்டிருந்த தூய பக்தர்களின் ஏக்கத்தைத் தீர்ப்பது என்னும் முக்கிய நோக்கத்திற்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தோன்றுகிறார். எனவே, கிருஷ்ண அவதாரத்தின் முக்கியக் காரணம், அவரது களங்கமற்ற பக்தர்களைத் திருப்தி செய்வதேயாகும்.


    இவர்களை பற்றிய வித்தியாசங்களை உண்மையில் பிற மதங்களை விட ஒரு இந்து அதிகமாகவே அறிந்து உள்ளான். எனவே, பகவான் கிருஷ்ணா அவதாரத்துக்கு, இறை தூதருக்கும் உள்ள வித்தியாசங்களை ஒரு இந்து வேத இலக்கியங்கள் மூலமாக எளிதாக அறிந்து கொள்கிறான்.

    ReplyDelete