1. சமஸ்கிருத வார்த்தை ''நரஷன்ஸா" என்றால் புகழுக்குறியவர், அரபிய மொழியில் முஹம்மது ஆவார். சமஸ்கிருத வார்த்தை ''கௌரமா" சாந்தியைப் பரப்ப உழைப்பவர். மற்றொரு பொருள் இடம் பெயர்ந்து சென்றவர். அதாவது மக்காவிலிருந்து மதீனாவுக்கு இடம் பெயர்ந்து சென்றவர். அவரின் 60090 எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு பெற்றவர்.
2. இறைத்தூதர் ஒட்டகச் சவாரி செய்பவர். உறுதியாக இந்தியத் தூதர்களைக் குறிப்பிடவில்லை. எவரும் இந்தியாவில் ஒட்டகத்தின் மீது சவாரி செய்வதில்லை. பிராமணர்கள் ஒட்டகச் சவாரி செய்யத் தடை உள்ளது. (மனுஸ்மிருதி பாகம் 25, பக்கம் 472).
மனுஸ்மிருதி அத்தியாயம் 2, சுலோகம் 202 கூறுகிறது. ''ஒரு பிராமணன் ஒட்டகக் கழுதைச் சவாரி செய்வது தடை செய்யப்பட்டது. நிர்வாணமாய் குளிப்பதும் தடையாகும். அவனுடைய மூச்சால் அவனை சுத்தப்படுத்திக் கொள்ளவும்"
3. முஹம்மது எனும் இறைத்தூதர் பெயரை மம்ஹா எனும் ரிஷி என சுலோம் கூறுகிறது. சமஸ்கிருதத்தில் மஹ்மத் என்பது கெட்ட வார்த்தையாகும். ஆகவே மம்ஹா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
4. அவருக்கு வழங்கப்பட்ட நூறு தங்க நாணயங்கள் அவரின் சிறந்த தோழர்களைக் குறிக்கிறது. ஏகத்துவத்தை ஏற்ற அத்தோழர்களைக் குறிக்கிறது. ஏகத்துவத்தை ஏற்ற அத்தோழர்கள் மக்கத்து இணைவைப்போரால் துன்புறுத்தப்பட்டு அபீஷினியா, மதீனா இடம் பெயர்ந்தனர். பின்னர் மதீனாவில் ஒன்று கூடினர். அவருக்கு வழங்கப்பட்ட 10 கழுத்து அணிகலன்கள் இஸ்லாம் கூறும் ''அஸ்ரத்துல் முபஷ்ஷரா" ஆகும். சுவனத்திற்கு இறைத்தூதரால் நன்மாராயம் கூறப்பட்ட பத்துபேர் (நபித்தோழர்கள்). அவர்களாவன அபூபக்கர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி), அலி(ரலி), தல்ஹா(ரலி), ஜுபைர்(ரலி), அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப்(ரலி), ஸஆத் பின் அபீவக்காஸ்(ரலி), ஸஆத் பின் ஜைது(ரலி), அபூ உபைதா(ரலி). தூதருக்க வழங்கப்பட்ட 300 குதிரைகள் பத்ருப்போரில் போரிட்டு வெற்றி ஈட்டித்தந்த நபித்தோழர்களைக் குறிக்கும் மூன்று மடங்கு அதிகமாக இருந்த எதிரிகளை வெற்றி கொள்ளப் போரிட்ட இந்நபித்தோழர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்ததாக இஸ்லாம் கூறுகிறது. 10000 பசுகள் என்பது இறைத்தூதருடன் மக்கா வெற்றியின் பொது வந்த நபித்தோழர்களைக் குறிக்கிறது. அவர்கள் பரிசுத்தமான, போராடக் கூடிய தீரர்கள் என்பதை அருள் மறையின் கீழ்கண்ட வசனம் கூறுகிறது.
முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும் அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும் இதுவே தவ்றாத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலுள்ள அவர்கள் உதாரணமாவது ஒரு பயிரைப் போன்றது அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது. பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவசாயிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் - ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான்.(48:29)
''ரெப்ஹ்" என்னும் சமஸ்கிருத வார்த்தையின் அர்த்தம் அரபியில் அஹ்மத் ஆகும். இது இறைத்தூதரின் மற்றொருபெயர்.
5. இறைத்தூதரும் அவரின் தோழர்களும் இறை வழிபாட்டில் அதிக கவனம் செலுத்துவர். அது போர்களமாக இருந்தாலும் சரியே.
குர்ஆனின் கீழ் கண்ட வசனம் இதைத் தெளிவுப்படுத்துகிறது.
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள் எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்குத் தவிர மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.(2:45)
(நபியே! போர் முனையில்) அவர்களுடன் நீர் இருந்து, அவர்களுக்கு தொழவைக்க நீர்(இமாமாக) நின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு உம்முடன் தொழட்டும் அவர்கள் உம்முடன் ஸஜ்தா செய்து (தொழுகையை முடித்ததும்) அவர்கள் (விலகிச் சென்று) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து நிற்கட்டும்); அப்பொழுது, தொழாமலிருந்த மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் தொழட்டும். ஆயினும் அவர்களும் தங்கள் ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம், தங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கட்டும் - ஏனெனில் நீங்கள் உங்கள் ஆயுதங்களைப்பற்றியும், உங்கள் சாமான்களைப் பற்றியும் கவனக் குறைவாக இருந்தால், அப்பொழுது உங்கள் மீது ஒரேயடியாகச் சாய்ந்து (தாக்கி) விடலாமென்று காஃபிர்கள் விரும்புகின்றனர்; ஆனால் மழையினால் உங்களுக்கு இடைஞ்சல் இருந்தாலோ, அல்லது நீங்கள் நோயாளிகளாக இருப்பதினாலோ, உங்களுடைய ஆயுதங்களைக் (கையில் பிடிக்க இயலாது) கீழே வைத்து விடுவது உங்கள் மீது குற்றம் ஆகாது. எனினும் நீங்கள் எச்சரிக்கையாகவே இருந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்திருக்கின்றான்.(4:102)
6. இறைத்தூதருக்கு வழங்கப்பட்ட அருள் வளங்களில் ஒன்று அருள் மறை குர்ஆன் ஆகும். அதனை இறைத்தூதர் தம் தோழர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்,அவர்கள் அதனை மனனம் செய்தனர்.
குர்ஆனின் கீழ்கண்ட வசனங்கள் இதனைத் தெளிவுப்படுத்துகிறது.
(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.(21:107)
இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை. ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்(34:28)
மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.(68:4)
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.(33:21)
7. கஃபா (மக்காவில் உள்ள இறைவனின் ஆலயம்) புணர்நிர்மாணத்தின் போது அரபுக் கோத்திரங்களுக் கிடையில் எழுந்த போர் மூட்டத்தைக் போக்கி சமாதானம் நிலவச் செய்தவர். இறைத்தூதர் மக்கா வெற்றி கூட மிகப் பெரிய நிலப்பரப்பை இரத்த சேத மின்றி அறுர்மியவர். நபி(ஸல்), தம்மை எதிர்த்த மிகப்பெரும் விரோதிகளையும் மன்னித்த இறைத்தூதர்.
8. அறியாமைக்கால இருளில் மூழ்கிக்கிடந்த அரபுலக மக்களை தம் போதனைகளால் நேர்வழியின் பக்கம் அழைத்தவர்.
குர்ஆன் கூறுகிறது:
74:1 (போர்வை) போர்த்திக் கொண்டு இருப்பவரே!
74:2 நீர் எழுந்து (மக்களுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்வீராக.
74:3 மேலும், உம் இறைவனைப் பெருமைப் படுத்துவீராக.
3:159 அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள் எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக. அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக. தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும் பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.
114:1 (நபியே!) நீர் கூறுவீராக. மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
114:2 (அவனே) மனிதர்களின் அரசன்.
114:3 (அவனே) மனிதர்களின் நாயன்.
வேதங்களைப் பின்பற்றுவோர், இறைவனைப் போற்றிப்புகழ்ந்து இறைத்தூதரைப் பின்பற்றி நரக நெருப்பிலிருந்து விடுபட வேதங்கள் கூறும் சுலோகங்கள் தான் மேலே கூறப்பட்டவை.
http://www.islamkalvi.com/religions/islam_hindu_comparision_04.htm
சாகிர் நாயக் இந்துமத கருத்துக்களை தனக்கு சாதகமாக திருத்தி கூறுகிறார். இந்துமத வேதங்களிலுள்ள எல்லா வசனங்களையும் இப்படி திருத்தி கூறுகிறார்.
ReplyDeleteஜாகிர் நாயக் தவறாக கூறும் ரிக் வேத கருத்து..
சமஸ்க்ருத வார்த்தை ‘ஸம்ஷதா’ 'samsata' மற்றும் ‘நராசாம்ச’ (narasamsa) ஆகிய இரண்டு வார்த்தைகளை ஜாகிர் நாயக் தன்னுடைய கருத்திற்கு முக்கிய வாதமாக எடுத்து கொண்டார். ஜாகிர் கூறுவது 'samsata' என்பது புகழப்பட்ட ஒருவரை சொல்வது என்கிறார். ஆனால் 'அஹம்மது' என்பது புகழப்பட்டவர் அர்த்தம். இந்த அஹமது என்பது மொஹம்மது நபியின் இன்னொரு அரேபிய பெயர் என்கிறார். எனவே இந்த 'samsata' வார்த்தை நபியையே குறிக்கிறது என்கிறார்.
இரண்டாவது வார்த்தை narāśaṃsa என்பது பாராட்டப்பட ஒருவர் அல்லது போற்றுதலுக்குரியவர் ஆகும். ஆனால், அரபு வார்த்தை முஹம்மது போற்றுதலுக்குரிய மனிதன் என்று அர்த்தம். எனவே, இந்த 'narāśaṃsa' வார்த்தையும் இறைத்தூதர் நபியையே கூறுகிறது என்கிறார்.
உண்மையில், இரு சமஸ்கிருத வார்த்தைகள் śaṃsata மற்றும் narāśaṃsa என்பது குறிப்பது ஒரு விக்ரகம் அல்லது கடவுள், இவர்களே புகழத்தக்க ஒருவர்.
ரிக்வேதப் புகழ்பெற்ற வித்வான் 'சயனா' என்பவரின் கருத்துப்படி 'samsata' மற்றும் narasamsa வார்த்தை குறிப்பது ஒரு கடவுள் அல்லது மரியாதைக்குரிய தெய்வத்தை (மனிதனை அல்ல). இது நம்மை போலுள்ள மனிதனை குறிக்காது என்கிறார்.
ரிக் வேதம், வசனங்கள் (1/13/3), (1/18/9), (1/106/4), (1/142/3), (2/3/2), (5/5/2), (7/2/2), (10/64/3) and (10/182/2) ஆகியவைகளில் narāśaṃsa என்கிற வார்த்தை வருகிறது. அதே போல் ரிக் வேதம் வசனம் 8/1/1 இல் śaṃsata வார்த்தை வருகிறது.
ரிக் வேதம் வசனம் 8/1/1 அர்த்தம் ....
'நண்பர்களே! இந்திரனேயன்றி வேறு எவரையும் துதிக்காதீர்கள். உங்களுக்கு துன்பத்தை செய்து கொள்ளாதீர்கள். ஸோமம் பொழியப்படுங்க்கால் வர்ஷிக்கும் இந்திரனையே நீங்கள் போற்றுங்கள். அவனுக்கே அடிக்கடி பாடுங்கள்'
இதில் வார்த்தை śaṃsata (போற்றுதலுக்குரிய) மேலே உள்ள வசனம் குறிக்கும் தெய்வம் இந்திரனே ஆகும். டாக்டர் ஜாகீர் நாயக் கூறுவது போல் புகழப்பட்ட ஒரு மனிதன் (முஹம்மது) குறிக்கவில்லை.
பொதுவாக, ரிக் வேதத்தின் ஒவ்வொரு சூக்தத்திலும் உள்ள எல்லா வசனங்களும் ஒரே தெய்வத்தையே துதிக்கும். எடுத்துக்காட்டாக, 13 சூக்தத்தில் உள்ள புகழப்பட்ட தெய்வம் 'அக்னி' எனில். இந்த சூக்த்தில் வரும் அணைத்து வசனங்களும் இந்த தெய்வத்தையே குறிக்கும்.
அடுத்து, ரிக் வேதம் வசனம் 1/13/3 அர்த்தம் ....
'நான், இந்த யாகத்திற்கு அவிகளை ஆள்பவனும், இனிய நாவுள்ளவனும், அன்பு மிகுந்தவனுமான நராசாம்சனை அழைக்கிறேன்'
இந்த ரிக் வேதம் முதல் மண்டலத்தில், 13 வது சூக்தத்தில் வரும் எல்லா வசனங்களும் 'அக்னி' தெய்வத்தையே சொல்கிறது. எனவே இதிலுள்ள நராசாம்ச (narāśaṃsa) போற்றுதலுக்குரிய தெய்வம் அக்னியே ஆகும். டாக்டர் ஜாகீர் நாயக் கூறுவது போல் புகழ்கிறார் ஒரு மனிதன் (முஹம்மது) குறிக்கவில்லை.
அடுத்து, ரிக் வேதம் வசனம் 1/8/9 அர்த்தம் ....
ReplyDelete'நான் மிக்க துணிந்தவனும், மிகுந்த புகழுள்ளவனும், ஜோதிபோல் துலங்குபவனுமான நராசாம்சனை கண்டுள்ளேன்'
இந்த சூக்தத்தில் உள்ள தெய்வம் 'ப்ராமணஸ்பதி' ஆகும். எனவே இதிலுள்ள நராசாம்சனை (narāśaṃsa) என்கிற போற்றுதலுக்குரிய தெய்வம் 'ப்ராமணஸ்பதி' ஆகும். டாக்டர் ஜாகீர் நாயக் கூறுவது போல் புகழ்கிறார் ஒரு மனிதன் (முஹம்மது) குறிக்கவில்லை.
மேலும், இவ்வாறே எல்லா வசனங்களும் அந்தந்த குறிப்பிட்ட சூக்தத்திலுள்ள புகழப்பட்ட தெய்வத்தை சொல்கிறது. ஆனால் இதை ஜாகிர் நாயக் தப்பாக பயன்படுத்துகிறார்.
ரிக் வேதம் -1/53/9 இல்
'புகழ்மிக்க இந்திரனே நீ, உன் நண்பனல்லாத 'சுஸ்ரவா' (பிரஜாபதி) என்பவனை எதிர்த்த இருபது சனபதிகளையும், அவர்களுடைய 60,099 வீரர்களையும், உன்னுடைய முந்தப்படாத,தடைபடாத தேர் சக்கரத்தால் ஜெயித்தாய்'
ஆனால்,ஜாகிர் நாயக் இந்த கதையை முகமதுவின் மெக்காவின் கைப்பற்றிய சம்பவத்தை இணைக்க தொடங்கினார். அவரது குழப்பம் ஒரு வடிவம் கொடுக்க, அவர், முதலில் ‘Suśrava’ என்கிற வார்த்தைக்கு பதில் Suśrama என்பதை கொண்டுவந்தார். வார்த்தை Suśrama என்பது புகழப்பட்ட ஒருவர். இது நாம் ஏற்கனேவே பார்த்த ahammad என்கிறார் , எனவே அரபு, முஹம்மது மற்ற பெயரில் Ahammad க்கு சமம் என்று கூறுகிறார். இந்த வார்த்தை புகழப்பட்ட ஒருவர் என்பது அந்த சூக்தத்திலுள்ள தெய்வத்தை குறிக்கும் வார்த்தை ஆகும்.
அதற்கு அவர் பின்னர் நகரின் மக்கள் தொகை சுமார் 60,000 இருந்தது முஹம்மது அவருடைய நெருங்கிய பின்பற்றுபவர்கள் 20 மெக்காவின் படையெடுத்து என வசனம் முகமதுவின் கைப்பற்றல் மெக்கா விவரிக்கின்றார் என்று கூறுகிறார். இந்த கூற்றை, அபத்தத்தை ஒரு ஏமாற்று வித்தையாகும் .
பெரும்பாலான அறிஞர்கள் ரிக்வேத கி.மு.5000 வருடங்களுக்கும் மேல் எழுதப்பட்டதாகத் ஒப்புக்கொள்கிறார்கள், எனவே ரிக்வேத வசனம் (1/53/9) சம்பவம் 7000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. ஆனால், முஹம்மது 630 கி.பி. மெக்கா வெற்றி. இந்த இரண்டுக்கும் உள்ள காலங்கள் பெரிதும் வித்தியாசப்படுகிறது . அதாவது ரிக் வேதம் கி.மு உள்ளது, நபியின் காலம் கி.பி 630. இந்த வித்யாசம். ஆனால் எந்த அறிவுள்ள மனிதன் இதை எளிதாக அறியலாம்.
மேலும், ரிக்வேத புகழ்பெற்ற சமஸ்க்ருத வித்வான் 'சாயன' என்பவர் கூறுவது ' சக்திமிக்க 20 சனப்பதிகளின் 60,099 வலுவான வீரர்களையும், அரசர் 'சுஸ்ரவா' (பிரஜாபதி) மற்றும் இந்திரனால் போரில் தோற்கடித்து தங்களது லட்சியத்தை நிலைநாட்டினார்' என்கிறார். (இது வாயு புராணத்திலும் வருகிறது). எனவே எல்லா வசனங்களும் அந்தந்த குறிப்பிட்ட சூக்தத்திலுள்ள புகழப்பட்ட தெய்வத்தை சொல்கிறது. ஆனால் இதை ஜாகிர் நாயக் தப்பாக பயன்படுத்துகிறார்.
அடுத்து, ரிக் வேதம் -8/6/10 இல்
"நான் என் தந்தையிடமிருந்து ஆழமான அறிவு சட்டத்தை பெற்று கொண்டேன். நான் சூரியனை போல் பிறந்தேன்'
இந்த வசனத்திலுள்ள வார்த்தை 'ahamiddhi' கூறுவது 'நான் பெற்றுக்கொண்டேன் ..' ஆனால், இந்த வார்த்தை Ahammad போல் வார்த்தை வருவதால். இதன் மற்றோரு பெயரே 'முஹம்மது' என்று கூறி சொந்தம் கொண்டாடுகிறார் ஜாகிர் நாயக். ஆனால், இது இஸ்லாமிய இலக்கணப்படி இந்த வார்த்தை தவறு.
வேத சாஸ்திர - பவிஷ்ய புராணத்தில் முஹமது நபி பற்றி சொல்கிறதா ?
ReplyDeleteசில முஸ்லிம்கள் வேத இலக்கியமான பவிஷ்ய புராணத்தில் முஹமது நபி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது என கூறுகிறார்கள்.
பொதுவாக புராணங்கள் 18 உள்ளன. இதில் பவிஷ்ய புராணம் நிறைய இடைச்சொருகல்கள் முந்தய முஸ்லீம் மன்னர்கள் காலத்திலேயும், சமண-புத்தமத காலகட்டத்திலேயும் கருத்துக்களை, பிராமணர்களை கொண்டே திருத்தியதாக வரலாறு கூறுகிறது. இப்படி வருபவைகளே சில ஆபாச கதைகளும்,கருத்துக்களும். எ.கா. கோவிலில் உள்ள ஆபாச சிற்பங்கள்.
எனவே, இவைகளில் உள்ள கருத்துக்களை அப்படியே ஏற்க முடியாது. அதாவது,இதில் உள்ள கருத்துக்கள் பிற புராணங்களில் உள்ள கருத்துக்களும் ஓத்து வந்தால் மட்டுமே ஏற்கலாம். ஆனால், இந்த கருத்துக்கள் மாறுபாடுகள் இருந்தால் அதை ஏற்க முடியாதது ஆகும். இப்படிப்பட்ட பல்வேறு இடைச்சொருகல்கள் உள்ள புராணமே தற்போதைய பவிஷ்ய புராணம். ஏன் இந்த புராணத்தில் விட்ட்டோரிய மஹாராணி பற்றி கூட குறிப்புகள் உள்ளதே !
சரி. இந்த புராணத்தில் முஸ்லிம்கள் குறிப்புடுவதாக உள்ள நபி யார என்பதை பார்க்கலாம்..
பவிஷ்யபுராணம். ப்ரதி சாரக் பாகம் 3, காண்டம் 3, அத்யாயம் 3. சுலோகம் 5-7
"ஒரு அந்நிய நாட்டில் ஒரு மிலேச்ச புனிதமான ஆசாரியர் (ஒரு ஆன்மிக சீர்த்திருத்தவாதி ) தனது சீடர்களுடன் தோன்றுவார். அவர் பெயர் மஹாமத் .அவர் பாலைவனத்தை சார்ந்தவர்."
பவிஷ்யபுராணம் 3. 3. 13
" அவர்கள் சுன்னத்து செய்வார்கள், தலையில் குடுமி இருக்காது , தாடி வைத்திருப்பார்கள் , சப்தமாக வழிபாட்டிற்கு அழைப்பார்கள் , முஸ்லீம் என்று! அழைக்கப்படுவார்"
ஏதஸ் மின்னந் தாரா மிலேச்ச ஆச்சார்யண ஸமின் வித மஹாமத்
இதிக்கியாத சிஷ்ய சாகா ஸமன்வித நிருஷ் சேவ ஹமாதே மருஸ் தல நிவாஸினம்
பவிஷ்யபுராணம். ப்ரதி சாரக் பாகம்3 காண்டம் 3 அத்யாயம் 3. சுலோகம் 5
"சாலி வாகனர் குலத்தில் பத்து அரசர்கள் அரசாள்வார்கள் . பத்தாவது அரசனாகிய போஜ ராஜன் வேத தர்மங்கள் சில இடங்களில் மறுக்கப் பட்டத்தை அறிந்து தன் தேசத்தின் எல்லாத் திசைகளிலும் சென்று மாருபட்டவர்களை அடக்குவார்".
இந்த ஸ்லோகத்தில் மஹாமத் என்ற வார்த்தையை முஸ்லிம்கள் முஹம்மதாக மாற்றி அர்த்தம் கற்பிக்கின்றனர்.
குர்ஆன், ஹதீஸ்களில் எந்த ஒரு இடத்திலும் முஹம்மத்தை மஹாமத் என குறிப்பிடவில்லை.அப்படி இருக்க முஸ்லிம்கள் உயர்வாக நினைப்பது குர்ஆன் & ஹதிஸ்ஸயா? அல்லது பவிஷ்ய புராணத்தையா?
மஹாமத் என்பதில் மத் என்ற சொல் அரசனை குறிப்பதாகும். ஆக இது போஜராஜனை தான் குறிக்கிறது என்பது தெளிவாகிறது.
உச்சவ் பூபதி பிரமனே மஹாமத்
விர்ஷாத் த்வா தேவ மஹாராஜா முஹம்மதா சூர மகத்
பவிஷ்யபுராணம் 3. 3. 3. 6
திரிபுர அசுரன் என்பவன் மறுபிறவியல் முஹம்மதாசூரனாக அவதரிக்கிறான். அவன் பாலைவன தேசத்தில் இருந்து பாரதத்திற்கு வந்து போஜராஜனை சந்திக்கிறான். அவர்கள் இருவரிடையே ஏற்படும் விவாதத்தின் முடிவில் பழமையான சிவாலயமான மெக்காவிற்கு செல்கின்றனர்.
பின்னர் போஜராஜன் மருஸ்தல் (பாலைவனம்)இல் உள்ள மகாதேவரின் உருவத்துக்கு பூஜை செய்வார். அவர் மகாதேவருக்கு கங்கை நீராலும் பஞ்ச கவ்வியங்களாலும் அபிஷேகம் பண்ணி பூஜை செய்து மகாதேவரை திருப்திப் படுத்துவார்.போஜராஜன் மகாதேவருக்கு பிரார்த்தனை செய்வார்.
“ஓ கிரிஜனாதரே மருஸ்தல் இல் வசிப்பவரே உங்களை நமஸ்கரிக்கிறேன். நீங்களே மாயத்தில் வல்லவர்கலாகிய திரிபுராசுரர்களை அளித்தீர்கள். மேலாக்கர்களும் உங்களை வணங்குகிறார்கள். நீங்களே தூய சச்சிதானந்த சொரூபம். நான் உங்களை சரணடைகிறேன்.”
சிஷ்ய சாகா ஸமன்வித
ReplyDeleteநிருஷ் சேவ ஹமாதே மருஸ் தல
நிவாஸினம்
சூதமுனிவர் மேலும் கூறுகிறார்.
அரசனின் பிரார்த்தனையைக் கேட்ட மகாதேவர் கூறுகிறார்.:
“மன்னனே நீ மறுபடி மகாகாலேஷ்வர் (உஜ்ஜைனி) திரும்புவாயாக. நீ நிற்கும் இந்த இடமானது பாஹிக் (பால்டிக்) என்ற பெயரால் அறியப்படும். இது மேலாக்கர்களால் (மெக்கா மக்கள்) அசுத்தம் அடைந்துள்ளது.இந்தப் பாவ பூமியில் தருமம் ஒருபோதும் நிலைக்காது.
இங்கு மாயைகளில் வல்லவனாகிய என்னால் முன்னர் எரித்து சாம்பலாக்கப் பட்ட திரிபுரா அசுரர்களில் ஒருவன் மறுஜன்மம் எடுத்துள்ளான். அவன் மகாபலியின் கட்டளைப் படி இங்கு தோன்றி உள்ளான். அவனுக்கு குளம் கிடையாது. ஆனால் என்னைப் பூஜித்து வரம் பெற்றுள்ளான். அவன் பெயர் முஹம்மதாசூரன். அவன் செயல்கள் எல்லாம் பிசாசகளின் செயல்களைப் போல் இருக்கும். அதனால் போஜராஜனே இந்த பிசாச பூமியில் இருந்து வெளியேறிச் செல்வாயாக. என் கருணை உனக்கு என்றும் உண்டு.
”இதைக் கேட்ட அரசன் மறுபடி உஜ்ஜைனி திரும்பி வருவார். அவர்கள் யாத்திரையில் மெதினாவைக் கடப்பார்கள். அங்கும் பூதம் ஒன்று இருக்கும். முகம்மது அவருடன் சிந்து நதியின் கரை வரை வருவான் அவன் மாயத் தோற்றங்கள் தோற்றுவிப்பதில் வல்லவன். அவன் அரசனைப் பார்த்து ஓ அரசனே உனது கடவுள் இப்போது என் எச்சிலை ஏற்றுக் கொள்வதைப் பார் என்று கூறி அவ்வாறானதொரு தோற்றத்தைக் காட்டுவான். இதைக் கண்டு அரசன் அதிர்ச்சி அடைவான். காளிதாசன் ஓ சண்டாளனே உன் மாயத்தோற்றத்தால் நீ மகாதேவரை அவமதிக்கிறாய் உன்னை நான் கொள்வேன் என்று ஆத்திரம் கொள்வான்.
முஹம்மதாசூரன் மேலும் கூறுவான்.
தஷ்மன் முஸல்வந்தோ ஹி ஜதியோ தர்மோ துஷிகா இதி பிசாச தர்மோ மியா கிருத்.
பவிஷ்யபுராணம் 3. 3. 3. 9
"ஓ!போஜராஜனே! உன் மார்கமானது உலகில் தலை சிறந்ததாக விளங்குகிறது. அது உலக மக்களின் நன்மைக்கு நித்தியமாய் இருப்பது.
நானும் ஒரு பிசாசு மதத்தை ஸ்தாபிப்பேன்.அந்த பிசாசு மதத்தை பின்பற்றுவோர் பின்வருமாறு இருப்பர்"
முஸ்லிம்கள் கூறுவது போல் மொஹமத் என்பவரே நபி என்று எடுத்துக்கொண்டால், இந்த வசனத்தில் அவரே கூறுகிறார் நானும் ஒரு பிசாசு மதத்தை உருவாக்குவேன் என்கிறார்.
லிங்கச்சேதி சிகா ஹுன
சுமக்சுறு தாரி ஸாதூஷக
உச்சாலாபி ஸாவ பஹீ
பவிஷ்யதி ஜனோமம முஸலை நைஸ் மஸ்கார
பவிஷ்யபுராணம் 3. 3. 13
அந்த பிசாசு மதத்தை பின்பற்றுவோர் பசுவை அறுத்துண்ணுவார்கள். பன்றியை தவிர்ந்த மற்ற மாமிசத்தை உண்பர்.லிங்கசேதனம் (சுன்னத்) செய்பவராக இருப்பர். குடுமி வைத்திராது தாடி வைத்திருப்பர். சத்தமானமுறையில் பிசாசு மத வழிபாட்டில் ஈடுபடுவர், அவர்கள் முஸல்மான் என அறியப்படுவர்.
இதில் அரசனைச் சந்திக்கும் போது அவன் அந்த மார்க்கத்தை ஏற்கெனவே ஸ்தாபித்து விட்டானா அல்லது இனிமேலா என்ற தெளிவு இல்லை எனினும் அவனுடன் சீடரும் வந்தனர் என்று கூறப் படுவதால் அரசனைச் சந்திக்கும் பொது முஹம்மதாசூரன் புதிய மதத்தை ஸ்தாபித்திருப்பான் என்றே கொள்ள வேண்டி உள்ளது.
இதைப் பற்றி சிந்திக்கும் போஜராஜன் பிசாசு மதத்தோரிடம் இருந்து தர்மத்தைப் பாதுகாக்க வேண்டி சமஸ்க்ருத மொழியையும் வேதங்களையும் முதல் மூன்று வர்ணங்களான பிராமண க்ஷத்திரிய வைசிய வர்ணத்தாருக்கு மட்டும் அளிப்பான். நான்காவது வர்ணத்தாருக்கு வேதம் ஓதும் உரிமை இல்லாமல் போகும். வேத உபயோகம் தவிர்ந்த ஏனைய உரையாடல்களுக்கு சாதாரண மொழி ஒன்றை உருவாக்குவான். முஸ்லிம்கள் சிந்து நதிக்கு மறுகரையில் உருவாவார்கள்.”
இவைதான் பவிஷ்யபுராணத்தின் உண்மை வடிவம்., சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி என்பது போல நாங்களே பொருட்படுத்தாத புராணத்தில் நபியை பற்றி கூறப்படுகிறது என எங்களை அதை படிக்க தூண்டி இப்படி நபியைும் இஸ்லாத்தையும் தாமே அவதூறாக்கிக்கொண்டதுதான் மிச்சம்.
பவிஷ்யபுராணம் – முகமதியர்கள் மற்றும் ஆங்கிலேயர் காலங்களில் உருவானதும், தொடரப்பட்ட இடைச்செருகல்களும்!....
https://indianhistoriography.wordpress.com/2015/06/23/bhavishya-purana-interpolated-by-mohammedans-british-amounts-to-historical-fraud/