Wednesday, October 25, 2017

முஸ்லிம்கள் அரபியில் பெயர் வைப்பதேன்

இது குறித்து இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். திருக்குர்ஆனிலோ நபிகள் நாயகத்தின் போதனைகளிலோ உலக முஸ்லிம்கள் அரபு மொழியில் தான் பெயர் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் பல இறைத்தூதர்கள் வந்திருப்பதாக முன்னர் குறிப்பிட்டுள்ளோம். இப்ராஹீம், இஸ்மாயீல், மூஸா, ஈஸா, அய்யூப், ஸகரிய்யா, எஹ்யா, யூசுப், யூனுஸ், தாவூத், சுலைமான் ஆகியோர் நபிகள் நாயகத்திற்கு முன் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள். இப்பெயர்களில் ஒன்று கூட அரபு மொழிச் சொல் இல்லை. அந்த இறைத்தூதர்களின் தாய் மொழி எதுவோ அந்தந்த மொழிச் சொற்களே தவிர அரபு மொழிச் சொற்கள் அன்று.
மேற்கண்ட அரபு மொழியல்லாத வேற்று மொழிப் பெயர்களை நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த மக்கள் சூட்டிக் கொண்டனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட தமது மகனுக்கு இப்ராஹீம் என்று பெயரிட்டார்கள். இது அரபு மொழிச்சொல் அன்று.
நபிகள் நாயகம் (ஸல்) காலம் முதல் இன்று வரை உலக முஸ்லிம்கள் மேற்கண்ட பெயர்களைச் சூட்டிக் கொண்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி உலகின் பல நாடுகளில் வாழும் மக்கள் தத்தமது மொழியிலேயே தமது பெயர்களைச் சூட்டிக் கொள்கின்றனர்.
பாகிஸ்தானில் வாழும் முஸ்லிம்களின் பெயர்களில் பாதிக்கும் மேற்பட்டவை பாகிஸ்தான் மக்களின் தாய்மொழியான உருதுப் பெயர்களேயன்றி அரபு மொழிப் பெயர்கள் அன்று.
நவாஸ், பேநஸீர் போன்ற பெயர்களை உதாரணமாகக் கூறலாம்.
இந்தோனேசிய முஸ்லிம்கள் சுக்ரனோ, சுகர்டோ போன்ற இந்தோனேசியப் பெயர்களை தமக்குச் சூட்டிக் கொள்கின்றனர். ஈரான் முஸ்லிம்கள் பெரும்பாலும் தமது தாய் மொழியான பாரசீக மொழியிலேயே பெயர் சூட்டிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அரபு மொழியில் தான் பெயர் சூட்டிக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாத்தில் எந்தக் கட்டளையும் இல்லை என்பதற்காகவே இந்த விபரங்களைக் கூறுகிறோம்.
அப்படியானால் தமிழில் பெயர் சூட்டிக் கொள்ள என்ன தடை?
சட்டப்படி எந்தத் தடையும் இல்லாவிட்டாலும் நமது நாட்டின் நடைமுறை காரணமாக இங்குள்ள முஸ்லிம்கள் தாமாகவே அதைத் தவிர்த்து வருகின்றனர். இவ்வாறு தவிர்ப்பதற்கு நியாயமான காரணங்களும் உள்ளன. இஸ்லாமிய மார்க்கம் வேறுபாட்டை அறவே ஒழித்துக் கட்டுவதைக் கொள்கையாகக் கொண்ட மார்க்கம். பல்வேறு சாதிகளிலிருந்து இஸ்லாத்தை ஏற்ற முஸ்லிம்கள் இரண்டு தலைமுறை கடந்த பின் தாங்கள் எந்தச் சாதியிலிருந்து இஸ்லாத்தை ஏற்றோம் என்பதைக் கூட மறந்து விடுகிறார்கள்.
நமது நாட்டில் சாதியிலிருந்து மக்களை வேறுபடுத்தி பார்க்க முடியாத நிலை உள்ளது. இஸ்லாத்தை ஏற்ற பின் ஒருவர் தமது பழைய பெயரையே வைத்திருக்கிறார் என வைத்துக் கொள்வோம். அவர் தமது பெயரைக் கூறிய உடன் நீங்கள் எந்த சாதி என்று கேட்கும் வழக்கம் உள்ளது. இவன் என்ன சாதிக்காரனாக இருப்பான் என்பதை எந்த வகையிலாவது அறிந்து கொள்ள முற்படுவார்கள். ஆனால் நமது நாட்டில் நடைமுறையில் இல்லாத பெயர்களைச் சூட்டிக் கொண்டால் அவரது சாதி என்ன என்று யாரும் கேட்க மாட்டார்கள்.
ராமசாமி என்று கூறினால் என்ன சாதி என்று கேட்கும் சமூக அமைப்பு, அப்துல்லா என்றால் சாதி என்ன என்று கேட்பதில்லை. அந்த ஒரு நன்மையை நாடித் தான் தமிழக முஸ்லிம்கள்தமிழ்ப் பெயர்களைத் தவிர்க்கிறார்களே தவிர தமிழை இழிவுபடுத்தி அரபு மொழியை உயர்த்துவதற்காக அல்ல.
இந்தோனேசியா, ஈரான் போன்ற நாடுகளில் சாதி அமைப்பு இல்லாததால் தத்தம் மொழியிலேயே பெயர் சூட்டிக் கொள்வது போல் தமிழகத்திலும் சாதி அமைப்பு அடியோடு ஒழிந்து விடும் பட்சத்தில் தமிழக முஸ்லிம்களும் தமிழில் பெயர் சூட்டிக் கொள்வார்கள்.
சட்டத்தில் தான் ஜாதி ஒழிந்ததே தவிர மனதில் நீங்கவில்லை  

'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.' -  குர்ஆன்_14_4
மேலும் முகமது நபி(ஸல்) அவர்களின் காலத்துக்கு முன்பு அரபுகள் மொழி வெறியின் உச்சத்தில் இருந்தார்கள். அரபி மொழி அல்லாத வேறு மொழி பேசுவோர் அனைவரும் ஊமைகளைப் போன்றவர்கள் என்றனர்.அதாவது அவர்கள் நினைப்பில் மற்ற மொழிகளுக்கு எந்த பொருளும் கிடையாது என்று விளங்கி வைத்திருந்தனர். அந்த நேரத்தில் தான் முகமது நபி பின் வருமாறு பிரசிங்கித்தார். 
"’மக்களே! இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்! அரபு மொழி பேசுபவன், அரபு மொழி பேசாதவனைவிட உயர்ந்தவன் இல்லை. அரபு மொழி பேசாதவன் அரபு மொழி பேசுபவனை விட சிறந்தவனும் இல்லை.வெள்ளை நிறத்தவன் கருப்புநிறத்தவனை விட உயர்ந்தவன் இல்லை அவர்கள் செய்யும் நல்லறங்கள் தான் அவர்களை உயர்த்துகின்றன. இன்று முதல் குலப் பெருமையை என் காலடியில் போட்டு மிதிக்கிறேன்' என்று சொன்னார். - 
மேற்கண்ட நபிமொழியின் மூலம் ஒரு மொழியை உயர்த்தியும் மற்றொரு மொழியை தாழ்த்தியும் வாதங்கள் புரிவது இஸ்லாம் தடுத்துள்ளது என்று அறிகிறோம். எனவே உலகில் உள்ள மொழிகள் அனைத்தையும் நேசிப்போம். அதன்மூலம் மனித நேயத்தையும் வளர்ப்போம்.
ஆக எங்கள் தாய்மொழியான தமிழை நேசிக்கிறோம் , தமிழ்நாட்டை நேசிக்கிறோம் குறிப்பாக இருக்கும் நகரத்தை/மாவட்டத்தை அதிகம் நேசிக்கிறோம்.[2]

புலால் உணவு உண்ணுவது மனிதனை வன்முறையாளனாகவும் – மூர்க்கமானவனாகவும் மாற்றுமே! எப்படி?

கேள்வி: மனிதன் என்ன உண்கிறானோ – அதனுடைய தாக்கம் அவனது நடவடிக்கைகளில் தென்படும் என்பது அறிவியல் கூற்று. அப்படி இருக்கும்போது – இஸ்லாம் புலால் உணவு உண்ண அனுமதியளிப்பது எப்படி? ஏனெனில் – புலால் உணவு உண்ணுவது மனிதனை வன்முறையாளனாகவும் – மூர்க்கமானவனாகவும் மாற்றுமே! எப்படி? 

பதில்:
1. இஸ்லாமிய மார்க்கம் – தாவர உண்ணிகளான ஆடு மாடு ஒட்டகம் போன்ற கால்நடைகளை மாத்திரம் மனிதர்கள் உணவாக உட்கொள்ள அனுமதியளித்துள்ளது.
மனிதன் என்ன உண்கிறானோ – அதனுடைய தாக்கம் அவனது நடவடிக்கைகளில் தென்படும் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். எனவேதான் இஸ்லாமிய மார்க்கம் – மாமிச உண்ணிகளான சிங்கம் – புலி – சிறுத்தை போன்ற விலங்கினங்களை மனிதர்கள் உணவாக உட்கொள்வதை தடை செய்துள்ளது. ஏனெனில் மேற்படி விலங்கினங்கள் மூர்க்க குணம் கொண்டவை. மேற்படி விலங்கினங்களின் இறைச்சியை உண்பவர்கள் மூர்க்கக் குணம் கொண்டவர்களாக மாறலாம். அதனால்தான் இஸ்லாம் தாவர உண்ணிகளான ஆடு – மாடு – ஒட்டகம் போன்ற பிரானிகளின் இறைச்சியை மனிதர்கள் உணவாக உட்கொள்ள அனுமதித்துள்ளது. மேற்படி பிராணிகள் – அமைதியானதும் – பணிவானதும் ஆகும். இஸ்லாமியர்களான நாங்கள் – அமைதியான பிராணிகளான – ஆடு – மாடு – ஒட்டகம் போன்றவைகளை உணவாக உட்கொள்கிறோம். எனவேதான் நாங்கள் அமைதியை விரும்புகிறவர்களாக – இருக்கின்றோம்.
2. அருள் மறை குர்ஆனும் – நபிகளாரின் பொன்மொழியும் – கெட்ட உணவு வகைகளை உண்பதை தடை செய்துள்ளது.
‘(நபியாகிய) அவர் நன்மையான காரியங்களைச் செய்யுமாறு ஏவுவார். பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார். தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார். கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்துவிடுவார்..’(அல்-குர்ஆன் 07:157)

‘மேலும் (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக்கொள்ளுங்கள். இன்னும் எதைவிட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்.’ (அல்-குர்ஆன் 59:7)
சில பிராணிகளின் இறைச்சியை மனிதர்கள் உணவாக உட்கொள்ள அனுமதியளித்திருக்கும் அல்லாஹ் – சில பிராணிகளின் இறைச்சியை மனிதர்கள் உணவாக உட்கொள்ள அல்லாஹ் தடை செய்திருக்கிறான் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொள்ள – நபிகளாரின் பொன்மொழி ஒன்றே போதுமானதாகும்.
3. மாமிசம் உண்ணும் பிராணிகளை மனிதர்கள் உணவாக உட்கொள்ளத் தடை பற்றி நபி (ஸல்) அவர்கள் அறிவித்த செய்தி:
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் போதித்த கீழ்க்கண்ட செய்தி ஸஹீஹுல் புஹாரி – ஸஹீஹுல் முஸ்லிம் (ஹதீஸ் எண் 4752) ஸுனன் இப்னு மாஜா (ஹதீஸ் எண் – 3232 முதல் 3234 வரை) போன்ற ஹதீஸ் (செய்தி) நூல்களில் இடம்பெற்றுள்ளன.
  1.  மாமிசம் உண்ணக்கூடிய கூரிய பற்களையும் நகங்களையும் உடைய காட்டு விலங்குகளான – சிங்கம் புலி நாய் ஓநாய் போன்றவைகள்.
  2. கொறித்துத் திண்ணக்கூடிய பற்களை உடைய எலி பெருச்சாலி அணில் போன்றவைகள்
  3. ஊர்ந்து திரியக் கூடிய பாம்பு முதலை போன்ற பிராணிகள்
  4. கூரிய அலகுகளையும் – கால் நகங்களையும் உடைய கழுகு பருந்து காகம் ஆந்தை போன்ற பறவைகள் ஆகியவை மனிதர்கள் உணவாக உட்கொள்ள தடை செய்யப்பட்ட பிராணிகள் மற்றும் பறவைகள் ஆகும். [1]

இஸ்லாம் அறிமுகம் - அடிப்படை கேள்வி பதில்கள்


இஸ்லாம் என்றால் என்ன? 

இஸ்லாம் என்ற சொல்லிற்கு அமைதி (சாந்தி), சமாதானம், கீழ்படிதல் அல்லது கட்டுப்படுதல் அல்லது முழுமையாக அர்ப்பனித்தல் என்ற பொருளாகும். ஆயினும் மார்க்கத்தில் ‘இஸ்லாம்’ என்பதற்கு ஒருவர் தன்னுடைய விருப்பு வெறுப்புகளை முழுமையாக அவரை படைத்த இறைவனின் கட்டளைகளுக்கு ஏற்ப அர்ப்பனித்தல் என்றே சொல்லப்படும்.. பலர் நினைத்திருப்பது போன்று இஸ்லாம் மார்க்கம் முஹம்மது நபி (ஸல்) அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட மார்க்கமன்று. ஆதி மனிதர் ஆதாம் (அலை) அவர்கள் முதற்கொண்டு இறைவன் மனதர்களுக்கு நேர்வழிகாட்ட அனுப்பிய  நோவா, ஆப்ரஹாம், மோஸஸ், இயேசு போன்ற அனைத்து தூதர்கள் அனைவரும் போதித்த மார்க்கம் தான் இஸ்லாம். இந்த இறைத் தூதர்களின் வரிசையில் கடைசியாக வந்தவர் தான் முஹம்மது நபி (ஸல்) அவர்களாவார்.

முஸ்லிம்கள் என்பவர்கள் யார்?

அகில உலகங்களையும் படைத்து, உணவளித்து பரிபாலித்து வரும் ஒரே இறைவன் அல்லாஹ் என்றும் அவனைத் தவிர வணங்கப்படுவதற்குத் தகுதியான வேறு இறைவன் யாரும் இல்லை என்றும் அவனுடைய படைப்பினங்களான மனிதர்களுக்கு சத்திய நேர்வழி காட்டிட அவன் ஆதி மனிதர் ஆதாம் (அலை) அவர்கள் முதல் தொடராக இறைவன் அனுப்பிய தூதர்களில் முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதியானவர் என்றும் நம்பிக்கைக் கொண்டு அதன்படி செயல்படுபவர்கள் முஸ்லிம்கள் ஆவர். ஒரே இறைவனை ஏற்றுக்கொண்டவர்களுக்கு இறைவன் சூட்டிய பெயர் முஸ்லிம்கள் என்பதாகும். மாற்று மதத்தவர்கள் அழைப்பது போல முஹம்மதியர்கள் என்று கூறுவது தவறாகும். ஏனென்றால் இம்மார்க்கத்தை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் புதிதாக உருவாக்கவில்லை. மேலும் கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவை வணங்குவது போன்று முஸ்லிம்கள் முஹம்மது (ஸல்) அவர்களை வணங்குவது இல்லை.  முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதரின் வரிசையில் வந்த இறுதி தூதரே அன்றி வேறில்லை என முஸ்லிம்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளனர்.

முஸ்லிம்களின் நம்பிக்கைகள் யாவை?

முஸ்லிம்கள், எவ்வித ஒப்புவமையற்ற ஒரே இறைவன் அல்லாஹ் மீதும், அவனுடைய படைப்பினமான மலக்குகள் (வானவர்கள்) மீதும், அவனுடைய தூதர்கள் மீதும், அவன் அந்த தூதர்கள் வாயிலாக மனிதர்களுக்கு நேர்வழி காட்டிட  இறக்கியருளிய வேதங்கள் மீதும், நியாயத் தீர்ப்பு நாள் மீதும், அந்நாளில் மனிதர்கள் இவ்வுலகில் தாங்கள் செய்த வினைகளுக்கு ஏற்ப விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுவார்கள் என்றும் நன்மை தீமையாவும் இறைவன் விதித்த விதியின்படியே நடைபெறுகின்றன என்பதன் மீதும் நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம்கள் இறைவனின் தூதர்களான ஆதம், நோவா, ஆப்ரஹாம், இஸ்மவேல், இஸ்ஹாக், யாக்கோபு, மோஸஸ், ஆருன், டேவிட், சாலமன், ஜோனாஹ் மற்றும் ஜீஸஸ் (அலை) ஆகியோர் மீதும் அவர்களுக்கு அருளப்பட்ட வேதங்களின் மீதும் நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்கள். இந்த தூதர்களின் தொடரில் இறைவனால் அனுப்பபட்ட இறுதி தூதராக முஹம்மது நபி (ஸல்) அவர்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

முஸ்லிம்களின் கடவுள் கொள்கை:

அகில உலகங்களையும் படைத்து, உணவளித்து, பரிபாலித்து வருபவன் ஒரே இறைவன் – அவன் தான் அல்லாஹ் அவனைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை அவனைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது என்பதாகும். இந்த ஏக இறைவனையே ஆதி மனிதர் ஆதாம் முதற்கொண்டு, நோவா, ஆபிரஹாம், மோஸஸ், இயேசு போன்ற இறைத்தூததர்களும் அவர்களைப் பின்பற்றியவர்களும் வணங்கினர். “அல்லாஹ்” என்ற அரபி சொல்லிற்கு இறைவன் என்பது பொருள். அரபி மொழியைத் தாய் மொழியாக் கொண்டுள்ள கிறிஸ்தவர்களும் இறைவனை அல்லாஹ் என்றே அழைக்கின்றனர். இறைவன் தன்னுடைய இலக்கணங்களாக அவன் இறுதியாக அருளிய வேதம் அல் குர்ஆன் அத்தியாயம் 112 ல் கூறுகிறான்: –
(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.
அன்றியும் அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

இந்த நான்கு வரிகளே இஸ்லாத்தின் அடிப்படைக் கடவுள் கொள்கையாகும்.

இயேசு நாதர் பற்றி முஸ்லிம்கள் என்ன நினைக்கிறார்கள்?

ஆதி மனிதர் ஆதாம் அவர்களின் காலத்திற்கு பின்னர் வந்த மக்கள் நாளடைவில் ஷைத்தானின் தீய சூழ்ச்சிகளில் சிக்கி அவர்களைப் படைத்த ஒரே இறைவனை வணங்குவதற்குப் பதிலாக சிலைகளையும் அவர்களுக்கு முன்னால் வாழ்ந்து மரணித்த நல்லவர்களையும் வணங்கலாயினர். அவர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக அவ்வப்போது இறைவன் தொடர்ச்சியாக தூதர்களை அனுப்பிக் கொண்டிருந்தான். இவ்வாறு இறைவன் அனுப்பிய தீர்க்கதரிசிகளில் நோவா, ஆப்ரஹாம், மோஸஸ் போன்றவர்களின் வரிசையில் வந்தவர் தான் இயேசு நாதர் ஆவார். அரபியில் ஈஸா (அலை) என்றைக்கப்படும் இயேசு கிறிஸ்து மீது முஸ்லிம்கள் மிகுந்த மரியாதை வைத்திருக்கின்றனர். ஏனென்றால் கர்த்தராகிய இறைவன் இயேசு நாதர் குறித்து அவர் கண்ணியத்திற்குரிய இறைத்தூதர் என கூறுகிறான். இறைவன் அருளிய இறுதி வேதத்தில்:

இன்னும், ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் – இவர்கள் யாவரும் (நேர் வழிசார்ந்த) ஸாலிஹானவர்களில் நின்றுமுள்ளவர்களே. (இறுதி வேதம் அல்-குர்ஆன் 6:85)

இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது.  (இறுதி வேதம் அல்-குர்ஆன் 5:46)
மேலும் இன்றைய நவீன கிறிஸ்தவர்கள் கூட நம்பிக்கைக் கொள்ளாதவற்றை இறைவனின் உதவியோடு இயேசு நாதர் பின் வரும் அற்புதங்களை செய்ததாக முஸ்லிம்கள் நம்புகின்றனர். குழந்தையாக இருந்தபோதே பேசினார் களிமண்ணினால் பறவை செய்து அதை பறக்க விட்டார் பிறவிக் குருடரை சுகப்படுத்தினார் வெண்குஷ்டக் காரரை சுகப்படுத்தினார் இறந்தவரை உயிர்பித்தார்.

முஹம்மது நபி (ஸல்) போதித்தது என்ன?

இறைவன் மனிதர்களுக்கு நேர்வழி காட்டிய அனுப்பி வைத்த தீர்க்க தரிசிகளில் கடைசியாக வந்தவர் தான் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அவார்கள். நோவா, ஆப்ரஹாம், தாவீது, இயேசு போன்ற தீர்க்க தரிசிகளுக்கு இறைவன் எந்த மார்க்கத்தை போதிப்பதற்காக அருளினானோ அதே மார்க்கத்தையே முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் அருளினான். பலர் தவறாக எண்ணியிருப்பது போல முஹம்மது நபி அவர்கள் எந்த ஒரு புதிய கொள்கையையோ அல்லது மதத்தையோ தோற்றுவிக்கவில்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமக்கு அருளப்பட்ட இறுதிவேதமான திருக்குர்ஆனின் போதனைகளுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டி முஸ்லிம்கள் அனைவரும் அவர் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை முறையைப் பின்பற்றி வாழவேண்டும் என வலியுறுத்திச் சென்றிருக்கிறார்கள். எனவே ஒரே இறைவனை ஏற்றுக்கொண்ட அனைவரும் அவனின் இறுதித்தூதரான முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளின் படியும், அந்த இறுதி தூதருக்கு அவன் அருளிய இறுதி வேதத்தின் வழிகாட்டுதல்களின் படியும் தமது வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

முஹம்மது (ஸல்) எவ்வாறு இறைத்தூதரானர்?

முஹம்மது நபியவர்கள் (ஸல்) ஹிரா குகையில் தனிமையில் தங்கி தியானித்துக் கொண்டிருக்கும் போது கேப்ரியேல் (அலை) என்ற வானவர் அவர் முன்னிலையில் தோன்றி இறைவனிடமிருந்து வந்த தூதுச் செய்தியை படித்துக்காட்டி நபியவர்களையும் படிக்குமாறு கூறினார். அது முதல் தொடர்ந்தார்போல் 23 ஆண்டுகள் சிறுக சிறுக  அல்குர்ஆனின் வசனங்கள் வானவர் கேப்ரியேல் (அலை) அவர்கள் மூலமாக இறைவன் நபியவர்களுக்கு அருளிக் கொண்டிருந்தான். இறைவனின் வசனங்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டவுடன் நபியவர்களின் தோழர்கள் மூலமாக எழுத்து வடிவில் எழுதி பாதுகாக்கப்பட்டது. குர்ஆன் எதை போதிக்கிறது? தாவீது, மோஸஸ், இயேசு போன்ற தீர்க்கதரிசிகளுக்கு இறைவன் வேதங்களை அருளியது போன்றே அவனுடைய இறுதி தூதரானமுஹம்மது நபிக்கும் தன்னுடைய இறுதி வேதமான அல்குர்ஆனை இறக்கி வைத்தான். மேலும் இறுதிவேதமாகிய அல்குர்ஆன் இதற்கு முன்னாள் வந்த தீர்க்க தரிசிகளுக்கும் வேதங்கள் அருளப்பட்டது என்று நம்பிக்கைக் கொள்ளுமாறு வலியுறுத்துகிறது. இறைவன் அல்குர்ஆன் அத்தியாயம் 2, வசனம் 136 ல் கூறுகிறான்: –
(முஃமின்களே!)”நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம், அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக.
ஒவ்வொரு வேதங்கள் அருளப்பட்ட பின்னரும் அந்தந்த தூதர்களுக்குப் பிறகு வந்த சமூகத்தினர் அந்த வேதங்களில் தமது சொந்தக் கருத்துக்களையும் கற்பனைகளையும் சேர்த்து அதன் புனிதத் தன்மையை மாசுபடுத்தி விட்டனர். இதை இறைவன் அருளிய இறுதிவேதம் உறுதிபடுத்துகிறது: –
அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்! (குர்ஆன் 2:79)
ஆனால் திருக்குர்ஆன் அது அருளப்பட்டு 1425 ஆண்டுகளுக்கும் மேலாகியும் எவ்வித மாற்றத்திற்குள்ளும் உட்படாமல் அது முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டவாறே இன்றும் இருக்கிறது. இறைவன் தான் அருளிய வேதத்தை தாமே பாதுகாப்பதாக கூறியுள்ளான்.

ஹதீஸ் என்றால் என்ன?

இறைவனின் கட்டளையான ‘அல்லாஹ்வின் தூதரிடத்தில் அழகிய முன்மாதிரியிருக்கிறது’ என்ற கட்டளைக்கிணங்க முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய வாழக்கையின் ஒவ்வொரு கூற்றுக்களையும், அசைவுகளையும் அவர்களுடைய தோழர்கள் மற்றும் குடும்பத்தார்கள் உண்ணிப்பாக கவனித்து முஹம்மது நபியவர்களை (ஸல்) அவர்களைப் பின்பற்றி வாழ்ந்தனர். நபியவர்களின் (ஸல்) மறைவழற்குப் பின்னர் அவர்களுடைய சொல், செயல் அங்கீகாரம் ஆகியவை தொகுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதையே ஹதீஸ் என்பர். முஸ்லிம்கள் நபியவர்களின் சொல், செயல் மற்றும் அஹ்கீகாரமான ஹதீஸ்களின் மீதும் நம்பிக்கைக் கொண்டு அதன்படி செயல்பட்டு வருகின்றனர்.

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகள் யாவை?

இஸ்லாத்தின் கடமைகள் ஜந்து. அவைகளாவன: – ஏகத்துவ நம்பிக்கை கொண்டு அதற்கு சான்று பகர்தல் தொழுகையை நிலை நாட்டுதல் ஸகாத் வழங்குதல் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்றல் வசதி பெற்றிருப்பின் ஆயுளில் ஒருமுறையேனும் மக்காவிற்குச் சென்று ஹஜ் செய்தல்.

கஃபா என்றால் என்ன?

ஒரே இறைவனை வணங்குவதற்காக கட்டப்பட்ட முதல் இறை ஆலயம் கஃபா ஆகும். இறைவனின் கட்டளைக்கிணங்க இறைத்தூதர் ஆபிரஹாம் அவர்களால் புணர் நிர்மாணம் செய்யப்பட்டு கட்டியெழுப்பப்பட்டது. சவூதி அரேபியா நாட்டில் இருக்கும் மக்கா நகரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. முஸ்லிம்கள் அனைவரும் தங்களுக்கு வசதியிருப்பின அவ்வாலயத்தை தரிசித்து ஹஜ் செய்ய வேண்டும் என்பது இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றாகும். மனிதனின் மரணம் மற்றும் மறுமை குறித்து இஸ்லாம் என்ன கூறுகிறது? இவ்வுலகில் பிறந்த அனைவரும் மரணிக்கக் கூடியவர்களே என்றும், இந்த வாழ்க்கை ஒரு முறை மடடுமே என்றும் மரணத்திற்குப் பின்னர் நியாயத் தீர்ப்பு நாளில் இறைவன் அனைவரையும் உயிர்பித்து எழச்செய்வான், பின்னர் விசாரணை நடத்தி அவரவர்கள் செய்த வினைகளுக்கு ஏற்ப தண்டனை அல்லது நற்கூலி வழங்குவான். இது தான் மரணம் குறித்து இஸ்லாம் கூறும் கருத்தாகும்.

நீதி எங்கே?

நீங்கள் ஏக இறைவனை நம்புபவர் தானே?? 

இறைவன் ஒருவன் இருக்கிறார் எனில் இப்பூமியில் நீதி, நியாயம் நூறு சதவீதம் சரியாக இருக்கும்?! இருக்கவேண்டும் தானே?! கடவுள் இருக்கிறார் எனில் நீதியும் நியாயமும் இருக்கவேண்டுமல்லவா? அவ்வாறு இருக்கிறதா?? இல்லை தானே!! பல இடங்களில் அநீதிகளும் அக்கிரமங்களும் நடந்துக் கொண்டு தான் இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் காலம் செல்ல செல்ல அநீதிகள் அதிகரித்து கொண்டு தான் உள்ளன!! ஆக எப்போது இதற்கெல்லாம் தீர்வு கிடைக்கும் பல லட்சம் பேர் கோடி பேர் அநீதியாக கொல்லப்பட்டுள்ளனர்.  கொன்றவர்களும் நன்றாக வாழ்ந்தும் சென்றுவிட்டனர்!! இந்த உலகத்தின் சட்டத்திலிருந்தும் நீதிபதிகளிடத்திலிருந்தும் தப்பிவிட்டார்கள் தப்பவைக்கப்பட்டு விட்டார்கள். ஆனால் இப்பிரபஞ்சத்தின் அதிபதியும் நீதிபதியான படைப்பாளனிடமிருந்து எப்போது நீதி கிடைக்கும், எப்படி கிடைக்கும்? படைப்பாளன் நீதியாளன் தானே?! இதை பற்றி என்றைக்காவது சிந்தித்ததுண்டா? 

நம்மிடம் இருக்கும் பதில், ஒருவேளை மறுபிறவியில் கிடைக்கலாம் அல்லவா? இந்த பிறவியில் தவறு செய்ததால் , அடுத்த பிறவியில் விலங்காகவோ பறவையாகவோ பிறக்க வைப்பது சரியான நீதியாகுமா? பல தேவைகளுடனும், கட்டாயத்துடனும் சோதனைகளுடனும், பிரச்சினைகளுடனும், மன அழுத்தத்துடனும் இருக்கும் மனிதனாக வாழ்வது கடினமா? பறவை போல் சுதந்தரமாக வாழ்வது கடினமா?  பறவையாகவோ விலங்காகவோ ஆக்குவது சரியான நீதியாகுமா? எந்தமத வேதங்களிலும் இவ்வாறான சிந்தாந்தம் சொல்லப்படவில்லை, மாறாக மதகுருமார்களே திரித்து போதிக்கின்றனர்?! ஒரு வேளை உண்மையிலேயே அவ்வாராக இருந்தாலும் அது சரியான நீதியாகாது தானே!! 

இன்றைக்கு உலகில் 800 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். நூறு வருடங்களுக்கு முன்னால் இதில் கால்வாசி அளவுக்குத் தான் மக்கள் தொகை இருந்தது. இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே, மேலும் முன்னே சென்று கொண்டே இருந்தால் மனிதர்கள் சில ஆயிரம் பேர் தான் இருந்திருப்பார்கள். இன்னும் முன்னேறிச் சென்றால் ஒரே ஒரு ஜோடியில் போய் முடிவடையும். மனிதன் மட்டுமின்றி ஏனைய உயிரினங்களை எடுத்துக் கொண்டாலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சென்று கொண்டே இருந்தால் ஒவ்வொரு உயிரினமும் ஒரு ஜோடியில்  போய் முடியும்; அனைத்து உயிரினங்களும் ஒரே ஒரு ஜோடியிருந்து தான் பல்கிப் பெருகின. மனிதனையும் சேர்த்து எத்தனை வகை உயிரினங்கள் உலகில் உள்ளன என்று நம்மிடம் கணக்கு இல்லை. உதாரணத்துக்காக ஐம்பது லட்சம் வகை உயிரினங்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு வகை உயிரினத்திற்கும் ஒரு ஜோடி என்று வைத்துக்கொண்டால் ஐம்பது லட்சம் ஜோடிகள் அதாவது ஒரு கோடி உயிரினங்கள் இருந்திருக்கும். மறு பிறவி என்று ஒன்று இருந்தால் இந்த எண்ணிக்கை அதிகமாகக் கூடாது. இந்த ஒருகோடி உயிரினங்கள் தான் அடுத்த ஜென்மத்திலும் இருக்க வேண்டும். வேண்டுமானால் ஆடு மனிதனாக, மனிதன் ஆடாக பிறப்பெடுக்கலாமே தவிர, ஒரு கோடியை விட அதிகமாகவே கூடாது. ஒரு கோடியாக இருந்த உயிரினங்கள் இரண்டு கோடியாக பெருகினால் அதற்குப் பெயர் மறுபிறவி அல்ல. புதிய உயிர்களின் உற்பத்தி என்றே கூற வேண்டும். 

பாரதியார் முப்பது கோடி முகமுடையாள் என்றுபாடினார். அப்போது இந்தியாவில் முப்பது கோடி மக்கள் இருந்தனர். அவர்கள் மறு பிறவி எடுத்தால் இப்போதும் முப்பது கோடி தான் இருக்கவேண்டும். 90 கோடிப் பேர் அதிகமாகியுள்ளோம். நாம் மட்டும் அதிகமாகவில்லை. அனைத்து உயிரினங்களும் அதிகமாகியுள்ளன. புதுப் புதுப் பிறவிகள் உற்பத்தியானால் மட்டுமே இது சாத்தியமாகுமே தவிர பழையவர்களே மீண்டும் பிறந்தால் இப்படி தாறுமாறாகப் பெருகக் கூடாது. பெருக முடியாது. இவ்வுலகில் நாம் கெட்ட காரியம் செய்தால் அடுத்த பிறவியில் அனுபவிப்போம் என்று கூறினால் மனிதன் நல்லவனாக வாழ்வான் என்பது தான் தத்துவம். ஒருவருக்குத் தண்டனை கொடுப்பதாக இருந்தால் இன்ன குற்றத்துக்காக இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது என்று அவருக்குத் தெரிய வேண்டும். அது தான் தண்டனை. பரிசு கொடுப்பதாக இருந்தாலும் எந்தச் செயலுக்காக அந்தப் பரிசு கிடைத்தது என்பதை அவர் உணர வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பரிசுகளாலோ, தண்டனைகளாலோ எந்தப் பயனும் ஏற்படாது. இந்தப் பிறவியில் துன்பம் அனுபவிக்கும் யாருக்காவது நாம் இதற்கு முன் எந்தப்பிறவியில் இருந்தோம் என்பது தெரியுமா? நிச்சயம் தெரியாது! என்ன பாவம் செய்ததற்காக இந்த நிலையை அடைந்தோம் என்று தெரியுமா? அதுவும் தெரியாது. அப்படியானால் அவன் அடுத்த பிறவியைப் பற்றிக் கவலைப்பட்டு எப்படி நல்லவனாக வாழ்வான்? ஒருவன் கொலை செய்து விடுகிறான். அக்குற்றம் நிரூபிக்கப்பட்டுவிடுகிறது. ஆனால் கொலை செய்தவனுக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்தநிலையில் அவனுக்குத் தூக்குத் தண்டனை வழங்கமாட்டார்கள். அவனே உணராமல் அவனைத் தண்டிப்பது தண்டனையாகாது; அதில் பயனும் இருக்காது என்று உலக அறிஞர்களின் ஒருமித்த அறிவு இவ்வாறு தீர்ப்பளிக்கிறது. அனைவரையும் படைத்த கடவுளுக்கு இந்த அறிவு கூட இருக்காதா? நான் என்ன செய்தேன் என்பது எனக்கே தெரியாமல் இருக்கும் போது என்னைத் தண்டிப்பது கடவுளின் தகுதிக்கும், நீதிக்கும் சரியாக இருக்குமா? 

ஆக அநீதிக்கான நீதி எப்போது தான் கிடைக்கும்  எப்படி கிடைக்கும்..? 

தவறு செய்பவரை உடனுக்குடன் தண்டித்தால் எவரும் மிஞ்சமாட்டார்கள் என்பதே நிதர்சனம்,  பிறகு என்ன தான் வழி?  
இப்போது இஸ்லாம் கூறும் கொள்கையை கூறுகிறேன்!! இது சரியா இல்லையா? என சிந்தித்துக் கொள்ளுங்கள். 
இறைவன் மனிதனை படைத்தார்,  மனிதன் செய்பவற்றை நன்கு அறிந்தவர். மனிதனுக்கு எது சரி எது தவறு என தனது வேதத்தின் மூலம் இறைதூதர் வழியாக தந்தருளினார். நன்மை தீமையை பிரித்து காட்டியும் விட்டார். தேர்ந்தேடுத்து பின்பற்றுவது மனிதனுடைய விருப்பத்தில் விட்டுவிட்டார். இது அடிப்படை!! முதன்முதலாக ஒரு நபர் இறந்திருப்பார் அல்லவா? அவரிலிருந்து.. அவருடைய இறந்த வழித்தோன்றல்கள் ... இன்னும் நான் ..நீங்கள் .. நம் சந்ததிகள் .. உலகம் அழியும்போது கடைசியாக மரணிக்கும் கடைசி மனிதன் வரை; உலகம் அழிந்த பின் அனைவரும் மீண்டும் எழுப்பப்படுவார்கள் ; எழுப்பப்பட்டு அவரவர் செய்த செயல்களுக்கு பிரபஞ்சத்தின் நீதிபதியான இறைவனால் விசாரிக்கப்பட்டு , தக்க பரிசும், தண்டனையும் வழங்கப்படும் என்பதே இஸ்லாமிய நம்பிக்கை. இது ஆங்கிலத்தில் Judgement Day (மறுமை நாள்) என சொல்வார்கள். 

அட போங்க பாய்!! இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என கேட்கும் சிலர்,  நீதிக்கான வேறு தீர்வை சொன்னால் நலமாக இருக்கும்..?? 
நீங்களும் 'ஹிட்லரும்' ஒன்றா? நீங்களும் 'அங்கிள் ஜோ'வும் ஒன்றா? ஹிட்லர் 60 லட்சம் யூதர்களை கொன்றுள்ளார். இவர்கள் கொன்ற அளவு மக்களை கூட நீங்கள் ஒரே நேரத்தில் பார்த்திருக்க மாட்டீர்கள்!? நானும் நீங்களும் இறுதியாக புதைக்கவோ எரிக்கப் படுவோம்,  அவர்களும் அவ்வாறே ! ஆக அனைவரும் மண்ணோடு மண்ணாகி போன பிறகு அனைத்தும் அவ்வளவுதான் என்றால், கடவுளின் பங்களிப்பு தான் என்ன? நீதி என்னவாயிற்று? எத்தனையோ லட்சக்கணக்கானோர் அநீதி இழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கெல்லாம் எப்போது நீதி கிடைக்கும்..? 
இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம்; சரி, ஹிட்லர் போன்றவர்கள் பல(60 லட்சம்) கொலைகளை செய்திருக்கிறார்கள்? இவர்களுக்கு அப்படி என்ன தான் தண்டனை கொடுக்கமுடியும், அதிகபட்சமாக நரக நெருப்பில் எரித்தால் கூட அதோடு அவ்வளவு தானே!! என கேள்வி வரலாம் ; 

ஆம் நல்ல கேள்வி!! ஹிட்லர் போன்றவர்களுக்கு இவ்வுலகத்தில் ஒரு முறை தான் தூக்கு தண்டனை கொடுக்க முடியும்!! ஆனால் மேற்படி மரண தண்டனை ஒரேயொரு யூதரை கொன்றதற்கு ஈடான தண்டனைதான். எஞ்சியுள்ள ஐம்பத்து ஒன்பது லட்சத்து தொன்னூற்று ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று ஒன்பது யூதர்களை எரித்துக் கொன்றதற்கான தண்டனை என்ன?. ஆனால் (Judgement Day) மறுமையில் அவ்வாறல்ல!! ஒருவர் ஒரு லட்சம் பேரை எரித்து கொலை செய்திருந்தால்,  அவர் செய்த அதே அளவான தண்டனை அவருக்கு வழங்கப்படும்; அவர் எரிந்து கரிக்கட்டை ஆன பின்னாலும் அவருக்கு மீண்டும் புது தோள்கள் கொடுக்கப்பட்டு மீண்டுமீண்டும் எரிக்கப்படுவார் (பார்க்க குர்ஆன் 4:56) ஆக இது போன்ற சரியான நீதி அங்கு மட்டும் தான் கிடைக்கும், இங்கு?? அந்நாளில் ஒருவரும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். ஆக இஸ்லாம் சொல்கிறது,  இவ்வுலக வாழ்க்கை மனிகனுக்கான சோதனைக்கூடம், அவரவரின் செயலுக்கேற்ப(மறு ஜென்மம் அல்ல) மறு(மை)வாழ்வில் கூலி வழங்கப்படும். அங்கு நிரந்தரமாக இருப்பார்கள். 

இத்தகைய மறுமையைப் பற்றிப் ஆழ்ந்து யோசிப்பதற்கு முன்னர் இப்போது நாம் வாழும் வாழ்க்கையைப் பற்றி முடிவு செய்வது நல்லது. ஏனெனில் ஒரு பொருளை முதலில் படைப்பது தான் சிரமமானது. அதை அழித்து விட்டு மறுபடியும் உருவாக்குவது அவ்வளவு சிரமமானதல்ல. இது அறிவுள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளக்கடிய விதியாகும். ஒரு கம்பியூட்டரை உருவாக்க எத்தனையோ ஆண்டுகள் தேவைப்பட்டன உருவாக்கிய பின் அது போல் இலட்சக்கணக்கில் உருவாக்குவது எளிதாகி விட்டது. நூறு வருடங்களுக்கு முன்னர் நீங்கள் இவ்வுலகில் இருக்கவில்லை வேறு எங்கேயும் இருக்கவில்லை எந்தப் பொருளாகவும் நீங்கள் இருக்கவில்லை. ஒன்றுமில்லாத நிலையிலிருந்து இறைவன் படைத்திருப்பதை நம்பும் முஸ்லிம்களுக்குப் படைக்கப்பட்டவைகளை அழித்து விட்டு மீண்டும் படைப்பது நம்புவது எளிதானதாகும். 

இவ்வுலகில் குற்றங்கள் குறைய வேண்டும் மக்கள் சுபிட்சமாக வாழவேண்டும் ஒழுக்கங்களைப் பேண வேண்டும். நற்பண்புகளை கையாளவேண்டும். மனிதன் தான் பெற்றுள்ள பகுத்தறிவைப் பயன்படுத்தி மனிதனாக வாழவேண்டும் என்றால் மறுமை தேவை. நாம் இவ்வுலகில் எவ்வளவு பெரிய ஆட்சி அதிகாரம் வல்லமை தன் தவறை மறைக்கும் திறமைப் பெற்றிருப்பினும் அண்ட சராசரங்களை அடக்கியாளும் சக்தி ஒன்று உள்ளது. அந்த சக்திக்கு பதில் சொல்ல வேண்டும். இம்மையில் இல்லையென்றால் மறுமையில் பதில் சொல்ல வேண்டும் என்ற பயம் இருந்தால் தான் மனிதன் மனிதனாக வாழ்வான். மீறுபவன் படிப்பவன் தண்டனைப் பொறுவான். கட்டுப்பட்டவன் நல்ல நிலைகளை அடைவான். அதற்குதான் மறுமை (10:4, 45:21,22). இன்னும் இந்த மறுமை வாழ்கையில் நாம் பூமியில் செய்தவற்றுக்கு தக்க பரிசும் தண்டனையும் வழங்கப்படும். இன்னும் இஸ்லாத்தில் மிக்பபெரும் தீமையாக,  இறைவனுக்கு இணைவைப்பதை சொல்கிறது .. 

இறைவனுக்கு இணைவைப்பது என்றால் என்ன?? 

இறைவன் அல்லாத ஒரு படைப்பினத்தை (கல், மரம், செடி, கொடி, இயற்கை வஸ்துக்கள், சிலை, சமாதி போன்ற எதையாகினும்) படைப்பாளனாகிய இறைவனுக்கு, நிகராக நினைப்பதே/வைப்பதே இணைவைத்தல்; இறைவனிடமிருந்து எண்ணற்ற அருட்கொடைகளை பெற்றுக்கொண்டு இறைவனை விட்டுவிட்டு வேறு படைக்கப்பட்ட பொருளை வணங்குவது நன்றி கெடு தானே!! இறைவனுக்கு நிகர் எவருமில்லை என சொல்லும் நாம் அவருக்கு இணையாக எதையேனும் வைத்தல் நியாயமா? ஒரு படைப்பினத்தை இறைவனாக நினைத்துக்கொண்டு வணங்கினால் அதும் தவறுதான்;  எலியை புலி என நம்பினால் அது எவ்வாறு தவறான மூட நம்பிக்கையோ அது போல் தான் இதும். ஆக, நம்மை படைத்த இறைவனை மட்டுமே வணங்கவேண்டும், சரியான முறையில் இறைவனை நம்பி இறைவனை மட்டும் வணங்கி அவருக்கு இணைவைக்காமல் (இறைதூதர் வழியில் பினபற்றி) நற்செயல் புரிந்து மனிதனாக வாழவேண்டும் என்பதே இஸ்லாத்துடைய சாரம்சம்.

நம் வழிகாட்டி யார்?

மக்களை வழிகாட்டும் வண்ணம், இறைவனே மனித அவதாரமாக (Human Incarnation) வந்து வழிகாட்டலாமே? என கேள்வி எழலாம். கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை என்று கேட்பதே அடிப்படையில் தவறானதாகும். நீங்கள் ஒரு ஆட்டுப் பண்ணையோ, கோழிப் பண்ணையோ வைத்திருக்கிறீர்கள். அவற்றை நீங்கள் வழி நடத்திச் செல்வதற்காக நீங்கள் ஆடாக, அல்லது கோழியாக மாறத் தேவையில்லை. மாறாக, நீங்கள் நீங்களாக இருந்து கொண்டே ஆடுகளை நீங்கள் விரும்பியவாறு வழி நடத்த முடியும். இன்னும் சொல்வதானால் உங்களால் ஆடாக மாற இயலும் என்று வைத்துக் கொண்டால் கூட மாற மாட்டீர்கள்! மனிதனாக இருப்பதில் உள்ள பல வசதிகளை இழக்க நேரிடும் என்று நினைப்பீர்கள்! மேலும் உங்களை விட பல விதத்திலும் தாழ்ந்த நிலையில் உள்ள ஜீவனாக நீங்கள் மாறத் தேவையில்லை. மாறவும் மாட்டீர்கள்! உங்களுக்கும், ஆடுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை விட பல்லாயிரம் வேறுபாடுகள் கடவுளுக்கும், மனிதர்களுக்குமிடையே இருக்கின்றன. எந்த விதமான பலவீனமும் இல்லாத கடவுளை, மலஜலத்தைச் சுமந்து கொண்டு எண்ணற்ற பலவீனங்களையும் உள்ளடக்கியுள்ள மனிதனாக மாறச் சொல்வதை விட கடவுளுக்குக் கண்ணியக் குறைவு வேறு இருக்க முடியாது. 

முதலமைச்சராக இருக்கும் ஒருவர் முதல்வராக இருந்து கொண்டு தான் நாட்டை ஆள வேண்டும். அவரைச் சாக்கடையைச் சுத்தப்படுத்தும் வேலைக்குப் போகச் சொல்லக் கூடாது. இருக்கின்ற தகுதியை விட இறக்கம் செய்வதை மனிதர்களே ஏற்க மாட்டார்கள் என்னும் போது கடவுள் எப்படித் தன்னை இழிவுபடுத்திக் கொள்வான்? இழிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்புவது தான் எந்த வகையில் நியாயமானது? இப்படிச் சிந்தித்தால் கடவுள் கடவுளாக இருப்பது தான் பொருத்தமானது என்பதை விளங்கிக் கொள்ளலாம். கடவுள் மனிதனாக வருவான் என்று கதவுகளைத் திறந்து வைத்து விட்டால் என்ன ஏற்படும் என்பதை நாட்டு நடப்புகளிலிருந்தே அறிந்து கொள்ளலாம். நான் தான் கடவுள்; அல்லது கடவுளின் அவதாரம் எனக் கூறி யாரேனும் ஏமாற்ற நினைத்தால் கடவுள் மனிதனாக வருவான் என்று நம்பாத முஸ்லிம்களைத் தவிர மற்ற அனைவரையும் எளிதில் ஏமாற்றி விட முடியும். அவர்களைச் சுரண்ட முடியும். போலிச் சாமியார்கள் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோமே இதற்கெல்லாம் கூட கடவுள் மனிதனாக வருவான் என்ற நம்பிக்கை தான் அடிப்படை. 

'கடவுள் மனிதனாக வரவே மாட்டான்' என்று உறுதியாக நம்பினால் மதத்தின் பெயரால் நடக்கும் ஏராளமான சுரண்டல்களைத் தவிர்க்கலாம். இன்னொரு கோணத்திலும் இது பற்றி ஆராயலாம். கடவுள் மனிதனாக வருகிறான் என்று வைத்துக் கொள்வோம். மனிதனாக வந்த காரணத்தினால் மனிதனைப் போலவே கடவுள் செயல்படவேண்டும். உண்ண வேண்டும்; பருக வேண்டும்; மலஜலம் கழிக்க வேண்டும்; மனிதனைப் போலவே குடும்ப வாழ்க்கையிலும் ஈடுபட வேண்டும். சந்ததிகளைப் பெற்றெடுக்க வேண்டும். கடவுளால் பெற்றெடுக்கப்பட்டவனும் கடவுளாகவே இருப்பான்; கடவுளின் பிள்ளைகளான கடவுள்கள் கணக்கின்றி இப்பூமியில் வாழும் நிலை ஏற்படும். ஏதோ ஒரு காலத்தில் ஒரே ஒரு தடவை கடவுள். இப்பூமிக்கு வந்திருந்தால் கூட அவரது வழித் தோன்றல்கள் பல கோடிப் பேர் இன்றைக்கு பூமியில் இருக்க வேண்டும். ஆனால் கடவுளின் ஒரே ஒரு பிள்ளையைக் கூட நாம் பூமியில் காண முடியவில்லை. இதிலிருந்து கடவுள் மனிதனாக வரவே இல்லை என்று அறிந்து கொள்ளலாம். எனவே கடவுள் ஒரு காலத்திலும் மனித வடிவில் வந்ததுமில்லை. வருவது அவருக்குத் தகுதியானதும் அல்ல. 

ஆக இறைவன் மனித அவதாரமாக வராமல், வழிக்காட்டுவதற்கு குறிப்பிட்ட சமூகத்திலிருந்தே ஒரு மனிதனை இறைதூதராக தேர்ந்தேடுத்து, வழிக்காட்டுவதற்கு இறைவேதங்களை அருளினார் என்பதே இஸ்லாமிய நம்பிக்கை. அந்த இறைவேதங்கள் என்பது மக்களை வழிக்காட்ட பல்வேறு சமுதாயத்திற்கு தத்தமது மொழிகளிலேயே வழங்கப்பட்டது என கீழ்கண்ட குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகிறது. 

ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்;  (அல்குர்ஆன் : 14:4) 

முதல் மனிதனை படைத்த கடவுள்,  அவரை அப்படியே திக்கற்றவனாய் விட்டு விடாமல் எதை விட்டு தவிர்ந்து கொள்ள வேண்டும் எனவும்?! நன்மையையும் தீமையையும் பிரித்து காட்டும் வகையில் கற்பித்தான். முதல் மனிதன்  தன்னுடைய சந்ததிக்கு இறைதூதராகவும் வழிக்காட்டியாகவும் திகழ்ந்தார்.  பிறகு சந்ததி பெருக பெருக, காலம் செல்ல செல்ல,  இடம்பெயர்தல் போன்றவற்றால் பல சமூகங்களாக ஆகும் என்பதை புரிந்துக் கொள்ளலாம். அந்த சமூகத்திற்கும் வழிக்காட்டும் பொருட்டு அச்சமூதாயத்திலிருந்தே ஒரு மனிதரை இறைதூதராக தேர்ந்தேடுத்து, அவருக்கு சட்டம் வழங்கி அவரது சமூகத்திற்கான வழிக்காட்டியாக ஆக்கினான். 

முதல் மனிதன் ஆதம் (Adam), பிறகு நூஹ் (Noah), இப்ராஹிம் (Abraham), லூத் (Lot), அய்யூப் (Job), சுலைமான் (Solomon) [இவ்வாறு ஏகப்பட்ட இறைதூதர்கள் பல காலத்திலும் பல சமுதாயத்திற்கும் வந்துள்ளார்கள்] பின்பு 3000 வருடங்களுக்கு முன்பு, மூஸா (மோஸே/Moses)என்ற இறைதூதர், யூத சமூதாயத்திற்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர் ஆவர்.  இதுவரை வரக்கூடிய இறைத்தூதர்களை உலகின் பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள் (Islam, Christianity, Judaism). அடுத்ததாக, ஈஸா (இயேசு கிறிஸ்து) என்ற இறைத்தூதர், தற்போதைய பாலஸ்தீன/இஸ்ரேல் பகுதியிலிருந்த யூத சமுதாயத்திற்காக 2000 ஆண்டு முன்பு இருந்தவர். இந்த இறைதூதரை, இறைதூதராக யூத சமுதாயம் ஏற்கவில்லை; பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கினார்கள் என்பது குறிப்பிடதக்கது. இவரை கடவுள் ஸ்தானத்திற்கு உயர்த்தி கிறிஸ்தவர்களில் (பெரும்பான்மையான பிரிவினர்) வணங்குகிறார்கள்; இயேசு கிறிஸ்து கடவுள் அல்ல, இறைத்தூதரே; அவர் ஒரு மனிதரே! மனிதன் கடவுளாக முடியாது என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து இறைத்தூதரும் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் குறிப்பிட்ட பகுதிகளிலிருந்த சமுதாயத்திற்கு மட்டுமே அனுப்பப்பட்டார்கள். வெறுமனே இறைதூதர்கள் அனுப்புவது மட்டுமின்றி, சில போதனைகளையும், இறை சட்டங்களையும் கொண்ட வேத புத்தகங்களையும் இறைவன் அருளினான். இறைத்தூதர் தாவூத் அவர்களுக்கு ஜபூர்என்ற வேதமும், இறைதூதர் மூஸா அவர்களுக்கு தவ்ராத்என்ற வேதம், இறைதூதர் இயேசு அவர்களுக்கு இன்ஜீல் என்ற வேதமும் அருளப்பட்டது. ஆக, இவ்வாறு உலகெங்கும் இருக்கும் எல்லாச் சமுதாயத்திற்கு இறைத்தூதரும் இறைசெய்தியும் இறைவனால் அனுப்பப்பட்டது. அந்த வேத புத்தகத்தின் போதனைகளை உளமாற இறைதூதர்கள் நம்பி, தானும் பின்பற்றி, மக்களை இந்த நற்போதனைகளின் பால், ஏக இறைவனின் பக்கம் அழைத்தனர். இவ்வாறு இறைவனின் செய்திகளை அறிவித்து நல்லதின் பக்கம் அழைத்த இறைதூதர்களில் சிலர் கொல்லப்பட்டனர்; அருளப்பட்ட இறைவேதங்கள் எரிக்கப்பட்டன; அழிக்கப்பட்டன; இன்னும் பல மாறுதல்களுக்கு உள்ளாயின. 

இப்படியிருக்கும் பட்சத்தில், இறுதியாக, கி.பி. 610 ல், முஹம்மது நபி (ஸல்) அவர்களே இறைவனின் இறுதி தூதராக தேர்ந்தேடுக்கப்பட்டவர். முந்தைய இறைத்தூதர்களை போல, குறிப்பிட்ட சமுதாய மக்களுக்கு என்று மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கு தூதராக அனுப்பப்பட்டார். முந்தைய இறைதூதர்களுக்கு அருளப்பட்டதில் சில அழிக்கப்பட்டது போல, திரிக்கப்பட்டது போல அல்லாமல், இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த மக்களுக்கும், அதற்கு பின்னுள்ள அனைத்து மக்களுக்காக அருளப்பட்ட வேதமோ, யாராலும் அழிக்கமுடியாத மாற்றியமைக்கமுடியாத வகையில் விளங்கி வருகிறது அந்த வேதம். அந்த வேதம், குர்ஆன் ஆகும். 

ஏன் அழிக்க முடியாது.? 

அழிக்கமுடியாத மாற்றியமைக்கமுடியாத வேதமா? அதெப்படி? என நினைக்கலாம். ஏன் ஒட்டுமொத்த புத்தகத்தையும் எரித்துவிட்டால், அழிந்துவிடுமே என்றும் நீங்கள் கேட்கலாம். (ஒரு வாதத்திற்காக) இதை நீங்கள் செய்தாலும் அழிக்கமுடியாது. கோடான கோடி பிரதிகளை அழித்தாலும், ஏன் சி.டி, டிவிடி, இணையதளம் என்று அனைத்து தொழில்நுட்பத்திலிருந்தும் அழித்தாலும், அது அழித்ததாக ஆகாது. ஏனெனில் அவற்றை கோடிக்கணக்கான முஸ்லிம்களின் மனங்களின் இறைவன் பாதுகாத்து வைத்துள்ளான். ஒவ்வொரு பள்ளிவாசலிலும் குறைந்தப்பட்சம் ஒரு நபராவது குர்ஆன் ஐ முழுவதுமாக மனனம் செய்தவராக இருப்பார். இந்தியாவில் மூன்று லட்சம் பள்ளிவாசல்கள்; அப்படியெனில், சிறுபான்மையினராக இந்தியாவில் வாழும் முஸ்லிம்களில் மட்டும், குறைந்தபட்சமாக மூன்று லட்சம் பேர் மனனம் செய்துள்ளனர். அப்படியெனில், முழு உலகில் ..? மனனம் செய்வதற்காக உலகில் ஏகப்பட்ட பாடசாலைகளும், கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆக உலக அழியும் வரை அழிக்கமுடியாத ஒரே வேதம் குர்ஆன்.

இறைவனுக்கு உள்ள இலக்கணம்!


அளவற்றோனின் திருநாமம் போற்றி.. 

மதங்கள் என்பது இறை நம்பிக்கையை மையமாக வைத்தே தோற்றம் பெற்றுள்ளது. இன்று உலகில் கடவுள் நம்பிக்கையற்ற ஒரு மதத்தையேனும் காணமுடியவில்லை. ஒவ்வொரு மதத்தினரும் தத்தமது வேதநூல்களாகக் கருதும் அந்த மத வழிகாட்டிகளை வைத்தே கடவுள் நம்பிக்கையையும், கடவுளுக்கு இருக்க வேண்டிய பண்புகளையும் குறிப்பிட்ட அந்த மதத்தோடு பின்னிப் பிணைந்துள்ளனர்.

எல்லா மதங்களும் கடவுளின் தன்மையைப் பற்றி விளக்கினாலும் போதிய கடவுளின் இலக்கணங்கள், பண்புகள் பற்றி சரியாகக் குறிப்பிடாமை தான், சில மதங்களில் கோடிக்கணக்கான கடவுள் நம்பிக்கையும், வழிபாட்டு முறையும் தன்னகத்தே ஏற்படுத்தியுள்ளன. போதாமைக்கு நாளுக்கு நாள் இன்னும் பல கடவுளர்கள் புதிது புதிதாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தோன்றிக் கொண்டிருக்கின்றனர். அத்தோடு தாங்கள் கடவுளின் அவதாரம் என்று கூறிக் கொண்டு அப்பாவி மக்களை ஏமாற்றிக் கொண்டு வயிறு வளர்ப்பதையும் நாம் பார்க்கத் தான் செய்கின்றோம்.

நம்மில் பலா், சிந்தித்து ஓரு இறைவன் தான் இருக்கமுடியும் என நம்பிக்கை கொண்டாலும்கூட,  அந்த இறைவனை குறித்து சரியான புரிதல் இல்லாமல், சரியாக வணங்காமல் மாறு செய்கிறோம் . இது குறித்த ஞானத்தை  அறிந்துக் கொள்வதற்கு முன்னர்,  இறைவனின் இலக்கணத்தை பற்றிய ஞானத்தை அறிவதும் அவசியமாகும். இப்போது நீங்கள் இக்கட்டுரையை,  உங்கள் போனில் படித்துக்கொண்டிருக்கிறீா்கள் அல்லவா???  நான் இப்போது  உங்களிடம் சொல்கிறேன்,  நீங்கள் இப்போது கையில் வைத்திருப்பது  போன் அல்ல, அது ஒரு புத்தகம் என்கிறேன். அதை நீங்கள் ஏற்பீா்களா....? அட போப்பா,  ஃபோனை பாத்து புக் ங்குரீயே!!!  என்று சொல்வீர்கள் தானே!!

ஒவ்வொரு  பொருளையும் நாம் எப்படி அதனை அறிந்து வைத்திருக்கிறோம்.? அதன் இலக்கணத்தை புரிந்துக் கொண்டு தானே!!! ஃபோனின் தோற்றம்,அதனை கொண்டு பிறருக்கு கால் செய்யலாம், மெசேஜ் அனுப்பலாம்!! இதுவே ஃபோனின் இலக்கணம். புத்தகம் என்றால்,  தாள்கள் இருக்கும், எழுத்துகளை கொண்டிருக்கும். இதுவே புத்தகத்தின் இலக்கணம், இவ்வாறு இலக்கணத்தை கொண்டு தான் நாம் ஓரு விஷயத்தை அறிந்துக் கொள்ளமுடியும்.. அவ்வாறே கடவுளை பற்றி சரியான முறையில் அறியவும்,  கடவுளின் இலக்கணத்தை அறிந்து கொள்வதும் அவசியம், கடவுளை தான் யாரும் பாா்க்கவேயில்லயே, பிறகு எவ்வாறு இலக்கணங்களை வரையறுப்பீா்கள் என கேள்வி எழலாம்..?? கடவுளை மனிதன் பாா்க்கவில்லை,  இன்னும் பூமியில் கூட சாதாரணமாக  பல விசயங்களை மனிதனால் பாா்க்கமுடியவில்லை, பலவற்றை கேட்க முடியவில்லை என்பதும் உண்மையே!!! இப்படியிருக்க கடவுளுடைய இலக்கணத்தை அறிய, கடவுள் நமக்கு அருளிய  பகுத்தறிவு மூலம் சிந்தித்தாலே போதுமானது ..

இப்போது நான் உங்களிடம்  மூன்று கேள்விகளை கேட்கிறேன், இந்த கேள்விக்கு நடுநிலையாக சிந்தித்து விடை காணுங்கள்,  அதுவே ஏக இறைவனை பற்றிய அறிய போதுமானதாகும்..

1) அந்த ஏக இறைவனுக்கு சில-பல தேவைகள் இருக்கலாமா?

2) அந்த ஏக இறைவனுக்கு நம்மை போலவே (பெற்றோர், குழந்தைகள், ஓரு/பல்வேறு மனைவிகள்)  குடும்பங்கள்,  ஆசைகள்,இச்சைகளை கொண்டவரா???

3) மனிதனால், இறைவனை பாா்க்கமுடியுமா??

இக்கேள்விக்கு  பகுத்தறிவு  ரீதியான முறையில் சிந்தித்து பாா்த்தால் சரியான முறையில் நாம் நம்பிய ஏக இறைவனை இன்னும் சரியான முறையில் அனுகலாம்..

1) அந்த இறைவனுக்கு  சில-பல தேவைகள் இருக்கலாமா??

நாம் பல தேவைகளுக்கு மத்தியில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உயிர் வாழ தண்ணீர், உணவு, சூரியன், மரம் செடி கொடிகள் எல்லாம் தேவை.. இது போன்று  கடவுளுக்கு தேவைகள் இருக்காலாமா??? கடவுளுக்கு தண்ணீர் கொடுத்தே ஆக வேண்டும் என்று நினைக்கிறீா்களா???  தண்ணீர் இல்லையென்றால் தாகத்தால் கடவுள் இறந்துவிடுவாரா என்ன???  அப்படியே தண்ணீா் , உணவு தேவை என்று நினைத்தால்,  இன்னும் அவர் சிறுநீா் கழித்தே ஆக வேண்டும்,  இன்னபிற இயற்கை தேவைகளை பூர்த்திசெய்தே ஆகவேண்டும் என்ற பாதகமான , இன்னும் கடவுளை கொச்சைப்படுத்தும் செயல்கள் இவை. நம்மினுள் இருக்கும் பலவீனங்களை கடவுளுக்கும் கற்பனை செய்வது நியாயமா?? 

உலகில் யாரையெல்லாம் கடவுள் என்று மக்கள் சொல்கிறார்களோ, அவர்கள் சிந்திக்கவேண்டிய விடயம், அந்த சொல்லப்படும் கடவுள்(?),இங்கு இருக்கையில் பல தேவைகளுக்குள் உள்ளானவர் தான்,  அவர்கள் தங்களது பசியை போக்க உணவு உண்டவர்கள் தான்,மனிதனால் தவிர்க்கயிலாத இயற்கை தேவைகளை நிறைவேற்றி இருப்பார்கள். அவர்களெல்லாம் மனிதரே அன்றி வேறில்லை. இன்னும் பல நல்ல மனிதர்கள் கூட கடவுளாக்கப்பட்டுள்ளனா்,  (நமது மூதாதையர்கள்,அறியாமையின் காரணத்தால் அவர்களின் மூதாதையர்களை, ஊர் காவலர்களை ,நல்லவர்களை கடவுளாக, ஆக்கியது போல). மனிதர்கள் என்றும் மனிதர்களே!! அவனால், அவனது மரணத்தை கூட தடுக்கமுடியாது. 

2) அந்த ஏக இறைவனுக்கு நம்மை போலவே (பெற்றோர், குழந்தைகள், ஒரு/பல்வேறு மனைவிகள்) குடும்பங்கள்,  ஆசைகள், இச்சைகளை கொண்டவரா???

பெற்றோர் இருந்தால் தானே குழந்தை வரமுடியும்.! அப்படியென்றால் கடவுள் எப்படி வந்தாா்??  அவரை படைத்தவர் யாா் என கேள்வி வருவதால் தான்,  கடவுளுக்கு  பல தலைமுறைகளை வாாி வழங்கிவிட்டோம். முதலில் குழந்தை என்பது எதற்கு??  நாம் வயது முதிர்ந்தவுடன் நம்மை பாா்த்துக் கொள்ள, பரம்பரையை பெருக்க இன்னும் நம் சந்தோஷத்துக்கும் தான் ... கடவுளுக்கு குழந்தை தேவையா??  அவருக்கும் முதுமை தட்டுமா என்ன???? பிறகு ஏன்  குழந்தை ??? ஏன் மனைவி ?? மனைவி எதற்கு?  கடவுள் என்ன ஆணா??  அவர் மாபெரும் சக்தி அவ்வளவே!! 

அப்படியே நீங்கள்,  கடவுளுக்கு குழந்தை இருப்பதாக எண்ணினால்,அதனுள் உள்ள இன்னொரு விபரீதத்தை சந்திக்க நேரிடும்,  கடவுளுக்கு குழந்தை  என்ற ஒன்று இருந்தால் அதுவும் கடவுள் தானே,  அதற்கு பின்,  தலைமுறை தலைமுறையாய் பிறப்பதெல்லாம் கடவுள் தானே!? சில லட்சம் வருடமாக வாழ்ந்து வரும் மனிதன், தற்போது 800 கோடி பேரை கொண்ட  மக்கள் தொகையை எட்டியுள்ளான், பல கோடான கோடான கோடி ஆண்டுகளாக,  தலைமுறைகளை வாா்த்தெடுத்தால்,நிலைமை என்னவாகும் என யோசித்து பாருங்கள், நம் மக்கள் தொகையை விட எண்ணிக்கை எங்கேயோ போய்விடும், கடவுள் நம்மை பாா்த்துக் கொள்வாரா அல்லது அவர்களை பாா்த்துக் கொள்வாரா?

3) மனிதனால், இறைவனை பாா்க்கமுடியுமா??

அனைத்து மனிதர்களுக்கும், (சில குறைப்பாடு உடையவர்களை தவிர்த்து)  மனித திறன்கள் என்பது சமமே.. எல்லோருக்கும்  571 பிக்ஸல் லேன்ஸ் திறன் கொண்ட கண்கள் தான். (குருடருக்கு கண் பொருத்துனாலும் மனித கண் திறனை மிஞ்சும் வகையில் வைக்க இயலாது) , அனைவருக்கும் மூளை,  1 கி,300 கிராம் தான்,  தனுஷ் ஓரு படத்தில் " எனக்கு மட்டும் 1கிலோ,500 கிராம் " என கூறியது போல் வேறு யாராலும் சொல்லமுடியாது.. இப்படி திறன்கள் ஒப்பீட்டில் அனைவரும் சமம் தான். இப்படிப்பட்ட  சாமானிய மனிதனால் இறைவனை பாா்க்கமுடியுமா???

நீங்கள் இறைவனை பாா்த்ததுண்டா??? இல்லை!!!   பின்னா் யாா் தான் பாா்த்தது?? கண் பாா்வைக்கும் ஓர் எல்லை உண்டு,  நமது பிரபஞ்சத்தில் லட்சம் கோடி வீதிகள் உள்ளன, அதிலிருக்கும் பால்வெளி வீதியில் நாம் இருக்கிறோம், இங்கிருந்து நம்மால் வெறும் மூன்று வீதிகளையே பாா்க்கமுடியும்,  அவை:  1.Andromeda Galaxy,  2. Large Magellenic cloud 3. Small Magellenic cloud. இதை தவிர்த்து மிச்சமுள்ள லட்சம் கோடி வீதிகளை பாா்க்கவேமுடியாது. இதையெல்லாம் விட்டு அப்பாற்பட்ட இறைவனை யாரைய்யா பாா்த்தது??? பல படைப்புகளையே பாா்க்கமுடியவில்லை!!!  படைப்பாளனை பாா்த்துவிடமுடியுமா? இதையெல்லாம்  தாண்டி நம் மக்கள்,  இறைவனுக்கு உருவம் கொடுத்தும் விட்டனா் என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது.

நாம், நம் இஷ்டத்திற்கு ஏற்றார் போல், நாமாக ஓர் உருவமாக அமைத்துக்கொண்டு, அது தான் கடவுள் என நம்பினால், அது கடவுளாகி விடுமா?? உங்கள் ஃபோனையோ,  கணினியையோ கடவுளென நீங்களாக நினைத்துக் கொண்டால், அது கடவுளா?? அது சாதாரண சாதனம் தானே!!!  அது போல தான். ஓா் உயா் அதிகாரியை பாா்த்து, ஏய் மாடே!!! என்று சொன்னால்,  யாரை பாா்த்து மாடு என்று சொன்னாய்??  நான் இன்ன உயர் அதிகாரி என கோவத்துடன் சொல்வார்தானே!! நாம் விலங்கினை கடவுளென சொன்னால், அது சரியா? விலங்குகளோ இயற்கையோ நமக்கு அதிக பயன் தருகிறது.உண்மை தான்; அந்த பயனை தந்த விலங்கினையோ இயற்கையை நன்றி செலுத்தக்கூடாது. அதனை கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்திட வேண்டும்.

கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்,  படைப்பாளனை, படைப்பினம் படைக்க இயலுமா???  எவ்வளவு பெரிய அறிவீனம் என்று உணரவேண்டாமா?? இன்னும் சிலைவடிப்பவருக்கு வேலை பழு அதிகமாக இருந்தால், ஒரு குவாட்டா் போட்டு சிலை செதுக்குவதை நம்மால் பாா்க்கமுடிகிறது. அதையே கொண்டு போய் வணக்கஸ்தலத்தில் வைத்தால்,  அச்சிலையையும் திருடிக் கொண்டுபோக ஓரு கும்பல், அச்சிலையை கடவுளென  கற்பனை செய்துக்கொள்ளும் நாம், அச்சிலை திருடப்பட்டால், கடவுளை திருடிவிட்டதாக நம்புகிறோமா என்ன?? அடுத்து நாள் செய்திகளில் கூட, சிலை திருட்டு என வருகிறதே தவிர கடவுள் திருட்டு என வருவதில்லை. நம்முடைய செயல்களே நமக்கு பாடம் கற்றுக் கொடுக்கும் சான்றாக இருப்பதை விளங்கவேண்டாமா? இன்னும் இதையெல்லாம் தாண்டி சிலைகளையெல்லாம், அதற்கு கையில் ஆயுதத்தையும் கொடுத்துவிட்டோம்.. கடவுளுக்கு எதுக்குப்பா ஆயுதம்? யாரை போட்டு தள்ள,??  சிந்தியுங்கள் அன்பா்களே!!!! நாம் இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்து வருகிறோம்!!! பல கல்வியாளர்கள்,  விஞ்ஞானிகளை கொண்ட சமூகத்தில் இருக்கிறோம்,  இனியும் நாம் இது போன்ற அறிவீனமான செயல்களை நாம் செய்யலாமா?? நமது தாய் தந்தையா் செய்வதால் நாமும் செய்வதா??  அவர்கள் எட்டாவதோ, பத்தாவதோ படித்திருப்பாா்கள், நானும் அவா்கள் அளவுக்கு தான் படிப்பேனென சொல்வோமா?? அவர்கள் அளவுக்கு தான் சிந்திப்பேன் என சொல்வோமா?? கடவுளை, உருவமாக வடித்து கற்பனை செய்து வணங்குவது சரி என உங்களுக்கு இன்னும்  தோன்றுகிறதா???

உலகமத கிரந்தங்களை ஆராய்வோமானால் அவையனைத்தும் ஏக இறைவனை எவரும் கண்டதில்லை என்றே கூறுகிறது.

இறைவன் தன்னை வெளிப்படுத்திக்கொள்வதில்லை - (அதர்வவேதம் 32:3)

ஆதிபகவானின் வடிவத்தை தேவர்களும் உணர்ந்தவர்களல்ல. அசூரர்களும் உணர்ந்தவர்கள் அல்ல' (பகவத்கீதை 10:14)

அப்படியிருக்க காணாத ஒரு வஸ்துவுக்கு எப்படி உருவம் கற்பிக்க முடியும்? உதாரணத்திற்கு உங்களையே எடுத்துக் கொள்ளுங்கள். உங்களைக் காணாத ஒருவர் ஒரு நாயை அல்லது பூனையை போன்ற உருவம் வடித்து வைத்து இது தான் நீங்கள் என்று கூறுவார்களானால் அதை ஏற்றுக் கொள்வீர்களா? நம்முடைய பாரத அதிபரை காணாத ஒருவர் அவரை நினைவில் நிறுத்த ஒரு குரங்குச் சிலையை வடித்து வைத்தால் அதை அவர் ஏற்றுக் கொள்வரா? மாட்டார். ஏன்? குரங்கும், நாயும் மனிதனை விட தரம் தாழ்ந்தது என்று நாம் கருதுவதால் ஆகும். நம்முடைய முகத்தை சற்று மெருகேற்றி ஒரு சிலைவடித்தால் அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளும் மனிதன், தன்மைவிட தரம் தாழ்ந்த இனத்தோடு ஒப்பிடும் போது அதை ஏற்றுக் கொள்வதில்லை. காரணம் அது தன்னை அவமானப்படுத்துவதாக கருதுகின்றான். அப்படியிருக்க இப்பிரபஞ்சம் அனைத்தையும் படைத்த இறைவனுக்கு மட்டும் இவ்வுலகத்தில் உள்ள அற்பவஸ்துக்களில் ஒன்றைப்போல் உருவாக்கி இது தான் நம்மையெல்லாம் படைத்த சிருஷ்டிகர்த்தா என்றால் அது எப்படி இறைவனுக்கு ஏற்புடையதாக இருக்கும்?  படைப்பினங்கள் அனைத்தும் படைத்தவனை விட தரம்தாழ்ந்தவையாகும். அப்படியிருக்க தரம் தாழ்ந்த வஸ்துக்களைக் காட்டி இப்படித்தான் இறைவன் இருப்பான் என்று கருதுவது இறைவனை அவமானப்படுத்துதல் அல்லவா?

நேற்று வரை ஒரு கல் சாதாரனமாக இருந்துக்கொண்டிருக்கும். அல்லது அது மேல் எத்தனையோ மனிதர்களாலோ அல்லது மிருங்களாலோ அசிங்கம் செய்யப்பட்டிருக்கும். அடுத்த நாள் அந்தக் கல்லை ஒரு சிற்பி எடுத்து இவர்கள் விரும்புவது போல் இவர்கள் விருப்பப்பட்ட சிலையை வடித்துக்கொடுத்ததும் அந்தகல்லுக்கு சக்தி வந்துவிடுவதாகவும், உடனே அதை வணங்கவேண்டும் என்று எண்ணுவது எந்தவிதத்தில் நியாயமாகும்? அந்தக் கல் நேற்று வரையிலும் கேட்பாறற்று கிடந்ததே! அப்பொழுதெல்லாம் அதை தெய்வமாக பார்க்காத மனிதன், அதை அவர்கள் விரும்புவதுபோல் சிலையாக வடிக்கப்பட்டதும் உடனே வணங்குவது  தவறில்லையா??? ஆக சிலைவணக்கம் எனும் செயல்,  நம்மை படைத்த ஏக இறைவனுக்கு இழிவுப்படுத்தும், துரோகம் செய்யும் செயல்.. நாம் சுவாசித்து கொண்டிருக்கும் காற்று,பாா்க்கும் கண், படித்துக்கொண்டிருக்கும் நாவு, சிந்திக்கும் மூளை, இது போன்ற அனைத்தையும் கொடுத்த ஏக இறைவனை இழிவாக்கலாமா???

சரி, உருவ வழிபாடு தவறு என்றால், பின்ன எப்படி தான் கடவுளை வணங்குறது?.
சாஷ்டாங்கம் என்றால் எட்டு அங்கம் என அா்த்தம், எட்டு உடல் உறுப்புகளை தரையில் படும்வகையில் முகங்குப்புற விழும் நிலையில் இறைவனை தொழுவது,  மிகவும் விரும்பத்தக்கது. இதுவே இஸ்லாமியர்களின் தொழுகையில், கடவுளை வணங்குதலில் ஓர் அம்சமாகும், இதை தான் ஓரு நாளை  ஐந்தாக பிரித்து, ஐவேளையும்  "ஏக இறைவனை (அரபியில் அல்லாஹ்) " வணங்கி வருகின்றனா்.

உருவ வழிப்பாடு/ சமாதி வழிபாடு எனும் தவறான செயலை சிந்தித்துணா்ந்து , ஏக இறைவனிடம் நேரடியாக கோாிக்கை வைப்போம்.  இதுவே  ஏக இறைவனுக்கு சரியான முறையில் கீழ்படிதல் ஆகும். "ஏக இறைவனுக்கு கீழ்படுதல் " என்பதை அரபியில் மொழிப்பெயர்த்தால் அதன் பெயர் தான் இஸ்லாம்.

 அல்லாஹ் எனும் அரபு நாட்டு கடவுளை வணங்கும் மக்களை கொண்ட மதமென நினைக்கிறீர்களா??
ஆங்கிலத்தில் கடவுளை குறிக்க " God " என்போம். ஆகையால் இந்த வாா்த்தையின் அர்த்தம்,  ஆங்கிலேயேரின் கடவுளென எண்ணுவீர்களா?? இல்லை!!  ஆங்கிலேயரின் மொழியில் கடவுளுக்கு காட்(God) என தானே விளங்குவீர்கள்,  அது போல "அல்லாஹ்" என்பது அரேபியர்களின் கடவுள் என விளங்கக்கூடாது, அரபி மொழியில் கடவுளை குறிக்க ஓரு சொல் என தான் விளங்க வேண்டும்.

கடவுள் ஒருவரா? பலரா?


இக்கேள்விக்கு உலகெங்கும் கருத்துவேறுபாடுகள் இருந்துக்கொண்டே தான் இருக்கிறது..ஆனால் பெரும்பான்மையான மக்களுக்கு,  உள்ளத்தில் , நம்மை படைத்த இறைவன் ஒருவன் தான் இருக்கமுடியும் என்ற நம்பிக்கை இருப்பதை நம்மால் காணமுடிகிறது. ஆனால் சில மக்களே இக்கருத்துக்கு மாற்றமான "பல கடவுள் " நம்பிக்கையில் உள்ளனா். அப்படியெனில் எது சரி?! 

ஒன்றா , பலரா? - ஓா் சிறிய ஆய்வு. 

ஓரு கடவுள் போதாது என்ற சிந்தனை வர முக்கிய காரணம் , கடவுளால் இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தை  படைத்து பராமரித்து கண்காணித்து கொள்ள முடியுமா என்ற கேள்வி?? இக்கேள்வி அடிப்படையிலேயே தவறானவை தான், இது போன்ற கேள்வி எழுந்ததன் காரணம், மனிதனை போன்று தான் கடவுள் என்ற எண்ணம் உள்ளத்தில் இருப்பதால்தான், அவ்வாறே நாம் கற்பிக்கப்பட்டதால் தான்... 

"கடவுள்" என்று நாம் கூறுவது, நம்மை படைத்த மாபெரும் சக்தி / பிரபஞ்சத்தின் படைப்பாளன் என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்.. மாறாக நமது குலசாமியோ,ஊர் சாமியோ அல்ல,  இவர்கள் நமது மூதாதையர்கள்,நமது ஊருக்கு பாதுகாவலர்களாக இருந்தவர்கள் அல்லது சில பல நல்லவைகளை மக்களுக்கு  செய்தவர்கள், அவர்கள் இவ்வுலகை படைக்கவில்லை!! பிரபஞ்சத்தை படைக்கவில்லை!! மனிதனால் எதையும் படைக்கமுடியாது என "ஆற்றல் அழிவில்லா விதியும்" சொல்லிவிட்டது.. ஆக, இவர்களோ நாமோ மாபெரும் சக்தியல்ல!!!   

நம்மையும் ,விண்ணையும் , மண்ணையும் அனைத்தையும் படைத்த அந்த  மாபெரும்  சக்தி தான் கடவுள் என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும். 

பகுத்தறிவை நாம் பயன்படுத்தும் போது இறைவன் எத்தனை என்ற கேள்விக்கு முதலில் விடை கிடைக்கின்றது. ஒன்றிற்கு மேற்பட்ட கடவுள்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு கடவுளும் ஒவ்வொன்றை நினைக்க, அதனை செயல்படுத்த விரும்பினால் - ஒரு கடவுள் ஒருவரை தண்டிக்கவும் மற்றொரு கடவுள் அவரை மேம்படுத்தவும் முனைந்தால்-முடிவு?!எனவே பகுத்தறிவு சொல்கிறது, ஒரே அதிகார மையம், ஒரே சக்தி, ஒரே இறைவன். 

அமெரிக்கா எனும் ஒரு நாடு உலகமுழுக்க சாட்டிலைட்டுகள் மூலம் கண்காணிக்க முடியுமென நம்புகிற நீங்கள்,  ஒரு கடவுளால் நம்மை  கண்காணிக்க முடியாதெனவா நீங்கள் எண்ணுகிறீா்கள்? இப்பிரபஞ்சத்தை நம் பூமியோடு ஒப்பிடுகையில் , கடுகை விட மிக சிறியது தான். ஆப்கான் நாட்டின் பல இடங்களை சாட்டிலைட் மூலம் அமெரிக்கா பார்க்கிறது என்பதை நம்ப முடிகின்ற நமக்கு அகில உலகையும் படைத்தவனின் ஆற்றல் அதை விடவும் குறைவானது என்றும் நினைக்க முடிகிறது என்றால் இது ஆச்சரியமானது,முட்டாள்தனமானது. 

ஓன்றுக்கு மேற்ப்பட்ட கடவுள் இருக்குமென யோசிப்பது, கடவுளை கொச்சைப்படுத்துவதாகிவிடும். ஏனெனில் கடவுளுக்கு, உலகை நிா்வகிக்க இன்னொருவர் தேவையென்றால் அது அவரின் பலவீனத்தை தான் காட்டுகிறது..எ.க.. நான் ஓரு வியாபாரம் செய்கிறேன் என்றால்,என்னால் நடத்த முடியவில்லையென்றால் தான் நான் பாட்னரை சோ்த்துக்கொள்வேன்.. இது என்னுடைய பலகீனம்; இது போன்று கடவுளும் பலகீனரா?? கடவுள்  ஒருவன் அனைத்தையும் நிர்வகிக்கின்றான் என்ற நம்புவதன் மூலம், அக்கடவுள் சா்வவல்லமையுடைவன் , அனைத்து பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்பது அதனுள்ளே ஒளிந்திருப்பதை அறிய முடிகிறது... 

அதுபோவே என்னால் ஓன்று எளிதாக முடியுமென்றால்,நான் இரண்டாவது ஆளை சாாந்து இருக்கமாட்டேன், எனக்கு நிகரான (அல்ல சற்று குறைந்த) ஆளையோ வைத்துக்கொள்ளமாட்டேன். ஓா் அரசன் கூட அவனுக்கு நிகராக இன்னொரு அரசன் இருப்பதை விரும்பமாட்டான்..இன்னும் ஒரு அடியான் ,ஒரு எஜமானுக்கு தான் முழுமையான முறையில் கட்டுபடயிலும்.பல்வேறு  எஜமானருக்கெப்படி? அழிக்கும் கடவுள் நம்மை அழித்துவிடுவாரோ எனவும், காக்கும் கடவுள்,  நம்மை காக்காமல் விட்டுவிடுவாரோ என பயந்துக்கொண்டும்  அவர்களுக்கு மட்டும் அதிகமாக வேண்டுதல் ,தரிசனம் செய்துவருவதை தற்போது கூட நம்மால் பாா்க்கமுடிகிறது, இதனால் படைக்கும் கடவுளுக்கு எப்பவும் மவூஸ் கம்மிதான். சிந்தியுங்கள் அன்பர்களே!!  

இன்னும் பிரபஞ்சத்தின் அமைப்பை (Model-Design of Universe)  உற்றுநோக்கினால், அதில் இருக்கும் ஒவ்வொரு கோள் / கிரகம்  மற்றொன்றை பின்னிபினைந்ததாகவே அமைந்துள்ளது, எ.க., நம் பால்வெளி வீதியிலுள்ள, நம் சூரியகுடும்பத்தை மட்டும் எடுத்து கொள்வோம். அதிலிருக்கும்  ஒவ்வொரு கோள்களும் ஒன்றுக்கொன்று சாா்ந்து இயங்கிவரும்.  பூமியை,  சந்திரன் தன் வட்டப்பாதையில் சுற்றிவருகிறது, ஏதேனும் கோள்களின் விபத்தில் சந்திரன் இல்லாமல் போய்விட்டதென்றால், எல்லா நாளும் நமக்கு அம்மாவாசை தான்.சூாியனும் சரி ,எவ்வித கோளாறுமின்றி பல கோடி ஆண்டுகளாக ஜோலித்துக் கொண்டிருக்கிறது,இதில் மிக முக்கியமாக கவனிக்கவேண்டியவை, நம் பால்வெளி வீதி, லட்சம் கோடி சூாிய குடும்பங்கள் உள்ளன,அவ்வளவு சூரிய குடும்பங்கள் இருந்தாலும், அவை எல்லாமே அதனுடைய பணிகளை சரியாக செய்துவருகிறது, அதனுள் முட்டி மோதிக் கொள்வதில்லை.   இன்னும் பல வீதிகளுக்குமிடையேக்கூட எவ்வித பிரச்சினைகளும் இல்லை..இது போன்ற மாபெரும் பிரபஞ்சத்தை பல கடவுள்கள் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு, அந்த வீதியை நான் பாா்த்துக் கொள்கிறேன்,  நீ இதை பாா்த்து கொள்,என்றெல்லாம்  ஏாியா பிரித்தால்,  எல்லாமே அழிந்துதான் போகும்.. இதிலிருந்து  கண்டிப்பாக ஓரே மாபெரும் சக்தி தான் நிா்வகிக்கிறதென்பதை அறியமுடியும்.. 

நாம் வாழும் இந்த பூமியில் 800 கோடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வாழ்ந்து மடிந்தவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. இவர்களிடையே நிறத்தால், குணத்தால், அறிவால், மொழியால், உடல் அமைப்பால் இப்படி எத்தனையோ வித்தியாசங்கள் காணப்படுகின்றன. எவ்வளவுதான் வித்தியாசங்களையும் வேறுபாடுகளையும் மனிதர்கள் தமக்குள் ஏற்படுத்திக் கொண்டாலும் இவர்கள் எல்லோருடைய மூலப்பொருளும் ஒன்று தான். அந்த மூலப்பொருளான இந்திரியத்தில் எந்தவித வேறுபாட்டையும் காணமுடியாது. எல்லோருடைய இரத்தமும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. மனிதன் என்ற வட்டத்திற்குள் தான் எல்லோரும் இருக்கிறார்கள். இந்துவை படைத்தது பிரம்மா,  கிறிஸ்தவர்களை படைத்தவர் கா்த்தா்,முஸ்லிம்களை படைத்தது அல்லாஹ் என நீங்கள் நம்பினால்,  அனைத்து மதத்தை சாா்ந்த மனிதனும், ஓரே வரைவிலக்கணத்தோடு தான் உள்ளான், யாரும் மாற்றமான நிலையில் இல்லை. அனைவரையும் ஒரே கடவுள் தான் படைத்திருக்கவேண்டும் என்பது இதிலே தெளிவாகிறது.  தற்போது,  உலகில் 800 கோடி மக்கள் உள்ளனர், இந்தியாவில் 125 கோடி போ், ஒரு 40/50 ஆண்டுகளுக்கு முன்னா்,  இந்தியாவில் 30 கோடி பேர் தான் இருந்தனர், உலகில் 300-400 கோடி மக்களே இருந்தனா், இப்படியே பின்னோக்கி சென்றால், இன்னும்  மனிதன் தோன்றிய வரலாற்றை தலைமுறை தலைமுறையாக ஆராய்ந்து பார்த்தால் கடைசியாக ஒரே ஒரு மனிதனைத்தான் போய் அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த அடிப்படையில் பார்க்கும் போது அகில உலகத்திலுள்ள அத்தனை மனிதர்களும் ஒரே ஒரு தாய் தந்தையிலிருந்து வந்தவர்கள் தான் என்பதை சாதாரண அறிவுடையவர்களும் உணர முடியும். ஆக நம் அனைவருக்கும் மூல பிதா,  மூல தாய் ஓருவர்!!!  அந்த ஜோடி தான் உலகின் முதல் மனித ஜோடி, அந்த ஜோடியை, அவ்விருவரையும் படைக்க ஒரு கடவுள் போதும் தானே!!! இவ்வாறு, ஏக இறைவன் ஓரு ஜோடி மூலம்,  பல மக்களை பல்கி பெருக செய்தானே தவிர, வேறு மாதிரியாக பிறப்பில் ஏற்றத்தாழ்வு ரீதியாக கடவுள் படைக்கமாட்டார். 

பிறப்பு ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் கருதும் மனிதரையே ஜாதி/மத/இன வெறியர்/பாகுபாடு காட்டுபவர் என்கிறோமே, இது போன்ற அநியாயத்தை நம்மை படைத்த இறைவன் செய்வாரா...? 

அனைவருக்கும்  ஓரு கடவுள் என நம்புவதால், சமத்துவம் உருவாகிறது,  மதம் ,ஜாதி,இழிவு ,வேற்றுமை அடிப்பட்டு போகிறது. "ஓன்றே குலம் - ஓருவனே தேவன் " என்பது தான் முற்றிலும் உண்மையானது, பகுத்தறிவுக்கு உகந்தது. ஆக ஒரே இறைவனை வணங்குவதே சாலச்சிறந்தது.  

எல்லா கடவுளும் ஒன்று என்பது உண்மையல்ல..!! எல்லாருக்கும் ஒரே கடவுள் என்பதே உண்மை.