Wednesday, October 9, 2024

இஸ்லாம் என்றால் தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற வணக்கங்களில் ஈடுபடுவது மட்டும்தான் என்று பல எண்ணிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அநீதத்திற்கு எதிராக குரல் கொடுப்பதும் இஸ்லாம் கூறும் மிக முக்கியமான காரியம்.


நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாச­லேயே தன் வாழ்கை கழித்தார்கள். உலக விஷயங்களைப்பற்றி நபிகளார் கவனத்தில் கொள்ளவில்லை, தொழுவதும் நோன்பு நோற்பதும்தான் அவர்களின் கடமையாக இருந்தது என்று எண்ணுகிறார்கள். அவர்கள் எண்ணும் வண்ணம் பல அறிஞர்களின் சொற்பொழிவுகளும் அமைந்திருக்கிறது.

  வணக்க வழிபாடுகளை விட்டு விட்டு அரசியல் விஷயங்களில் ஈடுபட்டால் அது ஆன்மீகத்திற்கு எதிரானது என்றும் அநீததற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் ஆன்மீகவாதிகள் இல்லை என்றும் எண்ணுகின்றனர்.

  இவ்வாறு செய்பவர்களை காணும் பெற்றோர்கள், நீ உண்டு உன் தொழுகை உண்டு என்று இருக்க வேண்டியதுதானே என்று கண்டிப்பதைக் காண்கிறோம்.

  ஆனால், உண்மையில் இஸ்லாம் அனைத்து துறைகளிலும் ஈடுபடவேண்டும் என்றும் அவ்வாறு செய்வதினால் மறுமையில் கூ­லி உண்டும் என்றும் வலியுறுத்துகிறது. மார்க்க விஷயமாக இருந்தாலும் சரி, உலகவிஷயமாக இருந்தாலும் சரி, அநியாயம் நடக்கும்போதும் நீததற்கு மாற்றமாக காரியங்கள் நிகழும் போது அதை தட்டிக் கேட்பவர்களாக நாம் இருக்க வேண்டும்.

  இவ்வாறு தீமையை தட்டிக் கேட்போர் நல்லடியார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

  அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புகின்றனர். நன்மையை ஏவுகின்றனர். தீமையைத் தடுக்கின்றனர். நல்ல காரியங்களை நோக்கி விரைகின்றனர். அவர்களே நல்லோர்.

  (அல்குர்ஆன் 3:114)

  தீமைக்கு எதிராக போராடும் ஒரு கூட்டத்தினர் இவ்வுலுகில் தொடர்ந்து இருக்கவேண்டும் என்றும் இவர்கள் வெற்றியாளர்கள் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது.

  நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

  (அல்குர்ஆன் 3:104)

  இவ்வசனம், தீமைக்கு எதிரான போராட்டம் மறுமைக்கு வெற்றித் தேடித் தரும் காரியம் என்பதை மிகத் தெளிவாக கூறுகிறது. நபி (ஸல்) அவர்களும் கூட தீமையைக் கண்டவர் எப்படி நடக்க வேண்டும் என்று வழிகாட்டியுள்ளார்கள்.

  உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியா விட்டால் தமது நாவால் (சொல்­ரித் தடுக்கட்டும்). அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

  அறிவிப்பவர் : அபூஸயீத் (ர­லி), நூல்கள் : முஸ்­லிம் (78), திர்மிதீ (2098), நஸயீ(4922), அபூதாவூத் (963), இப்னுமாஜா (1265), அஹ்மத் (10651)

  இறைநம்பிக்கை உள்ளவர்கள் தீமை காணும் போது நாவால் அதை தடுக்க சக்தியிருந்தால் அதை தடுக்க வேண்டும் என்ற நபிமொழியை நாம் ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

  அரசியல்வாதிகள் தீமைகளைச் செய்தால் இதற்கும் நமக்கும் என்ன தொடர்பு? இது அரசியல், அதில் போய் நாம் ஏன் தலையிட வேண்டும் என்று நினைப்பவர்கள் பின்வரும் நபிமொழியை படிக்கட்டும்.

  எந்த ஜிஹாத் சிறந்தது? என்று ஒரு மனிதர் கேட்டார்? அதற்கு நபி (ஸல்) அவர்கள் அநியாயம் செய்யும் மன்னர் முன் சத்தியத்தை எடுத்துரைப்பதுதான் என்று பதிலளித்தார்கள்.

  அறிவிப்பவர் : தாரிக் பின் ஷிஹாப்(ரலி­), நூல்கள் :நஸயீ (4138), அஹ்மத் (18076)

  ஆட்சியாளர்கள் நியாயத்திற்கு எதிராக நடக்கும் போது அதைப் பார்த்துக் கொண்டிருக்காமல் அதை தட்டிக் கேட்பவர்கள் சிறந்த ஜிஹாதை (அறப்போரை) செய்தவர்களாக கருதப்படுவார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் சத்தியம் என்று தெரிந்த ஒன்றை ஆட்சியாளர் என்பதற்காக சொல்லாமல் இருக்கக்கூடாது. நியாயத்தை எங்கிருந்தாலும் சொல்லும் தைரியம் நமக்கு இருக்க வேண்டும்.

  நாங்கள் எங்கிருந்தாலும் அல்லாஹ்வின் விஷயத்தில் பழிப்பவர்கüன் பழிப்புரைக்கு அஞ்சாமல் 'உண்மையே பேசுவோம்' என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் உறுதிமொழி அüத்தோம்.

  (நூல் :புகாரி 7199)

  முஸ்­லிம்கள் தொழுமிடமாக பயன்படுத்தி வந்த பாபர் பள்ளிவாசலை 1992 டிசம்பர் 6 அன்று அநியாயமாக ஒரு கும்பல் இடித்து தள்ளியது.அதை அன்றைய அரசு கைகட்டி வேடிக்கை பார்த்தது. முஸ்­லிம்களின் எதி வரையிலும் பள்ளிவாசல் கட்டித் தரவில்லை.

  இந்த அநியாயத்தை கண்டிப்பதும் ஆட்சியாளர்களிடம் உரிமையை பெற்றுத்தர போராடுவதும் மார்க்கம் அங்கீகரித்த, நன்மையை பெற்றுத்தரும் நற்செயலாகும் என்பதை கவனத்தில் கொண்டு இது போன்ற போராட்டங்களில் கலந்து கொண்டு ஈருலுக நன்மையைப் பெறுவோம்.

"This Content Sponsored by Genreviews.Online

Genreviews.online is One of the Review Portal Site

Website Link: https://genreviews.online/

Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"

Tuesday, November 28, 2017

வீடியோவிற்கு மறுப்பு

(இந்த பதிவில் கிறிஸ்தவ அன்பர்களால் கேட்கப்படும் பல கேள்விகளுக்கு பதில் உள்ளது) 
https://www.youtube.com/watch?v=WjUXd4qW9mg மேலேயுள்ள லிங்கில் இருக்கும்  விடியோவிற்கு மறுப்பு பதிவு இது. 

இவ்வீடியோவில், ஒரு முஸ்லிம், அதும் இமாமாக இருந்தவராம்.. குா்ஆனின் ஆய்வுக்கு பிறகு கிறித்தவத்திற்கு.  சென்றுவிட்டாராம்.. அதன் அனுபவத்தை விளக்குகிறார் . இன்னும் கிறித்தவத்திலிருந்து இஸ்லாமை ஏற்றவர்களுக்கு (வாட்ஸ்அப் இல்) அனுப்பி குழப்ப முற்படுவதாகவும் கேள்விப்பட்டோம்; இதற்கு  நாம் விடை சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.. 

இதில் முதலவாதாக சொல்கிறாா், அவர் முஸ்லிமாக  அதும் இமாமாக இருக்கையில், இயேசு கடவுளில்லை என பிரச்சாரம் செய்தாராம், அப்போது யாரோ ஒருவா் , "பிறகு இயேசு யாரென கேட்டாராம்", இயேசு யாரென  அறிய மீண்டும் குா்ஆனை படித்தாராம்!! 
இங்கு ஒரு கேள்வி எழுகிறது, ஒரு இமாமுக்கு இஸ்லாத்தின் பாா்வையில் இயேசு யாா் என்பது தொியாதா?? இதுவே இவரின் நம்பகத்தன்மைக்கு கேள்விக்குறியாக திகழ்கிறது. சொற்ப இஸ்லாமிய அறிவு உள்ளவர் கூட எளிதாக பதிலளிக்கும் வகையிலான மிக எளிதான கேள்வி இது. ஐந்தாவது படிக்கும் முஸ்லிம் சிறுவன் கூட இதற்கு பதிலளிப்பான். இது ஒரு இமாம்'க்கு தெரியவில்லை என்று சொன்னாலும் எவரும் நம்பமாட்டார்கள். 

குா்ஆன் படிக்கையில், இயேசுவின் பெயா், முஹம்மது  நபியை விட அதிகமாக உள்ளதாம்.. இதில் இவா் வைத்துள்ள முதல் வாதம், குா்ஆனில்,  முஹம்மது நபியின் பெயர் 4 இடத்தில் தான் உள்ளதாம்.. இயேசுவின் பெயா் 25 இடத்துல உள்ளதாம். இது ஒரு அறிவுப்பூர்வமான வாதமா??இதனால் அவா் கடவுள் ஆவரா? 

இப்ராஹிம் நபி - 69 தடவை
மூஸா நபி - 136 தடவை,
இயேசுவை விட மற்ற நபி அவர்களுடைய பெயரும் கூட அதிகமாக தான் உள்ளது, அதனால்  இவர்களும் கடவுளா? இயேசு அவர்கள் பற்றி 25 இடத்தில் குர்ஆனில் இருக்கிறது. அவற்றில், இயேசு அல்லாஹ்வின் அடிமை, இறைதூதர் என்று இருக்கிறதே!!! இதையும் ஏற்றுக்கொள்கிறீா்களா??? இதிலேயே இவருடைய  அறியாமை தெளிவாக புாிகிறது.

ஏன் முஹம்மது  நபியின் பெயா், குறைவாக உள்ளது??????

குா்ஆனில், அல்லாஹ் முஹம்மது நபிக்கு தான் வஹீ (இறை வெளிப்பாட்டை) அருளுகிறான், இங்கே, முஹம்மது நபி , இரண்டாம் நிலையில் (Second Person) உள்ளாா், இந்நிலையில் அவரது பெயரை சொல்லவேண்டிய அவசியமில்லை.  நீ, நீா், நீங்கள், உம்மிடம் போன்ற சொற்பிரயோகம் போதுமானது. நான் உங்களிடம் பேசினால் நீ, நீங்கள்  என  தான் பேசுவேன், பொதுவாக பேசுகையில்  தான் பெயரை குறிப்பிட்டு சொல்லமுடியும்.. 

இன்னும் குா்ஆனில், " நபியே , ________ பற்றி உம்மிடம் (காலூ) கேட்கின்றனர், நீா் கூறுவீராக(குல்) , _________ "   
இது போன்று கேள்வி - பதில் தோனியில் வரும் வசனத்தை அதிகளவில் கண்டிருப்போம். இதுபோன்றய 332 வசனம் உள்ளது. இவையெல்லாம்  முஹம்மது நபியிடம் பேசும் தோணியில் தான் உள்ளது,  சொல்லப்போனால் நபியை சுற்றிய செய்திகள் குா்ஆனில் அதிகமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குா்ஆனில் மாியம் பெயாில் ஓா் அத்தியாயம் உள்ளது

குா்ஆனில் மாியம் பெயாில் ஓா் அத்தியாயம் உள்ளது என்ற வாதம் வைத்து மரியம் அவர்களுக்கு குர்ஆனில் வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை கூற முயல்கிறார். ஆம், மரியம் அவர்களது பெயரில் 19வது அத்தியாயம் அமைந்துள்ளது. இதனால் மரியம் (அலை)  கடவுள் ஆவாரா?? அல்லது கடவுளுக்கு தாய் ஆவாரா?? இன்னும் குா்ஆன், ஃபிா்அவ்னின் மனைவியை புகழ்ந்துள்ளது, ஆயிஷா (ரழி) அவா்களை குறித்த சில வசனங்களும் கூட உள்ளது. ஆம் இவா்களெல்லாம் சிறந்த முஸ்லிம் பெண்கள், ஆனால் தெய்வீகதன்மை பெற்றவா் அல்ல!!! அது போக, இப்ராஹிம், முஹம்மது, இம்ரான் போன்றவா்களின் பெயரிலும் அத்தியாயம்  உள்ளது, இதனால் யாரும் தெய்வீகதன்மை பெறப்போவதல்ல!!  மாறாக அதில் சொல்லப்படும் செய்திகளை தான் பாா்க்கவேண்டும்.

ஆதிபாவம்

இன்னும் குா்ஆன் 3:34 லிற்கு பிறகு படித்தால், மரியம் அவர்களை கன்னி என்கிறது, ஆதிபாவம் இல்லாமல் பிறந்தார் என்றெல்லாம் இருக்கிறது என கூறுகிறார் . 
இவரின் இஸ்லாமிய அறிவை இதிலிருந்தே தெரிந்துக்கொள்ளலாம். 

ஆதிபாவம்; பிறக்கும் குழந்தை பாவியாக பிறக்கிறது என்பது கிறித்தவ கோட்பாடு, பிறக்கும் குழந்தை முஸ்லிமாக பிறக்கிறது என்பது இஸ்லாமிய கோட்பாடு..
ஆதிபாவம் குறித்து இஸ்லாத்தில் எங்குமே சொல்லபடவில்லை. சொல்லப்போனால் ஆதிபாவம் கொள்கைக்கு எதிராக தான் குர்ஆன் போதிக்கிறது. அவரவர் செய்த பாவத்திற்கு அவரவரே பொறுப்பு என்பதே இஸ்லாத்தின் போதனை. இப்படியிருக்க, இஸ்லாத்தில்/ குர்ஆனில் இல்லாத ஒன்றை கூறியிருக்கிற இவரா முன்பு இமாமாக இருந்தார்? 

இன்னும் சொல்கிறாா், குா்ஆன் 50:23 ல் மாியம், தன் உடலோடு வானில் உயா்த்தப்பட்டதாக உள்ளதாம்.

இதோ அந்த குறிப்பிட்ட வசனத்தில் என்ன இருக்கிறதென்று பார்ப்போம்.
50:23 அப்போது அவனுடன் இருப்பவர் (மலக்கு)“இதோ (இம்மனிதனின் ஏடு) என்னிடம் சித்தமாக இருக்கிறது” என்று கூறுவார்ٍ.
அவர் சொன்னது போல குர்ஆனில் எங்குமில்லை; இது இஸ்லாத்தின் நிலைப்பாடுமில்லை; ஆக, இல்லாததையெல்லாம் இவா் இட்டுகட்டுவது இதில் தெளிவாகிறது. 

அடுத்ததாக  அவா் வைத்த வாதம்,  மூன்றாவது அத்தியாயம்  பெயா் ஆலு இம்ரான், மாியம் அவா்களின் தந்தை பெயா் இம்ரான். அவா்களின் பெயாிலும் ஓா் அத்தியாயம் இருக்கிறது. பாத்தீர்களா..! இயேசுவிற்கும் மரியம் குடும்பத்திற்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற ஆச்சரியமான தகவலை சொல்வது போல் சொல்கிறார். 

குா்ஆனின் அனைத்து அத்தியாயங்களுக்கும் நபியோ, நபித்தோழா்களோ, உஸ்மான் (ரழி)  அல்ல... (சில அத்தியாயம் நபி அவா்களால் பெயர் வைக்கப்பட்டது) மாறாக பின்பு வந்தவா்கள், அத்தியாத்தின் சாராம்சத்தை பொருத்து பெயா் சூட்டியுள்ளனர். அத்தியாயத்தின் வசனங்கள் தான் மிக முக்கியமானவை, இவா்கள் அதிகளவில் மேற்கோள் காட்டும், மாியம் அத்தியாயம் படித்தோமேயானால்,  
19வது அத்தியாயத்தின் 30வது வசனம்,  இயேசு, குழந்தையாய் இருக்கும் போது பேசினாா், அவா் சொன்ன முதல் வாா்த்தை "மா அப்தில்லாஹ்" (நான் அல்லாஹ்வின் அடிமை). ஒட்டுமொத்த கிறிஸ்தவ கொள்கைக்கு மிக கச்சிதமான மறுப்பாக அமைந்துள்ளது இறைத்தூதர் இயேசு அவர்களின் முதல் வார்த்தை.

இயேசு உயிரோடு இருக்கிறார்

இயேசு வானில் உயா்த்தப்பட்டது, பலருக்கு ஒரு சோதனையாகவே அமைந்துள்ளது, இன்னும் சொல்லப்போனால், இயேசுவின் மறுவருகையை நாம் நம்புகிறோம், வந்து சில காாியங்களை, அல்லாஹ், அவா் மூலம் நடப்பித்து, அவருக்கு மரணத்தையும் கொடுப்பாா்.. இயேசுவுக்கு மரணம் உண்டு... 

5:17 "மர்யமுடைய மகன் மஸீஹ் தான் அல்லாஹ்'' என்று கூறியோர் (ஏகஇறைவனை) மறுத்து விட்டனர்."மர்யமின் மகன் மஸீஹையும், அவரது தாயாரையும், பூமியில் உள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் அவனிடமிருந்து (அதைத் தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவர் யார்?'' என்று நீர் கேட்பீராக! வானங்களின், பூமியின், அவற்றுக்கு இடைப்பட்டவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். 

அடுத்ததாக, இயேசு அற்புதம் செய்ததாக, இறந்தவரை எழுப்பியதாக குா்ஆன் கூறுகிறது என கூறி, இதிலிருந்து  இயேசுவினால் உயிர் கொடுக்க முடியுமென, தவறாக பொருள் கொடுத்து, வாா்த்தைகளில் விளையாடுகிறாா். 
குா்ஆனிலும் சாி, பைபிளிலும் சாி, இயேசு சுயமாக அற்புதம் செய்யவில்லை, இறைவனின் விருப்பப்படி தான் நடந்தது. பைபிளிலும் சாி, தேவனுடைய சித்தத்தினால் அற்புதம் செய்தார் என்று தான் உள்ளது. ஆனால் இவரோ, "குா்ஆனின்படி இயேசுவால் உயிா் கொடுக்கமுடியும் என சொல்லி, (அல்லாஹ்வின் உத்தரவு/உதவியோடு) என்றெல்லாம்  சொல்லாமல் இருட்டடிப்பு செய்கிறாா் குா்ஆனின் வசனம்  இதோ!! 

3:49. இஸ்ராயீலின் மக்களுக்குத் தூதராகவும் (ஈஸாவை அனுப்பினான்.) "உங்கள் இறைவனிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காக களிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து, அதில் ஊதுவேன்; அல்லாஹ்வின் விருப்பப்படிஅது பறவையாக ஆகும். அல்லாஹ்வின் விருப்பப்படி பிறவிக் குருடையும், குஷ்டத்தையும் நீக்குவேன் , இறந்தோரை உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பதையும், உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன்; நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதில் உங்களுக்கு தக்க சான்று உள்ளது '' (என்றார்) 

இன்னும் முஹம்மது நபி (ஸல்), அற்புதங்கள் ஏதும் செய்யவில்லை எனவும் கூறியிருந்தாா், நபி செய்த அற்புதத்தை  பற்றி பாா்க்க.. http://www.discoveringislam.org/mohammad_miracles.htm

பிறகு, அடுத்ததாக கூறுகிறாா், இயேசுவிற்கு, குா்ஆனில் கலிமத்துல்லாஹ், ஈசல் மஸீஹ் என பெயர் உண்டு என்கிறாா்.. (ஈஸா அல் மஸீஹ் என்று சரியாக மனனம் செய்யவில்லை என நினைக்கிறேன்) ஈசல் மஸிஹ் என்கிறாா்.

அல்லாஹ் இவ்வுலகை எப்படி படைத்தான்?

அடுத்ததாக, ஒரு கேள்வியை முன்வைக்கிறாா், அல்லாஹ் இவ்வுலகை எப்படி படைத்தான்?  தன் வாா்த்தை மூலம் தானே? இயேசு அல்லாஹ்வின் வாா்த்தை தானே!!!  இயேசுவை கொண்டு தான் படைத்தாா் என்ற வாதத்தை முன்வைக்கிறாா்.. 

கலிமத்துல்லாஹ் என்பது அல்லாஹ்வுடைய வார்த்தையான குா்ஆனையும் குறிக்கும், அல்லாஹ்வுடைய கட்டளையையும் குறிக்கும், அல்லாஹ்வுடைய வாா்த்தையையும் குறிக்கும் என்பதை  நினைவில் வைத்து கொள்ளவேண்டும். இயேசுவை, அல்லாஹ்வுடைய வாா்த்தை என குா்ஆன் சொல்லவில்லை, அல்லாஹ்வுடைய ஓர் வாா்த்தை என தான் சொல்கிறது.. 

3:45. மலக்குகள் கூறினார்கள்; “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் "ஒரு வாா்த்தையைக் கொண்டு" உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; 
யஹ்யா நபியையும் அவ்வாறே தான் குா்ஆன் கூறுகிறது.இதற்கென சொல்லப்போகிறீா்கள். 

3:39. அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை சப்தமாக அழைத்து: “நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு குறித்து) நன்மாராயங் கூறுகின்றான்; அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையைமெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும்,... "

இயேசு ருஹூல்லாஹ்.Spirit of Allah?

4:171, 21:91, 66:12 ஆகிய வசனங்களில் ஈஸா நபி இறைவனது உயிர் எனக் கூறப்படுகிறது. இது போன்ற வார்த்தைப் பிரயோகங்களைத் தவறாக விளங்கிக் கொண்டு ஈஸா நபி இறைவனின் குமாரர் என்று சில கிறித்தவர்கள் கூறுகின்றனர். திருக்குர்ஆனும் இதை ஒப்புக் கொள்வதாக அவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். ஈஸா நபியோ, மற்ற யாருமோ இறைவனுக்குப் புதல்வர்களாக இல்லை என்று ஏராளமான இடங்களில் திருக்குர்ஆன் தெளிவாகப் பிரகடனம் செய்கின்றது. (பார்க்க: திருக்குர்ஆன் 2:116, 4:171, 10:68, 17:111, 18:4, 19:35, 19:88-93, 21:26, 23:91, 25:2, 37:149-153, 39:4, 43:81) 

பொதுவாக மனிதன் உருவாக, பெண்ணின் சினை முட்டையும், ஆணின் உயிரணுவும் அவசியம். ஆனால் ஈஸா நபி, ஆணின் உயிரணு இன்றி, அல்லாஹ்வின் கட்டளையால் உருவானவர். இதனால் தான் அவரை இறைவனின் வார்த்தை என்று திருக்குர்ஆன் கூறுகிறது. வானம், பூமி மற்றும் எண்ணற்ற படைப்புக்கள் "ஆகு'' எனும் கட்டளை மூலம் தான் படைக்கப்பட்டன. இதனால் அவை இறைவனின் புதல்வர்களாகி விட முடியாது. இறைவனின் உயிர் என்று ஈஸா நபி கூறப்படுவதால் அவரை இறைவனின் மகன் எனக் கூற முடியாது. என்னுடைய கை என்று சொல்கிறோம். என்னுடைய பேனா என்றும் சொல்கிறோம். இரண்டிலும் என்னுடைய என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இரண்டு இடங்களிலும் வெவ்வேறு பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. என்னுடைய கை என்பது என்னில் ஒரு பகுதியாக இருக்கும் கை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. என்னுடைய பேனா என்று சொல்லும் போது என்னில் ஒரு பகுதியான பேனா என்று பொருள் கொள்ள மாட்டோம். கை எப்படி எனது உறுப்பாக உள்ளதோ அது போல் பேனா எனது உறுப்பாக இல்லாததே இதற்குக் காரணம். என்னுடைய பேனா என்றால் எனக்கு உடமையான பேனா என்று பொருள் கொள்கிறோம். அது போல் தான் என்னுடைய உயிர் என்பதும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். 

ஈஸா நபி என்னுடைய உயிர் என்றால் எனக்குச் சொந்தமான உயிர். நான் எனது கட்டளையால் உருவாக்கிய உயிர் என்ற பொருளில் தான் அறிவுடைய மக்கள் புரிந்து கொள்வார்கள். எனவே "இறைவனின் உயிர்'' என்றால் "அவனுக்கு உடமையான உயிர்'' என்பது தான் பொருள்."அவனது ஒரு பகுதியான உயிர்'' என்று பொருள் இல்லை. 15:29, 38:72 ஆகிய வசனங்களில் ஆதம் நபி அவர்களையும், அல்லாஹ்வின் உயிர் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இதனால் ஆதம், அல்லாஹ்வின் மகன் என்று கிறித்தவர்கள் கூறுவதில்லை. ஆதம் நபி பற்றிக் கூறப்படும் போது எவ்வாறு புரிந்து கொண்டார்களோ அப்படித்தான் ஈஸா நபி பற்றியும் புரிந்து கொள்ள வேண்டும். 3:59 வசனத்தில் ஆதமைப் படைத்ததும், ஈஸாவைப் படைத்ததும் ஒரே மாதிரியானது எனத் திருக்குர்ஆன் தெளிவாகப் பிரகடனம் செய்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

குர்ஆன் 10:94

அடுத்ததாக, குர்ஆன் 10:94 ஐ மேற்கொள் காட்டி,பைபிளை படிக்கவேண்டும் என கூறுகிறார். வேதத்தில் சந்தேகம் வந்தால் அது குறித்து முன்பு வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் கேட்குமாறு இவ்வசனம் கூறுவதாகப் புரிந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் முன்பு வேதம் கொடுக்கப்பட்டவர்கள் தமக்கு அருளப்பட்ட வேதத்தில் கைவரிசை காட்டியவர்கள். (பார்க்க: திருக்குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41) இப்படி இருக்கும் போது அவர்களிடம் கேட்டால் அவர்கள் உண்மை பேச மாட்டார்கள். எனவே பொதுவாக வேதத்தில் சந்தேகம் ஏற்படும் போது அது குறித்து அவர்களிடம் கேட்க வேண்டும் என்பது இதன் அர்த்தமாக இருக்க முடியாது. மாறாக இதற்கு முந்தைய வசனத்தில் யூதர்களுக்கு இறைவன் செய்து கொடுத்திருந்த சிறப்புக்கள் கூறப்படுகின்றன. அவர்கள் வாழ்ந்த நிலப்பரப்பு மிகச்சிறந்த நிலப்பரப்பு எனவும் அவர்களுக்குத் தூய்மையான உணவுகள் தாரளமாக வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதைக் கூறி விட்டுத் தான் இதில் சந்தேகம் இருந்தால் வேதம் அருளப்பட்ட அவர்களிடமே கேட்டுப் பார் என்று அல்லாஹ் அடுத்த வசனத்தில் கூறுகிறான். இதைப் பற்றிக் கேட்டால் அவர்கள் உண்மையைத் தான் சொல்வார்கள். அவர்களின் பெருமை சம்மந்தப்பட்ட விஷயமாக இருப்பதால் மற்ற விஷயங்களை மறைப்பது போல் இதை அவர்கள் மறைக்க முடியாது. இதனால் தான் அவர்களிடம் கேட்குமாறு அல்லாஹ் இவ்வசனத்தில் 10:94 கூறுகிறான். 

ஆக, வீடியோவில் மேரியோ ஜோசப் கூறிய எவ்வித வாதங்களும் நிற்கவில்லை. மற்றும் இவர் பேசிய வீடியோவிற்கு ஒரு முஸ்லிம் அறிஞர் கொடுத்த மறுப்பு வீடியோ கீழே உள்ள லிங்கில் உள்ளது. கூடுதல் தகவல்களுக்கு இதனை பார்வையிடவும். https://www.youtube.com/watch?v=8Pc57wyiWEw

மனிதனை வணங்க சொல்லும் மார்க்கமா இஸ்லாம்?

கேள்வி: எல்லா படைப்புகளும் அல்லாஹ்வை தான் வணங்கவேண்டும், பிறகு ஏன் அல்லாஹ் , வானவா்களை  ஆதாம் நபிக்கு சஜ்தா (சாஸ்டாங்கம்) செய்ய கட்டளையிட்டான்? 

பதில்: 
முதல் மனிதராகிய ஆதமை இறைவன் படைத்தவுடன் அவரது திறமையை வெளிப்படுத்திக் காட்டி அவருக்கு ஸஜ்தாச் செய்யுமாறு வானவர்களுக்குக் கட்டளையிட்டான் என இவ்வசனங்களில் (2:34,  7:11, 15:29-31, 17:61, 18:50, 20:116, 38:72) கூறப்பட்டுள்ளது. முதலில் ஸஜ்தா என்ற சொல்லின்  பொருள் என்ன என்று பார்ப்போம்.  ஸலாத் - தொழுகை, ஸவ்ம் - நோன்பு, ஸகாத் போன்ற சொற்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  பிறப்பதற்கு முன்பே அரபுகளால்  பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆயினும், இப்போது நாம் பயன்படுத்துகின்ற பொருளில்இவ்வார்த்தைகள் பயன்படுத்தப்படவில்லை. தொழுகையைக் குறிப்பிட "ஸலாத்'' என்னும் வார்த்தையை இப்போது பயன்படுத்துகிறோம். ஆனால், இந்த வார்த்தையின் நேரடிப் பொருள் பிரார்த்தனையாகும். இப்பொருளில் தான் அரபுகள் இந்த வார்த்தையைப் பயன்படுத்தி வந்தனர். குறிப்பிட்ட சில காரியங்கள் அடங்கிய குறிப்பிட்ட வணக்கத்திற்கு "ஸலாத்'' என்ற வார்த்தையை இஸ்லாம் பயன்படுத்தியது. "ஸவ்ம்'' என்ற வார்த்தை நோன்பைக்  குறிப்பிடுவதற்கு இன்று பயன்படுத்தப்படுகிறது. 

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னர் "கட்டுப்படுத்திக்  கொள்ளுதல்'' என்ற பொருளில் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டது.  இஸ்லாம் புதிய வார்த்தைகளைக்  கண்டுபிடித்து வணக்கங்களுக்குப் பெயர் சூட்டவில்லை. மாறாக நடைமுறையில் இருந்த  வார்த்தைகளில் பொருத்தமானதைத் தேர்வு செய்து வணக்கங்களுக்குப் பெயர் சூட்டியது. இது போலவே ஸஜ்தா என்ற சொல்லும் அரபு மொழியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்பே பயன்படுத்தப்பட்டு வந்தது. நெற்றி, மூக்கு, இரண்டு உள்ளங்கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரு கால்களின் விரல்கள் ஆகியவை தரையில் படும் வகையில்  பணிவது "ஸஜ்தா'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்விளக்கம் அளிப்பதற்கு முன்னால்  இவ்வார்த்தைக்கு இவ்வாறு பொருள்  இல்லை. "நன்றாகப் பணியுதல்'' என்பதே இவ்வார்த்தையின்  பொருளாக இருந்தது. 

பணிவைக் காட்டும் எல்லாக் காரியங்களும் "ஸஜ்தா'' எனக் குறிப்பிடப்பட்டன. அகராதியில் மட்டுமின்றி திருக்குர்ஆனிலும்  "நன்றாகப் பணியுதல்'' என்ற பொருளில் இவ்வார்த்தை பல  இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 
நீங்கள் இவ்வூரில் ஸஜ்தாச் செய்தவர்களாக வாசல் வழியாக நுழையுங்கள்!  (திருக்குர்ஆன்: 2:58, 4:154, 7:161) 

அகராதியில் உள்ள பணிவு என்ற பொருளைத்தான் இவ்வசனங்களில்  உள்ள ஸஜ்தா என்ற சொல்லுக்குக் கொடுக்க முடியும். இஸ்லாமிய வழக்கில் உள்ள "ஸஜ்தா''வுக்குரிய பொருளை இங்கே கொள்ள முடியாது. ஏனெனில் இந்த ஸஜ்தாவைச்  செய்து கொண்டு வாசல் வழியாக நுழைய இயலாது.  

மனிதர்கள் மட்டுமின்றி சூரியன், சந்திரன், நட்சத்திரம், மரம், ஊர்வன, மலை உள்ளிட்ட அனைத்தும் அல்லாஹ்வுக்கு ஸஜ்தாச்  செய்கின்றன என்று திருக்குர்ஆன் 22:18 வசனம் கூறுகிறது. 

இவற்றுக்கு முகமோ, மூக்கோ, கைகளோ, மூட்டுக்  கால்களோ கிடையாது. குனிந்து மரியாதை செய்வதற்கான  முதுகும் கிடையாது. மலைகளோ, மரங்களோ இருக்கின்ற  இடத்தை விட்டு நகர்வது கூட இல்லை. ஆனாலும்,  இவை தனக்கு ஸஜ்தாச் செய்கின்றன என்று அல்லாஹ் கூறுகிறான். சூரியன், சந்திரன், நட்சத்திரம் ஆகியவை ஓய்வின்றி இறைவன் வகுத்தளித்த திட்டப்படி சுற்றிச் சுழன்று வருகின்றன. இது தான் அவற்றுக்கான ஸஜ்தாவாகும். மரங்கள் பூத்துக் காய்த்துக்  குலுங்குவது அவற்றுக்குரிய ஸஜ்தா ஆகும். 

இப்பூமியைத் தடம் புரளாமல் தடுத்து நிறுத்தும்  பணியை அல்லாஹ்வின் கட்டளைப்படி மலைகள்  செய்து வருகின்றன. இது அவற்றுக்குரிய ஸஜ்தாவாகும்.  மொத்தத்தில் படைக்கப்பட்ட அனைத்தும்  இறைவனது உயர்வையும், தங்களது தாழ்வையும் ஒப்புக் கொண்டு பணிந்து வருகின்றன. பணிந்து நடப்பது தான்  இங்கே ஸஜ்தா எனப்படுகிறது.  திருக்குர்ஆன் 12:4, 13:15, 16:48,49 ஆகிய  வசனங்களிலும் பணியுதல் என்ற பொருளிலேயே ஸஜ்தா என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதைத்  தெளிவாக அறியலாம். வானவர்கள் ஆதமுக்கு ஸஜ்தாச்  செய்ததாகக் கூறும் மேற்கண்ட  வசனங்களையும் இப்படித்தான்  புரிந்து கொள்ள வேண்டும். இதை வலுப்படுத்தும் இன்னும் பல காரணங்களும் உள்ளன.  வானவர்கள் மனிதனைப் போன்றவர்கள் அல்லர்.அவர்களுக்கு என திட்டவட்டமான உருவம் ஏதும் இல்லை. எனவே, வானவர்களை நம்மைப் போன்றவர்களாகக் கருத முடியாது.  அவர்களால் பணிவை எவ்வாறு வெளிப்படுத்த  முடியுமோ அவ்வாறு பணிவை வெளிப்படுத்தினார்கள் என்று தான் கருத முடியும். 

பைபிள் கரைபடிந்துள்ளது என்று சொல்வதேன்?

கிறிஸ்தவ அன்பர்களால் கேட்கப்படும் கேள்விகளுள் இதுவும் ஒன்று. நாங்கள் ஏன் அவ்வாறு நம்புகிறோம் என்பதை கீழுள்ள பதிவு விளக்குகிறது .

பைபிள் கறைபடிந்துள்ளது/ மனித கரங்களால் விளையாடப்பட்டுள்ளது.

ஒரு நூலை இறை வேதம் என்று நம்புவதற்கென்று சில தகுதிகள் உள்ளன. சாதாரண மனிதனால் எழுதப்பட்ட நூல்களில் காணப்படும் குறைபாடுகள் இறை வேதம் எனக் கருதப்படும் நூலில் இருக்குமானால் அதை இறை வேதம் என்று கூற முடியாது. பைபிளை ஆராயும் பொழுது சாதாரண மனிதர்களால் எழுதப்பட்ட நூல்களில் காணப்படும் குறைகளை விட அதிக அளவு குறைகளைக் காண்கிறோம்.
நடுநிலையான சிந்தனையுடன் நீங்கள் ஆராயந்தால் இதை மறுக்க மாட்டீர்கள்.

1 மூல மொழியில் பாதுகாக்கப்படவில்லை.

இது இறைவனிடமிருந்து தான் அருளப்பட்டது” என்று ஒரு நூலைப் பற்றி நம்புவதென்றால் அது எந்த மொழியில் அருளப்பட்டதோ அந்த மூல மொழியில் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும். வேதத்தை வேறு மொழியில் மாற்றம் செய்யக் கூடாது என்பது இதன் கருத்தன்று. எத்தனை மொழி பெயர்ப்புக்கள் வந்த போதிலும் மூல மொழியிலும் பாதுகாக்கப்பட்டிருப்பது மிக மிக அவசியமாகும். இது முக்கியமான தகுதியாகும். மூல மொழியில் ஒரு நூல் பாதுகாக்கப்பட்ட நிலையிலேயே அதன் மொழிபெயர்ப்புக்கள் வித்தியாசப்படுவதை நாம் சகஜமாகக் காண்கிறோம். மூல மொழியில் உள்ள நூலே இல்லை எனும் போது ஏற்படும் விளைவுகளைச் சொல்ல வேண்டியதில்லை. சாதாரணமாக மனிதர்கள் எழுதும் நூல்களே மூல மொழியுடன் இருக்க வேண்டும் எனும் போது கடவுளின் வேதம் என்று நம்பப்படும் நூல் மூல மொழியில் பாதுகாக்கப்பட்டிருப்பது மிக மிக அவசியம் அல்லவா? இதை என்றேனும் சிந்தித்திருக்கிறீர்களா?
இந்த விஷயத்தில் வேதங்களுக்கும் ஏனைய நூல்களுக்குமிடையே மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. இறைவனிடமிருந்து வந்ததாக ஒரு நூலைப் பற்றி மக்கள் நம்பினால் அதற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். அதைப் பாதுகாப்பாக வைத்திருக்க அதிக முயற்சிகளை மேற்கொள்வார்கள். திருக்குர்ஆனை இதற்கு உதாரணமாகக் கூறலாம். கடந்த 14 நூற்றாண்டுகளாகக் குர்ஆனை எவ்விதக் கூடுதல் குறைவுமின்றி, மூலமொழியில் அப்படியே முஸ்லிம்கள் பாதுகாத்து வருகின்றனர்.

இந்த முதலாவது தகுதி பைபிளுக்கு இருக்கிறதா? இல்லை. இல்லவே இல்லை! உலகில் எங்கேயும் பைபிள் மூலமொழியுடன் பாதுகாக்கப்படவில்லை மொழி பெயர்ப்புக்களே உள்ளன. இதை நாம் சுயமாகக் கூறவில்லை. கிறித்தவ மதகுருமார்களின் கூற்றின் அடிப்படையிலேயேபைபிள் அதன் மூலமொழியில் பாதுகாக்கப்படவில்லை என்று கூறுகிறோம்.

இதோ bibleca வின் தளம் கூறுவது: ""Unfortunately, none of these original manuscripts exist today. Well over 3000 years have passed since Moses first penned the book of Genesis. None of his own writing has survived, but copies have been made down through the centuries." "Because what we have are copies of so many manuscripts, there is no single location where "the original Bible" is housed"  http://www.biblica.com/en-us/bible/bible-faqs/is-the-bible-we-have-today-in-english-the-same-as-the-original-bible/

இத்தளம் மட்டுமல்ல எல்லா கிறிஸ்தவ அதிகாரப்பூர்வ தளங்களும் கூறுவது, மூலப்பிரதி, அதை பார்த்து எழுதப்பட்டது ,அதை பார்த்து எழுத்தப்பட்டதை பார்த்து எழுதப்பட்ட பிரதி .....(copy of the copy of the copy....) தான் இருக்கிறது .. உலக அழியும் வரை இப்புத்தகம் தான் இறைவேதம், மனிதருக்கு வழிக்காட்டும், என்றெல்லாம் நம்பும் நீங்கள்,இவ்வளவு முக்கியமான புத்தகத்தின் மூலப்பிரதியை கர்த்தர் ஏன் பாதுகாக்கவில்லை என சிந்திக்காதது ஏன்..??

"மொத்தம் 24,000 மூலப்பிரதிகளை கொண்டுள்ளது கிறிஸ்தவ உலகம் ,(இதில் 5366 கிரேக்கத்தில்) ஆனால் இப்பிரதிகள் ஏதும் இயேசு அவர்களது காலத்துடையதல்ல!! இயேசு அவர்களுடைய சீடர்களுடைய காலத்துடையதுமல்ல!!! (இரண்டாம் முதல் ஆறாம் நூற்றாண்டிற்கு உட்பட்டது)  இப்பிரதிகளில் எந்த ஒரு "இரு பிரதிகளும்" அப்படியே துள்ளியமாக ஒரே மாதிரி இல்லை!! நிறைய மாற்றமும் முறண்பாடும் வித்தியாசங்களோடே உள்ளன.." ( The Orthodox Corruption of Scriptures, Bart Ehrman, பக்கம்:  27)

2. பல்வேறு பைபிள்கள்:

பைபிள் என்பது கிரேக்க(Greek) மொழியில் புத்தகங்களின் புத்தகம் / புத்தக தொகுப்பு (Book of Books) என அர்த்தம் . பைபிளில் பல புத்தகங்கள் இருப்பது நாம் அறிந்ததே!! பைபிளில் எத்தனை புத்தகங்கள் உள்ளது??? இதனை யார் தீர்மானிக்க வேண்டும்..கிறிஸ்தவர்களிடைய (கொள்கை சார்ந்த) பல பிரிவுகள் இருப்பது அனைவரும் அறிந்ததே!! அதில் ஒவ்வொரு குறிப்பிட்ட கொள்கையுடையோரும் தங்களுக்கேற்ப புத்தகங்களை கூட்டியும் குறைத்தும் வைத்துள்ளனர்.
பிரட்டஸ்டாண்ட்கள் Protestant Church - (66 books),
Roman Catholic (கத்தோலிக்க) Church -(73 books),
Greek Orthodox Church - R.C+4 (77Books)
Ethiopic Church - (81 Books)

இன்னும் சில பிரிவினர், சில புத்தகத்தை சிறுது குறைத்தும் வைத்துள்ளனர் ...
ஆக இதில் எத்தனை புத்தகங்களை கொண்ட  நூல் ,இறைவேதம்.?? 

73 புத்தகங்களாக இருந்ததை, குறிப்பிட்ட (7)புத்தகங்களை நீக்கி 66 ஆக மாற்றியது சர் மார்டின் லூதர் கிங் (புரோட்டஸ்டண்டு) என்பதை நாம் அறிந்ததே!!! இந்த (7 புத்தகங்கள்) 4652 வசனங்களும் வேதத்தில் உள்ளவை தான்; புரோட்டஸ்டண்டுகள் அவற்றை நீக்கி விட்டார்கள் என்று கத்தோலிக்க உலகம் குற்றஞ்சாட்டுகின்றது. இவை வேதத்தில் உள்ளவை அல்ல! கத்தோலிக்க குருமார்களின் சொந்தக் கற்பனை என்று புரோட்டஸ்டண்டுகள் குற்றஞ்சாட்டுகின்றன. கத்தோலிக்கர்கள் கூற்று உண்மை என்றால் வேதத்தின் பெரும் பகுதியை சிலர் நீக்கிவிடும் அளவிற்கு  பைபிள் பலவீனமானதாகவும் பாதுகாக்கப்படாததுமாகவும் இருந்துள்ளது என்பது உறுதியாகின்றது. புரோட்டஸ்டண்டுகளின் கூற்றுத் தான்  உண்மை என்று வைத்துக் கொண்டால் வேதத்தில் இல்லாததையும் கூட வேதத்தில் சேர்த்து விடுமளவுக்குத்தான் பைபிளின் பாதுகாப்புத் தன்மை இருந்துள்ளது என்பது உறுதியாகின்றது. இது போக இன்னும் எதத்னை வசனங்கள் நீக்கப்பட்டிருக்குமோ?என்ற சந்தேகமும் ஏற்புடுகின்றது. எப்படிப் பார்த்தாலும் இரண்டு பிரிவினரின் வேதமும் இப்போது சந்தேகத்திற்குரியதாகி விடுகின்றது. 4652 வசனங்களை நீக்கவிட்ட புரோட்டஸ்டண்டுகள் எப்போது தோன்றினார்கள்? இந்தப் பிரிவு தோன்றியதே 16 ஆம் நூற்றாண்டில் தான்.

இயேசுவுக்கு1600  ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றிய இந்தப் பிரிவினர்இவ்வளவு பெரும் எண்ணிக்கையிலான வசனங்களை எப்படி நீக்க முடிந்தது? அதனை எதிர்த்து கத்தோலிக்கத் திருச்சபைகளால் ஏன் எதுவுமே செய்ய முடியவில்லை? தங்கள் வேதத்தில் நீக்கம் செய்வதை அன்றைய மக்கள்-கிறித்துவ மக்கள்- எப்படிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்? இந்தப் பிரிவினரும் எப்படி வளர முடிந்தது? சிந்திக்க வேண்டிய கேள்விகள் இவை.
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஒரே விடை தான் இருக்க முடியும். இவர்கள் இதற்கு முன்பே அடிக்கடி நீக்கியும் சேர்த்தும் வந்துள்ளனர். மக்களும் இந்த நீக்குதல் சேர்த்தலுக்கு நன்கு பழக்கப்பட்டுப் போயிருந்தார்கள். இதனால் தான் இவ்வளவு வசனங்கள் நீக்கப்பட்டதையும் கிறித்தவர்கள் ஜீரணித்துக் கொண்டார்கள். கத்தோலிக்க திருச்சபையின் எதிர்ப்பு எடுபடாமல் போனதற்கு இதைத் தவிர எந்தக் காரணமும் இருக்க முடியாது.

1200-1400 ஆண்டுகள் வரை இருந்த 73 புத்தகங்களில் (பரிசுத்த ஆவியால் உந்தப்பட்ட 73புத்தகங்கள் என போப் டமஸ்கஸ் 1 ஆல் கிபி382 ல் அங்கீகரிக்கப்பட்ட புத்தகத்தை ) மார்டின் லூதர் கிங், அவர் சுயவிருப்பத்துடன் அவராக 7 புத்தகங்களை நீக்கிவிட்டாரே!!!இதெல்லாம் போக, பல வசனங்களை சேர்க்கவும், நீக்கவும் முடிந்திருக்காதா என்ன..??
ஆக மனித கரங்கள் பைபிளில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதை இதிலிருந்தே தெரிந்துக் கொள்ளலாம் ..

3. எண்ணற்ற முறண்பாடுகள் நிறைந்த புத்தகம்:

ஓர் இளைஞர் பைபிளை, அதில் தவறே இருக்காது என்று எண்ணி வாங்கினார். ஒருநாள் லுக் என்ற பழைய மாத இதழைப் பார்த்துக் கொண்டிருக்கையில், பைபிளைப் பற்றிய உண்மை என்ற தலைப்பில் ஒரு கட்டுரை அவரது பார்வையில் பட்டது. புராட்டஸ்டண்ட், கத்தோலிக்கர்கள் படிக்கின்ற புதிய ஏற்பாட்டின் இரண்டு மொழியாக்கங்களில் குறைந்தது 20,000 பிழைகள் உள்ளன என்று 1720ஆம் ஆண்டு வாக்கில் ஓர் ஆங்கில அதிகாரக் குழுமம் மதிப்பிட்டுள்ளது. புது மாணவர்கள் சுமார் 50,000 பிழைகள் உள்ளன என்று தெரிவித்துள்ளனர் என்று அந்தக் கட்டுரையில் கூறப்பட்டிருந்தது. அந்த இளைஞர் அதிர்ச்சியடைந்தார். பைபிளின் மீது அவர் கொண்டிருந்த நம்பகத்தன்மை ஆட்டம் கண்டது. பல்லாயிரக்கணக்கான மிக மோசமான குறைபாடுகள், மூலத்திற்கு ஒத்திராத பிழையான ஆக்கங்கள் பைபிளில் இடம் பெற்றிருக்கும் போது அது எப்படி நம்பகமான இறை வேதமாக இருக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்புகின்றார். இந்தச் செய்தி “1957 ஆம் ஆண்டு செப்டம்பர் 8″ ஆம் தேதி “AWAKE” என்ற பத்திரிகை யில் வெளியாகியிருந்தது.
குறிப்பு:  "Awake" எனும் பத்தரிக்கை கிறிஸ்தவ அமைப்பை சேர்ந்ததே என்பது குறிப்பிடத்தக்கது. அந்த குறிப்பிட்ட செய்தியை படிக்க..
        http://jwleaks.org/?attachment_id=2318

பொதுவாக சொல்லப்பட்ட தகவல்களிலும் சரி,வரலாற்று /அறிவியல் ரீதியாகவும் சரி, கடவுள் கொள்கையிலும் சரி, சிலுவை பலி போன்ற பல சம்பவங்களிலும் சரி எல்லாவற்றிலும் முறண்பாடுகள் நிறைந்திருக்கிறது..
இன்னும் பைபிளின் முறண்பாடுகளை ,"அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன்." (யோவான் 21:24) ;-) ஆக சில முறண்பாடுகளை கீழ்காணும் லிங்கில் பார்க்கவும்.. http://biblesolvathuenna.blogspot.com/?m=0
http://answeringchristian.blogspot.com/2015/11/blog-post_18.html?m=0 

மேலே கொடுக்கப்பட்ட லிங்கில் மட்டும் முறண்பாடுகள் கொடுக்கப்படவில்லை! !! மொத்த தளத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது.

4. கடவுள் கொள்கையிலும் முறண்பாடு:

கிறிஸ்தவர்களின் நம்பிக்கையான "திரித்துவ கொள்கையோ" திரித்து அமைக்கப்பட்ட ஒரு கொள்கை.. பழைய ஏற்பாட்டில் பல இடத்தில் ஒரிறை இறை கொள்கை சொல்லும் வசனம் நிறைய இருக்கின்றன. ஆனால் அதற்கு நேர்முறணாக புதிய ஏற்பாட்டில் மட்டும் இயேசு கடவுளாக சித்தரிக்கப்பட்டும், திரித்துவ கொள்கை புகுத்தப்பட்டது.

உபாகமம் 6:4 ல் மோஸே(Moses pbuh) அவர்கள் சொன்ன அதே வாக்கியங்களை (நம்  கடவுள் ஒருவர் தான் என்பதை) அப்படியே இயேசு (Jesus Pbuh) அவர்களும் அப்படியே (மார்க் 12:28,29) ல் சொல்லியிருக்க ,அவரையே கடவுள் ஆக்குவது எவ்வளவு பெரிய முறண்பாடு
இன்னும் கிறிஸ்தவத்தின் அடிப்படை/முக்கியமானது  என சொல்லப்படும்  சம்பவங்களும் சரி, எல்லாவற்றிலும் முறண்பாடே!!!

5. போலியான போதனைகளும்; சம்பவங்களும்:

கிறிஸ்தவர்கள், தங்களது ஊழியத்திலும் சரி, சில போதனைகளையும் சம்பவங்களையும் எடுத்து வைத்து (பைபிளின்)இயேசு அவர்களை பற்றியும் பைபிளை பற்றியும் மார்தட்டிக் கொள்வதை பார்க்க முடிகிறது .. அதில் மிக முக்கியமானது ..

யோவான் 8:3-8 ""3  அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி:
4  போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள்.  யோவான்
5  இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள்.
6  அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள். இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார்.
7  அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி..""


பார்த்தீர்களா!! எப்படி இயேசு மன்னித்து விட்டார் , அன்பையே போதிப்பவர், அப்படி! ! இப்படி என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பதை கண்டிப்பாக பார்த்திருப்பீர்கள்.. 
முதலில் இது போன்ற தீர்ப்புகள், சமூகத்தில் சீர்கேடுகளை தான் ஏற்படுத்தும் என்பதை நடுநிலையாளர்கள் அறிவார்கள். இவ்வசனம், யோவான் 8:3-8 ல் பதிவாகியுள்ளது, ஆனால் யோவான் 7:53 - 8:11  வரையிலான வசனங்கள் பழமையான பிரதிகளில் (Ancient Manuscripts) காணக்கிடைக்கவில்லை.. இடையில் சொருகப்பட்ட வசனம் ஆகும்.. வேண்டுமென்றே இட்டுக்கட்டப்பட்டதாகும்.. பல பைபிள் பதிப்புகளில் இருந்து எடுத்தும் விட்டார்கள்.  (பார்க்க: மிக பிரபல்யமான தளத்திலிருந்து , https://www.biblegateway.com/passage/?search=John%207:53-8:11 ) 

இன்னும் (பைபிள் படி)இயேசு கிறிஸ்து அவர்கள்,  சிலுவையில் அறையப்பட்டு, ஆடைகள் களையப்படும்பொழுதும், "பிதாவே!! இவர்கள் இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள், பிதாவே!! இவர்களை மன்னியுங்கள் "" என சொன்னார் என்ற (லூக்கா 23:34) வசனத்தையும் சுட்டிக்காட்டி,  பாத்தீர்களா?? தாக்கியவர்கள் திருப்பி அடிக்காமல், அவர்களிடத்திலும் அன்பு காட்டியிருக்கிறார், அவர்களின் செயலுக்கு அவரே பிதாவிடத்தில் மன்னிக்க வேண்டியுள்ளார் என்றும் சொல்லியிருப்பார்கள், ...
ஆனால் இந்த வசனமும் பல முந்தைய பிரதிகளில் இல்லை...

இன்னும் முஸ்லிம் கிறிஸ்தவ விவாதங்களில், விஷம் குடிப்பது சம்பந்தமான (மாற்கு 16:17,18)வசனம் சவாலாக முன்வைக்கப்படும் .. அந்த கேள்விக்கு பதிலளிப்பதற்காக சமாளிக்கும் முயற்சியில் ஈடுபடும் கிறிஸ்தவர்கள், அந்த குறிப்பிட்ட அதிகாரத்தில் மட்டும் 12 வசனங்களும் (மாற்கு 16:9-20) நீக்கப்பட்டுவிட்டதை சொல்ல மறுப்பதேன்...??
முந்தைய பிரதியில் இல்லை,அதனால் நீக்கப்பட்டு விட்டது என்று சொன்னால், "அப்படியென்றால் முன்பு சேர்க்கப்பட்டு விட்டது,  இடைசெறுகல் நடந்துள்ளது தானே என்ற கேள்வியில் இருந்து தப்பிப்பதற்காக தானோ என்னவோ ...?? https://www.biblegateway.com/passage/?search=Mark+16:9-20 இந்த வசனங்களில், இயேசு கிறிஸ்து அவர்களின் உயர்தெழுதல் சம்பவமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ..

இது போன்ற பல வசனங்களுக்கும் (மத்தேயு 17:21; 18:11; 23:14; மார்க் 7:16; 9:44; 9:46; 11:26; 15:28; 17:36; 23:17; யோவான் 5:4; அப்போஸ்தலர் நடபடிகள் 8:37; 15:34; 24:7; 28:29; ரோமர் 16:24;  1 யோவான் 5:7.,etc...)இது தான் நிலைமை. இன்னும் வருக்காலங்களில் எத்துணை வசனம் அவுட் ஆகும் என்பது கேள்விக்குறி தான்... ஆக, முந்தைய பிரதிகளில் இல்லை என்ற காரணத்தால் நீக்கப்படுகிறதே!! இதை இன்னும் பிரச்சாரம் செய்வது ஏன்???  முந்தைய பிரதிகளில் இல்லையென்றால் பைபிளில் எப்படி வந்தது...?? இன்னுமா நீங்கள்,பைபிள்  கறைபடியவில்லை என நம்புகிறீர்கள்...?? 

6. விடை தெரியாத வினாக்கள்:

பைபிளின் முதல் புத்தகத்திலிருந்து கடைசி புத்தகம் வரை, அதை எழுதியவர் யார்? எழுதியதாக சொல்லப்படும் அந்த நபர் தான் உண்மையிலேயே எழுதினாரா..?? போன்ற கேள்விகளுக்கோ விடை இல்லை. "கிறிஸ்தவ நம்பிக்கையோ, பரிசுத்த ஆவி உந்தப்பட்டு எழுதப்பட்டது தான் இறைவேதம்." மோசே எனும் தீர்க்கதரிசியால் எழுதப்பட்டது என்று கிறிஸ்தவ உலகம் நம்புகின்ற உபாகமகத்தின் 34:1 முதல் 34:12 வரையிலான வசனங்களில் மோஸேயின் இறப்பு செய்தி பதிவாகியுள்ளது. மோசே எழுதிய இந்த ஆகமத்தில் மோசேயின் மரணம் பற்றிய செய்தியும் அவரை அடக்கம் செய்த விபரமும் மரணிக்கும் போது மோசேயின் வயது எவ்வளவு என்ற விபரமும் மோசேயின் மரணத்திற்குப் பின் இஸ்ரவேலர்கள் முப்பது நாட்கள் துக்கங் கொண்டாடிய செய்தியும் மோசேவுக்குப் பிறகு யோசுவா என்பவர்அடுத்த தலைவராக ஆகிய விபரமும் எப்படி இடம் பெற முடியும்? இதிலிருந்து இந்த ஆகமங்களுக்கும், மோசேவுக்கும் யாதொரு சம்பந்தமம் இல்லை என்பதை அறிவுடையோர்உணரலாம். மிக மிகப் பிற்காலத்தில் இது யாராலோ எழுதப்பட்டு மோசேயின் பெயரால் அரங்கேற்றப்பட்டிருக்க வேண்டும் என்பது இதிலிருந்து உறுதியாகின்றது.

இப்போது இதுகுறித்து NIV (New International Version) பைபிளின் விரிவுரை சொல்வதை பார்ப்போம்.  "The book itself testifies that, for the most part, Moses wrote it (1:5; 31:9,22,24), and the report of Moses' death (ch.34) was almost certainly written by someone else. மோஸே மரணம் குறித்த தகவல்களை வேறு யாராவது எழுதியிருக்கலாம் (From the NIV Bible Commentary [1], page 240)"

இந்த மோஸேயின் புத்தகத்திற்கு பிறகு வரக்கூடிய யோசுவா புத்தகத்தின் இறுதியிலும் (யோசுவா 24:29) யோசுவா அவர்களது மரணத்தை குறி்த்து உள்ளது. இப்போது இதுகுறித்து NIV (New International Version) பைபிளின் விரிவுரை சொல்வதை பார்ப்போம். Some think that Samuel may have had a hand in shaping or compiling the materials of the book, but in fact we are unsure who the final author or editor was. சாமுவேல் இதை தொகுத்திருக்கலாம் என சிலர் நினைக்கிறார்கள், ஆனால், இதனுடைய ஆசிரியரோ, திருத்தியவரோ யாரென தெரியவில்லை (From the NIV Bible Commentary [1], page 286)" 

இது தான் எல்லா பைபிளின் புத்தகங்களின் நிலையாகும். பல புத்தகங்களை எழுதியவரே யாரென தெரியவில்லை ... ஆக யாரென தெரியவில்லை! எழுதியவர் பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டவரா எனவும் தெரியல்லை. புதிய ஏற்பாட்டிலும் இதே கதை தான்! ! இந்த மத்தேயு, மார்க், லூக்கா,யோவான் இவர்கள் எல்லாம் யார்? என கேட்டால், இயேசுவின் சீடர்கள் என்று பொதுவாக பதில் வரும். ஆனால் அது உண்மையல்ல! ! அவ்வாறு நம்பவைக்கப்பட்டுள்ளார்கள்.. அவ்வளவுதான் ..

மத்தேயு சுவிசேஷம்:

லெவி என்பவரது பெயர் தான் மத்தேயு (சுங்க அதிகாரி/Tax collector), லெவி என்பது  இயேசுவின் சீடர், ஆக இவர் எழுதியது தான் மத்தேயு என்று பொய் சொல்லி ஏமாற்ற முயற்சிக்கின்றனர். ஆனால் இந்த சுவிசேஷத்தை அவரே எழுத வில்லை, யார் எழுதியது என்பதே தெரியாது. இது தான் உண்மை..
மத்தேயு 9:9 ல் , மத்தேயு என்ற நபரை இயேசு அழைத்தார், என் பின்னால் வா என சொன்னார் ,அவர் சென்றார், என்றெல்லாம் தன்னை பற்றி எழுதும் போது, யாரோ ஒரு நபரை பற்றி பேசுவது போல் பேசுவாரா..??
The unknown author, whom we shall continue to call Matthew for the sake of convenience, அறியப்படாத ஆசிரியர், நம் வசதிக்கு மத்தேயு என்றே அழைப்போம்(The New American Bible, ISBN: 978-0-529-06484-4, Page 1008)" கூடுதல் தகவலுக்கு: - https://m.facebook.com/story.php?story_fbid=214303618935462&id=1000106747 56410#!/photo.php?fbid=214303598935464&id=100 010674756410&set=a.109273356105156.1073741828 .100010674756410&source=57&refid=52&__tn__=E

மார்க் சுவிசேஷம்: -

முதன் முதலில் சுவிஷேசம் எழுதிய மாற்கு  , இயேசுவின் பன்னிரண்டு சீடர்களில் (மாற்கு 3:14-19; மத்தேயு 10:1-4) இடம் பெறவில்லை. மாறாக இயேசுவின் சீடராகிய பேதுரு எனும் பீட்டருக்கு இவர் சீடராக இருந்தார். இவர் எழுதிய அனைத்தும் இவர் கண்ணால் பார்த்து எழுதியதல்ல. பீட்டரிடம் கேட்டவைகளை எழுதியதாகவும் அவர் குறிப்பிடவில்லை. இயேசுவைப் பார்த்திராத இவர், செவி வழியாகப் பேசிக் கொள்ளப்பட்ட செய்திகளை அடிப்படையாக வைத்தே தனது சுவிஷேசத்தை எழுதியுள்ளார் என்பது உறுதியாகிறது.
Although the book is anonymous, apart from the ancient heading "According to Mark" in manuscripts, it has traditionally been assigned to John Mark, in whose  mother's house (at Jerusalem) Christians assembled.  (The New American Bible, ISBN: 978-0-529-06484-4, Page 1064)" "Although there is no direct internal evidence of authorship, it was the unanimous testimony of the early church that this Gospel was written by John Mark. (From the NIV Bible Commentary [1], page 1488)"
ஆக இதை எழுதியது மார்க் தானா என்பதும் சந்தேகம், அவர் சீடர் இல்லை என்பதும் தெளிவு.

லூக்கா சுவிசேஷம்::

மூன்றாவது சுவிஷேசக்காரராகிய லூக்கா என்பவரும் பன்னிரண்டு சீடர்களில் ஒருவர் அல்ல. மற்றவர்கள் கூறக் கேட்டதையே தான் எழுதியதாக இவர் வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார்.
மகா கனம்பொருந்திய தேயோப்பிலுவே நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை  ஆரம்ப முதல் கண்ணாரக் கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக் குறித்துச் சரித்திரம் எழுத அநேகம் பேர் ஏற்பட்டபடியினால் ஆதி முதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறிய வேண்டுமென்று அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று.
லூக்கா 1:1-4


மற்றவர்கள் கூறக் கேட்டதையே தான் எழுதுவதாக எடுத்த எடுப்பிலேயே லூக்கா ஒப்புக் கொள்கிறார். ஆக பரிசுத்த ஆவியால் உந்தபடவில்லை .. இவர் மிகவும் பிந்தியவராவார். கிறித்தவத்தின் சிலுவைக் கோட்பாட்டை உருவாக்கிய பவுலின் சீடர்களில் லூக்காவும் ஒருவர்.

யோவான் சுவிசேஷம் :

இயேசுவின் சீடர்களில் யோவான் என்ற பெயரில் ஒருவர் இருப்பதால் அவர் எழுதியதே யோவான் சுவிஷேசம் என்று பாமர மக்கள் நம்புகின்றனர். ஆனால் ஆய்வாளர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
இயெசுவின் நேரடிச் சீடரான யோவான் இதை எழுதி இருந்தால் இது தான் முதலில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இது எழுதப்பட்ட காலம் கிபி 90 முதல் 120 க்குள் இருக்க வேண்டும் என்பது முன்னோடி ஆய்வாளரின் கருத்தாகும்.
இயேசுவின் சீடராக இருந்த யோவானுக்கு இயேசு சிலுவையில் அறையப்படும் போது சுமார் 25 வயது என்று வைத்துக் கொண்டால் கூட கிபி 90ல் 115 வயது ஆகி இருக்கும். 115 வயது வரை மனிதனின் சராசரி வயது இல்லை. வேறு சிலர் கூறுவது போல் கிபி 65 முதல் 85 க்குள் எழுதியதாக வைத்துக் கொண்டாலும் அப்போதும் யோவான் தொண்ணூறு வயது முதல் 119 வயதில் இதை எழுதியதாக ஆகும். இதுவும் மனிதர்களின் சராசரி வயதுக்கு அதிகமாகும். எனவே இதை யோவான் என்ற சீடர் எழுதி இருக்க முடியாது என்பதில் சந்தேகம் இல்லை.இதை யோவான் என்ற பெயர் கொண்ட வேரொருவர் தான் எழுதி இருக்கிறார்.
Many scholars of the past two centuries have denied that John wrote this book,partly because of their belief that the author fabricated many details such as the miracles and the discourses of Jesus. இதை யோவான் தான் எழுதினார் என்ற கருத்தை கடந்த இரண்டு நூற்றாண்டின் கிறிஸ்தவ அறிஞர்கள் ஏற்கவில்லை. அதோடு பல தகவல்கள்  ஜோடிக்கப்பட்டுள்ளது. (The Holman Illustrated Study Bible, ISBN: 978-1-58640-275-4, Gospel of John, Page1540)"

ஆக நான்கு சுவிசேஷமும் அவுட்.. மிச்சம் இருப்பது , சில நிரூபங்கள்..

எபிரேயு புத்தகம்::

இதை யார் எழுதியது என்றே தெரியவில்லை.  "The writer of this letter does not identify himself (From the NIV Bible Commentary [1], page 1856)"

புதிய ஏற்பாட்டில் 70% உள்ளவை பவுலின் கடிதங்கள்.

முதலில் பவுல், பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டவரா...??

1 கொரிந்தியர் 7 : 39 -  என்னிடத்திலும் தேவனுடைய (பரிசுத்த) ஆவி உண்டென்று எண்ணுகிறேன்.(நினைக்கிறேன்)http://goo.gl/NahGCP ஆக இவரே அதில் உறுதியாக இல்லை. இருக்குமென நினைக்கிறாராம்.

இன்னும் "பரிசுத்த ஆவி சுயமாய் பேசாமல், தான் கேள்விபட்ட யாவற்றையும் சொல்வார்"- (யோவான் 16:12)
இவ்வாறிருக்க, பவுல் பல முறை சுயமாய் கருத்துகளை சொல்லியுள்ளார் (1கொரிந்தியர் 7:12,25,40)


ஆக பைபிளின் படி பவுலும்  பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டவருமல்ல!!

فَوَيْلٌ لِّلَّذِينَ يَكْتُبُونَ الْكِتَابَ بِأَيْدِيهِمْ ثُمَّ يَقُولُونَ هَٰذَا مِنْ عِندِ اللَّهِ لِيَشْتَرُوا بِهِ ثَمَنًا قَلِيلًا ۖ فَوَيْلٌ لَّهُم مِّمَّا كَتَبَتْ أَيْدِيهِمْ وَوَيْلٌ لَّهُم مِّمَّا يَكْسِبُون
அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்! (அல்குர்ஆன் : 2:79)

நபிகளாரின் அன்பு மடல்

நபி (ஸல்) அவர்களால் எழுதப்பட்டதாக நம்பப்படும் இந்த கடிதத்தின் சுருக்கம்:
முஹம்மது நபி(ஸல்) தன்னுடைய ஆளுமையின் கீழ் உள்ள சிறுபான்மையினரை எப்படி நடத்தினார்கள் என்பதற்கும் இது  ஒரு சான்று.

பல ஆதாரப்பூர்வமான வரலாற்று பதிவுகள், St.Catherine (Egypt) நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதில் சில பதிவுகள், இஸ்லாமிய நீதிபதிகளால் வரலாற்று நம்பகத்தன்மை வாய்ந்ததாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. துருக்கிய இஸ்லாமிய படைகள்,எகிப்தை வெற்றிக்கொண்டபோது,அங்கே உள்ள மடத்தில் இருந்து எடுக்கப்பட்டு, இஸ்தான்புல் அரண்மனையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது. இதனுடைய மூல பிரதி, இன்றும் இஸ்தான்புல்  அருங்காட்சியத்தில் உள்ளது.  

கடிதத்தின் சுருக்கம்:

அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதிடமிருந்து, அருகில்,மேலும் தொலைவில் உள்ள கிருத்துவர்களுக்கு இந்த உடன்படிக்கையின் மூலம் சொல்வது என்னவென்றால்,நாங்கள் உங்களோடு இருக்கின்றோம். நிச்சயமாக, நான்,இறை அடியார்கள், என் உதவியாளர்கள் மற்றும் என்னை பின்பற்றுபவர்கள், கிருத்துவர்களை பாதுகாப்போம், ஏனென்றால் அவர்கள் என் குடிமக்கள்; 

மேலும் அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர்கள் விரும்பாததை விட்டும் நான் தடுத்துக்கொள்வேன் . அவர்களின் மீது எந்த கட்டாயமும் இல்லை. அவர்களின் நீதிபதிகள், பொறுப்பிலிருந்து நீக்கப்படமாட்டார்கள் . துறவிகள் மடத்திலிருந்து நீக்கப்படமாட்டார்கள்.கிறிஸ்துவர்களின் ஆலயங்களை இடிப்பதற்கோ,சேதப்படுத்துவதற்கோ  யாருக்கும் அனுமதி இல்லை. ஆலயங்களில் இருந்து எதையும் முஸ்லிம்கள் எடுத்துச் செல்லக் கூடாது, யாராவது மீறி செய்தால், அல்லாஹ்வின் கட்டளைக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்தவராவார்.

உண்மையிலேயே, கிருத்துவர்கள் என்னுடைய நண்பர்கள், மேலும் அவர்கள்  வெறுப்பதிலிருந்து விலகிக்கொள்ள என்னுடைய அனுமதிப் பட்டயத்தை பெற்றுள்ளனர். அவர்களை யாரும் நாட்டைத் துறந்து  செல்லுமாறு கட்டாயப்படுத்தக்கூடாது. தங்களை பாதுகாத்துக்கொள்ள, முஸ்லிம்கள் தான் போரிட வேண்டுமே தவிர,கிறிஸ்துவர்களை தங்களோடு சேர்ந்து  போரிடுமாறு கட்டாயப்படுத்தக்கூடாது. கிறிஸ்துவப் பெண்ணின் சம்மதம் இல்லாமல் ஒரு முஸ்லிம் அவளை திருமணம் செய்யக்கூடாது, அவள் தன்னுடைய ஆலயத்திற்கு சென்று வழிபடுவதை தடுக்கக்கூடாது. அவர்களுடைய ஆலயங்கள் கண்ணியப்ப்படுத்தப்படவேண்டும். அவைகள் பழுது பார்க்கப்படுவதை விட்டும் தடுக்கக்கூடாது. இறுதி நாள் வரை உள்ள முஸ்லிம்கள் இந்த உடன்படிக்கையை மீறக்கூடாது. 

முழு விபரத்தையும் இந்த லிங்கில் சென்று பார்க்கலாம். http://newsrescue.com/letter-to-all-christians-from-prophet-muhammad-sa/#axzz3eOJkMtJF 

திரித்துவத்தை மறுப்பது ஏன்?

நாம் சாதாரண கிறிஸ்தவர் ஒருவரைப் பார்த்து கடவுள் எத்தனைப் பேர் என்றால், 'ஒருவர்' தான் என்று உடனே பதில் வரும். சில விபரமறிந்த கிறிஸ்தவர்களிடம் கேட்டால், 'கடவுள் ஒருவர் தான்! ஆனால் மூவரில் இருக்கிறார்' (Triune God) என்று கூறுவார்கள்.
கிறிஸ்தவர்கள் பின்பற்றுகின்ற 'திரித்துவம்' (Concept of Trinity) என்ற மூன்று கடவுள் கொள்கை இயேசு அவர்களால் கூறப்படாத கடவுள் கொள்கையாகும். இது பைபிளின் பல்வேறு வசனங்களுக்கு முற்றிலும் முரண்பாடுடையதாக இருக்கிறது. மேலும் ஒரே ஒரு கடவுள் என்று கூறிக்கொண்டே கடவுள் மூன்று பேரில் இருக்கிறார் என்பது பல கிறிஸ்தவர்களுக்கு விசித்திரனமானதாகவும் அறிவுக்கு எட்டாததாகவும், புரியாத புதிராகவும் இருக்கிறது மேலும் பல கிறிஸ்தவர்கள் தங்களின் கொள்கையையே கைவிடுவதற்கும் காரணமாக இருக்கிறது.
குழப்பங்களின் மொத்த வடிவம் தான் இந்த 'திரித்துவக் கடவுள் கொள்கை' என்றால் அது மிகையாகாது. ஏனெனில் எவ்வித லாஜிக்கும் இல்லாத இந்த திரித்துவக் கோட்பாடு பல கிறிஸ்தவர்களின் மனதிலே சிந்தனைகளாக, கேள்விகளாக உழன்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால் திரித்துவம் குறித்து கேள்விகள் கேட்காதே! இத்தகைய கேள்விகள் சாத்தானின் புறத்திலிருந்து வருகிறது. கேள்வி கேட்டால் நீ பெரும்பாவம் செய்த பாவியாகி விடுவாய்! என்ற பயமுறுத்தலின் காரணமாக பலர் தங்களின் மனதிற்குள் இயற்கையாக எழக்கூடிய அறிவுப்பூர்வமான இத்தகைய சிந்தனைக் கேள்விகளை மனதிற்குள்ளேயே புதைத்துக் கொண்டு உண்மையை அறிந்து கொள்ளாமல் இருந்துவிடுகின்றனர்.

கடவுள் என்பவர்,
ஆரம்பம் மற்றும் முடிவு அற்றவராக இருக்க வேண்டும்.
- எவரிடத்திலும் எத்தகைய தேவையுமற்றவராகவும், ஆனால் அவரால் சிருஷ்டிக்கப்பட்டவர்ககோ அவரது தேவையுடைவர்களாக இருக்கின்றனர்.
- கடவுளுக்கு ஓய்வோ அல்லது உறக்கமோ தேவையில்லை, ஏனென்றால் ஒரு கணநேரம் கூட தவறாது இந்த பிரபஞ்சத்தையும் அதில் உள்ளவர்களையும் பாதுகாத்து வருபவன்.
- மனிதனுக்கு இருக்கின்ற பலஹீனங்களான உணவு உண்ணுதல், இயற்கைத் தேவைகள் (மலம், ஜலம் கழித்தல்), உறக்கம், பிறப்பு, மரணம், நோய், பிறரை சார்ந்திருத்தல் போன்ற எத்தகைய பலஹீனங்களும் கடவுளுக்கு இல்லை,
- அவர் தனித்தவர், அவருடைய ஆட்சி, அதிகாரத்திற்கு யாருடைய உதவியும் தேவையுமில்லை,
- அவர் விரும்பியதை செய்கிறார், அவரைக் கேள்வி கேட்போர் யாருமில்லை,
- கடவுளின் கட்டுப்பாட்டை விட்டும் ஒரு நொடிப்பொழுதும் இந்த பிரபஞ்சத்தின் ஆட்சி அதிகாரம் அகன்று விடுவதில்லை.
- மனிதர்களின் பாவங்களை மன்னிப்பதற்கு கடவுளை வேறு எதுவும் நிர்பந்திப்பந்திப்பதில்லை. அவர் நாடியவர்களின் பாவங்களை மன்னிக்கிறார், நாடியவர்களை தண்டிக்கிறார்
.

இத்தகைய விளக்கங்கள் யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல! மாறாக சகோதர, சகோதரிகள் சிந்தித்து தெளிவு பெற வேண்டுமென்பதே எமது அவா!

எனதருமை சகோதர சகோதரிகளே! கடவுளின் இத்தகைய குணாதிசயங்களை மனதில் நிருத்திக் கொண்டு பின்வரும் வினாக்களுக்கு விடைகாண முன்வாருங்கள்! சிந்தித்து தெளிவு பெறுங்கள்! தவறுகள் இருந்து எங்களுக்கு ஆதாரத்துடன் சுட்டிக் காட்டினால் நன்றியறிதலுடன் திருத்திக் கொள்வோம்.

திரித்துவம் (Trinity) குறித்த சில சிந்தனைக் கேள்விகள்:-



1.பெரும்பாலான கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரையில் தேவன், முழுமையான மனிதபிறவியெடுத்து முழுமனிதனாக (இயேசுவாக)வும் இருந்தார், அதே நேரத்தில் முழு முதற் தேவனாகவும் இருந்தார் என்பது நம்பிக்கையாகும். மனிதன் என்பவன் முடிவு உள்ளவன். தேவன் என்பவர் முடிவு அற்றவர். இந்நிலையில் எப்படி முடிவு உள்ளவரும் முடிவு அற்றவரும் ஒன்றாக முடியும்?

2. தேவன் என்பவர் நிரந்தரமற்றவைகள் மற்றும் எத்தகைய தேவைகளிலிருந்தும் விலகியிருப்பவராகவும் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாதவராகவும் இருக்க வேண்டும். முழுமனிதன் என்பது தேவனின் தன்மை இல்லாதவன் ஆவான். இந்நிலையில் இப்பூவுலகில் வாழும் போது தன்னுடைய தாய் மற்றும் பிறருடையதேவையுடையவராக வாழ்ந்த முழுமனிதரான இயேசு கிறிஸ்து எப்படி தேவனின் தன்மையுடையவரா ஆக முடியும்?

3. விபரமுள்ள கிறிஸ்தவர்கள் சிலர் 'திரித்துவத்திற்கு' உவமைகள் கூற முற்படுவர். சிலர் 'முட்டையை உதாரணம் கூறுவர், முட்டையில் ஓடு, வெள்ளை மற்றும் மஞ்சள் கரு என்ற மூன்றும் சேர்ந்து ஒரே முட்டைக்குள் இருப்பது போன்று ஒரு கடவுள் மூவரில் இருக்கிறார் என்பர். ஒரே முட்டையில் சில நேரங்களில் இரண்டு மஞ்சள் கரு கூட இருக்குமே அதனால் சில நேரங்களில் தேவன் நால்வரில் கூட இருப்பாரோ?

4. இன்னும் சிலர், ஒரே ஆப்பிள் பழத்தில் அதன் தோல், கனி மற்றும் விதை என்று மூன்றும் ஒன்றில் இருப்பது போல் பிதா, தேவகுமாரன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூவரும் ஒருவராக இருக்கிறார்கள் என்பர். ஆப்பிள் பழத்தின் உள்ளே ஒன்றுக்கு மேற்பட்ட பல விதைகள் இருக்கின்றனவே அது போல் தேவன் பலரில் ஏன் இருக்கக் கூடாது?

5. இன்னும் சிலர் ஒரு முக்கோனத்திற்கு மூன்று மூலைகள் இருப்பது போல் ஒரு கடவுள் மூன்று பேரில் இருக்கிறார் என்று கூறுவர். சதுரம் மற்றும் செவ்வகத்திற்கு நான்கு மூலைகள் இருக்கின்றனவே! அது போல் ஏன் ஒரு கடவுள் நான்கு பேரில் இருக்கக் கூடாது?

6. இன்னும் சிலர் சற்று அறிவுப்பூர்வமாகவிளக்கமளிப்பதாகக் நினைத்துக்கொண்டு, ஒருவர் சிலருக்கு தந்தையாகவும், இன்னும் சிலருக்கு சகோதரராகவும், அதே நேரத்தில் கல்லூரியில் முதல்வராகவும் இருப்பதில்லையா? அதே போல் ஒரே ஒரு கடவுள் மூவராக இருந்து செயல்படுகிறார் என்பர். இந்த மூவரில் தந்தையாகவும், சகோதரராகவும் மற்றும் கல்லூரியில் முதல்வராகவும் இருக்கக் கூடிய ஒருவர் மரணித்தால் தந்தை, சகோதரர் மற்றும் முதல்வர் ஆகிய மூவரும் தான் மரணமடைந்ததாகும்!. அது போல் இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டபோது பிதா மற்றும் பரிசுத்த ஆவியும் கொல்லப்பட்டனரா?

7. இன்னும் சிலர், திரித்துவத்திற்கு அறிவியல் மூலமாக விளக்கம்கொடுப்பதாக நினைத்துக் கொண்டு, நீரானது திட, திரவ மற்றும் வாயு நிலையில் இருப்பதைப் போல் ஒரு கடவுள் மூவரில் இருக்கிறார் என்பர்.

நீரானது திட, திரவ மற்றும் வாயு நிலையில் இருந்தாலும் H2O என்ற அதன் மூலப்பொருள் (components) என்றுமே மாறாமல் எப்போதும் H2O ஆகவே இருக்கிறது! ஆனால் பிதா, தேவகுமாரன் மற்றும் பரிசுத்த ஆவி மூவரும் வெவ்வேறு மூலப்பொருட்களால் ஆனவரும் வெவ்வேறு தன்னை உடையவர்களும் ஆயிற்றே! முழு மனிதராகிய இயேசு கிறிஸ்து சதை மற்றும் எலும்புகளால் ஆனவர். ஆனால் மற்றவர்கள் ஆவியானவர்களாயிற்றே (made of sprit)? ஆவியானவர்களுக்கு கை, கால்கள் இருக்காதே! (பார்க்கவும் லூக்கா 24:36-40)

லூக்கா, 24 வது அதிகாரம், வசனங்கள் 36-40: இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். அப்பொழுது பொரித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்(தார்).

தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிற்கு உண்ண உணவும், உடுக்க உடையும் தேவைப்பட்டது. இயற்கை உபாதைகளை வெளியேற்ற வேண்டிய அவசியமேற்பட்டது. அத்தகைய அவசியங்கள் ஆவியானவர்களுக்கு தேவையில்லையே?

8. (தேவ) குமாரன் என்பது தெய்வத் தன்மையை விட அந்தஸ்தில் குறைவானது. தேவன் என்பவர் யாருடைய மகனாக இருக்கவும், இருந்திருக்கவும் முடியாது. இந்நிலையில் இயேசு கிறிஸ்து அவர்கள் எப்படி ஒரே நேரத்தில் "மகன்" தன்மை உடையவராகவும் "தெய்வீகத்" தன்மை உடையவராகவும் இருக்கமுடியும் ?

9. "என்னை கண்டவன் பிதாவைக் கண்டான்" (யோவான் 14:9) என்ற பைபிளின் வசனத்தைக் கிறிஸ்தவர்கள் குறிப்பிட்டு இந்த வசனத்தின் மூலம், “தாம் கடவுள்” என்று இயேசு கிறிஸ்து அவர்கள் கூறியதாக கூறுவார்கள். ஆனால் பைபிளின் அதே யோவான் (5:37)என்ற வசனத்தின் மூலம் இயேசு கிறிஸ்து,"என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை"என்று கூறவில்லையா?

10. இயேசு கிறிஸ்து "தேவகுமாரர்" என்றும் "மேசியா" என்றும் "இரட்சிப்பவர்அல்லது இரட்சகன்" (Saviour) என்றும் அழைக்கப்படுவதால் அவரை கிறிஸ்தவர்கள் கடவுள் என்கின்றனர். அமைதியை ஏற்படுத்துபவர்களை "தேவகுமாரர்கள்"என்று இயேசு கிறிஸ்து அவர்கள் குறிப்பிட்டதாக பைபிளில் காணமுடிகிறது. தேவனின் விருப்பங்களையும் திட்டங்களையும் பின்பற்றுகின்ற ஒருவனை யூதர்களின் வழக்குப்படி "தெய்வ மகன்"அல்லது "தேவகுமாரன்" என்று கூறப்படுவதுண்டு. பார்க்கவும் ஆதியாகமம் 6:2,4, யாத்திராகமம் 4:22, சங்கீதம் 2:7 மற்றும் ரோமர் 8:14.

தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள். (ஆதியாகமம் 6:2)

அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர்மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்ற போது, இவர்களும் பூர்வத்தில் பேர் பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள். (ஆதியாகமம் 6:4)

அப்பொழுது நீ பார்வோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்டபுத்திரன். (யாத்திராகமம் 4:22)

தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்; (சங்கீதம் 2:7)

மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள்தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். (ரோமர் 8:14)


ஹிப்ரு மொழியில் "மேசியா" என்பதற்கு தேவனின் அருள் பெற்றவர் என்று கூறுவதுண்டு. "இரட்சகன்" (savior) என்ற வார்த்தை இயேசுவிற்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பயன் படுத்தப்பட்டிருப்பதை பைபிளில் காண்கிறோம்.

"கர்த்தர் இஸ்ரவேலுக்கு ஒரு ரட்சகனைக் கொடுத்ததினால், அவர்கள் சீரியருடைய கையின்கீழிருந்து நீங்கலானார்கள்; ஆதலால் இஸ்ரவேல் புத்திரர் முன்போல் தங்கள் கூடாரங்களிலே குடியிருந்தார்கள்" (II இராஜாக்கள் 13:5)

ஆகையால் "தேவகுமாரர்" (Son of God) அல்லது "இரட்சிப்பவர் அல்லது இரட்சகன்" (savior) போன்ற பெயர்கள் இயேசு கிறிஸ்துவிற்கு மட்டுமின்றி இன்னும் பலருக்கு பைபிளில் பயன்படுத்தப்பட்டிருப்பதால் இயேசு கிறிஸ்து தான் "தேவன்" அல்லது அவர் மட்டும் தான் "தேவனின் உண்மையான குமாரர்" என்பதற்கு இந்த பெயர்கள் அல்லது வார்த்தைகளைத் தவிர்த்து வேறு என்ன ஆதாரம் இருக்கிறது?

11. நானும் பிதாவும் 'ஒன்றாயிருக்கிறோம்' (யோவான் 10:30) என்ற வசனத்தின் மூலம் இயேசு கிறிஸ்து அவர்கள் தாமும் தேவனும் ஒன்று என்று கூறியதாக கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். ஆனால் அதே யோவான் அதிகாரம் 17,வசனம் 21-23 ல் இயேசு கிறிஸ்து அவர்கள் தம்மையும் தம் சீடர்களையும் மற்றும் தேவனையும் பற்றி குறிப்பிடுகையில் ஐந்து இடங்களில் 'ஒன்றாயிருக்கிறது' பற்றிக் கூறுகிறார்கள். இந்நிலையில்"ஒன்றாயிருக்கிறது" என்று முன்னர் கூறிய வார்த்தைக்கு (யோவான் 10:30) ஒரு அர்த்ததையும் யோவான் 17:21-23ல் ஐந்து இடங்களில் கூறப்பட்டிருக்கின்ற"ஒன்றாயிருக்கிறது" என்ற வார்த்தைக்கு வேறு அர்தத்தையும் கொடுப்பது ஏன்?

12. தேவன் என்பவர் மூவரில் ஒருவராகவும், ஒருவரில் மூவராகவும் ஒரே நேரத்தில் (at a time) இருக்கிறாரா? அல்லது ஒரு நேரத்தில் ஒருவராக (one at a time) மட்டும் தான் இருக்கிறாரா?

13. தேவன் என்பவர் ஒருவராகவும் மற்றும் மூவராகவும் ஓரே நேரத்தில் (at a time) இருந்தால் அந்த மூவருமே முழுமையான தேவனாக (கடவுளாக) இருக்கமுடியாது. இந்நிலையில் இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்திருந்த நேரத்தில் அவர் முழுமையான கடவுளாக இருந்திருக்க முடியாது அல்லது பரலோகத்தில் பிதாவாக முழுமையான கடவுளாக இருந்திருக்க முடியாது . இந்நிலையில், இயேசு கிறிஸ்து அடிக்கடி குறிப்பிட்ட "அவருடைய தேவன் நம்முடைய தேவன்" மற்றும் "அவருடைய கடவுள் நம்முடைய கடவுள்" என்பது ஒன்றுக்கொன்று முரண்பாடுகளாகத் தோன்றவில்லையா?
மேலும் இது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டிருந்த சமயத்திலும் உயிர்த்தெழுந்த நேரத்திலும் முழுமையான தேவனாக இருக்கவில்லை என்று ஆகாதா?

14. தேவன் என்பவர் ஒரே நேரத்தில் (at a time) ஒருவராகவும், மூவராகவும் இருந்தால், இயேசு கிறிஸ்து பூமியில் தாயின் கருவறையில் இருந்த போதும், தனக்குத் தானே எதுவும் செய்து கொள்ள முடியாமல் தன் தாயின் உதவியை எதிர் பார்த்திருந்த பச்சிளம் குழந்தையாக இருந்த போதும், வளர்ந்து வாலிபராகி பூமியில் இருந்த போதும் பரலோகத்தில் தேவனாக இருந்து இந்த பிரபஞ்சத்தை ஆட்சி செய்து அதில் உள்ள கோடானு கோடி ஜீவராசிகளுக்கு உணவளித்துக் கொண்டிருந்தவர் யார்?

15. தேவன் ஒருவராகவும் மூவராகவும் ஒரே நேரத்தில் (at a time) இருந்தால், இயேசு கிறிஸ்து யூதர்களால் சிறை பிடிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்ற போதும், சிலுவையில் அறையப் பட்டு கொல்லப்பட்டதிலிருந்து உயிர்த்தெலுதல் வரையிலுமான இடைப்பட்ட அந்த மூன்று இரவு மூன்று பகலின் போதும் பரலோகத்தில் தேவனாக இருந்து உலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தவர் யார்? அந்த நேரத்தில் பிதாவாகிய தேவன் இந்த பிரபஞ்சத்தை இரட்சித்துக் கொண்டிருந்தார் என்று கூறினால் உங்களுடைய திரித்துவம் தோற்றுவிடுகிறது. ஏனென்றால் பிதா வேறு, தேவ குமாரன் வேறு என்றாகி நீங்கள் பல தெய்வ வணக்கமுடையவராகிவிடுகிறீர்கள். இல்லை அப்போதும் தனக்குத் தானே உதவி செய்து கொள்ள இயலாமல் தன் தாயாரின் உதவியையும், மற்றவர்களின் உதவியையும் எதிர்பார்த்த நிலையிலிருந்த இயேசு கிறிஸ்து தான் அல்லது மரணித்து கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட அந்த இயேசு கிறிஸ்து தான் இந்த பிரபஞ்சத்தையும் இரட்சித்துக்கொண்டிருந்தார் என்று நீங்கள் கூறுவீர்களா? மேலும் இந்த திரித்துவக் கொள்கை பரலோகத்தில் இருக்கும் பிதாவே தம்மை அனுப்பியதாக இயேசு கிறிஸ்து கூறுகின்ற பல வசனங்களுக்கு முரண்பாடாக இல்லையா?

16. கிறிஸ்தவர்களின் கூற்றுப்படி: - பிதாவும் (Father) கடவுள் தேவகுமாரனாகிய இயேசுவும் (Son) கடவுள் பரிசுத்த ஆவிவும் (Holy Ghost) கடவுள் ஆனால், பிதா என்பவர் தேவகுமாரன் இல்லை தேவகுமாரன் என்பவர் பரிசுத்த ஆவி இல்லை பரிசுத்த ஆவி என்பது பிதா இல்லை.
எளிமையான கணக்குப்படி, G என்பது தேவனையும் (God) F என்பது பிதாவையும் (Father) S என்பது தேவகுமாரனையும் (Son) H என்பது பரிசுத்த ஆவியையும் (Holy Ghost) குறிக்கிறது என வைத்துக் கொள்வோம். இதன் படி, F=G, S=G, மற்றும் H=G என்றிருந்தால், அதாவது பிதா என்பவர் தேவன்! (F=G) தேவகுமாரன் என்பவர் தேவன்! (S=G) பரிசுத்த ஆவி என்பது தேவன்! (H=G) என்றிருந்தால், F=S=H என்று ஆகிவிடும். ஆனால் மேற்கூறிய இரண்டாவது கருத்துப்படி F ≠ S ≠ H அதாவது
பிதா என்பவர் தேவகுமாரன் இல்லை! (F ≠ S) தேவகுமாரன் என்பவர் பரிசுத்த ஆவி இல்லை! (S ≠ H) பரிசுத்த ஆவி என்பது பிதா இல்லை! (H ≠ F) இது கிறிஸ்தவர்களின் திரித்துவத்தில் காணப்படுகின்ற மிகப் பெரிய முரண்பாடு அல்லவா?

17. இயேசு கிறிஸ்து கடவுளாக இருந்திருந்தால் தன்னை good master என்றழைத்த நபரிடம் தன்னை God என்று அழைக்க வேண்டாம் என்றும் பரலோகத்தில் உள்ள தன்னுடைய தேவனைத் தவிர வேறுயாரும் God இல்லை என்று ஏன் கூறவேண்டும்?

18. மாற்கு 2:29 ல் இயேசு கிறிஸ்து "நம்முடைய தேவன் ஒரே ஒரு தேவனே"என்று கூறியிருக்க கிறிஸ்தவர்கள் தேவன் மூவரில் ஒருவர், ஒருவரில் மூவர் என்று ஏன் கூறுகின்றனர்?

19. ஒருவர் கிறிஸ்தவராக இருப்பதற்கு 'திரித்துவம்' மிக முக்கியமானது என்றிருந்தால் ஏன் இயேசு கிறிஸ்து தம்முடைய வாழ்நாளில் இதை போதித்து வலியுறுத்திக் கூறவில்லை? மேலும், திரித்துவம் என்றாலே என்ன என்று அறியாமலேயே இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் எப்படி கிறிஸ்தவர்களாக கருதப்பட்டார்கள் திரித்துவக் கோட்பாடு தான் கிறிஸ்தவத்தின் முதுகெலும்பு என்றிருந்தால் அதை இயேசு கிறிஸ்து பல்வேறு சந்தர்பங்களில் போதித்து அதை மிக மிக வலியுறுத்திக் கூறி மக்களுக்கு விளக்கியிருப்பார்களே!

20. இயேசு கிறிஸ்துவும் பிதாவும் ஒன்று என்றிருந்தால், ஏன் இயேசு கிறிஸ்து பிதாவிடத்திலே பிரார்த்தனை செய்தார்? அந்தச் சமயத்தில் இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். (மத்தேயு 11:25)
தெய்வம் தெய்வத்திடமே பிரார்த்தனை செய்து கொண்டதா?

21. இயேசு கிறிஸ்துவும், பரிசுத்த ஆவியும், பிதாவும் ஒன்று என்றிருந்தால், ஏன் பிதா அறிந்திருக்கின்ற அனைத்தையும் இயேசு கிறிஸ்து மற்றும் பரிசுத்த ஆவி அறிந்திருக்கவில்லை? அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார். (மாற்கு 13:32) மற்றும் (மத்தேயு 24:36)

22. இயேசு கிறிஸ்துவும் பிதாவும் ஒன்று என்றிருந்தால், ஏன் பிதாவுக்கு இருக்கும் ஆற்றல் போன்று இயேசு கிறிஸ்துவிற்கு இல்லை? நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. (யோவான் 5:30) மற்றும் யோவான் 6:38.
சிந்தித்து தெளிவு பெறுங்கள் சகோதர, சகோதரிகளே!

கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் வாய்ப்பாடுகளை பள்ளிப் பருவத்தில் பயின்றிருக்கிறோம். திரித்துவத்துக்கும் இந்த வாய்ப்பாடுகளுக்கும் என்ன சம்மந்தம்? திரித்துவம் பற்றி எழும் கேள்விகளை சமாளிக்க கிறித்தவ சபைகள் கூறிவரும் பல்வேறு காரணங்களுள் ஒன்றே இந்த பெருக்கல் கணக்கு. பைபிளின் அடிப்படையில் பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்றும் மூன்று தனித்தன்மைகளைக் கொண்ட மூவர்! அப்படியானால் 1 + 1 + 1 = 3 அல்லவா? எப்படி ஒன்றாகும்? என்ற கேள்விக்கு கிறித்தவ சபை அளித்த விடை. 1 x 1 x 1 = 1 என்பதாகும்.
ஆச்சர்யம்! ஒன்றாம் வகுப்பு மாணவனையே வெட்கமடையச் செய்யும் கணக்கு இது! இதே பெருக்கல் கணக்கைக் கூறி இந்து மதக் கடவுள் கொள்கையைக் கூட நியாயப் படுத்த இயலும். 1 x 1 x 1 x 1 x 1 x 1 x 1 x 1 x 1…………………………x 1 = 1 எத்தனை ஒன்றுகள் சேர்ந்தாலும் ஒன்று தான். முப்பத்து முக்கோடி ஒன்றுகள் சேர்ந்தாலும் ஒன்றுதான். இந்தக் கணக்கைக் கூறியதன் மூலம் முப்பத்து முக்கோடி தேவர்கள் என்ற இந்துக்களின் கடவுள் கொள்கையையும் கிறித்தவ சபை ஏற்றுக் கொள்ள வேண்டி வரும்.

திட, திரவ மற்றும் வாயு

 தண்ணீரானது திட, திரவ மற்றும் வாயு நிலையில் பனிக்கட்டியாகவும், தண்ணீராகவும் மற்றும் நீர் ஆவியாகவும் இருப்பது போல் ஒரு கடவுள் பிதா, தேவ குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூவரில் இருக்கிறார் என்று சில கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள். அறிவியல் கோட்பாட்டின் படி தண்ணீர் மூன்று நிலைகளில் இருப்பது உண்மை தான். ஆனால் தண்ணீருக்கான மூலப்பொருள்கள் (components) மாறாமல் அப்படியே இருக்கிறது. அதாவது H2O, ஹைட்ரஜனின் இரண்டு அணுக்களும், ஆக்ஸிஜனின் ஒரு அணுவும் தான் தண்ணீரின் மூலப்பொருள்கள் ஆகும். அந்த மூலப்பொருள்கள் அப்படியே மாறாமல் இருக்கிறது. ஆனால் அதன் நிலை தான் திட, திரவ மற்றும் வாயு நிலைக்கு மாறுகிறது. அடுத்து இவர்களின் திரித்துவத்தை எடுத்துக் கொண்டால், தண்ணீர் மூன்று நிலைகளில் இருப்பதைப் போல் ஒரே கடவுள் மூவரில் இருக்கிறார் என்கின்றனர். ஆனால் தண்ணீரின் மூலப்பொருள் அதன் மூன்று நிலைகளிலும் ஒன்றாக இருப்பது போல இந்த மூவரின் மூலப்பொருள் ஒன்றாகவா இருக்கிறது? கடவுள் மற்றும் பரிசுத்த ஆவி ஆகியோர் ஆவியினால் (made of sprit) ஆனவர்கள். ஆனால் மனிதராகிய இயேசுவோ சதைத் துண்டுகளாலும், எலும்புகளாலும் உருவாக்கப்பட்டவர். எனவே அவர்கள் மூலப்பொருட்களால் சமமானவர்கள் அல்லர். மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு உணவு அவசியமாகிறது. ஆனால் கடவுள் உயிர் வாழ உணவு உண்ண வேண்டிய அவசியம் இல்லை. அதனால் அவர்கள் எப்படி சமமானவர்களாக முடியும்?

மேலும் இதை இயேசு கிறிஸ்துவே பைபிளில் உறுதிப்படுத்துகிறார். லூக்கா, 24 வது அதிகாரம், வசனங்கள் 36-40:இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். அப்பொழுது பொரித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்(தார்).

இயேசு கிறிஸ்து அவருக்கு தமக்கு சதை உடைய கைகள், கால்கள் இருக்கிறது என்றும் அவருடைய சீடர்கள் கொடுத்த உணவை சாப்பிட்டும் தாம் ஒரு ஆவியல்ல (no sprit) என்றும் நிரூபித்தது எதற்காக? தாம் கடவுள் என்பதற்காகவா? இல்லை! தாம் கடவுள் இல்லை என்பதற்காவே தாம் ஆவி (sprit) இல்லை என்று நிரூபித்தார்! ஏனென்றால் ஆவியானவருக்கு சதை மற்றும் எலும்புகள் இல்லை. எனவே அறிவியல் மூலமாகவும் இயேசு கிறிஸ்துவும், பரிசுத்த ஆவியும் கடவுளாக இருக்க முடியாது என்பது நிரூபனமாகின்றது. மேலும் திரித்துவம் (Concept of Trinity) என்ற தத்துவமோ (மூன்று கடவுள் கொள்கை) அல்லது அந்த வார்த்தையோ பைபிளில் எந்த ஒரு இடத்திலும் காணப்படவில்லை. ஆனால் திருக்குர்ஆனில் திரித்துவம் குறித்துக் கூறப்பட்டிருக்கிறது. 

திருக்குர்ஆன் அத்தியாயம் 4,ஸுரத்துந் நிஸா, வசனம் 171 ல் அல்லாஹ் கூறுகிறான்: -வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் ('குன்' ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்; அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும், பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன். (அல்-குர்ஆன் 4:171) 

மேலும் அத்தியாயம் 5, ஸுரத்துல் மாயிதா, வசனம் 17 ல் அல்லாஹ் கூறுகிறான்: -திடமாக எவர் மர்யமுடைய குமாரர் மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ் என்று கூறுகிறாரோ, அத்தகையோர் நிச்சயமாக நிராகரிப்போர் ஆகிவிட்டனர். 'மர்யமுடைய குமாரர் மஸீஹையும் அவருடைய தாயாரையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்துவிட நாடினால், (அதிலிருந்து அவர்களைக் காக்க) எவர் சிறிதளவேனும் சக்தியோ அதிகாரமோ பெற்றிருக்கிறார்' என்று (நபியே!) நீர் கேளும்; வானங்களிலும், பூமியிலும், அவற்றிற்கு இடையேயும் உள்ள (பொருட்கள் அனைத்)தின் மீதுமுள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம்; அவன் நாடியதைப் படைக்கிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான். (அல்-குர்ஆன் 5:17)

'நான் கடவுள்' என்று இயேசு கிறிஸ்து சொல்லவே இல்லை. திரித்துவம் பற்றிய கடவுள் தத்துவம் பைபிளில் அறவேயில்லை. பைபிளில் திரித்துவத்தை ஒத்திருக்கிறதாக அவர்கள் கூறும் ஒரே ஒரு வார்த்தை என்னவெனில்,

பையிளின் புதிய ஏற்பாடு, I யோவான், 5 அதிகாரம், வசனம்-7 பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;

ஆனால், மிகச்சிறந்த கிறிஸ்தவ அறிஞர்களால் பைபிளின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பைப் பார்த்தோமேயானால் (Revised Standard Version), அதில் அவர்கள், 'பைபிளின் மேற்கண்ட வசனம் இட்டுக்கட்டப்பட்டு இடை செறுகப்பட்ட வசனம்' என்று கூறி அந்த வசனத்தை பைபிளிலிருந்து நீக்கிவிட்டனர். இயேசு கிறிஸ்து நான் கடவுள்' என்று ஒரு போதும் கூறியதே இல்லை. பைபிளின் எந்த ஒரு இடத்திலும் 'நான் கடவுள்' அல்லது 'என்னை வணங்குங்கள்' என்று இயேசு கிறிஸ்து சொன்னதாக முழுமையான ஒரே ஒரு வசனம் கூட கிடையாது. ஆனால் உண்மையில் நாம் பைபிளைப் படித்தோமேயானால், (இந்த திரித்துவக் கோட்பாட்டுக்கு முரணான ஏராளமான வசனங்கள் இருக்கின்றன.) 

யோவான், 14 அதிகாரம், வசனம் 28 "நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்."

யோவான், 10 அதிகாரம், வசனம் 29அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது. 

மத்தேயு, 12 அதிகாரம், வசனம் 28 நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே

லூக்கா, 11 அதிகாரம், வசனம் 20 நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே. 

யோவான், 5 அதிகாரம், வசனம் 30 நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை!

(சுயமாக எதையும் செய்யாமல் பிறரின் சொல்படி செய்கிறவர் எப்படி கடவுளாக முடியும்?) யார் ஒருவர் தன் சுயவிருப்பப்படி எதையும் செய்யாமல் இறைவனின் விருப்பப்படி செய்கிறாறோ அவர் 'முஸ்லிம்'ஆவார். ஏனென்றால் 'முஸ்லிம்' என்பவர் 'தன் விருப்பங்களை இறைவனின் விருப்பப்படி அமைத்துக் கொள்பவராவார்'. இயேசு கிறிஸ்துவும் தம் விருப்பப்படி தாம் எதையும் செய்யவில்லை என்றும் கடவுளின் விருப்பப்படி செய்கிறேன் என்று கூறியதால் அவரும் ஒரு முஸ்லிம் ஆவார். இயேசு கிறிஸ்து இறைவனின் சிறந்த தூதர்களில் ஒருவர் என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். மேலும் முஸ்லிம்களாகிய நாங்கள்: ஆண் துணையில்லாமல் பிறந்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பு அற்புதம் வாய்ந்தவை என்று நம்புகிறோம் பைபிள் கூறுவதைப் போல, இறைவனின் அனுமதியுடன் இறந்தவரை உயிர்ப்பித்தார் என்று நம்புகிறோம். பிறவிக் குருடர்களுக்கு பார்வை அளித்தார் என்றும் நம்புகிறோம் குஷ்டரோகிகளைக் குணப்படுத்தினார் என்றும் நம்புகிறோம் எனவே முஸ்லிம்களாகிய நாங்கள் இயேசு கிறிஸ்து இறைவனின் உண்மையான தூதர் என்று நம்புகிறோம். அவருக்கு மதிப்பளிக்கின்றோம். ஆனால் அவரே இறைவன் என்று நம்புவதில்லை. அவர் மூன்று கடவுள்களில் ஒருவராக இருக்கவில்லை. மேலும் இந்த திரித்துவம் என்பது இல்லவே இல்லை.