கிறிஸ்தவ அன்பர்களால் கேட்கப்படும் கேள்விகளுள் இதுவும் ஒன்று. நாங்கள் ஏன் அவ்வாறு நம்புகிறோம் என்பதை கீழுள்ள பதிவு விளக்குகிறது .
பைபிள் கறைபடிந்துள்ளது/ மனித கரங்களால் விளையாடப்பட்டுள்ளது.
ஒரு நூலை இறை வேதம் என்று நம்புவதற்கென்று சில தகுதிகள் உள்ளன. சாதாரண மனிதனால் எழுதப்பட்ட நூல்களில் காணப்படும் குறைபாடுகள் இறை வேதம் எனக் கருதப்படும் நூலில் இருக்குமானால் அதை இறை வேதம் என்று கூற முடியாது. பைபிளை ஆராயும் பொழுது சாதாரண மனிதர்களால் எழுதப்பட்ட நூல்களில் காணப்படும் குறைகளை விட அதிக அளவு குறைகளைக் காண்கிறோம்.நடுநிலையான சிந்தனையுடன் நீங்கள் ஆராயந்தால் இதை மறுக்க மாட்டீர்கள்.
1 மூல மொழியில் பாதுகாக்கப்படவில்லை.
இது இறைவனிடமிருந்து தான் அருளப்பட்டது” என்று ஒரு நூலைப் பற்றி நம்புவதென்றால் அது எந்த மொழியில் அருளப்பட்டதோ அந்த மூல மொழியில் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும். வேதத்தை வேறு மொழியில் மாற்றம் செய்யக் கூடாது என்பது இதன் கருத்தன்று. எத்தனை மொழி பெயர்ப்புக்கள் வந்த போதிலும் மூல மொழியிலும் பாதுகாக்கப்பட்டிருப்பது மிக மிக அவசியமாகும். இது முக்கியமான தகுதியாகும். மூல மொழியில் ஒரு நூல் பாதுகாக்கப்பட்ட நிலையிலேயே அதன் மொழிபெயர்ப்புக்கள் வித்தியாசப்படுவதை நாம் சகஜமாகக் காண்கிறோம். மூல மொழியில் உள்ள நூலே இல்லை எனும் போது ஏற்படும் விளைவுகளைச் சொல்ல வேண்டியதில்லை. சாதாரணமாக மனிதர்கள் எழுதும் நூல்களே மூல மொழியுடன் இருக்க வேண்டும் எனும் போது கடவுளின் வேதம் என்று நம்பப்படும் நூல் மூல மொழியில் பாதுகாக்கப்பட்டிருப்பது மிக மிக அவசியம் அல்லவா? இதை என்றேனும் சிந்தித்திருக்கிறீர்களா?இந்த விஷயத்தில் வேதங்களுக்கும் ஏனைய நூல்களுக்குமிடையே மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. இறைவனிடமிருந்து வந்ததாக ஒரு நூலைப் பற்றி மக்கள் நம்பினால் அதற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். அதைப் பாதுகாப்பாக வைத்திருக்க அதிக முயற்சிகளை மேற்கொள்வார்கள். திருக்குர்ஆனை இதற்கு உதாரணமாகக் கூறலாம். கடந்த 14 நூற்றாண்டுகளாகக் குர்ஆனை எவ்விதக் கூடுதல் குறைவுமின்றி, மூலமொழியில் அப்படியே முஸ்லிம்கள் பாதுகாத்து வருகின்றனர்.
இந்த முதலாவது தகுதி பைபிளுக்கு இருக்கிறதா? இல்லை. இல்லவே இல்லை! உலகில் எங்கேயும் பைபிள் மூலமொழியுடன் பாதுகாக்கப்படவில்லை மொழி பெயர்ப்புக்களே உள்ளன. இதை நாம் சுயமாகக் கூறவில்லை. கிறித்தவ மதகுருமார்களின் கூற்றின் அடிப்படையிலேயேபைபிள் அதன் மூலமொழியில் பாதுகாக்கப்படவில்லை என்று கூறுகிறோம்.
இதோ bibleca வின் தளம் கூறுவது: ""Unfortunately, none of these original manuscripts exist today. Well over 3000 years have passed since Moses first penned the book of Genesis. None of his own writing has survived, but copies have been made down through the centuries." "Because what we have are copies of so many manuscripts, there is no single location where "the original Bible" is housed" http://www.biblica.com/en-us/bible/bible-faqs/is-the-bible-we-have-today-in-english-the-same-as-the-original-bible/
இத்தளம் மட்டுமல்ல எல்லா கிறிஸ்தவ அதிகாரப்பூர்வ தளங்களும் கூறுவது, மூலப்பிரதி, அதை பார்த்து எழுதப்பட்டது ,அதை பார்த்து எழுத்தப்பட்டதை பார்த்து எழுதப்பட்ட பிரதி .....(copy of the copy of the copy....) தான் இருக்கிறது .. உலக அழியும் வரை இப்புத்தகம் தான் இறைவேதம், மனிதருக்கு வழிக்காட்டும், என்றெல்லாம் நம்பும் நீங்கள்,இவ்வளவு முக்கியமான புத்தகத்தின் மூலப்பிரதியை கர்த்தர் ஏன் பாதுகாக்கவில்லை என சிந்திக்காதது ஏன்..??
"மொத்தம் 24,000 மூலப்பிரதிகளை கொண்டுள்ளது கிறிஸ்தவ உலகம் ,(இதில் 5366 கிரேக்கத்தில்) ஆனால் இப்பிரதிகள் ஏதும் இயேசு அவர்களது காலத்துடையதல்ல!! இயேசு அவர்களுடைய சீடர்களுடைய காலத்துடையதுமல்ல!!! (இரண்டாம் முதல் ஆறாம் நூற்றாண்டிற்கு உட்பட்டது) இப்பிரதிகளில் எந்த ஒரு "இரு பிரதிகளும்" அப்படியே துள்ளியமாக ஒரே மாதிரி இல்லை!! நிறைய மாற்றமும் முறண்பாடும் வித்தியாசங்களோடே உள்ளன.." ( The Orthodox Corruption of Scriptures, Bart Ehrman, பக்கம்: 27)
2. பல்வேறு பைபிள்கள்:
பைபிள் என்பது கிரேக்க(Greek) மொழியில் புத்தகங்களின் புத்தகம் / புத்தக தொகுப்பு (Book of Books) என அர்த்தம் . பைபிளில் பல புத்தகங்கள் இருப்பது நாம் அறிந்ததே!! பைபிளில் எத்தனை புத்தகங்கள் உள்ளது??? இதனை யார் தீர்மானிக்க வேண்டும்..கிறிஸ்தவர்களிடைய (கொள்கை சார்ந்த) பல பிரிவுகள் இருப்பது அனைவரும் அறிந்ததே!! அதில் ஒவ்வொரு குறிப்பிட்ட கொள்கையுடையோரும் தங்களுக்கேற்ப புத்தகங்களை கூட்டியும் குறைத்தும் வைத்துள்ளனர்.பிரட்டஸ்டாண்ட்கள் Protestant Church - (66 books),
Roman Catholic (கத்தோலிக்க) Church -(73 books),
Greek Orthodox Church - R.C+4 (77Books)
Ethiopic Church - (81 Books)
இன்னும் சில பிரிவினர், சில புத்தகத்தை சிறுது குறைத்தும் வைத்துள்ளனர் ...
ஆக இதில் எத்தனை புத்தகங்களை கொண்ட நூல் ,இறைவேதம்.??
73 புத்தகங்களாக இருந்ததை, குறிப்பிட்ட (7)புத்தகங்களை நீக்கி 66 ஆக மாற்றியது சர் மார்டின் லூதர் கிங் (புரோட்டஸ்டண்டு) என்பதை நாம் அறிந்ததே!!! இந்த (7 புத்தகங்கள்) 4652 வசனங்களும் வேதத்தில் உள்ளவை தான்; புரோட்டஸ்டண்டுகள் அவற்றை நீக்கி விட்டார்கள் என்று கத்தோலிக்க உலகம் குற்றஞ்சாட்டுகின்றது. இவை வேதத்தில் உள்ளவை அல்ல! கத்தோலிக்க குருமார்களின் சொந்தக் கற்பனை என்று புரோட்டஸ்டண்டுகள் குற்றஞ்சாட்டுகின்றன. கத்தோலிக்கர்கள் கூற்று உண்மை என்றால் வேதத்தின் பெரும் பகுதியை சிலர் நீக்கிவிடும் அளவிற்கு பைபிள் பலவீனமானதாகவும் பாதுகாக்கப்படாததுமாகவும் இருந்துள்ளது என்பது உறுதியாகின்றது. புரோட்டஸ்டண்டுகளின் கூற்றுத் தான் உண்மை என்று வைத்துக் கொண்டால் வேதத்தில் இல்லாததையும் கூட வேதத்தில் சேர்த்து விடுமளவுக்குத்தான் பைபிளின் பாதுகாப்புத் தன்மை இருந்துள்ளது என்பது உறுதியாகின்றது. இது போக இன்னும் எதத்னை வசனங்கள் நீக்கப்பட்டிருக்குமோ?என்ற சந்தேகமும் ஏற்புடுகின்றது. எப்படிப் பார்த்தாலும் இரண்டு பிரிவினரின் வேதமும் இப்போது சந்தேகத்திற்குரியதாகி விடுகின்றது. 4652 வசனங்களை நீக்கவிட்ட புரோட்டஸ்டண்டுகள் எப்போது தோன்றினார்கள்? இந்தப் பிரிவு தோன்றியதே 16 ஆம் நூற்றாண்டில் தான்.
இயேசுவுக்கு1600 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றிய இந்தப் பிரிவினர்இவ்வளவு பெரும் எண்ணிக்கையிலான வசனங்களை எப்படி நீக்க முடிந்தது? அதனை எதிர்த்து கத்தோலிக்கத் திருச்சபைகளால் ஏன் எதுவுமே செய்ய முடியவில்லை? தங்கள் வேதத்தில் நீக்கம் செய்வதை அன்றைய மக்கள்-கிறித்துவ மக்கள்- எப்படிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்? இந்தப் பிரிவினரும் எப்படி வளர முடிந்தது? சிந்திக்க வேண்டிய கேள்விகள் இவை.
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஒரே விடை தான் இருக்க முடியும். இவர்கள் இதற்கு முன்பே அடிக்கடி நீக்கியும் சேர்த்தும் வந்துள்ளனர். மக்களும் இந்த நீக்குதல் சேர்த்தலுக்கு நன்கு பழக்கப்பட்டுப் போயிருந்தார்கள். இதனால் தான் இவ்வளவு வசனங்கள் நீக்கப்பட்டதையும் கிறித்தவர்கள் ஜீரணித்துக் கொண்டார்கள். கத்தோலிக்க திருச்சபையின் எதிர்ப்பு எடுபடாமல் போனதற்கு இதைத் தவிர எந்தக் காரணமும் இருக்க முடியாது.
1200-1400 ஆண்டுகள் வரை இருந்த 73 புத்தகங்களில் (பரிசுத்த ஆவியால் உந்தப்பட்ட 73புத்தகங்கள் என போப் டமஸ்கஸ் 1 ஆல் கிபி382 ல் அங்கீகரிக்கப்பட்ட புத்தகத்தை ) மார்டின் லூதர் கிங், அவர் சுயவிருப்பத்துடன் அவராக 7 புத்தகங்களை நீக்கிவிட்டாரே!!!இதெல்லாம் போக, பல வசனங்களை சேர்க்கவும், நீக்கவும் முடிந்திருக்காதா என்ன..??
ஆக மனித கரங்கள் பைபிளில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதை இதிலிருந்தே தெரிந்துக் கொள்ளலாம் ..
3. எண்ணற்ற முறண்பாடுகள் நிறைந்த புத்தகம்:
ஓர் இளைஞர் பைபிளை, அதில் தவறே இருக்காது என்று எண்ணி வாங்கினார். ஒருநாள் லுக் என்ற பழைய மாத இதழைப் பார்த்துக் கொண்டிருக்கையில், பைபிளைப் பற்றிய உண்மை என்ற தலைப்பில் ஒரு கட்டுரை அவரது பார்வையில் பட்டது. புராட்டஸ்டண்ட், கத்தோலிக்கர்கள் படிக்கின்ற புதிய ஏற்பாட்டின் இரண்டு மொழியாக்கங்களில் குறைந்தது 20,000 பிழைகள் உள்ளன என்று 1720ஆம் ஆண்டு வாக்கில் ஓர் ஆங்கில அதிகாரக் குழுமம் மதிப்பிட்டுள்ளது. புது மாணவர்கள் சுமார் 50,000 பிழைகள் உள்ளன என்று தெரிவித்துள்ளனர் என்று அந்தக் கட்டுரையில் கூறப்பட்டிருந்தது. அந்த இளைஞர் அதிர்ச்சியடைந்தார். பைபிளின் மீது அவர் கொண்டிருந்த நம்பகத்தன்மை ஆட்டம் கண்டது. பல்லாயிரக்கணக்கான மிக மோசமான குறைபாடுகள், மூலத்திற்கு ஒத்திராத பிழையான ஆக்கங்கள் பைபிளில் இடம் பெற்றிருக்கும் போது அது எப்படி நம்பகமான இறை வேதமாக இருக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்புகின்றார். இந்தச் செய்தி “1957 ஆம் ஆண்டு செப்டம்பர் 8″ ஆம் தேதி “AWAKE” என்ற பத்திரிகை யில் வெளியாகியிருந்தது.குறிப்பு: "Awake" எனும் பத்தரிக்கை கிறிஸ்தவ அமைப்பை சேர்ந்ததே என்பது குறிப்பிடத்தக்கது. அந்த குறிப்பிட்ட செய்தியை படிக்க..
http://jwleaks.org/?attachment_id=2318
பொதுவாக சொல்லப்பட்ட தகவல்களிலும் சரி,வரலாற்று /அறிவியல் ரீதியாகவும் சரி, கடவுள் கொள்கையிலும் சரி, சிலுவை பலி போன்ற பல சம்பவங்களிலும் சரி எல்லாவற்றிலும் முறண்பாடுகள் நிறைந்திருக்கிறது..
இன்னும் பைபிளின் முறண்பாடுகளை ,"அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன்." (யோவான் 21:24) ;-) ஆக சில முறண்பாடுகளை கீழ்காணும் லிங்கில் பார்க்கவும்.. http://biblesolvathuenna.blogspot.com/?m=0
http://answeringchristian.blogspot.com/2015/11/blog-post_18.html?m=0
மேலே கொடுக்கப்பட்ட லிங்கில் மட்டும் முறண்பாடுகள் கொடுக்கப்படவில்லை! !! மொத்த தளத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது.
4. கடவுள் கொள்கையிலும் முறண்பாடு:
கிறிஸ்தவர்களின் நம்பிக்கையான "திரித்துவ கொள்கையோ" திரித்து அமைக்கப்பட்ட ஒரு கொள்கை.. பழைய ஏற்பாட்டில் பல இடத்தில் ஒரிறை இறை கொள்கை சொல்லும் வசனம் நிறைய இருக்கின்றன. ஆனால் அதற்கு நேர்முறணாக புதிய ஏற்பாட்டில் மட்டும் இயேசு கடவுளாக சித்தரிக்கப்பட்டும், திரித்துவ கொள்கை புகுத்தப்பட்டது.உபாகமம் 6:4 ல் மோஸே(Moses pbuh) அவர்கள் சொன்ன அதே வாக்கியங்களை (நம் கடவுள் ஒருவர் தான் என்பதை) அப்படியே இயேசு (Jesus Pbuh) அவர்களும் அப்படியே (மார்க் 12:28,29) ல் சொல்லியிருக்க ,அவரையே கடவுள் ஆக்குவது எவ்வளவு பெரிய முறண்பாடு
இன்னும் கிறிஸ்தவத்தின் அடிப்படை/முக்கியமானது என சொல்லப்படும் சம்பவங்களும் சரி, எல்லாவற்றிலும் முறண்பாடே!!!
5. போலியான போதனைகளும்; சம்பவங்களும்:
கிறிஸ்தவர்கள், தங்களது ஊழியத்திலும் சரி, சில போதனைகளையும் சம்பவங்களையும் எடுத்து வைத்து (பைபிளின்)இயேசு அவர்களை பற்றியும் பைபிளை பற்றியும் மார்தட்டிக் கொள்வதை பார்க்க முடிகிறது .. அதில் மிக முக்கியமானது ..யோவான் 8:3-8 ""3 அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி:
4 போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள். யோவான்
5 இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள்.
6 அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள். இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார்.
7 அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி..""
பார்த்தீர்களா!! எப்படி இயேசு மன்னித்து விட்டார் , அன்பையே போதிப்பவர், அப்படி! ! இப்படி என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பதை கண்டிப்பாக பார்த்திருப்பீர்கள்..
முதலில் இது போன்ற தீர்ப்புகள், சமூகத்தில் சீர்கேடுகளை தான் ஏற்படுத்தும் என்பதை நடுநிலையாளர்கள் அறிவார்கள். இவ்வசனம், யோவான் 8:3-8 ல் பதிவாகியுள்ளது, ஆனால் யோவான் 7:53 - 8:11 வரையிலான வசனங்கள் பழமையான பிரதிகளில் (Ancient Manuscripts) காணக்கிடைக்கவில்லை.. இடையில் சொருகப்பட்ட வசனம் ஆகும்.. வேண்டுமென்றே இட்டுக்கட்டப்பட்டதாகும்.. பல பைபிள் பதிப்புகளில் இருந்து எடுத்தும் விட்டார்கள். (பார்க்க: மிக பிரபல்யமான தளத்திலிருந்து , https://www.biblegateway.com/passage/?search=John%207:53-8:11 )
இன்னும் (பைபிள் படி)இயேசு கிறிஸ்து அவர்கள், சிலுவையில் அறையப்பட்டு, ஆடைகள் களையப்படும்பொழுதும், "பிதாவே!! இவர்கள் இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள், பிதாவே!! இவர்களை மன்னியுங்கள் "" என சொன்னார் என்ற (லூக்கா 23:34) வசனத்தையும் சுட்டிக்காட்டி, பாத்தீர்களா?? தாக்கியவர்கள் திருப்பி அடிக்காமல், அவர்களிடத்திலும் அன்பு காட்டியிருக்கிறார், அவர்களின் செயலுக்கு அவரே பிதாவிடத்தில் மன்னிக்க வேண்டியுள்ளார் என்றும் சொல்லியிருப்பார்கள், ...
ஆனால் இந்த வசனமும் பல முந்தைய பிரதிகளில் இல்லை...
இன்னும் முஸ்லிம் கிறிஸ்தவ விவாதங்களில், விஷம் குடிப்பது சம்பந்தமான (மாற்கு 16:17,18)வசனம் சவாலாக முன்வைக்கப்படும் .. அந்த கேள்விக்கு பதிலளிப்பதற்காக சமாளிக்கும் முயற்சியில் ஈடுபடும் கிறிஸ்தவர்கள், அந்த குறிப்பிட்ட அதிகாரத்தில் மட்டும் 12 வசனங்களும் (மாற்கு 16:9-20) நீக்கப்பட்டுவிட்டதை சொல்ல மறுப்பதேன்...??
முந்தைய பிரதியில் இல்லை,அதனால் நீக்கப்பட்டு விட்டது என்று சொன்னால், "அப்படியென்றால் முன்பு சேர்க்கப்பட்டு விட்டது, இடைசெறுகல் நடந்துள்ளது தானே என்ற கேள்வியில் இருந்து தப்பிப்பதற்காக தானோ என்னவோ ...?? https://www.biblegateway.com/passage/?search=Mark+16:9-20 இந்த வசனங்களில், இயேசு கிறிஸ்து அவர்களின் உயர்தெழுதல் சம்பவமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ..
இது போன்ற பல வசனங்களுக்கும் (மத்தேயு 17:21; 18:11; 23:14; மார்க் 7:16; 9:44; 9:46; 11:26; 15:28; 17:36; 23:17; யோவான் 5:4; அப்போஸ்தலர் நடபடிகள் 8:37; 15:34; 24:7; 28:29; ரோமர் 16:24; 1 யோவான் 5:7.,etc...)இது தான் நிலைமை. இன்னும் வருக்காலங்களில் எத்துணை வசனம் அவுட் ஆகும் என்பது கேள்விக்குறி தான்... ஆக, முந்தைய பிரதிகளில் இல்லை என்ற காரணத்தால் நீக்கப்படுகிறதே!! இதை இன்னும் பிரச்சாரம் செய்வது ஏன்??? முந்தைய பிரதிகளில் இல்லையென்றால் பைபிளில் எப்படி வந்தது...?? இன்னுமா நீங்கள்,பைபிள் கறைபடியவில்லை என நம்புகிறீர்கள்...??
6. விடை தெரியாத வினாக்கள்:
பைபிளின் முதல் புத்தகத்திலிருந்து கடைசி புத்தகம் வரை, அதை எழுதியவர் யார்? எழுதியதாக சொல்லப்படும் அந்த நபர் தான் உண்மையிலேயே எழுதினாரா..?? போன்ற கேள்விகளுக்கோ விடை இல்லை. "கிறிஸ்தவ நம்பிக்கையோ, பரிசுத்த ஆவி உந்தப்பட்டு எழுதப்பட்டது தான் இறைவேதம்." மோசே எனும் தீர்க்கதரிசியால் எழுதப்பட்டது என்று கிறிஸ்தவ உலகம் நம்புகின்ற உபாகமகத்தின் 34:1 முதல் 34:12 வரையிலான வசனங்களில் மோஸேயின் இறப்பு செய்தி பதிவாகியுள்ளது. மோசே எழுதிய இந்த ஆகமத்தில் மோசேயின் மரணம் பற்றிய செய்தியும் அவரை அடக்கம் செய்த விபரமும் மரணிக்கும் போது மோசேயின் வயது எவ்வளவு என்ற விபரமும் மோசேயின் மரணத்திற்குப் பின் இஸ்ரவேலர்கள் முப்பது நாட்கள் துக்கங் கொண்டாடிய செய்தியும் மோசேவுக்குப் பிறகு யோசுவா என்பவர்அடுத்த தலைவராக ஆகிய விபரமும் எப்படி இடம் பெற முடியும்? இதிலிருந்து இந்த ஆகமங்களுக்கும், மோசேவுக்கும் யாதொரு சம்பந்தமம் இல்லை என்பதை அறிவுடையோர்உணரலாம். மிக மிகப் பிற்காலத்தில் இது யாராலோ எழுதப்பட்டு மோசேயின் பெயரால் அரங்கேற்றப்பட்டிருக்க வேண்டும் என்பது இதிலிருந்து உறுதியாகின்றது.இப்போது இதுகுறித்து NIV (New International Version) பைபிளின் விரிவுரை சொல்வதை பார்ப்போம். "The book itself testifies that, for the most part, Moses wrote it (1:5; 31:9,22,24), and the report of Moses' death (ch.34) was almost certainly written by someone else. மோஸே மரணம் குறித்த தகவல்களை வேறு யாராவது எழுதியிருக்கலாம் (From the NIV Bible Commentary [1], page 240)"
இந்த மோஸேயின் புத்தகத்திற்கு பிறகு வரக்கூடிய யோசுவா புத்தகத்தின் இறுதியிலும் (யோசுவா 24:29) யோசுவா அவர்களது மரணத்தை குறி்த்து உள்ளது. இப்போது இதுகுறித்து NIV (New International Version) பைபிளின் விரிவுரை சொல்வதை பார்ப்போம். Some think that Samuel may have had a hand in shaping or compiling the materials of the book, but in fact we are unsure who the final author or editor was. சாமுவேல் இதை தொகுத்திருக்கலாம் என சிலர் நினைக்கிறார்கள், ஆனால், இதனுடைய ஆசிரியரோ, திருத்தியவரோ யாரென தெரியவில்லை (From the NIV Bible Commentary [1], page 286)"
இது தான் எல்லா பைபிளின் புத்தகங்களின் நிலையாகும். பல புத்தகங்களை எழுதியவரே யாரென தெரியவில்லை ... ஆக யாரென தெரியவில்லை! எழுதியவர் பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டவரா எனவும் தெரியல்லை. புதிய ஏற்பாட்டிலும் இதே கதை தான்! ! இந்த மத்தேயு, மார்க், லூக்கா,யோவான் இவர்கள் எல்லாம் யார்? என கேட்டால், இயேசுவின் சீடர்கள் என்று பொதுவாக பதில் வரும். ஆனால் அது உண்மையல்ல! ! அவ்வாறு நம்பவைக்கப்பட்டுள்ளார்கள்.. அவ்வளவுதான் ..
மத்தேயு சுவிசேஷம்:
லெவி என்பவரது பெயர் தான் மத்தேயு (சுங்க அதிகாரி/Tax collector), லெவி என்பது இயேசுவின் சீடர், ஆக இவர் எழுதியது தான் மத்தேயு என்று பொய் சொல்லி ஏமாற்ற முயற்சிக்கின்றனர். ஆனால் இந்த சுவிசேஷத்தை அவரே எழுத வில்லை, யார் எழுதியது என்பதே தெரியாது. இது தான் உண்மை..மத்தேயு 9:9 ல் , மத்தேயு என்ற நபரை இயேசு அழைத்தார், என் பின்னால் வா என சொன்னார் ,அவர் சென்றார், என்றெல்லாம் தன்னை பற்றி எழுதும் போது, யாரோ ஒரு நபரை பற்றி பேசுவது போல் பேசுவாரா..??
The unknown author, whom we shall continue to call Matthew for the sake of convenience, அறியப்படாத ஆசிரியர், நம் வசதிக்கு மத்தேயு என்றே அழைப்போம்(The New American Bible, ISBN: 978-0-529-06484-4, Page 1008)" கூடுதல் தகவலுக்கு: - https://m.facebook.com/story.php?story_fbid=214303618935462&id=1000106747 56410#!/photo.php?fbid=214303598935464&id=100 010674756410&set=a.109273356105156.1073741828 .100010674756410&source=57&refid=52&__tn__=E
மார்க் சுவிசேஷம்: -
முதன் முதலில் சுவிஷேசம் எழுதிய மாற்கு , இயேசுவின் பன்னிரண்டு சீடர்களில் (மாற்கு 3:14-19; மத்தேயு 10:1-4) இடம் பெறவில்லை. மாறாக இயேசுவின் சீடராகிய பேதுரு எனும் பீட்டருக்கு இவர் சீடராக இருந்தார். இவர் எழுதிய அனைத்தும் இவர் கண்ணால் பார்த்து எழுதியதல்ல. பீட்டரிடம் கேட்டவைகளை எழுதியதாகவும் அவர் குறிப்பிடவில்லை. இயேசுவைப் பார்த்திராத இவர், செவி வழியாகப் பேசிக் கொள்ளப்பட்ட செய்திகளை அடிப்படையாக வைத்தே தனது சுவிஷேசத்தை எழுதியுள்ளார் என்பது உறுதியாகிறது.Although the book is anonymous, apart from the ancient heading "According to Mark" in manuscripts, it has traditionally been assigned to John Mark, in whose mother's house (at Jerusalem) Christians assembled. (The New American Bible, ISBN: 978-0-529-06484-4, Page 1064)" "Although there is no direct internal evidence of authorship, it was the unanimous testimony of the early church that this Gospel was written by John Mark. (From the NIV Bible Commentary [1], page 1488)"
ஆக இதை எழுதியது மார்க் தானா என்பதும் சந்தேகம், அவர் சீடர் இல்லை என்பதும் தெளிவு.
லூக்கா சுவிசேஷம்::
மூன்றாவது சுவிஷேசக்காரராகிய லூக்கா என்பவரும் பன்னிரண்டு சீடர்களில் ஒருவர் அல்ல. மற்றவர்கள் கூறக் கேட்டதையே தான் எழுதியதாக இவர் வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார்.மகா கனம்பொருந்திய தேயோப்பிலுவே நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை ஆரம்ப முதல் கண்ணாரக் கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக் குறித்துச் சரித்திரம் எழுத அநேகம் பேர் ஏற்பட்டபடியினால் ஆதி முதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறிய வேண்டுமென்று அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று.
லூக்கா 1:1-4
மற்றவர்கள் கூறக் கேட்டதையே தான் எழுதுவதாக எடுத்த எடுப்பிலேயே லூக்கா ஒப்புக் கொள்கிறார். ஆக பரிசுத்த ஆவியால் உந்தபடவில்லை .. இவர் மிகவும் பிந்தியவராவார். கிறித்தவத்தின் சிலுவைக் கோட்பாட்டை உருவாக்கிய பவுலின் சீடர்களில் லூக்காவும் ஒருவர்.
யோவான் சுவிசேஷம் :
இயேசுவின் சீடர்களில் யோவான் என்ற பெயரில் ஒருவர் இருப்பதால் அவர் எழுதியதே யோவான் சுவிஷேசம் என்று பாமர மக்கள் நம்புகின்றனர். ஆனால் ஆய்வாளர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.இயெசுவின் நேரடிச் சீடரான யோவான் இதை எழுதி இருந்தால் இது தான் முதலில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இது எழுதப்பட்ட காலம் கிபி 90 முதல் 120 க்குள் இருக்க வேண்டும் என்பது முன்னோடி ஆய்வாளரின் கருத்தாகும்.
இயேசுவின் சீடராக இருந்த யோவானுக்கு இயேசு சிலுவையில் அறையப்படும் போது சுமார் 25 வயது என்று வைத்துக் கொண்டால் கூட கிபி 90ல் 115 வயது ஆகி இருக்கும். 115 வயது வரை மனிதனின் சராசரி வயது இல்லை. வேறு சிலர் கூறுவது போல் கிபி 65 முதல் 85 க்குள் எழுதியதாக வைத்துக் கொண்டாலும் அப்போதும் யோவான் தொண்ணூறு வயது முதல் 119 வயதில் இதை எழுதியதாக ஆகும். இதுவும் மனிதர்களின் சராசரி வயதுக்கு அதிகமாகும். எனவே இதை யோவான் என்ற சீடர் எழுதி இருக்க முடியாது என்பதில் சந்தேகம் இல்லை.இதை யோவான் என்ற பெயர் கொண்ட வேரொருவர் தான் எழுதி இருக்கிறார்.
Many scholars of the past two centuries have denied that John wrote this book,partly because of their belief that the author fabricated many details such as the miracles and the discourses of Jesus. இதை யோவான் தான் எழுதினார் என்ற கருத்தை கடந்த இரண்டு நூற்றாண்டின் கிறிஸ்தவ அறிஞர்கள் ஏற்கவில்லை. அதோடு பல தகவல்கள் ஜோடிக்கப்பட்டுள்ளது. (The Holman Illustrated Study Bible, ISBN: 978-1-58640-275-4, Gospel of John, Page1540)"
ஆக நான்கு சுவிசேஷமும் அவுட்.. மிச்சம் இருப்பது , சில நிரூபங்கள்..
எபிரேயு புத்தகம்::
இதை யார் எழுதியது என்றே தெரியவில்லை. "The writer of this letter does not identify himself (From the NIV Bible Commentary [1], page 1856)"புதிய ஏற்பாட்டில் 70% உள்ளவை பவுலின் கடிதங்கள்.
முதலில் பவுல், பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டவரா...??
1 கொரிந்தியர் 7 : 39 - என்னிடத்திலும் தேவனுடைய (பரிசுத்த) ஆவி உண்டென்று எண்ணுகிறேன்.(நினைக்கிறேன்)http://goo.gl/NahGCP ஆக இவரே அதில் உறுதியாக இல்லை. இருக்குமென நினைக்கிறாராம்.
இன்னும் "பரிசுத்த ஆவி சுயமாய் பேசாமல், தான் கேள்விபட்ட யாவற்றையும் சொல்வார்"- (யோவான் 16:12)
இவ்வாறிருக்க, பவுல் பல முறை சுயமாய் கருத்துகளை சொல்லியுள்ளார் (1கொரிந்தியர் 7:12,25,40)
ஆக பைபிளின் படி பவுலும் பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டவருமல்ல!!
فَوَيْلٌ لِّلَّذِينَ يَكْتُبُونَ الْكِتَابَ بِأَيْدِيهِمْ ثُمَّ يَقُولُونَ هَٰذَا مِنْ عِندِ اللَّهِ لِيَشْتَرُوا بِهِ ثَمَنًا قَلِيلًا ۖ فَوَيْلٌ لَّهُم مِّمَّا كَتَبَتْ أَيْدِيهِمْ وَوَيْلٌ لَّهُم مِّمَّا يَكْسِبُون
அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்! (அல்குர்ஆன் : 2:79)
No comments:
Post a Comment