Thursday, October 26, 2017

மறு பிறவி உண்டா?


மனிதர்கள் இன்று நல்ல வாழ்வைப் பெற்றிருந்தாலும், மோசமான வாழ்வைப் பெற்றிருந்தாலும் அதற்குக் காரணம் முந்தைய பிறவியில் அவர்கள் செய்த வினை தான் என்பது இந்து மத நம்பிக்கை. 

இந்தப் பிறவியில் ஒருவன் நல்லவனாக வாழ்ந்தால் அடுத்த பிறவியில் சகல இன்பங்களையும் பெற்று வாழ்வான். இப்படி ஏழு ஜென்மங்களை எடுப்பதாக இந்துப் பண்டிதர்கள் கூறுகின்றனர். மனிதனோடு மட்டும் இதை நிறுத்திக் கொள்வதில்லை. மற்ற உயிரினங்கள் வரை விரிவுபடுத்துகின்றனர். 

நாம் ஒரு நாயைச் சித்திரவதை செய்தால் அடுத்த பிறவியில் நாம் நாயாகவும், நாய் மனிதனாகவும் பிறப்பெடுப்போம். அப்போது மனிதனாகப் பிறப்பெடுத்த நாய், நாயாகப் பிறப்பெடுத்த நம்மை அதே போன்று சித்திரவதை செய்யும் என்றெல்லாம் உபன்னியாசங்களில் நாம் கேட்டுள்ளோம். 

இதைத் தான் மறுபிறவி என்று கூறுகின்றனர். இந்த நம்பிக்கை சரியானதா என்று பார்ப்போம். 

இன்றைக்கு உலகில் 600 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். நூறு வருடங்களுக்கு முன்னால் இதில் கால்வாசி அளவுக்குத் தான் மக்கள் தொகை இருந்தது. இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே மேலும் முன்னே சென்று கொண்டே இருந்தால் மனிதர்கள் சில ஆயிரம் பேர் தான் இருந்திருப்பார்கள். இன்னும் முன்னேறிச் சென்றால் ஒரே ஒரு ஜோடியில் போய் முடிவடையும். 

மனிதன் மட்டுமின்றி ஏனைய உயிரினங்களை எடுத்துக் கொண்டாலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சென்று கொண்டே இருந்தால் ஒவ்வொரு உயிரினமும் ஒரு ஜோடியில் போய் முடியும். 

அனைத்து உயிரினங்களும் ஒரே ஒரு ஜோடியிலிருந்து தான் பல்கிப் பெருகின. மனிதனையும் சேர்த்து எத்தனை வகை உயிரினங்கள் உலகில் உள்ளன என்று நம்மிடம் கணக்கு இல்லை. உதாரணத்துக்காக ஐம்பது லட்சம் வகை உயிரினங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு வகை உயிரினத்திற்கும் ஒரு ஜோடி என்று வைத்துக் கொண்டால் ஐம்பது லட்சம் ஜோடிகள் அதாவது ஒரு கோடி உயிரினங்கள் இருந்திருக்கும். 

மறுபிறவி என்று ஒன்று இருந்தால் இந்த எண்ணிக்கை அதிகமாகக் கூடாது. இந்த ஒரு கோடி உயிரினங்கள் தான் அடுத்த ஜென்மத்திலும் இருக்க வேண்டும். வேண்டுமானால் ஆடு மனிதனாக, மனிதன் ஆடாக பிறப்பெடுக்கலாமே தவிர, ஒரு கோடியை விட அதிகமாகவே கூடாது. ஒரு கோடியாக இருந்த உயிரினங்கள் இரண்டு கோடியாகப் பெருகினால் அதற்குப் பெயர் மறுபிறவி அல்ல. புதிய உயிர்களின் உற்பத்தி என்றே கூற வேண்டும். 

பாரதியார் முப்பது கோடி முகமுடையாள் என்று பாடினார். அப்போது இந்தியாவில் முப்பது கோடி மக்கள் இருந்தனர். அதைக் கருத்தில் கொண்டு இப்படி பாடினார். அவர்கள் மறு பிறவி எடுத்தால் இப்போதும் முப்பது கோடி தான் இருக்க வேண்டும். 70 கோடிப் பேர் அதிகமாகியுள்ளோம். நாம் மட்டும் அதிகமாகவில்லை. அனைத்து உயிரினங்களும் அதிகமாகியுள்ளன. 

ஏற்கனவே வாழ்ந்து மறைந்த உயிரினங்கள் அல்லாமல் மேலும் அதிக எண்ணிக்கையில் எல்லா உயிரினங்களும் பல்கிப் பெருகுவது மறுபிறவி இல்லை என்பதைக் காட்டுகிறது. ஏற்கனவே வாழ்ந்து மறைந்தவர்கள் மட்டும் மறுபிறவி எடுத்தால் இப்படி தாறுமாறாக மக்கள் தொகை பெருகக் கூடாது. பெருக முடியாது. மறுபிறவி இல்லை என்பதற்கு இதை விட வேறு எந்தச் சான்றும் தேவையில்லை. 

அதற்குச் சொல்லப்படுகின்ற தத்துவமும் ஏற்புடையதாக இல்லை. ஏற்கனவே செய்த பிறவிப் பயனையே இப்போது அனுபவிக்கிறோம் என்பதற்கு இவர்கள் கூறும் தத்துவம் என்ன? 

இவ்வுலகில் நாம் கெட்ட காரியம் செய்தால் அடுத்த பிறவியில் அனுபவிப்போம் என்று கூறினால் மனிதன் நல்லவனாக வாழ்வான் என்பது தான் தத்துவம். ஒருவருக்குத் தண்டனை கொடுப்பதாக இருந்தால் இன்ன குற்றத்துக்காக இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது என்று அவருக்குத் தெரிய வேண்டும். அது தான் தண்டனை. பரிசு கொடுப்பதாக இருந்தாலும் எந்தச் செயலுக்காக அந்தப் பரிசு கிடைத்தது என்பதை அவர் உணர வேண்டும். 

அவ்வாறு இல்லாவிட்டால் பரிசுகளாலோ, தண்டனைகளாலோ எந்தப் பயனும் ஏற்படாது. இந்தப் பிறவியில் துன்பம் அனுபவிக்கும் யாருக்காவது நாம் இதற்கு முன் எந்தப் பிறவியில் இருந்தோம் என்பது தெரியுமா? நிச்சயம் தெரியாது! என்ன பாவம் செய்ததற்காக இந்த நிலையை அடைந்தோம் என்று தெரியுமா? அதுவும் தெரியாது. 

அப்படியானால் அவன் அடுத்த பிறவியைப் பற்றிக் கவலைப்பட்டு எப்படி நல்லவனாக வாழ்வான்? 

ஒருவன் கொலை செய்து விடுகிறான். அக்குற்றம் நிரூபிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் கொலை செய்தவனுக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் அவனுக்குத் தூக்குத் தண்டனை வழங்க மாட்டார்கள். அவனே உணராமல் அவனைத் தண்டிப்பது தண்டனையாகாது; அதில் பயனும் இருக்காது என்று உலக அறிஞர்களின் ஒருமித்த அறிவு இவ்வாறு தீர்ப்பளிக்கிறது. 

அனைவரையும் படைத்த கடவுளுக்கு இந்த அறிவு கூட இருக்காதா? நான் என்ன செய்தேன் என்பது எனக்கே தெரியாமல் இருக்கும் போது என்னைத் தண்டிப்பது கடவுளின் தகுதிக்கும், நீதிக்கும் சரியாக இருக்குமா? 

எனவே தத்துவ ரீதியாக விவாதித்தாலும் மறுபிறவி சரிப்பட்டு வரவில்லை. காரண காரியத்தோடு அலசினாலும் சரிப்பட்டு வரவில்லை.

மனமாற்றமும் குணமாற்றமுமே இஸ்லாம்

பிறப்பால் வருவதா இஸ்லாம்?

இஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது. அதன் இன்னொரு பொருள் அமைதிஎன்பதாகும். அதாவது இறைவனுக்குக் கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலக வாழ்க்கையிலும் அமைதி பெறலாம். மறுமையிலும் அமைதி அல்லது மோட்சம் பெறலாம் என்பது இந்த இறைமார்க்கம் முன் வைக்கும் தத்துவம் ஆகும்.

முஸ்லிம் என்றால் கீழ்படிபவன் என்று பொருள். உதாரணமாக ஆசிரியருக்கு கீழ்படிந்து நடக்கக்கூடிய மாணவனையோ அல்லது முதலாளிக்கு கீழ்படியும் சிப்பந்தியையோ அரபு வார்த்தையைப் பொறுத்தவரை ஒரு முஸ்லிம் எனலாம். அதேபோல் யார் இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவரகளே முஸ்லிம்கள் எனப்படுவர்.. ஒரு தொப்பியோ தாடியோ வைப்பதனாலோ அல்லது அரபியிலோ உருது மொழியிலோ பெயர் வைப்பதனாலோ யாரும் முஸ்லிம் ஆகி விட முடியாது. ஒரு முஸ்லிம் தாய் தந்தையருக்குப் பிறந்து விட்டாலும் ஒருவர் முஸ்லிம் ஆக முடியாது. முழுக்க முழுக்க பின்பற்றுதல் மூலமே ஒருவர் முஸ்லிம் ஆக முடியும்.

இயற்கையில்  காணும் மரம், செடி, கொடி , சூரியன் சந்திரன், நட்சத்திரங்கள், மீன்கள், பறவைகள், விலங்கினங்கள்........ என இவை அனைத்தும் எவ்வாறு இறைவனின் கட்டளைகளுக்கு – அதாவது இறைவன் விதித்த விதிகளுக்கு கட்டுப்பட்டு  வாழ்கின்றனவோ அவ்வாறு வாழ்தலே இஸ்லாம்! அவ்வாறு வாழ்பவரே முஸ்லிம்! ஆம், இவ்வுலகில் மனிதனைத் தவிர மற்ற அனைத்தும் முஸ்லிம்களாகவே இருக்கின்றன.
சரி, ஒரு மனிதன் எப்போது அல்லது எவ்வாறு முஸ்லிமாக முடியும்? எப்போது மனிதன், படைத்த இறைவனை ஏற்றுக்கொண்டு அவனது கட்டளைகளைப் புரிந்து கொண்டு அதன்படி வாழத் துவங்குகிறானோ அப்போதுதான் அவன் முஸ்லிமாக ஆகிறான். அதாவது படைத்தவனோடு “இறைவா உன்னை என் வணக்கத்துக்குரியவனாக ஏற்றுக் கொள்கிறேன். நீ அனுப்பிய தூதரை ஏற்றுக் கொள்கிறேன். இன்று முதல் உன் கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்கிறேன்.” என்று ஒரு உடன்படிக்கை செய்து அதன்படி நிலைத்து நிற்கும்போதுதான் ஒரு மனிதன் முஸ்லிமாக ஆகிறான். அதாவது இறைவன் தரும் வாழ்க்கைத் திட்டத்தை ஏற்று அதன்படி வாழத் துவங்க வேண்டும்.

அது என்ன வாழ்க்கைத் திட்டம் ?

அதற்கு இஸ்லாத்தின் தூண்கள் என்று கூறப்படும்.

கொள்கைப் பிரகடனம்:  “வணக்கத்திற்கு உரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை என்றும் முஹம்மது நபி அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்”என்ற வாசகத்தை மனதார ஏற்று வாயால் மொழிதல்.

ஐவேளைத் தொழுகை: இந்த வாழ்க்கைத் திட்டத்தை முறைப்படி செயல்படுத்த வேண்டுமானால் நாம் படைத்தவனோடு தொடர்பில் இருக்க வேண்டும். அப்போதுதான் தீமை செய்யத்தூண்டும் மன சஞ்சலங்களும் ஷைத்தானின்(தீய) ஊசலாட்டங்களும் நம்மை வழி தவறச் செய்யாது. அதற்காக விடியற்காலை, மதியம், மாலை. சூரியனின் மறைவுக்குப் பிறகு, உறங்கும் முன் என ஐவேளைகளில் இறைவன் தன தூதர் மூலமாக கற்றுத் தந்த தொழுகைகளை நிறைவேற்றுதல்.

கட்டாய தருமம்: பொருள் மற்றும் செல்வம் என அனைத்தும் இறைவனுக்குச் சொந்தமானவையே. இவை நம்மை பரிசோதிப்பதற்காகத் தரப்படுபவையே. நமக்கு தரப்படுபவற்றில் ஒரு குறிப்பிட்ட பங்கு ஏழைகளுக்கு உரியது. எனவே அவற்றை கட்டாயமாகக் கொடுத்து விட வேண்டும். 

ரம்ஜான் மாத விரதம்: திருக்குர்ஆன் இறங்கிய ரம்ஜான் மாதத்தில் பகலில் உண்ணுதல், பருகுதல், உடலுறவு இவற்றிலிருந்து தவிர்த்திருத்தல்.

ஹஜ்ஜ் எனும் புனித யாத்திரை: பொருள் வசதியும் உடல் ஆரோக்கியமும் உள்ளவர்கள் வாழ்நாளில் ஒரு முறை மக்கா நகரிலுள்ள கஅபா என்ற இறையில்லத்தை தரிசிக்கச் செல்லுதல்.

மேற்கூறப்பட்ட கொள்கையும் வாழ்க்கைத்திட்டமும் யாருக்கேனும் பிடித்து இருந்து அதைப் பின்பற்ற வேண்டும் என்று அவர்  விரும்பினால் யாருடைய தயவும் அங்கு தேவை இல்லை. அது அந்த மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையிலானது. ஆத்மார்த்தமாக மேற்கூறப்பட்ட கொள்கைப் பிரகடனத்தை இதயத்தில் உறுதி செய்து வாயால் மொழிந்தால் அந்த நொடியிலிருந்து  அவர்  முஸ்லிமாகி விட்டார்.  எந்த ஒரு மத குருவின் முன்னிலையோ யாருடைய சாட்சியமோ அல்லது ஒரு வழிபாட்டுத்தலத்தில் பதிவு செய்யும் அவசியமோ அங்கு இல்லை! அவர் தனது  பெயரை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமும் கூட அங்கு இல்லை!

ஆம், இம்மார்க்கத்தை ஏற்க  மன மாற்றமும் குண மாற்றமும் தவிர வேறு எந்த மாற்றங்களும் முக்கியம் இல்லை. ஆனால் ஏற்றுக்கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும். மீணடும் படைத்தவன் அல்லாதவற்றை கடவுள் என்று சொல்வதோ கற்பனை உருவங்களை வணங்குவதோ தொழுகையை விடுவதோ தீமைகள் பக்கம் செல்வதோ கூடாது! நீங்கள் இக்கொள்கைப் பிரகாரம் எவ்வளவு காலம் வாழ்கிறீர்களோ அதுவரை மட்டுமே நீங்கள் முஸ்லிமாக இருக்கிறீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! அதே நிலையில் நீங்கள் மரணத்தைத் தழுவுவீர்களானால் உங்களுக்கு சொர்க்கம் உறுதி! இறைவன் தன் திருமறையில் கூறுகிறான் :

‘ஓ, இறைவிசுவாசிகளே! நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணித்து விடாதீர்கள்! ‘ 

மத நல்லிணக்கம் எவ்வாறு?

இந்திய அரசியல் சாசனம் ஒருவர்  தன்னுடைய மதத்தை பின்பற்றுவதையும் பிறருக்கு எடுத்து வைப்பதையும், பிரச்சாரம் செய்வதையும் தடுக்கவில்லை,ஆனால் வலுக்கட்டாயமாக பிறர்மீது திணிப்பதைதான் கண்டிக்கிறது. மத நல்லிணக்கம் உண்டாவதற்கு அனைத்து மதத்தவரும் இதனை கட்டாயம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஒரு மனிதர் தனது மதமல்லாத வேறொன்றை பின்பற்றுகிறார் என்ற ஒரே காரணத்துக்காக அவரை வெறுப்பது, அவரிடம் நீதமின்றி நடந்து கொள்வது எந்த ஒரு மதத்தின் மரபுகளுக்கும் எதிரானதாகும். 'ஒன்றே மனித குலம் ஒருவனே' 'நம் அனைவருக்கும் இறைவன் ஒருவனே' என்பது இஸ்லாம் கற்பிக்கும் அடிப்படைக் கொள்கையாகும். அந்த அடிப்படையில் நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்னும்போது சக மனிதர்களின் கொள்கைகளோடு முரண்பாடு உள்ளமைக்காக அவர்களை வெறுப்பது என்பது மிகப்பெரும் தவறே!            

முஸ்லிம் எப்படி மத நல்லிணக்கம் பேண வேண்டும்?

முஸ்லிம் என்றால் இறைவன் கற்பிக்கும் வாழ்க்கைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு அதன்படி வாழ்பவர். அவரைப் பொறுத்தவரையில் வணக்கத்திற்கு உரியவன் இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வருபவன் மட்டுமே என்பதைக் கொள்கையாகக் கொண்டவர். நபிகள் நாயகத்தை தன் வாழ்க்கை முன்மாதிரியாக அவர் ஏற்றுக்கொண்டவராக இருந்தாலும், அவருக்கு முன்வந்த அனைத்து இறைத் தூதர்களையும் இறைவேதங்களையும் மதித்தே ஆகவேண்டும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நபிகளார் தான் முன் மாதிரி. நபிகளார் வாழ்ந்த காலத்திலும் அவருடைய இரத்த சொந்தங்கள் அறியாமையினாலும்,மனோ இச்சையினாலும் மனம் போன முறையில் பல தெய்வங்களையும், சிலைகளையும் வணங்கி வந்தனர். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கண்ணியமான முறையில் படைத்த இறைவனை வழிபட வேண்டிய அவசியத்தையும், அதை மறுக்கும் பட்சத்தில் மறுமையில் நடக்கும் விளைவுகளையும் எடுத்து சொன்னார்களே தவிர, யாரையும்  நிர்பந்திக்கவோ, மிரட்டவோ இல்லை. தன்னை வளர்த்த பெரிய தந்தை மரணப் படுக்கையில் இருக்கும் போது  இறந்தபின் அவர் நரகத்திற்கு சென்றுவிடக் கூடாது என்ற ஆதங்கத்தில் அவரிடம் கெஞ்சிதான் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள கூறினார். நபிகளார் துக்கத்தில் மிகவும் உழன்ற போது, "நபியே உமது பணி இறைச்செய்தியை எடுத்துச் சொல்வது மட்டும்தான்." என எச்சரிக்கையும் விடுத்தான் இறைவன் என அறிகிறோம்.

2:256. (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.

நபிகளார் வாழ்வில் நடந்த சில உதாரணங்கள்:

ஒரு யூதனின் உடல் அடக்கம் செய்வதற்காக வீதியில் செல்லும் போது, நபிகள் நாயகம் மரியாதைக்காக எழுந்து நின்றார் என்பது வரலாற்று பதிவு.

கிறிஸ்தவ பாதிரிமார்கள் ஒரு வேலை நிமித்தம் பள்ளி வாசலில் தங்கி இருந்தபோது அவர்களின் வணக்க வழிபாடுகளை செய்வதற்கு அனுமதி அளித்தார்.

இரு சமூகத்துக்கு இடையே ஏதேனும் காரணத்துக்காக போர் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றால் அப்போதும் கூட மற்ற சமூக குருமார்களை தாக்குவதையோ,வழிபாட்டு தலங்களை இடிப்பதையோ நபிகளார் தடுத்திருக்கின்றார்கள். இதுவெல்லாம்தான் மத நல்லிணக்க செயல்கள். இங்கே மத துவேசம், மத வெறி போன்றவற்றிற்கு இடம் இல்லை. பிற மதங்களின் மீதுள்ள ஒருவருக்குள்ள  மன வெறுப்பை நீக்குவதே மத நல்லிணக்கத்தின் முதல் படியும், முக்கிய படியும் ஆகும்.

ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வோம்:

ஒரு ஹிந்து நண்பரோ, புத்த நண்பரோ விருந்துக்கு வருகின்றார் என்று வைத்துக்கொள்ளுங்கள்,அவரது உணவு சைவம்தான் என்பதை அறிந்து அதற்கேற்ப உணவைத் தயாரித்து அதைப் பரிமாறுகின்றோம். இது போன்று நமது நிலைகளையும், கொள்கை கோட்பாடுகளையும் அவர்களுக்கு முன்பே கூறியிருப்போமென்றால் அவர்கள் நிச்சயமாக நம்முடன் அதற்கேற்பத்தான் நடந்துகொள்வார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. உதாரணமாக இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் ஏக இறைவன் அல்லாதவற்றுக்காக  படைக்கப்பட்டவையும் இறைவனின் பெயர் கூறி அறுக்கபடாத பிராணிகளின் மாமிசங்களும் பன்றி மாமிசமும் தடை செய்யப்பட்டவை என்பதை நாம் அறிவோம். இதை நம் மாற்றுமத நண்பர்களுக்கு முன்பே தெரியப்படுத்தினால் அவர்கள் தங்கள் பண்டிகைகளின் போது இந்தவகையான உணவுகளை நமக்கு வழங்குவதைத் தவிர்ப்பார்கள்.

இதன் படி நம் சகோதர சமூகத்தவருக்கு நமது கொள்கைகளைப்பற்றி அவர்கள் உணர்ந்து கொள்ள செய்வதன் மூலமும், அவர்களின் கொள்கைகளை நாம் அறிந்து கொள்வது மூலமாகவும் சமூகத்தில் மத நல்லிணக்கம் பேண முடியும். இந்த புரிந்துணர்வு இல்லாத பட்சம் சுயநல அரசியல்வாதிகளும் சமூகவிரோதிகளும் மத  துவேஷத்தை மக்களுக்கிடையில் விதைத்து பகைமை மூட்டி கலவரங்களும் அதன்வழி தங்கள் சுயநல வக்கிரங்களைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.

எம்மதமும் சம்மதமா?

அதேவேளையில் மேற்படி புரிந்துணர்வை உண்டாக்க முயற்சிக்காமல் ஒன்றுக்கொன்று வேறுபாடுகள் கொண்ட மதங்களையும் கொள்கைகளையும் எல்லாமே ஒன்று அனைத்துமே சம்மதம் என்று போலியாகக் கூறுவது நயவஞ்சகத்தையும் குழப்பங்களையுமே விளைவிக்கும். மதநல்லிணக்கத்திற்கு ஊறுதான் விளைவிக்கும்.

பேசு... நல்லதையே பேசு!


நம்பிக்கை கொண்டோரே! இறைவனுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்! (திருக்குர்ஆன் 33:70) 

யாரேனும் கண்ணியத்தை நாடினால் கண்ணியம் யாவும் இறைவனுக்கே உரியது. தூய சொற்கள் அவனிடமே மேலேறிச் செல்லும். நல்லறம் அதை உயர்த்தும். தீய காரியங்களில் சூழ்ச்சி செய்வோருக்குக் கடுமையான வேதனை உண்டு. அவர்களின் சூழ்ச்சி தான் அழியும். (திருக்குர்ஆன் (35:10) 

ஒருவன் தன்னுடைய செல்வத்தை தர்மம் செய்வதற்கு நிகரானது அவன் பேசுகின்ற நல்ல வார்த்தைகள். 

இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: மக்கள் தமது மூட்டுக்கள் ஒவ்வொன்றுக்காகவும் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தர்மம் செய்வது அவர்களின் மீது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தர்மமாகும். ஒருவர் தன் வாகனத்தின் மீது ஏறி அமர (அவருக்கு) உதுவுவதும் தர்மமாகும். அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தர்மமாகும். நல்ல (இனிய) சொல்லும் தர்மமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தர்மமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தர்மமேயாகும். (நூல்: புகாரி 2989) 

நல்ல பேச்சுக்கள் கடும் வேதனையான நரக நெருப்பிலிருந்து காக்கும் கேடயமாக பயன்படும். நல்ல பேச்சுக்களைப் பேசியாவது நரகத்தை விட்டும் உங்களை காத்துக் கொள்ளுங்கள் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் இல்லையானால் இனிய சொல்லைக் கொண்டாவது (காப்பாற்றிக் கொள்ளுங்கள்) என முஹம்மது நபி (ஸல்) கூறினார்கள். (நூல்: புகாரி 6023) 
நம்முடைய முக்கிய குறிக்கோளாக இருக்கின்ற சொர்க்கத்தை நாம் அடைவதற்குரிய வழிகளில் ஒன்று நல்ல பேச்சுக்களைப் பேசுவதாகும். 

ஒருவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் சொர்க்கம் செல்வதற்கான வழியைக் காட்டும்படி கேட்ட போது, அழகிய முறையில் பேசும்படி அவருக்குக் கட்டளையிட்டார்கள். 

நான், முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ”இறைத்தூதரே! உங்களை நான் கண்டால் எனது உள்ளம் மகிழ்சியடைகிறது, எனது கண் குளிர்ச்சியடைகிறது. எனக்கு அனைத்து பொருட்களைப் பற்றியும் சொல்லுங்கள்” என்றேன். அதற்கு அவர்கள் ”அனைத்தும் நீரிலிருந்து படைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள். ”எந்த காரியத்தை நான் செய்தால் சொர்க்கத்திற்குச் செல்வேனோ அப்படிப்பட்ட ஒரு காரியத்தை எனக்கு கற்றுக் கொடுங்கள்” என்று கூறினேன்.”சலாமைப் பரப்பு. நல்ல பேச்சைப் பேசு. உறவுகளை இணைத்து வாழ். மக்கள் உறங்கும் போது இரவில் நின்று வணங்கு. சாந்தியுடன் சொர்க்கத்தில் நுழைவாய்” என்று கூறினார்கள். (நூல்: அஹ்மத் 9996) 
(சலாம் என்றால் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ – உங்கள் மீது இறைவனின் சாந்தி உண்டாகட்டும் என்ற வாழ்த்துரையைக் கூறுதல்) 

தெருக்களில் அமர்ந்திருப்போர் நல்லதையே பேச வேண்டும். இல்லாவிட்டால் அமரக்கூடாது என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. 

நாங்கள் வீட்டின் முற்றத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, ”பாதையில் அமைந்துள்ள இடங்களில் என்ன செய்கிறீர்கள்? பாதையோரங்களில் அமைந்துள்ள இடங்களில் (அமர்வதை விட்டும்) தவிர்ந்து கொள்ளுங்கள்”என்று கூறினார்கள். ”தவறு செய்வதற்காக நாங்கள் உட்காரவில்லை. பேசிக் கொண்டும் கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டும் அமர்ந்துள்ளோம்”என்று கூறினோம். அதற்கு அவர்கள், ”அப்படியானால் அதற்குரிய உரிமையைக் கொடுத்து விடுங்கள். பார்வையைத் தாழ்த்துவதும் சலாமிற்குப் பதிலுரைப்பதும் அழகிய முறையில் பேசுவதும் (அதற்குரிய உரிமையாகும்)”என்று கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 4020) 

இறைவன் கற்றுத்தரும் பேச்சின் ஒழுங்கு முறைகளை கடைபிடித்து இம்மை மறுமை நன்மைகளை பெறுவோமாக!…… 

புகழ் விரும்பாத இறைத்தூதர்கள்


இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களது காலத்தில் அவரது ஆண்குழந்தை இப்ராஹீம் மரணம் அடைந்த அதே நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதையொட்டி மக்கள் இப்ராஹீமின் இறப்புக்காகத்தான் கிரகணம் ஏற்பட்டது” என்று பேசிக் கொண்டனர். அப்போது முஹம்மது நபி(ஸல்) அவர்கள், "சூரியனும் சந்திரனும் இறைவனின் சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணம் ஏற்படுவதில்லை. எனவே, அவற்றை நீங்கள் கண்டால் இறைவனிடம் பிரார்த்தியுங்கள்;தொழுங்கள்!” என்று கூறினார்கள். (நூல்: புகாரி 1043) 

நபியவர்களின் மகன் மரணித்த நேரமும், கிரகணம் தோன்றிய நேரமும் ஒன்றாக இருந்ததினால் மக்கள் நபியின் மகனின் மரணத்திற்குத்தான் கிரகணம் தோன்றியது என கூறிக்கொண்டிருந்தார்கள். அப்போது நபியவர்கள் தனது ஆழ்ந்த துக்க வேளையிலும் அதைப் பொருட்படுத்தாது மக்களிடம் வந்து 'கிரகணம் என்பது யாருடைய மரணத்துக்காகவும் நிகழ்வதில்லை, அது இறைவனின் ஏற்பாடு' என்பதை உணர்த்தி அவர்களின் மூடநம்பிக்கையை துடைந்தெறிந்தார்கள். இன்று கடவுளின் பெயரைச் சொல்லி ஏமாற்றுபவர்கள் பலர், இயற்கை நிகழ்வுகளைக் கூடத் தங்கள் அற்புதம் என்று சொந்தம் கொண்டாடுவதைப் பார்க்கிறோம். "நபியின் மகன் இறந்து விட்டான்; அதனால் கிரகணம் பிடித்து விட்டது" என்று மக்களே பேசிக் கொள்ளும்போது அதைக்கண்டு பெருமிதம் கொள்ளவோ தன புகழை உயர்த்திக்கொள்ளவோ செய்யவில்லை நபிகளார். 

இதை அற்புதம் என்று வாதிடுவதற்கு எல்லா வாய்ப்புகளும் இருந்தும், மக்களே இதை அற்புதம் என்று சொன்ன போதும் நபியவர்கள் உண்மையான இறைத் தூதர் என்பதால் அவ்வாறு போலியான தகுதியை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவ்வாறு தான் இறைத்தூதர்கள் யாருமே இயற்கையாக நிகழும் அற்புதங்களாயினும் சரி, இறைவனின் அனுமதி கொண்டு அவர்களே நிகழ்த்தும் அற்புதங்களாயினும் சரி, அவற்றைக் காட்டி தங்களுக்கு தெய்வீகத் தன்மை உள்ளதாக வாதிடவில்லை. இவற்றை நிகழ்த்துபவன் இறைவனே என்று கூறி அவனுக்கு நன்றி கூறி அவனுக்கு கட்டுப்பட்டு வாழுமாறு மக்களை அழைத்தார்கள். அவ்வாறு கட்டுப்பட்டு வாழுதலுக்கு அரபு மொழியில் 'இஸ்லாம்' என்று வழங்கப்படுகிறது. 

நபிகளாருக்கு முன்னர் வந்த இறைத்தூதரான இயேசு நாதரும் (அவர்மீது இறைசாந்தி உண்டாவதாக) தன் வாழ்நாளில் பல அற்புதங்களை செய்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது. 

இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (இயேசுவை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்:) ‘நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்; நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்; அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் இறை நம்பிக்கையாளர்களாக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது’ (என்று கூறினார்). (அல்-குர்ஆன் 3:49) 

இயேசு அவர்களின் பிறப்பும் இவ்வுலகிலிருந்து அவரது மறைவும் எல்லாம் அற்புதமே! ஆயினும் ஒருபோதும் தனக்கு தெய்வீகத் தன்மை இருப்பதாகவோ தன்னை வணங்கச் சொல்லியோ இயேசு மக்களுக்குக் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இஸ்லாம் ஒரு பரிபூரணமான வாழ்க்கை நெறி...? எப்படி?


சார்லஸ் டார்வின்,கார்ல் மார்க்ஸ் போன்றவர்கள், மனிதனை பல்வேறு கோணத்தில் ஆய்வு செய்தார்கள். மனிதப்பண்பு குறித்ததான அவர்களது தேடலில், சிலர் மனிதனின் உடம்பைப் பற்றியும், வடிவம், உருவம் குறித்தும், கவனம் செலுத்தினர். உடலை மையமாக கொண்ட சில முடிவுகளுக்கு வந்தனர்.

சார்லஸ் டார்வின்,கார்ல் மார்க்ஸ் போன்றவர்கள், மனிதனை பல்வேறு கோணத்தில் ஆய்வு செய்தார்கள். மனிதனை குறித்த அவர்களது தேடலில்.,மனிதனின் வயிற்றின் மீது சில சிந்தனையாளர்களின் பார்வை பட்டன. மனிதனுக்கு மிக முக்கியமானது பசி தான்,அதற்கு தீர்வு வந்துவிட்டால், எந்த பிரச்சினையும் இருக்காது என நினைத்தனர். பசி தான் எல்லாப் பிரச்சனைக்கும் காரணமென நினைத்தனர்.மனித வாழக்கையை பாலியில் வழியாக அணுகியவர்கள், உடலுறவு தான் முக்கியம்; இதுவே மனித வாழ்வில் முக்கியமான அம்சம் என்ற முடிவுக்கு வந்தனர்.
ஆன்மீக வெளிப்பாடுகளை விட்டுவிட்டு, மனிதனை பற்றி புரிந்துக்கொள்ள முற்பட்டவர்கள், யானையை பற்றி, அதன் உடலை தடவி கருத்து சொன்ன குருடர்களை போன்றவர்கள். அவரவர் தனக்கு தென்பட்டதை வைத்து ஒரு முடிவுக்கு வந்தனர். அவர்கள் எடுத்த முடிவுகள், தவறானதும், பிழைமிக்கதும் ஆகும்.

மனிதனை பற்றி சரியாக புரியாதவன், மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதையும் புரிந்துக்கொள்ள முடியாது. ஒவ்வொரு மனிதனும், தான் எப்படி வாழ வேண்டும் என்பதில் அடிப்படை விழிப்புணர்வு தேவை.இந்த விழிப்புணர்வு, ஆன்மீகத்தினால் தான் இயலும்.மதம் என்பது தான், மனிதனின் அர்த்தத்தையும் நோக்கத்தையும் சொல்லக்கூடியவை. அறிவியல் "எப்படி" என்பதை விளக்கும், ஆனால் "ஏன்" என்பதை விளக்காது. உதாரணமாக: பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பது குறித்து அறிவியல் பேசும் ஆனால் ஏன் தோன்றியது என்பதை பற்றி அறிவியலால் பேச இயலாது.

உற்பத்தியாளருக்கு/ உருவாக்கியவருக்கு தான், தாம்  உற்பத்தி செய்ததை / உருவாக்கியதை நன்றாக அறிவார். உதாரணத்திற்கு, உங்கள் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொள்வோம்..  பல்சர் (Pulsar) வாகனம் வைத்துள்ளீர்கள் என வைத்துக்கொள்வோம். அந்த குறிப்பிட்ட உற்பத்தியாளர், உங்கள் வாகனத்தில் குறிப்பிட்ட எரிபொருள் (அதாவது பெட்ரோல்) தான் போடவேண்டும், குறிப்பிட்ட மணி நேரங்கள் தான் தொடர்ச்சியாக ஓட்டவேண்டும், குறிப்பிட்ட கி.மீ ஓட்டிவிட்டால் சர்வீஸ் விடவேண்டும் , டையரில் குறிப்பிட்ட அளவே காற்றும் நிரப்பவேண்டும்  என்று எக்கச்சக்க கண்டிஷன் போடுவார்கள் ..

நான் வாகனத்தை காசு கொடுத்து வாங்கிட்டேன், இனி என் பைக் இது, என் இஷ்டத்துக்கு நான் வைத்துக்கொள்கிறேன் என சொல்லி விட்டு, பல்சர் (Pulsar) பைக்கில் டீசலை நிரப்பி,தான் திருப்தியாகும் வரை டையரில் காற்று நிறப்பினால் அது சரியானாதா...??

இல்லை, நாம் அவ்வாறு செய்யமாட்டோம்;  உற்பத்தியாளரை/ உண்டாக்கியவரை நாம் நம்புவோம், ஏனெனில் அவற்றை செய்த அவர்களுக்கே நன்றாக தெரியும் என்பதனால் தானே!! பைக் மட்டுமல்லாது பல சின்ன பொருட்களில் கூட உண்டாக்கியவரை நம்பி, அவரின் விதிமுறை பின்பற்றுகிறோம்;  ஆனால் நம்மை உண்டாக்கியவரின் விதிமுறைகளை/வழிகாட்டுதல்களை பற்றி நாம் கவனம் செலுத்த தவறிவிட்டோம்..

மனிதனை, ஓர் இயந்திரம் என்று நாம் அழைத்தோமேயானால், உலகில் மிக சிக்கலான,  மிகச்சிறந்த இயந்திரம் என்று தான் சொல்லவேண்டும். நம்முடைய படைப்பாளனாகிய இறைவனே, நமக்கு எது சரியானது, நம்முடைய வாழ்க்கை முறை எவ்வாறு அமைய வேண்டும் என்பதை தனது இறைதூதர்கள்/ தீர்க்கத்தரிசிகள் மூலமாகவும், வேதங்களையும் அருளியும் நமக்கு போதிப்பான்.இறைவனின் வழிகாட்டுதலில்  இருந்து விலகி செல்வது, குழப்பம் மற்றும் அழிவுக்கு வழிவகுக்கும்.
இஸ்லாம், நம்மை படைத்தவன் அருளிய மார்க்கம் என்பதால் இதுவே முழுமையான வாழ்க்கை நெறி. இஸ்லாம், பிறப்பு முதல் இறப்பு வரை மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பற்றி பேசக்கூடியதாகும்.

நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள்  (அல்குர்ஆன் : 3:19)

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்,  (அல்குர்ஆன் : 2:208)

இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.  (அல்குர்ஆன் : 3:85)

சைவமே சரி! – என்பது சரியா?

தான் படைத்த படைப்புகளை இவ்வுலகில் எவ்வாறு சமநிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதை அறிந்தவன் இவற்றைப் படைத்தவன் ஒருவன்தான். எனவேதான் மனித வர்க்கம் - மாமிச உணவு உட்கொள்ள இறைவன் அனுமதி அளித்திருக்கிறான். அருள்மறை வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றது:
'மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில் அனுமதிக்கப்பட்டவற்றையும் -பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்.' (குர்ஆன் 2:168)
உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்கள் மீதும் இரக்கம் காட்ட வேண்டும் என இஸ்லாம் கட்டளையிடுகிறது. அதே சமயம் – இறைவன் இந்த பூமியைப் படைத்து - அதில் மனித பயன்பாட்டுக்கான கால்நடைகளையும் - தாவரங்களையும் படைத்திருக்கிறான் - என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. இறைவன் படைத்தவைகளை நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொருளாகவும் அருட்கொடையாகவும் பயன்படுத்திக்கொள்வது மனிதனிடம்தான் இருக்கிறது.
இறைகட்டளைக்கு மாற்றமாக அசைவம் உண்பதைத் தடுத்தால் என்ன நிகழும்?
கால்நடைகள் பெருகும்
உலகில் உள்ள ஒவ்வொருவரும் - சைவ உணவு மாத்திரம் உட்கொள்பவராக இருந்தால் - கால்நடைகளின் பெருக்கம் உலகத்தில் அதிகரிக்கும். ஏனெனில் கால்நடைகள் வேகமாக பெருகக் கூடியவை. அவ்வாறு பெருகினால் மரங்களும் செடிகளும் புல்பூண்டுகளும் வேகமாக அழியும்..... தொடர்ந்து மழை பொழிவது நின்றுவிடும்.... கட்டுக்கடங்காத வறட்சி பெருகும்.....  தொடர்ந்து பூமி வாழ்வு தடைபடும். 

மாமிசம் மனிதனுக்குத் தேவை 

மாமிசம் புரதச்சத்தும் - புரோட்டீனும் அடங்கிய ஓர் முழு உணவாகும். உடலுக்குத் தேவையான முழு புரொட்டீனையும் பெறுவதற்கு மாமிசம் ஓர் சிறந்த உணவாகும். மாமிசம் உடலில் உற்பத்தி செய்யப்படாத ஆனால் உடலுக்குத் தேவையான எட்டுவிதமான அமிலோ அமிலங்களும் அடங்கிய உணவாகும். மாமிசத்தில் இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் பி1 மற்றும் நியாசின் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன. உடல் உழைப்பு இல்லாதோருக்கு சைவமே போதுமானதாக இருக்கலாம். ஆனால் கடின உடல் உழைப்பு செய்யும் தொழிலாளிகளுக்கும் விவசாயிகளுக்கும் அசைவம்  கட்டாயம் தேவைப் படுகிறது. மேலும் துருவப் பிரதேசங்களிளும் கடலோரங்களிலும் வாழ்வோரிடம் சைவத்தைத் திணிக்க முடியாது.

மனித உடலமைப்பு

 மாமிச உணவு உண்ண கூறிய பற்களும் - தாவர உணவு உண்ண தட்டையான பற்களும் கொண்டவன் மனிதன்.
நீங்கள் தாவர உண்ணிகளான ஆடு - மாடு - போன்ற கால்நடைகளை ஆராய்ந்து பார்த்தால் அவைகள் தாவர உணவு உண்ணுவதற்கு ஏற்றவாறு தட்டையான பற்களை மாத்திரம் கொண்டுள்ளதை அறியலாம். அதுபோல மாமிச உண்ணிகளான சிங்கம் - புலி - சிறுத்தை போன்றைவைகளை ஆராய்ந்து பார்த்தால் அவைகள் மாமிச உணவு உண்ணுவதற்கு ஏற்றவாறு கூறிய பற்களை மாத்திரம் கொண்டுள்ளதை அறியலாம். அது போல நீங்கள் மனிதனுடைய பற்களின் அமைப்பை ஆராய்ந்து பார்த்தால் - மனிதர்கள் மாமிச உணவை உண்ணுவதற்கு ஏற்றவாறு கூரிய பற்களையும் - தாவர வகை உணவுகளை - உண்ணுவதற்கு எற்றவாறு தட்டையான பற்களையும் கொண்டவராக காணலாம். மனிதர்கள் தாவரவகை உணவுகளை மாத்திரம்தான் உண்ண வேண்டும் என்று இறைவன் எண்ணியிருந்தால் - மனிதர்களை - இறைவன் மாமிச உணவை உண்ணுவதற்கு ஏற்றவாறு கூரிய பற்களை கொண்டவர்களாக ஏன் படைத்திருக்க வேண்டும்?. மாமிச உணவையும் - தாவர வகை உணவையும் உண்ண வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இறைவன் மனிதர்களுக்கு கூரிய பற்களையும் தட்டையான பற்களையும் படைத்திருக்கிறான்.

மனித செரிமான அமைப்பு மாமிச வகை உணவுகளையும் தாவர வகை உணவுகளை செரிமானம் செய்வதற்கு ஏற்றதாக உள்ளது. தாவர உண்ணிகளின் செரிமான அமைப்பு - தாவர வகை உணவுகளை மாத்திரம் செரிமானம் செய்வதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. அதுபோல மாமிச உண்ணிகளின் செரிமான அமைப்பு மாமிச வகை உணவுகளை மாத்திரம் செரிமானம் செய்வதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. ஆனால் மனித செரிமான அமைப்புமாத்திரம் மாமிச வகை உணவுகளையும் தாவர வகை உணவுகளையும் செரிமானம் செய்வதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. மனிதர்கள் தாவரவகை உணவுகளை மாத்திரம்தான் உண்ண வேண்டும் என்று இறைவன் எண்ணியிருந்தால் - மனிதர்களின் செரிமான அமைப்பை - இறைவன் மாமிச வகை உணவுகளையும் தாவர வகை உணவுகளையும் செரிமானம் செய்வதற்கு ஏற்றவாறு ஏன் படைத்திருக்க வேண்டும்?.

சைவமும் உயிர்களைக் கொல்கிறதே!
முந்தைய காலங்களில் தாவரங்களுக்கு உயிர் இல்லை என மனிதர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனால் இன்றைய அறிவியல் யுகத்தில் - தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பது அகிலம் முழுவதும் அறிந்த விஷயம். எனவே சைவ உணவு உண்ணுபவர்களாக இருந்தாலும் உயிர்களை கொல்லாமல் இருப்பது என்பது சாத்தியக் கூறு அல்ல என்ற கருத்தை விளங்கிக் கொள்ள முடியும்.

தாவரங்களாலும் வலியை உணர முடியும்:

தாவரங்களால் வலியை உணர முடியாது. எனவே தாவரங்களை கொல்வது - உயிருள்ள பிராணிகளை கொல்வதைவிட - குறைந்த பாவம்தான் என சிலர் வாதிடக் கூடும். இன்றைய அறிவியல் - தாவரங்களும் வலியை உணர முடியும் என்று நமக்குக் கற்றுத் தருகிறது. 20 Hertz க்கு குறைவான சப்தத்தையும் 20000 Hertz க்கு மேற்பட்;ட சப்தத்தையும் மனிதனால் கேட்க முடியாத காரணத்தால் தாவரங்கள் வலியினால் அலறுவதை நாம் அறிய முடியாது. அமெரிக்காவில் உள்ள விவசாயி ஒருவர் ஆராய்ச்சி செய்து தாவரங்கள் அலறுவதை - மனிதர்கள் கேட்கும் அளவுக்கு மாற்றக்கூடிய கருவி ஒன்றினை கண்டு பிடித்திருக்கிறார். மேற்படி கருவியின் மூலம் தாவரங்கள் தண்ணீருக்காக அலறுவதை மனிதர்களால் கேட்க முடியும். பின்னால் வந்த வேறு சில ஆராய்ச்சியாளர்கள் தாவரங்களும் - மகிழ்ச்சி - வருத்தம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆற்றலை கொண்டவை என்றும் கண்டு பிடித்துள்ளனர். இவ்வாறு தாவரங்களும் வலியை உணரக் கூடியவை. மகிழ்ச்சி வருத்தம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய ஆற்றலை கொண்டவை என்பதை அறிவியல் உண்மைகள் நமக்கு அறிவிக்கின்றன.


Quran 36:71-73  “நம் கைகளால் உருவாக்கிய கால்நடைகளை அவர்களுக்காகப் படைத்துள்ளோம் என்பதையும், அவர்கள் அதற்கு உரிமையாளர்களாக உள்ளனர் என்பதையும் அவர்கள் காணவில்லையா?  அவற்றை அவர்களுக்காகக் கீழ்ப்படியச் செய்தோம். அவற்றில் அவர்களின் வாகனங்களும்  உள்ளன. அவற்றிலிருந்து அவர்கள் உண்ணுகின்றனர். அவர்களுக்குப் பயன்களும், பானங்களும் அவற்றில் உள்ளன. அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா?”

செத்த மீன்களை சாப்பிடுவது ஏன்?

மீன் அல்லாத உயிரினங்களை அறுக்க வேண்டும்; மீனை அறுக்காமல் உண்ணலாம் என்ற வேறுபாட்டுக்குக் காரணம் என்ன? என்று சந்தேகம் சிலருக்கு உள்ளது. 

நீர் வாழ் உயிரினங்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. 

நீர்வாழ் உயிரினங்களுக்கு ஓடுகின்ற இரத்தம் கிடையாது. அதை உயிருடன் பிடித்து அறுத்தாலும் அதில் இரத்தம் சிறிதளவு கசியுமே தவிர இரத்தம் ஓடாது. வடிவது கூட இல்லை. 

இஸ்லாமிய நம்பிக்கையின்படி ஓட்டப்படும் இரத்தம் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே தான் ஆடு, மாடு போன்ற உயிரினங்களை அறுக்கும்போது வெளியாகும் இரத்தத்தை உண்ணக் கூடாது. 

ஆடு, மாடு போன்றவை உயிருடன் இருக்கும்போது அறுத்தால் மட்டுமே அதிலிருந்து இரத்தம் வெளிப்படும். செத்த பிறகு அறுத்தால் இரத்தம் வெளிப்படாது. எனவே அந்த இறைச்சியைச் சாப்பிடும்போது இரத்தத்தையும் சேர்த்து சாப்பிடும் நிலை ஏற்படுகிறது. 

இரத்தத்தில் மனிதன் உட்கொள்ளக் கூடாத அணுக்களோ, கிருமிகளோ இருக்கலாம். பிராணிகள் செத்தவுடன் இரத்தம் உறைய ஆரம்பித்து விடுகிறது. இரத்தத்தில் வாழ முடியாத கிருமிகள் மற்ற பகுதிகளுக்கும் பரவி விடுகிறது. இரத்தத்தைச் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் அனைத்தும் அந்த இறைச்சியைச் சாப்பிடும்போதும் ஏற்படும் என்பதை யாரும் மறுக்க முடியாது. 

மீன்களுக்கு ஓடக் கூடிய இரத்தம் இல்லாததால் அறுத்தாலும் அதிலிருந்து இரத்தம் பீரிட்டு ஓடாது. தானாகச் செத்தாலும் சதை வரை ஊடுருவும் இரத்தம் மீன்களில் இல்லை. எனவே தான் மீனை அறுக்குமாறு இஸ்லாம் கூறவில்லை.

கால்நடைகளை கொல்வது ஏன்?

சைவ உணவு உண்பது – இன்று உலகம் முழுவதும் பரவிவரும் இயக்கமாக இருக்கிறது. இந்த இயக்கங்களில் பல கால்நடைகளுக்கும் உரிமை உண்டு என்ற கொள்கையை கொண்டவை. ஏராளமானபேர் – மாமிசம் மற்றும் மற்ற புலால் உணவு உண்பது என்பது கால்நடைகளின் உரிமைகளை பரிப்பதாகும் என்கிற கருத்தினை கொண்டவர்களாக இருக்கின்றனர். உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்கள் மீதும் இரக்கம் காட்ட வேண்டும் என இஸ்லாம் கட்டளையிடுகிறது. அதே சமயம் – இறைவன் இந்த பூமியைப் படைத்து – அதில் மனித பயன்பாட்டுக்கான கால்நடைகளையும் – தாவரங்களையும் படைத்திருக்கிறான் – என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. இறைவன் படைத்தவைகளை நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொருளாகவும் அருட்கொடையாகவும் பயன்படுத்திக்கொள்வது மனிதனிடம்தான் இருக்கிறது. இந்த விவாதம் பற்றிய மற்ற விபரங்களை ஆராய்வோம்.

1. சைவ உணவு மட்டும் உண்ணக் கூடியவர் கூட இஸ்லாமியராக இருக்க முடியும்.

சைவ உணவை தொடர்ந்து உண்ணக்கூடிய இஸ்லாமியன் ஒரு நல்ல இஸ்லாமியனாக இருக்க முடியும். அவர் கண்டிப்பாக அசைவ உணவுதான் உட்கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இஸ்லாத்தில் இல்லை.

2. இஸ்லாமியர்கள் அசைவ உணவு உண்பதற்கு அருள்மறை குர்ஆன் அனுமதி அளிக்கிறது.

இஸ்லாமியர்கள் அசைவ உணவு உண்பதற்கு அருள்மறை குர்ஆன் அனுமதி அளிக்கிறது. அருள்மறை குர்ஆன் 16வது அத்தியாயம் ஸுத்துன் நஹ்லின் ஐந்தாவது வசனம் 

‘கால்நடைகளையும் அவனே படைத்தான். அவற்றில் உங்களுக்குக் கத கதப்பு(ள்ள ஆடையணிகளு)ம் இன்னும் (பல) பலன்களும் இருக்கின்றன. அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கவும் செய்கின்றீர்கள்.’

என கால்நடைகளின் பயன் பற்றி மனிதர்களுக்குச் சுட்டிக் காட்டுகின்றது.

3. மாமிசம் புரதச்சத்தும் – புரோட்டீனும் அடங்கிய ஓர் முழு உணவாகும்.

உடலுக்குத் தேவையான முழு புரொட்டீனையும் பெறுவதற்கு மாமிசம் ஓர் சிறந்த உணவாகும். மாமிசம் உடலில் உற்பத்தி செய்யப்படாத ஆனால் உடலுக்குத் தேவையான எட்டுவிதமான அமிலோ அமிலங்களும் அடங்கிய உணவாகும். மாமிசத்தில் இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் பி1 மற்றும் நியாசின் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன.

4. மாமிச உணவு உண்ண கூறிய பற்களும் – தாவர உணவு உண்ண தட்டையான பற்களும் கொண்டவன் மனிதன்.

நீங்கள் தாவர உண்ணிகளான ஆடு – மாடு – போன்ற கால்நடைகளை ஆராய்ந்து பார்த்தால் அவைகள் தாவர உணவு உண்ணுவதற்கு ஏற்றவாறு தட்டையான பற்களை மாத்திரம் கொண்டுள்ளதை அறியலாம். அதுபோல மாமிச உண்ணிகளான சிங்கம் – புலி – சிறுத்தை போன்றைவைகளை ஆராய்ந்து பார்த்தால் அவைகள் மாமிச உணவு உண்ணுவதற்கு ஏற்றவாறு கூறிய பற்களை மாத்திரம் கொண்டுள்ளதை அறியலாம். அது போல நீங்கள் மனிதனுடைய பற்களின் அமைப்பை ஆராய்ந்து பார்த்தால் – மனிதர்கள் மாமிச உணவை உண்ணுவதற்கு ஏற்றவாறு கூரிய பற்களையும் – தாவர வகை உணவுகளை – உண்ணுவதற்கு எற்றவாறு தட்டையான பற்களையும் கொண்டவராக காணலாம். மனிதர்கள் தாவரவகை உணவுகளை மாத்திரம்தான் உண்ண வேண்டும் என்று இறைவன் எண்ணியிருந்தால் – மனிதர்களை – இறைவன் மாமிச உணவை உண்ணுவதற்கு ஏற்றவாறு கூரிய பற்களை கொண்டவர்களாக ஏன் படைத்திருக்க வேண்டும்?. மாமிச உணவையும் – தாவர வகை உணவையும் உண்ண வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இறைவன் மனிதர்களுக்கு கூரிய பற்களையும் தட்டையான பற்களையும் படைத்திருக்கிறான்.

5. மனித செரிமான அமைப்பு மாமிச வகை உணவுகளையும் தாவர வகை உணவுகளை செரிமானம் செய்வதற்கு ஏற்றதாக உள்ளது

தாவர உண்ணிகளின் செரிமான அமைப்பு – தாவர வகை உணவுகளை மாத்திரம் செரிமானம் செய்வதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. அதுபோல மாமிச உண்ணிகளின் செரிமான அமைப்பு மாமிச வகை உணவுகளை மாத்திரம் செரிமானம் செய்வதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. ஆனால் மனித செரிமான அமைப்பு மாத்திரம் மாமிச வகை உணவுகளையும் தாவர வகை உணவுகளையும் செரிமானம் செய்வதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. மனிதர்கள் தாவரவகை உணவுகளை மாத்திரம்தான் உண்ண வேண்டும் என்று இறைவன் எண்ணியிருந்தால் – மனிதர்களின் செரிமான அமைப்பை – இறைவன் மாமிச வகை உணவுகளையும் தாவர வகை உணவுகளையும் செரிமானம் செய்வதற்கு ஏற்றவாறு ஏன் படைத்திருக்க வேண்டும்?.

5. இந்து வேதங்கள் மாமிச உணவு உண்பதற்கு அனுமதி அளித்திருக்கிறது.

இந்துக்களில் ஏரானமானபேர் முற்றிலும் மாமிச உணவு உண்ணாதவர்களாக இருக்கிறார்கள். மாமிச உணவு உண்பது அவர்களின் மதக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்று கருதுகிறார்கள். ஆனால் உண்மை என்னவெனில் – இந்துக்கள் மாமிச உணவு உண்பதற்கு அவர்களின் வேதங்கள் அனுமதியளித்துள்ளன. இந்து சாமியார்கள் மாமிச உணவு உட்கொண்டதாக இந்துக்களின் வேதங்கள் கூறுகின்றன. இந்துக்களின் சட்ட புத்தகமான மனு சாஸ்திரத்தின் ஐந்தாவது அத்தியாயம் முப்பதாவது வசனம் கீழக்கண்டவாறு கூறுகிறது:

‘உணவு உட்கொள்பவர் – மாமிச உணவு உட்கொள்வாராயின் – அவர் உண்ணும் மாமிச உணவு அவருக்கு எந்த கெடுதியும் அளிப்பதில்லை. எந்நாளும் மாமிச உணவை உட்கொண்டாலும் சரியே. ஏனெனில் சில படைப்புகளை உண்பதற்காகவும் – சில படைப்புகளை உண்ணப்படுவதற்காகவும்; படைத்தவன் கடவுளே’.

மனு சாஸ்திரத்தின் ஐந்தாவது அத்தியாயம் முப்பத்து ஒன்றாவது வசனம் கீழக்கண்டவாறு கூறுகிறது:

‘மாமிச உணவு உண்பதும் – சரியான தியாகமே. இது மரபு ரீதியாக அறியப்பட்டு வரும் கடவுளின் கட்டளையாகும்’.

மேலும் மனு சாஸ்திரத்தின் ஐந்தாவது அத்தியாயம் முப்பத்து ஒன்பதாவது வசனமும் நாற்பதாவது வசனமும்கீழக்கண்டவாறு கூறுகிறது:

‘பலியிடுவதற்கென கடவுள் சில கால்நடைகளை படைத்திருக்கின்றான். எனவே பலியிடுவதற்காக கால்நடைகளை அறுப்பது என்பது – கால்நடைகளை கொல்வது ஆகாது.’

இவ்வாறு இந்து மத வேதங்களும் – சாஸ்திரங்களும் – இந்துக்கள் மாமிச உணவு உண்ணவும் – உணவுக்காக கால்நடைகளை கொல்லவும் அனுமதியளித்திருக்கிறது.

7. இந்துத்துவம்  மற்ற மதங்களின் பழக்க வழக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்து மத வேதங்கள் இந்துக்கள் அசைவ உணவு உண்பதற்கு அனுமதி அளித்திருந்த போதிலும் பெரும்பான்மையான இந்துக்கள் மாமிச உணவு உண்ணாமல் – சைவ உணவு மட்டுமே உட்கொள்கிறவர்களாக இருக்கிறார்கள். இதற்கு காரணம் அசைவ உணவு உட்கொள்ளாத ஜைன மதக் கொள்கையின் பாதிப்பு இந்து மதத்திலும் ஏற்ப்பட்டிருப்பதால் தான்.

8. தாவர வகைகளுக்கும் உயிர் உண்டு.

பெரும்பான்மையான மதங்களைச் சார்ந்தவர்கள் அசைவ உணவு உண்ணாமல் இருப்பதற்கு காரணம் – அவர்களின் மதங்கள் உணவுக்காகக் கூட உயிர்களைக் கொல்வது பாவம் என்ற கொள்கையை போதிப்பவைகளாக இருப்பதால்தான். ஒரு உயிரைக்கூட கொல்லாமல் ஒரு மனிதன் உயிர்வாழ முடியும் எனில் – மேற்படி கொள்கையை கடைபிடிக்கும் மனிதர்களில் முதலாவதாக இருப்பது நானாகத்தான் இருக்கும். முந்தைய காலங்களில் தாவரங்களுக்கு உயிர் இல்லை என மனிதர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனால் இன்றைய அறிவியல் யுகத்தில் – தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பது அகிலம் முழுவதும் அறிந்த விஷயம். எனவே சைவ உணவு உண்ணுபவர்களாக இருந்தாலும் உயிர்களை கொல்லாமல் இருப்பது என்பது சாத்தியக் கூறு அல்ல என்ற கருத்தை விளங்கிக் கொள்ள முடியும்.

9. தாவரங்களாலும் வலியை உணர முடியும்:

தாவரங்களால் வலியை உணர முடியாது. எனவே தாவரங்களை கொல்வது – உயிருள்ள பிராணிகளை கொல்வதைவிட – குறைந்த பாவம்தான் என சிலர் வாதிடக் கூடும். இன்றைய அறிவியல் – தாவரங்களும் வலியை உணர முடியும் என்று நமக்குக் கற்றுத் தருகிறது. 20 Hertz க்கு குறைவான சப்தத்தையும் 20000 Hertz க்கு மேற்பட்ட சப்தத்தையும் மனிதனால் கேட்க முடியாத காரணத்தால் தாவரங்கள் வலியினால் அலறுவதை நாம் அறிய முடியாது.

அமெரிக்காவில் உள்ள விவசாயி ஒருவர் ஆராய்ச்சி செய்து தாவரங்கள் அலறுவதை – மனிதர்கள் கேட்கும் அளவுக்கு மாற்றக்கூடிய கருவி ஒன்றினை கண்டு பிடித்திருக்கிறார். மேற்படி கருவியின் மூலம் தாவரங்கள் தண்ணீருக்காக அலறுவதை மனிதர்களால் கேட்க முடியும். பின்னால் வந்த வேறு சில ஆராய்ச்சியாளர்கள் தாவரங்களும் – மகிழ்ச்சி – வருத்தம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆற்றலை கொண்டவை என்றும் கண்டு பிடித்துள்ளனர். இவ்வாறு தாவரங்களும் வலியை உணரக் கூடியவை. மகிழ்ச்சி வருத்தம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய ஆற்றலை கொண்டவை என்பதை அறிவியல் உண்மைகள் நமக்கு அறிவிக்கின்றன.

9. இரண்டு அல்லது மூன்று புலன்களை கொண்ட உயரி;

ஓருமுறை – ஒரு சைவ உணவு உட்கொள்பவர் – என்னோடு வாதிடும்போது சொன்னார் – மிருகங்கள் ஐந்தறிவு கொண்டவை. ஆனால் தாவரங்கள் – இரண்டு – அல்லது மூன்று புலன்களை கொண்டவைதான். எனவே ஐந்தறிவுள்ள மிருகங்களை கொல்வதைவிட – இரண்டு அல்லது புலன்களை கொண்ட தாவரங்களை கொல்வது குறைந்த பாவம் இல்லையா என்று. ஒரு உதாரணத்திற்கு உங்களது சகோதரர் – பிறவியிலேயே செவிட்டு – ஊமையாக இருக்கிறார். அவரை மற்ற மனிதர்களோடு ஒப்பிடும்போது அவர் இரண்டு ஆற்றல்கள் – குறைவாக உள்ளவர்தான். வளர்ந்து ஆளான – உங்களது செவிட்டு ஊமை சகோதரரை – ஒருவர் கொலை செய்து விட்டார் – என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களது செவிட்டு ஊமை சகோதரர் இரண்டு ஆற்றல்கள் குறைவாக உள்ளவர் – ஆகவே கொலையாளிக்கு – குறைந்த தண்டனை தந்தால் போதும் என்று நீங்கள் நீதிபதியுடன் வாதாடுவீர்களா?. மாட்டீர்கள். மாறாக என்ன சொல்வீர்கள் – காது கேளாத – வாய் பேச முடியாத அப்பாவியை கொன்றவருக்கு நீதிமன்றம் அதிக தண்டனை கொடுக்க வேண்டும் என்றுதான் வாதாடுவீர்கள்.

10. கால்நடைகள் பெருகும்:

உலகில் உள்ள ஒவ்வொருவரும் – சைவ உணவு மாத்திரம் உட்கொள்பவராக இருந்தால் – கால்நடைகளின் பெருக்கம் உலகத்தில் அதிகரிக்கும். ஏனெனில் கால்நடைகள் வேகமாக பெருகக் கூடியவை. தான் படைத்த படைப்புகளை இவ்வுலகில் எவ்வாறு சமநிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதை அறிந்தவன் அல்லாஹ் ஒருவன்தான். எனவேதான் மனித வர்க்கம் – மாமிச உணவு உட்கொள்ள இறைவன் அனுமதி அளித்திருக்கிறான்.

அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயத்தின் 168 வது வசனம்கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றது:

‘மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில் அனுமதிக்கப்பட்டவற்றையும் -பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்.’

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?

கேள்வி:

உங்கள் மார்க்கத்தில் கடவுள் ஏன் மனிதனாக வந்து நல்லவைகளை மக்களிடம் விளக்கவில்லை? 

பதில்: 

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை என்று கேட்பதே அடிப்படையில் தவறானதாகும். 

நீங்கள் ஒரு ஆட்டுப் பண்ணையோ, கோழிப்பண்ணையோ வைத்திருக்கிறீர்கள். அவற்றை நீங்கள் வழிநடத்திச் செல்வதற்காக நீங்கள் ஆடாக, அல்லது கோழியாக மாறத் தேவையில்லை. நீங்கள் நீங்களாக இருந்து கொண்டே ஆடுகளை நீங்கள் விரும்பியவாறு வழிநடத்த முடியும். இன்னும் சொல்வதானால் உங்களால் ஆடாக மாற இயலும் என்று வைத்துக் கொண்டால் கூட மாற மாட்டீர்கள்! மனிதனாக இருப்பதில் உள்ள பல வசதிகளை இதனால் இழக்க நேரிடும் என்று நினைப்பீர்கள்! மேலும் உங்களை விட பல விதத்திலும் தாழ்ந்த நிலையில் உள்ள ஜீவனாக நீங்கள் மாறத் தேவையில்லை. மாறவும் மாட்டீர்கள்! 

உங்களுக்கும், ஆடுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை விட பல்லாயிரம் வேறுபாடுகள் கடவுளுக்கும், மனிதர்களுக்குமிடையே இருக்கின்றன. 

எந்த விதமான பலவீனமும் இல்லாத கடவுளை, மலஜலத்தைச் சுமந்து கொண்டு எண்ணற்ற பலவீனங்களையும் உள்ளடக்கியுள்ள மனிதனாக மாறச் சொல்வதை விட கடவுளுக்குக் கண்ணியக் குறைவு வேறு இருக்க முடியாது. 

முதலமைச்சராக இருக்கும் ஒருவர் முதல்வராக இருந்து கொண்டு தான் நாட்டை ஆள வேண்டும். அவரைச் சாக்கடையைச் சுத்தப்படுத்தும் வேலைக்குப் போகச் சொல்லக் கூடாது. 

இருக்கின்ற தகுதியை விட இறக்கம் செய்வதை மனிதர்களே ஏற்க மாட்டார்கள் என்னும் போது கடவுள் எப்படித் தன்னை இழிவுபடுத்திக் கொள்வான்? 

இழிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்புவது எந்த வகையில் நியாயமானது? 

இப்படிச் சிந்தித்தால் கடவுள் கடவுளாக இருப்பது தான் பொருத்தமானது என்பதை விளங்கிக் கொள்ளலாம். 

கடவுள் மனிதனாக வருவான் என்ற கதவுகளைத் திறந்து வைத்து விட்டால் என்ன ஏற்படும் என்பதை நாட்டு நடப்புகளிலிருந்தே அறிந்து கொள்ளலாம். 

'நான் தான் கடவுள்; அல்லது கடவுளின் அவதாரம்' எனக் கூறி யாரேனும் ஏமாற்ற நினைத்தால் கடவுள் மனிதனாக வருவான் என்று நம்பாத முஸ்லிம்களைத் தவிர மற்ற அனைவரையும் எளிதில் ஏமாற்றி விட முடியும். அவர்களைச் சுரண்ட முடியும். 

போலிச் சாமியார்கள் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோமே இதற்கெல்லாம் கூட கடவுள் மனிதனாக வருவான் என்ற நம்பிக்கை தான் அடிப்படை. 

கடவுள் மனிதனாக வரவே மாட்டான் என்று உறுதியாக நம்பினால் மதத்தின் பெயரால் நடக்கும் ஏராளமான சுரண்டல்களைத் தவிர்க்கலாம். இன்னொரு கோணத்திலும் இது பற்றி ஆராயலாம். 

கடவுள் மனிதனாக வருகிறான் என்று வைத்துக் கொள்வோம். 

மனிதனாக வந்த காரணத்தினால் மனிதனைப் போலவே கடவுள் செயல்பட வேண்டும். உண்ண வேண்டும்; பருக வேண்டும்; மலஜலம் கழிக்க வேண்டும்; மனிதனைப் போலவே குடும்ப வாழ்க்கையிலும் ஈடுபட வேண்டும். 

சந்ததிகளைப் பெற்றெடுக்க வேண்டும். கடவுளால் பெற்றெடுக்கப்பட்டவனும் கடவுளாகவே இருப்பான்; கடவுளின் பிள்ளைகளான கடவுள்கள் கணக்கின்றி இப்பூமியில் வாழும் நிலை ஏற்படும். 

ஏதோ ஒரு காலத்தில் ஒரே ஒரு தடவை கடவுள் இப்பூமிக்கு வந்திருந்தால் கூட அவரது வழித்தோன்றல்கள் பல கோடிப் பேர் இன்றைக்கு பூமியில் இருக்க வேண்டும். ஆனால் கடவுளின் ஒரே ஒரு பிள்ளையைக் கூட நாம் பூமியில் காண முடியவில்லை. இதிலிருந்து கடவுள் மனிதனாக வரவே இல்லை என்று அறிந்து கொள்ளலாம். 

எனவே கடவுள் ஒரு காலத்திலும் மனித வடிவில் வந்ததுமில்லை. வருவது அவருக்குத் தகுதியானதும் அல்ல.

காஃபாவை வழிபடுவது ஏன்

கேள்வி இஸ்லாம் சிலை வணக்கத்தை தடை செய்திருக்கும்போது – இஸ்லாமியர்கள் கஃபாவை வழிபடுவதும் – கஃபாவுக்கு தலைவணங்குவதும் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?
பதில் :
கஃபா என்பது முஸ்லிம்கள் தொழுகையின் போது நோக்கி நிற்கும் திசையாகும்.முஸ்லிம்கள் கஃபாவின் திசையை நோக்கி தொழுதாலும் – கஃபாவை தொழுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இஸ்லாமியர்கள் அல்லாஹ்வைத்தவிர வேறு எவருக்கும் அல்லது வேறு எதற்கும் தலைவணங்குவதும் இல்லை. அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் அல்லது வேறு எதனையும் தொழுவதுமில்லை.
அருள்மறை குர்ஆன் இரண்டாவதுஅத்தியாயத்தின் 144 வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது: ‘(நபியே!.) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம். எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாகத் திருப்பி விடுகிறோம். ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்.’

1. இஸ்லாமிய மார்க்கம் ஒற்றுமையை வலியுறுத்துகிறது:

உதாரணத்திற்கு இஸ்லாமியர்கள் இறைவனைத் தொழ விரும்பினால் – ஒரு சாரார் வடக்கு நோக்கித் தொழுவதை விரும்பலாம். மற்றொரு சாரார் தெற்கு நோக்கித் தொழுவதை விரும்பலாம். ஆனால் அந்த ஏக இறைவனாம் அல்லாஹ்வைத் தொழுவதில் கூட இஸ்லாமியர்கள் ஒற்றுமையைக் கடைபிடிக்க வேண்டும்என்ற நோக்கத்தில்; இறைவனைத் தொழும்போது இஸ்லாமியர்கள் அனைவரும் கஃபாவை முன்னோக்க வேண்டும் என பணிக்கப்பட்டிருக்கிறார்கள். கஃபாவிற்கு மேற்குப்புறத்தில் வாழும் இஸ்லாமியர்கள் (அவர்கள் இருக்கும் இடத்திற்கு கிழக்குத் திசையில் கஃபா இருப்பதால்) கிழக்குத்திசை நோக்கியும் கஃபாவிற்கு – கிழக்குத் திசையில் வாழும் இஸ்லாமியர்கள் (அவர்கள் இருக்கும் இடத்திற்கு மேற்குத் திசையில் கஃபா இருப்பதால்) மேற்குத் திசை நோக்கியும் தொழுவார்கள்.

2. உலக வரை படத்தின் மத்தியில் கஃபா அமைந்துள்ளது.

இஸ்லாமியர்கள்தான் உலக வரைபடத்தை முதன் முதலாக வடிவமைத்தார்கள். உலக வரைபடத்தை வடிவமைத்த இஸ்லாமியர்கள் உலக உருண்டையின் தெற்குத் திசை வரைபடத்தின் மேல் பக்கம் இருப்பது போலவும் – வடக்குத் திசை வரைபடத்தின் கீழ்புறம் இருப்பது போலவும் வடிவமைத்தார்கள். அப்படி வடிவமைத்தபோது இஸ்லாமியர்கள் நோக்கித் தொழும் திசையான கஃபா – உலக வரைபடத்தின் மத்தியில் அமைந்திருந்தது. பின்னர் – மேற்கத்திய உலகின் வரைபடவல்லுனர்கள் உலக வரைபடத்தை வடிவமைத்தபோது – உலக உருண்டையின் வடக்குத் திசை வரைபடத்தின் மேல் பக்கம் இருப்பது போலவும் – தெற்குத் திசை வரைபடத்தின் கீழ்புறம் இருப்பது போலவும் வடிவமைத்தார்கள். மேற்கத்தியர்கள் உலக வரைபடத்தை மாற்றி வடிவமைத்தாலும் – கஃபா அமைந்தது உலக வரைபடத்தின் மத்தியில்தான்.

3. கஃபாவை சுற்றி வலம் வருவது ஓரிறையைச் சுட்டிக்காட்டவே!

இஸ்லாமியர்கள் மக்காவிற்கு செல்லும் பொழுது மஸ்ஜிதே ஹரத்தில் உள்ள கஃபாவை சுற்றி வலம் வருவார்கள். அவ்வாறு கஃபாவை சுற்றி வலம் வருவது ஓரிறை என்னும் ஏக தெய்வ கொள்கையில் இஸ்லாமியர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைச் சுட்டிக் காட்டவும் ஒரு இறைவனையே வணங்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டவுமே ஆகும். ஒரு வட்டம் ஒரே ஒரு மத்திய புள்ளியை மாத்திரம் கொண்டிருப்பது போன்று வணக்திற்குரிய இறைவனும் அல்லாஹ் ஒருவனே என்பதை உணர்த்த வேண்டியும் ஆகும்.

4. உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி ஒன்று:

ஹஜ்ர் அல் – அஹ்வத் என்னும் கருப்புக் கல்லைப்பற்றி அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்புத் தோழர் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி ஒன்றில் கீழக்கண்டவாறு அறிவிக்கிறார்கள்:
‘நல்லதோ அல்லது கெட்டதோ செய்ய முடியாத கல் என்பதை நான் அறிவேன். அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உன்னைத் தொட்டு – முத்தமிடுவதை நான் பார்த்திருக்காவிட்டால் நானும் உன்னைத் தொட்டு முத்தமிட்டிருக்க மாட்டேன்’ .
மேற்படி செய்தி ஸஹீஹுல் புஹாரி என்னும் செய்தி புத்தகத்தில் 56வது அத்தியாயத்தில் 675வது செய்திகாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

5. கஃபாவின் மேல் ஏறி நின்று தொழுகைக்காக அழைப்பு விடுத்தல்:

அண்ணல் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் – நபித் தோழர்கள் கஃபாவின் மேல் ஏறி நின்று தொழுகைக்காக அழைப்பு விடுத்துள்ளனர். கஃபாவை வணங்குவதாக இஸ்லாமியர்களை நோக்கிக் குற்றம் சுமத்துபவரை பார்த்து கேட்கிறேன் – எந்தச் சிலை வணங்கி அவர் வணங்கக் கூடிய சிலையின் மீது ஏறி நிற்பார்?

கஃபாவுக்குள்ளே என்ன இருக்கிறது?

கேள்வி:

நீங்கள் ஹஜ் செய்யும் போது கஅபாவில் உள்ள எங்களின் கடவுளைச் சுற்றி நான்கு புறமும் தடுப்புச் சுவர் கட்டி வழிபடுகிறீர்கள். கஅபா உங்களுக்கு உள்ளது அல்ல. இது இந்துக்களின் தெய்வம் என மராட்டிய இந்து நண்பர் கேட்கிறார். அவருக்கு என்ன விளக்கம் அளிக்கலாம்? 
– எம். சையத் அலி, சாக்கிநாக்கா, மராட்டியம். 

பதில்:

கஅபா என்னும் செவ்வகமான கட்டடத்துக்கு உள்ளே ஏதோ சிலைகள் இருப்பதாக நினைத்துக் கொண்டு அவர் இவ்வாறு உங்களிடம் கேட்டிருக்கிறார். 

கஅபா என்னும் கட்டடம் தொழுகை நடத்துவதற்காக முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களால் கட்டப்பட்டது. பின்னர் அது சிதிலமடைந்த பின் இப்ராஹீம் (அலை) அவர்களால் மறு நிர்மாணம் செய்யப்பட்டது. அவர்களெல்லாம் அக்கட்டடத்துக்குள்ளேயே தொழுதார்கள். நமது நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் எப்படி தூய இடமாக உள்ளதோ அது போன்ற தூய இடம் மட்டும் தான் உள்ளே இருக்கிறது. 

எந்தப் பள்ளிவாசலும் எப்படி எந்தச் சிலையும், வழிபாட்டுச் சின்னமும் இல்லாமல் உள்ளதோ அது போன்ற வெற்றிடம் தான் கஅபாவுக்கு உள்ளேயும் இருக்கிறது. 

மக்கள் தொகை பல கோடி மடங்கு பெருகி விட்ட நிலையில் அதனுள்ளே போய்த் தொழமுடியாது என்பதால் தான் உள்ளே யாரும் இப்போது அனுமதிக்கப்படுவதில்லை. 

கஅபாவுக்குள்ளே நான்கு சுவர்களும், தூண்களும் தவிர வேறு எதுவுமே இல்லை என்பதை அவருக்கு விளக்குங்கள்! உண்மையைப் புரிந்து கொள்வார். 

ஆண்டுக்கு ஒரு முறை கஅபாவை மன்னர் குடும்பத்தினர் கழுவி சுத்தம் செய்வார்கள். அந்த வீடியோ பதிவு இருந்தால் அவருக்குப் போட்டுக் காட்டி கஅபாவுக்குள் தூண்களைத் தவிர எதுவும் இல்லை என்பதை நிரூபித்துக் காட்டுங்கள்

அனைத்தையும் ஒரு கடவுளால் எப்படி கண்காணிக்க முடியும்?

கேள்வி: நாம் செய்வதை கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்றும், முழு உலகுக்கும் ஒரே ஒரு கடவுள் தான் என்றும் சொல்கிறீர்கள்.அப்படியானால், 'ஒருவர் ஒரு  குற்றத்தை ஒரு இடத்தில் செய்கிறார், மற்றொருவர் வேறு ஒரு இடத்தில்  ஒரு குற்றம் செய்கிறார்; ஒரே  கடவுளான அவன், அவைகளை எப்படிக் கண்காணிக்கமுடியும்?'
பதில்:கடவுளும் நம்மைப்  போன்றவரே.நமக்கு எது சாத்தியமோ அது தான்கடவுளுக்கும் சாத்தியம் என்ற நம்பிக்கையே இக்கேள்விக்கான அடிப்படையாக உள்ளது.
நமக்கு எது முடியுமோ அது தான் கடவுளுக்கும் இயலும் என்றால் அத்தகைய கடவுள்நமக்குத் தேவையில்லை.அத்தகையவர் மனிதராக இருக்க முடியுமே தவிர கடவுளாகஇருப்பதற்குத் தகுதியுடையவர் அல்லர்.
நமது இரண்டு பிள்ளைகள் ஒரு அறையில் சேட்டை செய்தால் நாம் இருவரையும்கண்காணிக்கிறோம்.அவர்களது நடவடிக்கைகளை ஒரே நேரத்தில் அறிந்துகொள்கிறோம்.
இறைவனைப் பொருத்த வரை இந்த முழு உலகமும் ஒரு அறையை விடச் சிறியதுதான்.
ஆப்கான் நாட்டின் பல இடங்களை சாட்டிலைட் மூலம் அமெரிக்கா பார்க்கிறது  என்பதை நம்ப முடிகின்ற நமக்கு அகில உலகையும் படைத்தவனின் ஆற்றல் அதை விடவும்குறைவானது  என்றும் நினைக்க முடிகிறது என்றால் இது ஆச்சரியமாகவே உள்ளது.

இஸ்லாம் மார்க்கமா? மதமா?

கேள்வி:

இஸ்லாமிய மதம் என்று கூறாமல், இஸ்லாமிய மார்க்கம் என்று கூறுவது ஏன்? 

பதில்:

முஸ்லிம்கள் இஸ்லாத்தை மதம் என்று கூறாமல் மார்க்கம் என்று கூறி வருகின்றனர். மற்ற மதத்தவர்கள் தங்கள் மதங்களை மதங்கள் என்று தான் கூறிக் கொள்கின்றனர். மார்க்கம் எனக் கூறிக் கொள்வதில்லை. 

மார்க்கம் என்றால் பாதை, வழி என்பது பொருள். மனிதன் உலகில் வாழும் போது எந்தப் பாதையில் சென்றால் வெற்றி பெறலாம்? அவன் வாழ்க்கையில் சந்திக்கின்ற எண்ணற்ற பிரச்சனைகளின் போது எந்த வழியில் செல்வது தீர்வாக அமையும்? என்பதற்கெல்லாம் விடை இருந்தால் அதை மார்க்கம் எனக் கூறலாம். 

சிறுநீர் கழித்தல் முதல், மனைவியுடன் தாம்பத்தியம் கொள்வது வரை அனைத்து விஷயங்களுக்கும் இஸ்லாத்தில் வழிகாட்டல் உள்ளது. அரசியல், பொருளாதாரம், குற்றவியல் சட்டங்கள், சிவில் சட்டங்கள், விசாரணைச் சட்டங்கள், உள்ளிட்ட எல்லாப் பிரச்சினைகளுக்கும் இஸ்லாத்தில் வழிகாட்டுதல் உள்ளது. 

உலகில் உள்ள ஏனைய மதங்கள் கடவுளை வழிபடும் முறைகளையும், புரோகிதர்கள் தொடர்புடைய சடங்குகளையும் மட்டுமே கூறுகின்றன. இதன் காரணமாகத் தான் இஸ்லாம் மார்க்கம் எனவும் ஏனையவை மதங்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றன. 

மதம் என்பது வெறி என்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. (உம்: மதம் பிடித்த யானை) இதன் காரணமாகவும் முஸ்லிம்கள் இவ்வார்த்தையைத் தவிர்க்கின்றனர்.

இஸ்லாத்தில் ஏன் உருவ வழிபாடு இல்லை? நபிகள் நாயகத்துக்கு ஏன் உருவமில்லை?

உருவ வழிபாட்டுக்கு எந்த  நியாயமும் இல்லை என்பதால் இஸ்லாத்தில் உருவ வழிபாடு இல்லை!  
நாம் யாரும் கடவுளை கண்டதில்லை ! கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்என்பது இந்த மண்ணின் பழமொழி ! யாரும் காணாத கடவுளுக்கு உருவம் கொடுப்பதாக இருந்தால் அது மனிதனின் கற்பனையாகத்தான் இருக்க முடியும் !
இப்படி ஆளுக்கு ஆள் தங்கள் கற்பனைப்படி  உருவம் கொடுக்க  ஆரம்பித்ததன் விளைவுதான் இங்கு இவ்வளவு கடவுள்கள் உருவாகக் காரணம் ஆனது!
கடவுள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் எனும் பண்பை  கற்பனை  செய்து அனைத்தையும் பார்க்க வேண்டுமெனில் நான்கு பக்கமும் முகமும் கண்ணும் இருக்க வேண்டுமே எனும் கற்பனைதான் நான்கு முகக் கடவுள்!
கடவுள் தீயவர்களை கடுமையாக  தண்டிப்பவர்  எனும்  பண்பை தண்டிப்பதென்றால் ஆயுதம் வேண்டுமே எனும் மனிதனின் கற்பனைதான் கையில் சூலம், வாள், வேல், கதை, சக்கரம்   எனும் ஆயுதங்கள்  கொண்ட கடவுள்கள் ! அதன் விளைவுதான் எந்திரத் துப்பாக்கியுடன் விநாயகர் பாகுபலி விநாயகர் எல்லாம்!
மக்களை கடவுளின் பெயரால் பிரிக்கும்  இந்த வழி கேட்டைக்  களைய இஸ்லாம் பலகடவுள் கோட்பாடு உருவாகக் காரணமான  உருவ வழிபாட்டை  முளையிலேயே கிள்ளி  எறிகிறது !
மேலும்  இஸ்லாத்தில்   மட்டுமல்ல எந்த மதத்திலும் உருவ வழிபாடுக்கு ஆதாரம் இல்லை !

அவன் வடிவத்தைக் காண முடியாது !  [ஸ்வதேஸ்வரா உபநிஷத்] 

யாதொரு விக்கிரஹத்தை உருவாக்கி நமஸ்கரிக்க வேண்டாம்! [பைபிள் யாத்திராகமம் 20:14] 
மேலும் உருவவழிபாடு என்பது  மனிதனின் உள்ளத்திலும் இல்லை ! 
எப்படி சொல்கின்றீர்கள் ?
உருவங்களை வழிபடுவோர் அந்த உருவங்களுக்கு முன்னால் நிற்கும் போது கண்களை மூடி வணங்குவதை காணலாம்! கண்களை மூடி வணங்குவதற்கு எதற்கு உருவம்? ஆக மனிதன் உள்ளத்தில் இயற்கையாக இருப்பது அரூப வழிபாடுதான் ! இவனாகவே செயற்கையாக உருவாக்கி கொண்டது தான் உருவ வழிபாடு!

சரி !  நபிகளாருக்கு ஏன் உருவம் இல்லை ?
கடவுளைப் பற்றி சொல்ல வந்தவர்கள் எல்லோரையும் அவர்களது மறைவுக்குப் பின் மக்கள் கடவுளாக்கி விட்டார்கள்! உதாரணம்  இயேசு அவர் போதித்தது இறைவன் ஒருவன் எனும் கொள்கையைதான் போதிக்க வந்தார் ! இன்றைக்கு அவர் கடவுளாக்கப்பட்டு விட்டார் !
புத்தர் கடவுளைப் பற்றி பேசவே இல்லை ! ஆனால் அவரும்  கடவுளாக்கப்பட்டு சிலை வழிப்பாட்டை சொல்லாத அவருக்குதான் உலகில்  அதிகமான சிலைகள் வைத்து வணங்கப்படும் ஒருவராகி விட்டார் !
இதற்கெல்லாம் காரணம் இவர்கள் உருவத்தை விட்டு சென்றதுதான் ! ஆனால் நபிகள் நாயகம் உருவ வழிபாட்டுக்கான இந்த வாசலை அடைக்கிறார்கள் ! அதனால் தான் அவருக்கு முன்னால் வாழ்ந்த ஏசுவுக்கும் புத்தருக்கும் சிலை இருக்கிறது நபிகளாருக்கு சிலை இல்லை ! கற்பனையாக யாரும் வரைந்தாலும், சிலை வடித்தாலும் இஸ்லாமிய சமுதாயம்  அனுமதிப்பதில்லை!  
இப்போது சொல்லுங்கள் நபிகளார் உருவத்தை விட்டு செல்லாதது சரியா?  தவறா ? 

இறைவனை அல்லாஹ் என்று அழைப்பதேன்?

கேள்வி: இறைவனை கடவுள், ஹுதா, ஏர்க் போன்று அவரவர்களும் தங்கள் தாய்மொழியில் அழைக்கின்ற போது, நீங்களோ அல்லாஹ்' என்று அரபியில் மட்டுமே அழைக்கக் காரணம் என்ன? 

பதில்: ஏக இறைவனைக் குறிக்கும் எந்தச் சொல்லையும் எந்த மொழியிலும் நாம் பயன்படுத்தலாம்.

நபிகள் நாயகத்துக்கு முன்னர் அனுப்பப்பட்ட இறைத் தூதர்கள் அவரவர் மொழியில் தான் கடவுளைக் குறிப்பிட்டனரே தவிர அல்லாஹ்' என்று அரபு மொழியில் குறிப்பிடவில்லை.குறிப்பிட்டிருக்கவும் முடியாது. கடவுள் கூறினார் என்று நான் பேசும் போது அகில உலகையும் படைத்துப் பரிபாலிக்கும் ஒரே இறைவனைத் தான் நான் குறிப்பிடுகிறேன் என்று நீங்கள் விளங்கிக் கொண்டால் அது போன்ற சந்தர்ப்பங்களில் அவ்வாறு பயன்படுத்தலாம்.

ஏராளமான கடவுள்கள் இருப்பதாக நம்புகின்ற மக்களிடம் பேசும் போதுஅல்லாஹ்' என்று கூறினால் தான் ஏக இறைவனைக் குறிப்பிடுவதாக அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

கடவுள் சொன்னார் எனக் கூறினால் எந்தக் கடவுள்? ராமரா? கிருஷ்னரா? சிவனா? விஷ்ணுவா? முருகனா? விநாயகரா? இயேசுவா? மேரியா? என்றெல்லாம் குழப்பம் அடைவார்கள். எனவே பல கடவுள் நம்பிக்கையுடைய மக்களிடம் பேசும் போது அல்லாஹ் என்று கூறுவது தான் பொருத்தமானது.

தேவைகளற்ற இறைவனுக்கு வணக்க வழிபாடுகள் ஏன்?


அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் என்பது இஸ்லாத்தின் முக்கியக் கோட்பாடு என்பதில் சந்தேகமில்லை. தேவையுள்ளவன் கடவுளாக இருப்பதற்குத் தகுதியற்றவன் என்று இஸ்லாம் உறுதிபடக் கூறுகிறது. 

இறைவனைத் தொழ வேண்டும் எனவும், இறைவனுக்காக அறுத்துப் பலியிட வேண்டும் எனவும் இஸ்லாம் கூறுவதால் அல்லாஹ் தேவைகள் உள்ளவன் என்று கருத முடியாது. 

இறைவனைத் தொழுவதில்லை என்று உலக மக்கள் அனைவரும் ஏகமனதாக முடிவு செய்தாலும் இறைவனுக்கு எந்தக் குறைவும் ஏற்படப் போவதில்லை. இறைவனை அனைவரும் வணங்க வேண்டும் என்று ஏகமனதாகத் தீர்மானம் போட்டாலும் இறைவனது மதிப்பு இதனால் அதிகமாகி விடப் போவதில்லை. இந்தக் கருத்தில் நபிகள் நாயகத்தின் பொன்மொழியும் உள்ளது. (பார்க்க : நூல் முஸ்லிம் 4674)

தொழுகை உள்ளிட்ட வணக்கங்களை நிறைவேற்றுமாறு இறைவன் கட்டளையிடுவது அவனுக்கு அது தேவை என்பதற்காக அல்ல. மாறாக, நிறைவேற்றும் மனிதனின் நன்மைக்காகவே. 

இன்னொருவரின் நன்மைக்காக அவரை ஒரு காரியத்தில் ஈடுபடுமாறு நாம் கூறினால் நமக்கு அந்தக் காரியத்தின் பால் தேவையுள்ளது என்று எடுத்துக் கொள்ள மாட்டோம். 

உங்கள் மகன் பரீட்சையில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று வற்புறுத்துகிறீர்கள்! போட்டிகளில் அவன் வெற்றி பெற வேண்டும் என்று ஆர்வமூட்டுகிறீர்கள்! இவையெல்லாம் உங்கள் தேவைக்காக அல்ல! மாறாக உங்கள் மகனின் நன்மைக்காகவே இவ்வாறு வலியுறுத்துகிறீர்கள்! 

'மகன் நல்ல நிலையில் இருந்தால் நம்மை நன்றாகக் கவனிப்பான்' என்ற எதிர்பார்ப்பாவது இதில் மறைந்து நிற்கும். 

அல்லாஹ், நம்மிடம் எதிர்பார்க்கும் வணக்க வழிபாடுகளில் இது போன்ற எதிர்பார்ப்புகள் கூட கிடையாது. 

எனவே, நமது நன்மைக்காக இடப்படும் கட்டளைகளை கட்டளை பிறப்பித்தவனின் தேவைக்காக இடப்பட்ட கட்டளை என்று கருதுவது தவறாகும்.[2]

‪அல்லாஹ் என்றால் முஸ்லிம்களின்‬‬ ‪‎கடவுளா?


"‪அல்லாஹ்‬‬" எனும் சொல், முஸ்லிம்மல்லாத மக்களாலும் (Non Muslims), இன்னும் பல முஸ்லிம்களாலே கூட தவறாக புரிந்துக் கொள்ளப்பட்ட சொல் ஆகும். "அல்லாஹ்" என்றால்‪ முஸ்லிம்களின் கடவுள்‬‬ அல்லது ‪ அரபுநாட்டு கடவுள்‬‬ என்றெல்லாம் பெரும்பாலான மக்கள் மனதில் எண்ணம் கொண்டுள்ளனர். அவ்வாறான தவறான சிந்தனையை நீக்குவதற்கே இந்த பதிவு.
இப்போது "‪கடவுள்‬‬" என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம் , கடவுள் என்றால் தமிழா்களின் கடவுள் என அர்த்தமா? அல்லது‪ தமிழ் மொழியில்‬‬ இறைவனை ‪ ‎குறிக்க‬‬ ஒரு சொல்லா??
ஆங்கிலத்தில் ‪God‬‬ என்கிறோமே, அப்படியெனில் ஆங்கிலேயனின் கடவுள் என அர்த்தமா? அல்லது ஆங்கில மொழியில் கடவுள் என அர்த்தமா?? ஆங்கில மொழியில் கடவுளை குறிக்க தானே God என்போம்.
ஆக, இதுபோல தான் அல்லாஹ் என்றால் அரபு நாட்டவர்களின் கடவுள் அல்ல, அரபியில் "‎Supreme‬ God"ஐ அதாவது உன்னையும் என்னையும் இந்த உலகத்தையும் பிரபஞ்சத்தையும் படைத்த ‪#‎அந்த இறைவனை‬‬ குறிக்கும் சொல் தான் அல்லாஹ்.
அல்லாஹ் என்று ஏன் நம் படைப்பாளனை அரபியில் அழைக்க வேண்டும், ‪தமிழில்‬‬ எத்தனையோ பெயர்கள் இருக்கிறதே, அதில் ஏதாவது ஒரு பெயரை வைக்கலாமே எனவும் உங்களுக்கு கேள்வி எழலாம்???
இந்த கேள்விக்கு பதில் காணவேண்டுமென்றால் ஒரு அடிப்படையான விசயமும் தெரிந்துக் கொள்ளவேண்டியது அவசியம்.

இஸ்லாமிய நம்பிக்கை படி, நம்மை படைத்தவனுக்கு ஐந்து இலக்கணங்களை வரையறுக்கிறது. அவை (1) ஏகத்துவம்(நம்மை படைத்தவன் ,வணக்கத்துக்குரியவன் ஒருவன் தான்) (2) இவ்வுலகில்படைப்பாளனை பாா்க்கமுடியாது (3)நாம் பல தேவைகளுக்கு மத்தியில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உயிர் வாழ தண்ணீர்,உணவு,சூரியன்,மரம் செடி கொடிகள் எல்லாம் தேவை.. இது போன்று கடவுளுக்கு தேவைகள் இருக்காலாமா??? தேவைகள்என்பது படைத்தவனுக்கு இல்லை (4)அந்த ஏக இறைவனுக்கு நம்மை போலவே (பெற்றோர், குழந்தைகள், ஓரு/பல்வேறு மனைவிகள்) குடும்பங்கள், ஆசைகள்,இச்சைகள், படைத்தவனுக்கு இருக்கக்கூடாது, ஆக படைப்பாளன் யாரையும் பெறவுமில்லை,யாராலும் பெறப்படவுமில்லை (5) படைப்பாளனுக்கு எவரும் நிகரில்லை
தமிழ் மொழியில் கடவுளை குறிக்க ‪‎பல பெயர்கள்‬‬இருக்கின்றன, கடவுள், தெய்வம்,நாதன்,சக்தி,இறைவன்,பகவான்,தேவன் போன்றவைகள். ஆனால் இப்பெயர்களை சற்று ஆராய்ந்து பார்த்தோமேயானால் இப்பெயர்களில் ‪‎பன்மைகள்‬‬ வரக்கூடியதாக உள்ளது. உதாரணமாக  தெய்வம் என வார்த்தை, ‪‎தெய்வங்கள்‬‬ என பன்மையாகிறது, கடவுள் - ‪கடவுள்கள்‬‬, தேவன் - ‪தேவர்கள்‬‬;God-Gods; (இன்னும் இச்சொற்களை நடிகர்களுக்கும், தலைவர்களுக்கும் கூட உபயோகப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது)
இஸ்லாத்தின் மிகமுக்கியமான கொள்கை ‪‎ஏகத்துவம்‬‬, பன்மையே கிடையாது, பன்மை என்பது படைத்தவனை கொச்சைப்படுத்துவதாகும்.
இன்னும் சில சொற்களில் ‪பாலினத்திலும்‬‬ வலைந்து கொடுக்கிறது. உதாரணமாக இறைவன் - ‪‎இறைவி‬‬; தேவன் - தேவி; கடவுள் - ‪‎பெண்‬‬ கடவுள்; God-‪‎Goddess‬‬; ஆண் பெண் என்பது ‪‎உறுப்பால்‬‬ ஆன வித்தியாசம் தான், நம்மை போன்று தான் கடவுளும் என சொல்வது கடவுளை கொச்சைப்படுத்துவது ஆகாதா???
ஆனால் அல்லாஹ் என்ற சொல்லுக்கோ, ‪‎பன்மையாலோ‬‬,‪‎பாலினத்தாலோ‬‬ வலைந்து கொடுக்கவில்லை அவ்விலக்கணத்தின்படி, ஆகையால் ‪‎படைத்தவனை குறிக்க‬‬சிறந்த வார்த்தையாக உள்ளதே என பயன்படுத்தி வருகிறோம். அவ்வளவு தான்.
ஆக முஸ்லிம்கள் வேறு ஏதோ கடவுளை வணங்கவில்லை ; உங்களையும் எங்களையும் படைத்த அந்த படைப்பாளனையே வணங்குகிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) பல திருமணம் செய்தது ஏன்?





நபிகள் நாயகம் (ஸல்) பல திருமணம் செய்தது ஏன்?

நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்); இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்); மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
(அல்குர்ஆன் : 33:50)

இவ்வசனத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் எவ்வித எண்ணிக்கைக் கட்டுப்பாடின்றி திருமணங்கள் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்ட சிறப்பு அனுமதி எனவும் கூறப்பட்டுள்ளது.

திருக்குர்ஆன் இறைவேதம் எனவும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதர் எனவும் ஏற்றுக் கொள்ள எண்ணற்ற சான்றுகள் குர்ஆனில் இருந்தாலும் இந்த ஒரு விஷயம் மட்டும் முஸ்லிமல்லாத மக்களுக்கு உறுத்தலாகவே அமைந்துள்ளது.

அதிகமான பெண்களுடன் வாழ்வதற்காக முஹம்மது நபி தமக்கு வசதியான இந்தச் சட்டத்தை உருவாக்கிக் கொண்டார் என்று சிலர் விமர்சனமும் செய்கின்றனர்.

தனக்கு வசதியான சட்டங்களை தனக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கிக் கொண்டார்கள் என்ற வாதம் முற்றிலும் தவறாகும். ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சிறப்பாக இன்னும் பல சட்டங்கள் உள்ளன. அவை யாவும் அவர்களுக்கு மட்டும் அதிகச் சிரமத்தைச் சுமத்துபவையாக உள்ளன.

* ஸகாத் எனும் அரசுக் கருவூலத்திலிருந்து தேவையுள்ளவர்கள் உதவி பெறலாம் என்று சட்டம் கொண்டு வந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமும், தமது குடும்பத்தினரும் அரசுக்கருவூலத்தில் இருந்து எதையும் பெறுவது கூடாது என்ற விதியை ஏற்படுத்தினார்கள்.

* தனது மரணத்துக்குப் பின் தோன்றக் கூடிய தனது வழித்தோன்றல்கள் அனைவரையும் ஸகாத் நிதியில் உதவி பெறக்கூடாது என்ற சட்டம் கட்டுப்படுத்தும் என்று சட்டம் கொண்டு வந்தார்கள்.

* தமக்குச் சொந்தமான உடமைகள் அனைத்துக்கும் தமது வாரிசுகள் உரிமை கொண்டாடக் கூடாது என்று அறிவித்து அரசாங்கத்தில் சேர்த்து விட வேண்டும் என்று தனக்குப் பாதகமாக சிறப்புச் சட்டம் போட்டார்கள்.

* தாமும் தமது பரம்பரையினரும் யாரிடமும் எக்காலத்திலும் தர்மம் பெறக் கூடாது என்பதும் அவர்கள் தமக்காகப் போட்டுக் கொண்ட சிறப்புச் சட்டங்களில் ஒன்றாகும்.

* மற்றவர்கள் ஐந்து நேரம் தொழ வேண்டுமென்றால் தமக்கு மட்டும் நள்ளிரவில் தொழும் ஆறாவது தொழுகையை மேலதிகமாகக் கடமையாக்கிக் கொண்டார்கள்.

* இரவு பகல் 24 மணி நேரமும் மற்றவர்கள் நோன்பு நோற்கக் கூடாது என்று தடுத்து விட்டு அந்தச் சிரமத்தைத் தமக்கு மட்டும் சுமத்திக் கொண்டார்கள்.

இப்படி பல விஷயங்களில் அவர்கள் தமக்கு மட்டும் சிறப்புக் சட்டமாக அறிவித்தவை சலுகைகளாக இருக்கவில்லை. அவர்களுக்குச் சிரமமானவைகளாகவே இருந்தன.

மேலும் தம்மை இறைவன் கண்டித்ததாக அவர்கள் அறிவித்த பல வசனங்கள் அவர்களின் கவுரவத்தைப் பாதிக்கும் வகையில் இருந்தன. அவை அனைத்தையும் மக்கள் மத்தியில் வைத்தார்கள்.

முன்னுரையில் இது இறைவேதம் என்ற தலைப்பில் எதிர்பார்ப்புகள் இல்லை என்ற உட்தலைப்பில் இதை விளக்கியுள்ளோம். 168 வது குறிப்பிலும் இது விளக்கப்பட்டுள்ளது.

இப்படி வாழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகமான பெண்களை அனுபவிக்க தமக்கு வசதியான சட்டங்களைப் போட்டுக் கொண்டார்கள் என்று சொல்ல எந்த நியாயமும் இல்லை.

இறைவன் அவர்களைக் கண்டித்தால் அதையும் மக்களிடம் சொல்கிறார்கள். கூடுதல் சுமையை இறைவன் சுமத்தினால் அதையும் ஏற்றுக் கொண்டு மக்களிடம் சொல்கிறார்கள். அது போல் மனைவியர் விஷயத்தில் கட்டுப்பாடு இல்லை என்ற சட்டமும் இறைவன் புறத்திலிருந்து வந்ததால் அதையும் மக்கள் மத்தியில் சொல்லி விடுகிறார்கள்.

திருமணம் செய்யாமல் அந்தப் புறத்தில் அந்தக் கால மன்னர்கள் சல்லாபத்தில் ஈடுபட்டது போல் அவர்கள் நடக்கவில்லை,

இந்த விஷயங்களைக் கவனத்தில் வைத்துக் கொண்டு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பல திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டது ஏன் என்பதைப் பார்ப்போம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காமத்தின் காரணமாக பல திருமணங்களைச் செய்யவில்லை என்று நிச்சயமாக நம்மால் சொல்ல முடியும். ஏனெனில், அவர்கள் பிறந்தது முதல் தம்மை இறைத்தூதர் என்று அறிவிக்கும் வரை சொந்த ஊரிலேயே வாழ்ந்தார்கள்.

எந்தவொரு மனிதனும், தன்னுடைய நாற்பது வயது வரை அப்பழுக்கில்லாமல் வாழ்வது சாத்தியமற்றதாகும். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பதாவது வயதில் தம்மை இறைத்தூதர் என்று மக்களிடம் சொன்னபோது, அதை நிரூபிப்பதற்கான முக்கியச் சான்றாக, தம்முடைய முந்தைய வாழ்க்கையைத்தான் முன்வைத்தார்கள்.

"உங்களுடன் பல ஆண்டுகள் நான் வாழ்ந்திருக்கிறேன். என்னிடம் தரங்கெட்ட எந்தச் செயலையாவது நீங்கள் கண்டதுண்டா? 40 ஆண்டுகள் கட்டுப்பாடான, தூய்மையான வாழ்க்கை வாழ்ந்த நான் பொய் சொல்வேனா?' என்ற அடிப்படையில் தான் தமது நம்பகத் தன்மையை மக்களிடம் நிரூபித்தார்கள்.

10:16 வசனத்திலும் 212 வது குறிப்பிலும் இது பற்றி விபரமாக அறியலாம்.

தம்மை ஆரம்பம் முதல் கண்டு வந்த அந்த மக்கள் மத்தியில் அந்த அளவு ஒழுக்கமான வாழ்வை நபிகள் நாயகம் (ஸல்) வாழ்ந்ததால் தான் இப்படி அவர்களால் அறைகூவல் விட முடிந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கொள்கையை ஏற்காதவர்கள் கூட, புது மார்க்கம் என்பதற்காக எதிர்த்தார்களே தவிர, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடத்தையில் ஐயம் எழுப்பி யாரும் எதிர்க்கவில்லை.

பாலியல் குற்றங்களைச் செய்யத் தூண்டும் இளம் பருவத்தில் அப்பழுக்கற்ற வாழ்க்கை வாழ்ந்தவருக்கு, 60 வயதில் திடீரென்று பெண் மோகம் ஏற்பட்டிருக்குமா என்று சிந்தித்தாலே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல திருமணங்கள் செய்ததற்குக் காமம் காரணமல்ல என்பதை விளங்கலாம்.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது 25வது வயதில் தம்மை விட வயதில் மூத்தவரான கதீஜா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள். தமது 50 வயது வரை அந்த ஒரு மனைவியுடன் மட்டுமே வாழ்ந்தார்கள்.

இல்லற சுகம் அதிகம் தேவைப்படுகின்ற 25 முதல் 50 வயது வரையிலான காலகட்டத்தில் தம்மை விட அதிக வயதுடையவருடன் மட்டும் வாழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்மோகம் கொண்டவராக எப்படி இருக்க முடியும்?

கதீஜா (ரலி) அவர்கள் மரணித்த பிறகு, தமது 50வது வயதில் தம்மை விட ஐந்து வயது அதிகமான, 55 வயதான ஸவ்தாவை மணந்தார்கள்.

பெண்மோகம் தான் இத்திருமணத்திற்குக் காரணம் என்றால் 55 வயதுடைய ஒரு பெண்ணை யாரும் திருமணம் செய்ய மாட்டார்கள்.

இதன் பின்னர் சிறுமியான ஆயிஷா (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்தார்கள். இத்திருமணத்திற்கும் பெண் மோகத்தைக் காரணமாகக் கூற முடியாது. ஏனெனில் பெண் மோகத்தில் திருமணம் செய்பவர் உடனே அனுபவிக்கும் வகையில்தான் பெண்களைத் தேர்வு செய்வார். உடலுறவுக்குத் தகுதி பெறாத சிறுமியை யாரும் மணந்து கொள்ள மாட்டார்கள்.

சிறுமியை ஏன் திருமணம் செய்ய வேண்டும் என்ற கேள்வியும் பரவலாக எழுப்பப்படுகிறது. எனவே இது பற்றியும் விபரமாக அறிந்து கொள்வது நல்லது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட உடன் இஸ்லாத்தின் அனைத்துச் சட்டங்களும் ஒரே நேரத்தில் அருளப்படவில்லை. சிறிது சிறிதாக 23 ஆண்டுகளில் ஒவ்வொரு சட்டமாகவே அவர்களுக்கு அருளப்பட்டது.

எனவே இறைவனிடம் இருந்து எது குறித்து சட்டம் அருளப்படவில்லையோ அந்த விஷயங்களில் அந்தச் சமுதாயத்தில் நிலவிய பழக்க வழக்கங்களின்படியே அவர்கள் நடந்து கொண்டனர். அன்றைய மக்கள் மதுபானம் அருந்துவோராக இருந்தனர். அது குறித்து இறைவனின் தடை உத்தரவு வரும் வரை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களும் தங்களின் பழைய வழக்கத்தையே தொடர்ந்தனர். இறைவன் தடை செய்யாததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அதைத் தடை செய்யவில்லை.

அது போல் தான் சிறுவயதுப் பெண்ணைத் திருமணம் செய்வது அன்றைய அரபுகள் மத்தியில் சாதாரணமாக நடந்து வந்தது. சிறுமிகளைத் திருமணம் செய்யக் கூடாது என்ற தடை விதிக்கப்படுவதற்கு முன் அந்த சமுதாய வழக்கப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சிறு வயதுடைய ஆயிஷா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள்.

பின்னர் திருமணத்திற்கான ஒழுங்குகள் இறைவன் புறத்தில் இருந்து அருளப்பட்டன. விபரமில்லாத சிறுமிகளைத் திருமணம் செய்வதை இஸ்லாம் முற்றாகத் தடை செய்தது.

இதைப் பின்வரும் சான்றுகளிலிருந்து அறியலாம்.

நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை என்று 4:19 வசனம் கூறுகிறது.

அப்பெண்கள் உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை எடுத்துள்ளார்கள் என்று 4:21 வசனம் கூறுகிறது.

கன்னிப் பெண்ணாயினும், விதவையாயினும் சம்மதம் பெற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியபோது, "கன்னிப் பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே?''என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அவளது மௌனமே அவளது சம்மதமாகும்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),

நூல்: புகாரி 6971, 6964, 5137

என் தந்தை எனது சம்மதம் பெறாமல் மணமுடித்து வைத்தார். அதனை விரும்பாத நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இதைக் கூறியபோது, அத்திருமணத்தை ரத்து செய்தார்கள்.

அறிவிப்பவர்: கன்ஸா பின்த் கிதாம் (ரலி)

நூல்: புகாரி 5139, 6945, 6969

பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன.

திருக்குர்ஆன் 2:228

திருமணம் வாழ்க்கை ஒப்பந்தம் எனவும், பெண்களுக்கு கடமைகளும், உரிமைகளும் உள்ளன என்றும், அவர்களின் சம்மதம் பெற வேண்டும் என்றும் மேற்கண்ட சான்றுகளில் இருந்து அறிந்து கொள்ளலாம். ஒப்பந்தம் என்றால் அந்த ஒப்பந்தத்தின் பொருளை இருவரும் அறிய வேண்டும். சம்மதம் என்றால் எதற்குச் சம்மதிக்கிறோம் என்று இருவருக்கும் தெரிய வேண்டும். கடமைகளும் உரிமைகளும் உள்ளன என்றால் அவற்றைத் தெரிந்து கொள்ளும் அளவுக்கு முதிர்ச்சி அடைய வேண்டும்.

சிறுவனுக்கோ, சிறுமிக்கோ திருமணம் செய்யக் கூடாது என்ற சட்டம் இதன் மூலம் நடைமுறைக்கு வந்தது.

இந்தச் சட்டம் இறைவன் புறத்திலிருந்து வருவதற்கு முன்னர் அந்தச் சமுதாயத்தில் பரவலாக பால்ய வயது திருமணம் நடந்து வந்தது. அந்த வழக்கப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் திருமணம் செய்தார்கள்.

இத்திருமணம் நடந்த பிறகும் ஆயிஷா (ரலி) அவர்கள் தமது தந்தை வீட்டில்தான் இருந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து, மதீனா சென்ற பிறகுதான் ஆயிஷா (ரலி) பருவமடைகிறார்கள். அதன் பிறகுதான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷாவுடன் இல்லறம் நடத்தினார்கள்.

காமத்திற்காகத் திருமணம் செய்பவர் உடனடியாக அதை நிறைவேற்றிக் கொள்ளத்தக்க பெண்ணைத் தான் திருமணம் செய்வார்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உயிர் நண்பராக இருந்ததால் தமக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் ஒரு உறவை ஏற்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டு, அபூபக்ர் (ரலி) அவர்கள் வற்புறுத்தியதன் பேரில் அவரது மகளாகிய ஆயிஷா (ரலி) அவர்களை அன்றைய சமுதாயத்தில் இது வழக்கத்தில் இருந்ததால் அவர்கள் மணந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது 56ஆம் வயதில் ஹஃப்ஸா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள். இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மற்றொரு உயிர் நண்பரான உமர் (ரலி) அவர்களின் புதல்வியாவார்.

ஹஃப்ஸா (ரலி) அவர்களது கணவர் உஹதுப் போரில் வீர மரணமடைந்ததால் விதவையானார்கள்.

தமது விதவை மகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணந்து கொண்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தமது உறவு பலப்படும் என்று விரும்பிய உமர் (ரலி) அவர்கள் வற்புறுத்தியது தான் இத்திருமணத்திற்குக் காரணம்.

நபிகள் நாயகம் (ஸல்) தமது 56ஆம் வயதில் ஸைனப் பின்த் ஹுஸைமாவை மணந்தார்கள். இவர் அதற்கு முன்பு ஒன்றன் பின் ஒன்றாக மூன்று கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்டு, மூவரும் அடுத்தடுத்து மரணித்ததால் விதவையாக இருந்தார். ஏறக்குறைய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வயதை ஒத்தவராக ஸைனப் பின்த் ஹுஸைமா (ரலி) இருந்தார்கள். மூன்று கணவருடன் வாழ்ந்த, சுமார் 56 வயதுடைய ஒரு பெண்ணை, யாரேனும் பெண்மோகத்திற்காகத் திருமணம் செய்வார்களா?

அடிமையாக இருந்த ஸைத் என்பாரை, அன்றைய அரபுகளின் வழக்கப்படி நபிகள் நாயகம் (ஸல்) வளர்ப்பு மகனாகத் தத்தெடுத்துக் கொண்டார்கள். (தத்தெடுத்தல் பின்னர் தடுக்கப்பட்டு விட்டது.)

உயர்ந்த குலம் என்று கருதப்பட்ட தமது குலத்தைச் சேர்ந்தவரும், தமது மாமி மகளும், தமது பொறுப்பில் வளர்ந்தவருமான ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்களை, முன்னாள் அடிமையான ஸைதுக்கு மணமுடித்து வைத்தார்கள். இதன் மூலம் அன்றைய அரபுகளிடம் இருந்த குலப்பெருமைக்கு சமாதி கட்டினார்கள்.

ஆனால் இவ்விருவருக்கும் ஒத்துப்போகவில்லை. இருவரும் இணைந்து வாழ்வதற்கு நபிகள் நாயகம் (ஸல்) எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. மனைவியை விவாகரத்துச் செய்வதில் ஸைத் உறுதியாக இருந்தார். ஸைனப் (ரலி) 35வது வயதில் விவாகரத்துச் செய்யப்பட்டு, திக்கற்றவராக இருந்தார். எனவே அவரை நபிகள் நாயகம் (ஸல்) திருமணம் செய்தார்கள்.

இதற்கும் பெண்மோகத்தைக் காரணமாகக் கூற முடியாது. ஏனெனில் ஸைனப் மீது அவர்கள் ஆசைப்பட்டிருந்தால் 18 முதல் 30 வயது வரை பெண்களின் அழகு பிரகாசிக்கும் காலகட்டத்தில் ஸைனபை மணந்திருப்பார்கள்.

தமது பொறுப்பிலிருந்த உறவுக்காரப் பெண்ணுக்குத் தாம் செய்து வைத்த திருமண வாழ்வு மகிழ்ச்சிகரமாக அமையவில்லையே என்ற அனுதாபமே இத்திருமணத்திற்குக் காரணமாக இருக்க முடியும்.

அடுத்ததாக, உம்மு ஸலமா (ரலி) அவர்களை மணந்து கொண்டார்கள். இவரது கணவர் அபூஸலமா (ரலி) மரணித்த பின் ஏழாவதாக இவரைத் திருமணம் செய்து கொண்டார்கள். உம்மு ஸலமாவை நபிகள் நாயகம் (ஸல்) திருமணம் செய்வதாகக் கூறியபோது, "நான் வயது முதிர்ந்தவளாக இருக்கிறேன்; என் வயதுடையவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை. குழந்தை பெறும் வயதையும் நான் கடந்து விட்டேன்'' என்று அவர்கள் பதிலளித்தார்கள். இத்தகைய நிலையில் உள்ள ஒரு பெண்ணை, பெண்மோகத்திற்காக யாரேனும் மணப்பார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) தமது 59ஆம் வயதில் ஜுவைரிய்யா அவர்களை மணந்து கொள்கிறார்கள்.

பனூ முஸ்தலக் என்ற எதிரிகள் மீது நபிகள் நாயகம் (ஸல்) போர் தொடுத்தார்கள். போரில் கைதிகளாகப் பிடிபட்டவர்களில் ஜுவைரிய்யாவும் இருந்தார். இவர் அக்கூட்டத்தின் தலைவருடைய மகளாவார். அன்றைய வழக்கப்படி போரில் கைது செய்யப்பட்டவர்கள் போராளிகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்படுவார்கள். ஜுவைரிய்யா (ரலி), ஸாபித் பின் கைஸ் என்ற நபித்தோழருக்கு வழங்கப்பட்டார். அவரைப் பெற்றுக் கொண்ட ஸாபித் பின் கைஸ் (ரலி), "ஏழு வெள்ளிக் காசுகள் தந்து விட்டு நீ விடுதலையாகிக் கொள்'' என்று ஜுவைரிய்யாவிடம் தெரிவித்தார். ஜுவைரிய்யா, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் சமுதாயத்தில் முக்கியப் பிரமுகரின் மகளாக இருக்கிறேன். எனவே எனக்காக ஏழு வெள்ளிக்காசுகள் கொடுத்து விடுதலைக்கு உதவுங்கள்'' என்று கேட்டார். அவ்வாறே அவரை விடுவித்து நபிகள் நாயகம் (ஸல்) மணந்து கொண்டார்கள்.

இத்திருமணமும் பெண் மோகத்திற்காக நடந்திருக்க முடியாது. ஏனெனில் ஜுவைரிய்யா அவர்கள் பெண்மோகம் கொண்டவர்களை ஈர்க்கும் வசீகரத்துடன் இருந்து, நபிகள் நாயகமும் அதில் ஆசைப்பட்டிருந்தால் அவரை ஸாபித்துக்குக் கொடுக்காமல் தாமே எடுத்துக் கொண்டிருப்பார்கள்.

மேலும் அன்றைய சமூகத்தில் இளம் பெண்கள் அதிக விலைக்கும் வயதானவர்கள் குறைந்த விலைக்கும் விற்கப்பட்டனர். ஜுவைரிய்யாவைப் பெற்றுக் கொண்ட ஸாபித் வெறும் ஏழு வெள்ளிக் காசுகளே கேட்கிறார். இவ்வாறு அற்ப விலையைப் பெற்றுக் கொண்டு அவர் விடுதலை செய்ய முன்வந்ததே ஜுவைரிய்யா அவர்கள் முதிய வயதுடையவராக இருப்பார் என்பதைச் சொல்கிறது.

அடுத்ததாக, தமது 60வது வயதில் உம்மு ஹபீபா அவர்களைத் திருமணம் செய்தார்கள். இவரது தந்தை முஸ்லிம்களின் எதிரிகளான மக்காவாசிகளுக்குத் தலைவராகத் திகழ்ந்த அபூ சுஃப்யானாவார். உம்மு ஹபீபா இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதால் தந்தையின் கொடுமைக்கு ஆளானார்கள். எனவே தமது கணவர் அப்துல்லாஹ்வுடன் அபீசீனியாவுக்கு நாடு துறந்து சென்றார்கள்.

அதன்பின் இவரது கணவர் அப்துல்லாஹ் இஸ்லாத்தை விட்டு கிறித்தவ மதத்திற்கு மாறி விட்டார். இன்னொரு நாட்டில் நிர்கதியாக விடப்பட்டு, பெற்ற தந்தையை எதிர்த்து நிற்கும் தியாகப் பெண்மணிக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் அவரைத் தாமே திருமணம் செய்து கொள்வதாக நஜ்ஜாஷி என்ற அபீசீனிய மன்னருக்கு நபிகள் நாயகம் (ஸல்) தகவல் அனுப்பினார்கள்.

உம்மு ஹபீபாவை நஜ்ஜாஷி, மதீனாவுக்கு அனுப்பி வைத்த பின் அவரை நபிகள் நாயகம் (ஸல்) திருமணம் செய்து கொண்டார்கள். இதற்கும் பெண் மோகம் காரணமாக இருக்க முடியாது. ஏனெனில் 15 ஆண்டுகளுக்கு முன்பே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பிரிந்து உம்மு ஹபீபா, தம் கணவருடன் அபீசீனியாவிற்குச் சென்று அங்கேயே தங்கி விட்டார்கள். அவர்களது தோற்றமோ, அழகோ எப்படியிருக்கும் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரியாது. நிர்கதியாக நிற்கும் ஒரு தியாகப் பெண்மணி என்பது மட்டும் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரியும். அதற்காகத்தான் அவரைத் திருமணமும் செய்தார்கள்.

தமது 60வது வயதில் ஸஃபிய்யா அவர்களை மணந்தார்கள். இவர் கைபர் பகுதியைச் சேர்ந்தவராவார். கைபர் மீது நபிகள் நாயகம் (ஸல்) போர் தொடுத்து வெற்றியடைந்தபோது யூதத் தலைவர்களில் முக்கியமானவர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஸஃபிய்யாவின் கணவர் கினானாவும் ஒருவர். கைது செய்யப்பட்ட ஸஃபிய்யாவை அன்றைய வழக்கப்படி திஹ்யா என்பவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழங்கினார்கள். அப்போது நபித்தோழர்கள், "இவர் இந்தச் சமுதாயத்தின் தலைவருடைய புதல்வியாக இருக்கிறார். இவரைத் தங்களைப் போன்ற ஒரு தலைவர் எடுத்துக் கொள்வதே சிறந்தது' என்று கூறினார்கள். இதை ஏற்றுக் கொண்டு அவரை விடுதலை செய்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். ஜுவைரிய்யா (ரலி) அவர்களைத் திருமணம் செய்வதற்குச் சொன்ன காரணமே இதற்கும் பொருந்தும்.

இறுதியாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதே 60வது வயதில் மைமூனா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள். இவரது வயது குறித்துத் தெளிவான சான்று கிடைக்கவில்லை என்றாலும் ஏற்கனவே அடுத்தடுத்து இரண்டு கணவர்களை மணந்து விதவையாக இருந்தார் என்பதற்குச் சான்று உள்ளது. எனவே இவரும் நடுத்தர வயதைக் கடந்தவர் என்பதை யூகிக்க முடியும்.

மைமூனா (ரலி), நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸின் மனைவிக்குச் சகோதரியாவார். பெரிய தந்தையின் வற்புறுத்தலின் பெயரிலும், மைமூனாவே வந்து கேட்டுக் கொண்டதன் பேரிலும் இவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணந்து கொண்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்மோகத்தின் காரணமாக அதிகத் திருமணங்களைச் செய்யவில்லை என்பதை மேலே நாம் கூறிய இந்த வரலாற்றுக் குறிப்புகளைப் பார்ப்பவர்கள் விளங்கிக் கொள்ளலாம்.

அப்படியானால் இந்தச் சிறப்பு அனுமதிக்குக் காரணம் என்ன?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை ஏராளமான நபித்தோழர்கள் வழியாகத்தான் முஸ்லிம்கள் அறிந்து கொள்கின்றனர். ஒவ்வொரு நபித்தோழரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்து அறிவிக்கின்றனர். அதே சமயம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வீட்டில், இல்லற வாழ்க்கை நடத்தியது, உண்டது, பருகியது, இரவு வணக்கம் செய்தது போன்ற செய்திகளை நபித்தோழர்களால் அறிந்து கொள்ள முடியாது.

அவர்களுடன் வீட்டில் குடும்பம் நடத்தும் மனைவியரால் மட்டும் தான் இது சாத்தியமாகும். எனவே அவர்களது மனைவியர் மூலமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த அனைத்து விஷயங்களும் உலக மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்பதற்காக இறைவனின் தூதர் என்ற அடிப்படையில் இறைவன் இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

ஒரே ஒரு மனைவி மட்டும் இருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அவர் மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்த செய்திகளை அறிவித்தால் அதில் நம்பகத் தன்மை குறையும். அவர் தவறான தகவலைக் கூறிவிட்டால் அதைச் சான்றாகக் கொண்டு முஸ்லிம்கள் நடக்கும் நிலை ஏற்படும்.

பல மனைவியர் இருந்தால் எந்த மனைவியும் கூடுதல் குறைவாகச் சொல்வதற்குத் தயங்குவார். ஒருவர் தவறாகச் சொல்லி மற்றவர்கள் அதை மறுத்து உண்மையை விளக்குவார்கள். இதனால் நபிகள் நாயகம் கொண்டு வந்த மார்க்கத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கிறது. இது போன்ற காரணங்களுக்காகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல திருமணங்கள் செய்தார்கள் என்பதை மேற்கண்ட சான்றுகளில் இருந்து அறியலாம்.