"அல்லாஹ்" எனும் சொல், முஸ்லிம்மல்லாத மக்களாலும் (Non Muslims), இன்னும் பல முஸ்லிம்களாலே கூட தவறாக புரிந்துக் கொள்ளப்பட்ட சொல் ஆகும். "அல்லாஹ்" என்றால் முஸ்லிம்களின் கடவுள் அல்லது அரபுநாட்டு கடவுள் என்றெல்லாம் பெரும்பாலான மக்கள் மனதில் எண்ணம் கொண்டுள்ளனர். அவ்வாறான தவறான சிந்தனையை நீக்குவதற்கே இந்த பதிவு.
இப்போது "கடவுள்" என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம் , கடவுள் என்றால் தமிழா்களின் கடவுள் என அர்த்தமா? அல்லது தமிழ் மொழியில் இறைவனை குறிக்க ஒரு சொல்லா??
ஆங்கிலத்தில் God என்கிறோமே, அப்படியெனில் ஆங்கிலேயனின் கடவுள் என அர்த்தமா? அல்லது ஆங்கில மொழியில் கடவுள் என அர்த்தமா?? ஆங்கில மொழியில் கடவுளை குறிக்க தானே God என்போம்.
ஆக, இதுபோல தான் அல்லாஹ் என்றால் அரபு நாட்டவர்களின் கடவுள் அல்ல, அரபியில் "Supreme God"ஐ அதாவது உன்னையும் என்னையும் இந்த உலகத்தையும் பிரபஞ்சத்தையும் படைத்த #அந்த இறைவனை குறிக்கும் சொல் தான் அல்லாஹ்.
அல்லாஹ் என்று ஏன் நம் படைப்பாளனை அரபியில் அழைக்க வேண்டும், தமிழில் எத்தனையோ பெயர்கள் இருக்கிறதே, அதில் ஏதாவது ஒரு பெயரை வைக்கலாமே எனவும் உங்களுக்கு கேள்வி எழலாம்???
இந்த கேள்விக்கு பதில் காணவேண்டுமென்றால் ஒரு அடிப்படையான விசயமும் தெரிந்துக் கொள்ளவேண்டியது அவசியம்.
இஸ்லாமிய நம்பிக்கை படி, நம்மை படைத்தவனுக்கு ஐந்து இலக்கணங்களை வரையறுக்கிறது. அவை (1) ஏகத்துவம்(நம்மை படைத்தவன் ,வணக்கத்துக்குரியவன் ஒருவன் தான்) (2) இவ்வுலகில்படைப்பாளனை பாா்க்கமுடியாது (3)நாம் பல தேவைகளுக்கு மத்தியில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உயிர் வாழ தண்ணீர்,உணவு,சூரியன்,மரம் செடி கொடிகள் எல்லாம் தேவை.. இது போன்று கடவுளுக்கு தேவைகள் இருக்காலாமா??? தேவைகள்என்பது படைத்தவனுக்கு இல்லை (4)அந்த ஏக இறைவனுக்கு நம்மை போலவே (பெற்றோர், குழந்தைகள், ஓரு/பல்வேறு மனைவிகள்) குடும்பங்கள், ஆசைகள்,இச்சைகள், படைத்தவனுக்கு இருக்கக்கூடாது, ஆக படைப்பாளன் யாரையும் பெறவுமில்லை,யாராலும் பெறப்படவுமில்லை (5) படைப்பாளனுக்கு எவரும் நிகரில்லை
தமிழ் மொழியில் கடவுளை குறிக்க பல பெயர்கள்இருக்கின்றன, கடவுள், தெய்வம்,நாதன்,சக்தி,இறைவன்,பகவான்,தேவன் போன்றவைகள். ஆனால் இப்பெயர்களை சற்று ஆராய்ந்து பார்த்தோமேயானால் இப்பெயர்களில் பன்மைகள் வரக்கூடியதாக உள்ளது. உதாரணமாக தெய்வம் என வார்த்தை, தெய்வங்கள் என பன்மையாகிறது, கடவுள் - கடவுள்கள், தேவன் - தேவர்கள்;God-Gods; (இன்னும் இச்சொற்களை நடிகர்களுக்கும், தலைவர்களுக்கும் கூட உபயோகப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது)
இஸ்லாத்தின் மிகமுக்கியமான கொள்கை ஏகத்துவம், பன்மையே கிடையாது, பன்மை என்பது படைத்தவனை கொச்சைப்படுத்துவதாகும்.
இன்னும் சில சொற்களில் பாலினத்திலும் வலைந்து கொடுக்கிறது. உதாரணமாக இறைவன் - இறைவி; தேவன் - தேவி; கடவுள் - பெண் கடவுள்; God-Goddess; ஆண் பெண் என்பது உறுப்பால் ஆன வித்தியாசம் தான், நம்மை போன்று தான் கடவுளும் என சொல்வது கடவுளை கொச்சைப்படுத்துவது ஆகாதா???
ஆனால் அல்லாஹ் என்ற சொல்லுக்கோ, பன்மையாலோ,பாலினத்தாலோ வலைந்து கொடுக்கவில்லை அவ்விலக்கணத்தின்படி, ஆகையால் படைத்தவனை குறிக்கசிறந்த வார்த்தையாக உள்ளதே என பயன்படுத்தி வருகிறோம். அவ்வளவு தான்.
ஆக முஸ்லிம்கள் வேறு ஏதோ கடவுளை வணங்கவில்லை ; உங்களையும் எங்களையும் படைத்த அந்த படைப்பாளனையே வணங்குகிறோம்.
No comments:
Post a Comment