Wednesday, October 25, 2017

புலால் உணவு உண்ணுவது மனிதனை வன்முறையாளனாகவும் – மூர்க்கமானவனாகவும் மாற்றுமே! எப்படி?

கேள்வி: மனிதன் என்ன உண்கிறானோ – அதனுடைய தாக்கம் அவனது நடவடிக்கைகளில் தென்படும் என்பது அறிவியல் கூற்று. அப்படி இருக்கும்போது – இஸ்லாம் புலால் உணவு உண்ண அனுமதியளிப்பது எப்படி? ஏனெனில் – புலால் உணவு உண்ணுவது மனிதனை வன்முறையாளனாகவும் – மூர்க்கமானவனாகவும் மாற்றுமே! எப்படி? 

பதில்:
1. இஸ்லாமிய மார்க்கம் – தாவர உண்ணிகளான ஆடு மாடு ஒட்டகம் போன்ற கால்நடைகளை மாத்திரம் மனிதர்கள் உணவாக உட்கொள்ள அனுமதியளித்துள்ளது.
மனிதன் என்ன உண்கிறானோ – அதனுடைய தாக்கம் அவனது நடவடிக்கைகளில் தென்படும் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். எனவேதான் இஸ்லாமிய மார்க்கம் – மாமிச உண்ணிகளான சிங்கம் – புலி – சிறுத்தை போன்ற விலங்கினங்களை மனிதர்கள் உணவாக உட்கொள்வதை தடை செய்துள்ளது. ஏனெனில் மேற்படி விலங்கினங்கள் மூர்க்க குணம் கொண்டவை. மேற்படி விலங்கினங்களின் இறைச்சியை உண்பவர்கள் மூர்க்கக் குணம் கொண்டவர்களாக மாறலாம். அதனால்தான் இஸ்லாம் தாவர உண்ணிகளான ஆடு – மாடு – ஒட்டகம் போன்ற பிரானிகளின் இறைச்சியை மனிதர்கள் உணவாக உட்கொள்ள அனுமதித்துள்ளது. மேற்படி பிராணிகள் – அமைதியானதும் – பணிவானதும் ஆகும். இஸ்லாமியர்களான நாங்கள் – அமைதியான பிராணிகளான – ஆடு – மாடு – ஒட்டகம் போன்றவைகளை உணவாக உட்கொள்கிறோம். எனவேதான் நாங்கள் அமைதியை விரும்புகிறவர்களாக – இருக்கின்றோம்.
2. அருள் மறை குர்ஆனும் – நபிகளாரின் பொன்மொழியும் – கெட்ட உணவு வகைகளை உண்பதை தடை செய்துள்ளது.
‘(நபியாகிய) அவர் நன்மையான காரியங்களைச் செய்யுமாறு ஏவுவார். பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார். தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார். கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்துவிடுவார்..’(அல்-குர்ஆன் 07:157)

‘மேலும் (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக்கொள்ளுங்கள். இன்னும் எதைவிட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்.’ (அல்-குர்ஆன் 59:7)
சில பிராணிகளின் இறைச்சியை மனிதர்கள் உணவாக உட்கொள்ள அனுமதியளித்திருக்கும் அல்லாஹ் – சில பிராணிகளின் இறைச்சியை மனிதர்கள் உணவாக உட்கொள்ள அல்லாஹ் தடை செய்திருக்கிறான் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொள்ள – நபிகளாரின் பொன்மொழி ஒன்றே போதுமானதாகும்.
3. மாமிசம் உண்ணும் பிராணிகளை மனிதர்கள் உணவாக உட்கொள்ளத் தடை பற்றி நபி (ஸல்) அவர்கள் அறிவித்த செய்தி:
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் போதித்த கீழ்க்கண்ட செய்தி ஸஹீஹுல் புஹாரி – ஸஹீஹுல் முஸ்லிம் (ஹதீஸ் எண் 4752) ஸுனன் இப்னு மாஜா (ஹதீஸ் எண் – 3232 முதல் 3234 வரை) போன்ற ஹதீஸ் (செய்தி) நூல்களில் இடம்பெற்றுள்ளன.
  1.  மாமிசம் உண்ணக்கூடிய கூரிய பற்களையும் நகங்களையும் உடைய காட்டு விலங்குகளான – சிங்கம் புலி நாய் ஓநாய் போன்றவைகள்.
  2. கொறித்துத் திண்ணக்கூடிய பற்களை உடைய எலி பெருச்சாலி அணில் போன்றவைகள்
  3. ஊர்ந்து திரியக் கூடிய பாம்பு முதலை போன்ற பிராணிகள்
  4. கூரிய அலகுகளையும் – கால் நகங்களையும் உடைய கழுகு பருந்து காகம் ஆந்தை போன்ற பறவைகள் ஆகியவை மனிதர்கள் உணவாக உட்கொள்ள தடை செய்யப்பட்ட பிராணிகள் மற்றும் பறவைகள் ஆகும். [1]

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. இஸ்லாம் - குரான் சொல்லும் சைவ உணவு..

    புனித குரானின் கூற்றுப்படி, முன்னேற்றம் இரண்டு வழிகள் உள்ளன. விலங்குகள் கொலை பரிந்துரைக்கப்படவில்லை.

    குர்ஆன் – 2 விதமான மக்களை பத்தி சொல்கிறது. அவை :
    :
    1. மனநிறைவு மற்றும் இன்பம், ஆசை உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாத மக்களுக்கு இறைச்சி சாப்பிட வழிவகை வழங்கப் பட்டுள்ளது

    2. எல்லாம் கைவிட்டு கடவுளின் அன்பைக் பெறுவதற்கு..


    குரான் வசனங்கள் சொல்கிறது..

    குரான் 3:14. பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது; இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்"

    குரான் 3:15. (நபியே!) நீர் கூறும்: “அவற்றை விட மேலானவை பற்றிய செய்தியை நான் உங்களுக்குச் சொல்லட்டுமா? தக்வா - பயபக்தி - உடையவர்களுக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டு;

    குரான் 3:152 சொல்கிறது....
    ' நீங்கள் விரும்பிய (வெற்றியை) அவன் உங்களுக்குக் காட்டிய பின்னரும் நீங்கள் அந்த உத்திரவுக்கு மாறு செய்யலானீர்கள்; உங்களில் இவ்வுலகை விரும்புவோரும் இருக்கிறார்கள்; இன்னும் உங்களில் மறுமையை விரும்புவோரும் இருக்கிறார்கள்;"

    .
    இறைச்சி சாப்பிட தங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாத மக்களுக்கு வழிவகை வழங்கப் பட்டுள்ளது, ஆனால் விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் மெதுவாக இப்படிப்பட்ட ஒரு கெட்ட பழக்கம் (சுவை) கொடுக்கவே உள்ளன. அதனால் அது பரிந்துரைக்கப்படவில்லை. ஆனால் வாழ்க்கை, தேவனுடைய காதல் மிக உயர்ந்த கச்சிதமாகவும் விரும்பினால் அந்த, மாமிசம் சாப்பிடும் forbidd ஆகும்

    உதாரணமாக, நாம் காணலாம் புனித குர்ஆன் வசனம் -5:3.

    இதனால் நாம் இறைச்சி சாப்பிட அனுமதி இல்லை என்று குர்ஆன் இந்த வசனத்தில் இருந்து புரிந்து கொள்ள முடியும்.

    இதே போல் தான், ஹிந்து மக்களும், விலங்குகளை - காளி, சுடலைமாடன், என்கிற சிறு தெய்வங்களுக்கு பலியிட்டு அதை சாப்பிட அனுமதிக்கிறது. இது ஏன் என்றால், அதனால் தான் அவர்களின் புலன் ஆசைகள் படிப்படியாக கட்டுபடுத்த முடியும்.

    இது தவிர, அது சூரா "Al-Ma'ida" குறிப்பிடப்பட்டுள்ளது மெக்கா எல்லைக்குள், மிகவும் புனிதமான இடத்தில், விலங்குகளின் கொன்றது தடை செய்யப்பட்டுள்ளது. குரான் - 5:1.

    புனித வட்டாரங்களில் உள்ள புனிதமான இடத்தில், விலங்குகளின் கொன்றது தடை செய்யப்பட்டுள்ளது . அவைகள்

    1. புனித வட்டாரங்களில் உள்ள மெக்கா
    2. சிறப்பு யாத்திரை ஆடையில் (இஹ்ராம்)

    இது சூரா "Al-Ma'ida" என்று விளக்கினார் வசனம் - 5:95 , .

    இவ்வாறு மிருக வதையை ஒரு பாவம் எனவே, அதை மெக்கா போன்ற பரிசுத்த இடத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.


    இறைச்சி சாப்பிட தங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாத மக்களுக்கு வழிவகை வழங்கப் பட்டுள்ளது, உங்களுக்கு முன்னேத்தம் வேண்டாம் எனில் முதல் வழியை பின்பற்றலாம். ... அது உங்கள் இஷ்டம் ..


    புனித குர்ஆனில் இறைவன் பின்வருமாறு கூறுகிறார்:

    22:37. (எனினும்), குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்.


    ஆனால், குரானில் மக்களை சாப்பிட அனுமதிக்கிறது, ஆனால் அவைகள் மனிதனை படிப்படியாக புலன் அசைகளிலிருந்து விடுவிக்கத்தான் இனத்தை நான் மேலே கூறுயதிலிருந்து அறியலாம்..


    எனவே, அவர் இருந்த காலகட்ட மக்கள் அப்படி, உடனே நீங்கள் சாப்பிடக்கூடாது என்று கூறினால் கஷ்டம். அதனால் தான் இப்படி படிப்படியாக சொல்கிறார்..

    இப்படி தான் இந்து மதத்திலும் சொல்கிறது ..

    தமோ குணத்திலுள்ளவனுக்கு மாமிசம் சாப்பிட ஆசை உண்டானல் அவன் அதை தேவர்களுக்கு ( காளி, சுடலைமாடன்,அய்யனார் போன் )பலியிட்டு பின்பு சாப்பிட சொல்கிறார். இது ஏனெனில் அப்போது தான் அவனுது புலன் ஆசைகளை படிப்படியாகக் குறைக்கவே தான் இப்படி சில இடங்களில் சில மனிதர்களுக்காக சொல்லப்பட்டது. ஆனால் சத்வ குணத்தலுள்ளவன் இதை விலக்கி இருப்பதே நல்லது.


    எனவே, முடிவு நீங்கள் தான் எடுக்கவேண்டும்.. இந்த மாமிசங்களை என்னை அடையாது என்று இறைவன் சொல்கிறார்... அப்புறம் ?


    அது தானே நான் மேலே இரண்டுவித பக்தி நிலைகளை பற்றி கூறினேன். இதில் எது வேனுமானாலும் தேர்ந்தெடுப்பது உங்கள் விருப்பமே!

    அல்லாஹவின் பக்தி வேண்டுமா?
    புலனின்பம் வேண்டுமா ?

    என்பதை உங்கள் விருப்பம்!

    நீங்கள் இப்படி தான் இருக்கவேண்டுமென கண்டிப்பாக கூறவில்லை. அவர் நமது சுதந்திரத்திலேயே இதை விட்டு விட்டார்...

    எனவே முடிவு உங்கள் கையில் தான்


    ReplyDelete
  3. சரியான புரிதல்...இறை ஒன்றே...மார்கங்கள் தான் வேறு...quench youŕ thirst...then try reaching me..

    ReplyDelete