Tuesday, November 28, 2017

திருக்குர்ஆன் காப்பியடிக்கப்பட்டதா?

"திருக்குர்ஆனிலுள்ள கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசிகளின் வரலாறுகள் பலவும் பைபிளில் சொல்லப்பட்ட தகவலை ஒத்து அமைந்திருக்கிறது, எனவே திருக்குர்ஆன் பைபிளைத் தழுவி முஹம்மது நபி (ஸல்) அவர்களால் காப்பியடிக்கப்பட்டதே!" என்று பலரும் இணையத்தில் பிரசாரம் செய்து வருகின்றனர். இதில் எந்தளவுக்கு உண்மை உள்ளது என்பதைப் பின்வரும் சான்றுகளின் அடிப்படையில் ஆராய்வோம்.

1. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக இருந்தனர்.

பைபிளின் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளைப் படித்துப் புரிந்து கொண்டு அதைப் பார்த்து எழுதுவதென்பது அவர்களுக்கு இயலாத காரியம் ஆகும். தன் தோழர்கள் எவருடையேனும் உதவியை இது விஷயத்தில் அவர்கள் நாடியிருக்கலாம் என்று கூற இயலுமா? இல்லை. ஏனெனில் அவ்வாறிருப்பின் அவர்களில் சிலருக்கேனும் அவ்விஷயம் (அதாவது அவர்கள் காப்பியடிக்கின்றனர் என்பது) தெரிந்திருக்கும். அதன் விளைவாக நபியைக் குறித்த அவர்களது நம்பிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு அவர்களுடைய உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கும். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உடலில் ஒரு முள் தைத்துவிடுவதைத் தடுப்பதற்குக் கூட தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்யத் துணிந்தவர்கள் நபித்தோழர்கள் என்பதை அறிக. உண்மை இவ்வாறிருக்க நபியவர்களைக் குறித்து அவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டிருப்பின் இந்தளவுக்கு தியாகம் செய்யத் துணிந்த ஒரு சமுகத்தை எங்ஙனம் அவர்களால் உருவாக்க முடிந்தது?

அன்றியும் (நபியே!) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி வந்தவரல்லர்; உம் வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை; அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம். (அல்குர்ஆன் 29:48)

2. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் பைபிளின் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகள் அரபி மொழியில் பெயர்க்கப்படவில்லை.

இஸ்லாம் உலகெங்கிலும் வியாபித்த பிற்காலகட்டத்திலேயே அரபி மொழியில் பைபிள் மொழிபெயர்க்கப்பட்டது. பைபிளின் பழைய ஏற்பாட்டைக் குறித்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஏர்ணஸ்ட் உர்த்வின் என்பவர் பின்வருமாறு கூறுகிறார். "இஸ்லாமின் வளர்ச்சிக்குப் பின்னர் அரபு மொழியும் வளர்ச்சியடைந்தது. இஸ்லாமிய நாடுகளில் வாழ்ந்த யூதர்கள் மற்றும் கிறித்தவர்களின் அன்றாட வாழ்க்கையின் மொழியாக அரபு மொழி மாறிவிட்டது. அரபு மொழியில் பைபிள் மொழிபெயர்க்கப்படுவது அவசியமாகி விட்ட இக்கால கட்டத்தில்தான் பைபிளின் ஏராளமான பதிப்புகள் அரபியில் வெளிவரத் துவங்கின" (Ernst Wurthewin: Text of The Old Testament Page 104)

ஒன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான் பழைய ஏற்பாடு அரபியில் மொழிபெயர்க்கப்பட்டது என கிடைத்த கையெழுத்துக் குறிப்புகள் தெளிவு படுத்துகின்றன. (Ibid Page 224-225)

பெரும்பாலும் இக்காலகட்டத்தில் தான் புதிய ஏற்பாடும் அரபியில் மொழி பெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். பிரபல ஆய்வாளர் சிட்னி எச் க்ரிஃபின் என்பவர் கூறுகிறார்: "அரபு மொழியில் சுவிசேஷங்களைக் கொண்ட மிகப் புராதனமான கையெழுத்து ஆவணம் சினாய் கையெழுத்துப் பிரதி 72 (Sinai Arabic MS72) ஆகும். ஜெருசலேம் சபையின் பிரார்த்தனை காலண்டரின் கால அட்டவணைப் படி வரிசைப்படுத்தப்பட்ட நான்கு கானானிய சுவிவேஷங்களும் இதில் அடங்கும். இக்குறிப்பானது ரம்லா என்னுமிடத்தைச் சேர்ந்த ஸ்டீபன் (Stephen of Ramlah) என்பவரால் அரபு வருடம் 284 (கி.பி 897) ல் எழுதப்பட்டது என்று இதன் இறுதியில் அமைந்த குறிப்பு தெளிவாகக் கூறுகிறது. (Sidney H Griffith: The Gospel in Arabic: An Enquiry Into its Appearance In the First Abbasi Century Page 132) அதே புத்தகத்தின் இன்னொரிடத்தில் அப்போஸ்தலர்களின் நடபடிகள்,பவுலின் நிருபங்கள் மற்றும் கத்தோலிக்க நிருபங்களை உள்ளடக்கிய Sinai Arabic MS151 என்ற கையெழுத்து ஆவணம் ஹிஜ்ரி 253 (கி.பி 867) ல் பிஸ்ருப்னு ஸிர்ரி என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டதாகவும் காணப்படுகிறது. இதில் சுவிசேஷங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். (Ibid Page 131)

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலகட்டத்திற்குப் பின்னர் சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னரே பைபிள் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்நிலையில் எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபியவர்கள் அரபியில் உள்ள பைபிளைப் வேறு யாரிடமிருந்தோ படிக்கக் கேட்டு பின்னர் அதில் உள்ள கதைகளை உள்ளடக்கிய திருக்குர்ஆனை உருவாக்கினார்கள் என்ற வாதம் இங்கே எடுபடாமல் போகின்றது. அரபியில் இல்லாத ஒரு புத்தகத்தை அவர்கள் வாசிக்கக் கேட்டனர் என்பது அறிவீனமன்றோ?

3. இறை தூதர்களைக் குறித்து அவர்களைப் பாவிகளாகவும் ஒழுக்கமற்றவர்களாகவும் பைபிளின் வரிகள் சித்தரிக்கின்றன.

நோவா மது அருந்தி போதையில் புரண்டதாகவும், லோத்து மது அருந்தி சொந்தப் புதல்விகளுடன் சல்லாபித்ததாகவும், யாக்கோபை சதியனாகவும்,தாவீதை தந்திரமாக ஏமாற்றக் கூடியவனாகவும்,இயேசுவை மதுபானம் விளம்பியவராகவும் பைபிள் சித்தரிக்கின்றது. இத்தகைய குற்றங்கள் யாவும் மக்களை நன்மையின் பால் வழி நடத்தவேண்டிய இறைதூதர்களின் பண்புகளுக்கு உகந்ததல்ல என்பது அனைவரும் அறிந்த விசயமாகும். இதுபோன்ற அபத்தங்களை விட்டு குர்ஆன் பரிசுத்தமாக உள்ளது. இத்தகைய எந்த கற்பனைகளும் குர்ஆன் கூறும் வரலாறுகளில் எள்ளளவும் இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பைபிளிலிருந்து காப்பியடித்தார்கள் என்பது உண்மையாயின் இறைதூதர்கள் மீது பைபிள் இட்டுக் கட்டியுள்ள பாவங்கள் குர்ஆன் வசனங்களிலும் இடம் பெற்றிருக்கும் (அல்லாஹ் மிகப் பரிசுத்மானவன்!) அவ்வாறு எதுவும் அபத்தங்கள் குர்ஆனில் இல்லை என்பது மட்டுமல்ல, திருக்குர்ஆன் கூறும் இறை தூதர்களின் வரலாறுகள் அவர்களை தூயவர்களாகவும் மகான்களாகவும் மிகப்பெரிய தியாகிகளாகவும் படம்பிடித்துக் காட்டுகிறது. இது பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டதே குர்ஆன் என்ற குற்றச்சாட்டின் முதுகெலும்பை முறிப்பதாக உள்ளது.

4. வரலாற்றைப் பொறுத்த வரையில் அதன் அடிப்படைக்கு எவ்வகையிலும் பொருந்தாத பல செய்திகளும் வரலாறு என்ற பெயரில் பைபிளில் நிறைந்து காணப்படுகின்றன.

பைபிள் பண்டிதர்களே இதனை அங்கீகரித்துள்ளனர். "பல உறுதியற்ற வரலாற்றுத் தகவல்களும் பைபிளில் உள்ளன" (பார்க்க: பைபிள் விஞ்ஞான கோஷம் பக்கம் 12)  உண்மையில் பைபிளிலிருந்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காப்பியடித்திருந்தால் அத்தகைய பல உண்மைக்கு முரணான செய்திகள் குர்ஆனிலும் இடம் பெற்றிருக்கும். ஆனால் குர்ஆன் கூறும் சரித்திரங்களை நிரூபிக்கும் புவியியல் ரீதியான சான்றுகள் கூட இன்று உலகுக்கே வெளிச்சமாக உள்ளன.

5. அறிவியல் ரீதியாகப் பார்த்தாலும் நிரூபிக்கப்பட்ட பல விஞ்ஞான உண்மைகளுக்கு முரணான பல தகவல்களையும் பைபிள் கொண்டுள்ளது.

உதாரணமாக சூரியன் படைக்கப்படும் முன்னரே இரவும் பகலும் உண்டானது என்று ஆதியாகமத்தின் வரிகள் கூறுகின்றன. இன்னும் சூரியன் மற்றும் சந்திரன் சஞ்சரிப்பதால் இரவு பகல் மாற்றம் ஏற்படுகிறது, (யோசுவா 10: 12,13) பூமி விலகிச் செல்லாமால் நட்டி வைக்கப்படுள்ளது (சங்கீதம் 104:5) முயல் அசைபோடக் கூடிய மிருகம் (உபாகமம் 14:7) போன்ற வரிகள் விஞ்ஞானத்துக்கு முரணான பைபிளின் நிலைபாட்டை தெளிவுபடுத்துகின்றன. இதில் இன்னொரு விசயம் என்னவென்றால் இத்தகைய தகவல்கள் தீர்க்கதரிசிகளின் வரலாற்றைக் கூறும் பகுதிகளில் இடம்பெற்றுள்ளன என்பதாகும். பைபிளைத் தழுவியே குர்ஆன் உருவாக்கப்பட்டது என்ற கூற்று உண்மையாயின் விஞ்ஞான முரணான இத்தகைய தகவல்கள் குர்ஆனிலும் இடம் பெற்றிருக்கவேண்டும். இத்தகைய தகவல்கள் விஞ்ஞான முரணானவை என்பதைத் தெரிந்து கொண்டு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அதனை நீக்கியிருப்பார்களா என்று கருதவும் இடமில்லை. காரணம் அவர்கள் வாழ்ந்த காலம் இத்தகைய உண்மைகளை ஆராய்ச்சி செய்து அறியக்கூடிய காலகட்டமாக இருக்கவில்லை. ஆனால் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள எந்தவொரு தகவலும் விஞ்ஞானத்துக்கு முரண்பட்டவை என்று இதுவரை எவராலும் நிரூபிக்க இயலவில்லை. ஒருவேளை நூற்றாண்டுகள் கழிந்து கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளை முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொண்ட காரணத்தால் முரணான தகவல்களை நீக்கியிருப்பார்கள் என்று கூறுவார்களேயானால்,குர்ஆன் இறைவசனமல்ல என்பதை நிரூபிக்க ஆதாரம் தேடியவர்கள் முஹம்மது (ஸல்) அவர்கள் வருங்காலத்தை அறியக் கூடியவராக இருந்தார் என்ற நிலைக்கு வந்துவிடுவர். இதனால் அவர்களுக்கு கடவுள்தன்மையை வழங்கி இன்னும் அதிகமான வழிகேட்டில் விழுந்துவிடுவர்.

6. பைபிளில் காணப்படாத இறைத்தூதர்கள் மற்றும் சமூகங்களின் வரலாறுகளும் திருக்குர்ஆனில் காணப்படுகின்றன. உதாரணம்: ஆது மற்றும் ஃதமூது சமூகங்கள், அவர்களுக்கு மத்தியில் அனுப்பப்பட்ட தூதர்கள் ஹூது (அலைஹிஸ்ஸலாம்), மற்றும் ஸாலிஹ் (அலைஹிஸ்ஸலாம். இவர்களைக் குறித்த எந்த தகவலும் பைபிளில் இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பைபிளைப் பார்த்து காப்பியடித்தார்கள் என்றிருப்பின் பைபிளில் கூறப்படாத இந்த இரண்டு பெரும் சமூகங்களின் வரலாறுகள் அவர்களுக்கு எங்கிருந்து கிடைத்ததாம்?

7. இறைதூதர்களின் வரலாறுகளில் பைபிளில் காணப்படாத ஏராளமான சம்பவங்களை திருக்குர்ஆன் விவரிக்கின்றது.

இவற்றைப் பற்றிய எந்த தகவலும் பைபிளில் இல்லை. உதாரணமாகப் பின்வரும் சம்பவங்களைக் கூறலாம்.

நூஹ் நபி மற்றும் அவர்களை நிராகரித்த அவர்களின் மகனுக்கும் இடையே நடந்த உரையாடல் (அத்தியாயம் 11 வசனங்கள் 42 முதல் 46 வரை)

நபி இப்ராஹீம், நம்ரூத் மன்னனுடன் நடத்திய விவாதம் (அத்தியாயம் 2: வசனம் 258)அவர்களின் தந்தை ஆஸருடன் நடந்த உரையாடல் (6:74, 19:41-49, 43: 26-27) மரணத்தவர்களை உயிர்ப்பிக்கும் அல்லாஹ்வின் ஆற்றலை விளக்குவதற்கு நான்கு பறவைகளப் பிடித்து பின்னர் அவற்றைத் துண்டுகளாக ஆக்கி அவற்றில் ஒவ்வொரு பாகத்தையும் ஒவ்வொரு மலையின் மீது வைத்து விட்டுப் பின்னர் அழைத்தால் அவை ஓடி வரும் என்று அல்லாஹ் அவர்களுக்கு விளக்கிக் காட்டியமை (2:260) அவர்கள் நெருப்புக் குண்டத்தில் வீசப்பட்டு பின்னர் அல்லாஹ்வின் ஆற்றலால் அற்புதமாக மீட்கப்பட்டது (21: 69,70) போன்ற சம்பவங்களைக் குறித்த எந்தத் தகவலும் பைபிளில் இல்லை.

இன்னும் இஸ்ராயீலின் சந்ததிகளிடம் ஒரு பசுவை அறுக்குமாறு அல்லாஹ் கட்டளையிட அதனை மூஸா நபி அவர்கள் இஸ்ராயீல் சந்ததிகளிடம் கூறுகையில் அவர்கள் பசுவை அறுக்க மனமின்றி அதன் தன்மைகளைக் குறித்து கேள்விகள் எழுப்பிக் கொண்டிருந்தது, (2:67-71) கொலைக் குற்றம் நிரூபிக்க அறுக்கப்பட்ட பசுவின் மாமிசத் துண்டைக் கொண்டு கொலை செய்யப்பட்டவனின் சடலத்தின் மீது அடிக்குமாறு அல்லாஹ் கட்டளையிட்டது (2: 72-73) முதலானவை குறித்த தகவல்களும் பைபிளில் இல்லை.

ஈஸா நபி(இயேசு) அவர்களின் பிறப்பு முதல் பைபிளில் காணப்படாத ஏராளமான சம்பவங்களை திருக்குர்ஆன் விவரிக்கின்றது. தனது குழந்தைப் பருவத்தில் ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பொறுப்பில் புனிதப் பள்ளியில் தங்கியிருந்த மர்யம் (அலை) அவர்களுக்கு அற்புதமாக அல்லாஹ் உணவளித்தமை! (3:37)  பிரசவ காலத்தில் மர்யம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைத்த தனிப்பட்ட அருட்கொடைகள் (19: 23-26)  ஈஸா (இயேசு) நபி அவர்கள் தொட்டில் குழந்தையாக இருக்கும்போதே நான் அல்லாஹ்வின் தூதராவேன் என்று கூறி மக்களிடம் பேசியதன் மூலம் தன் முதல் அற்புதத்தை வெளிப்படுத்தியமை (19: 29-33) களிமண்ணில் ஒரு பறவையைப் போன்ற உருவத்தைச் செய்து அதில் அவர் ஊதியபோது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு அது உயிருள்ள பறவையாக மாறியது (3:49) போன்ற தகவல்களும் பைபிளில் எங்கும் இல்லை.

பைபிளைப் பார்த்து காப்பியடித்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனை உருவாக்கியிருப்பின் பைபிளில் எங்குமே காணக்கிடைக்காத தகவல்களை அவர்கள் எங்கிருந்து பெற்றனர்? திருக்குர்ஆன் முற்றிலும் இறைவனால் அருளப்பட்டது! அதன் காரணமாகவே பைபிளின் எந்தப் பகுதியிலும் இடம்பெறாத பல உண்மைச் சம்பவங்களும் திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ளன. இதோ மர்யமின் வரலாற்றை விவரிக்கும் இடத்தில் திருக்குர்ஆன் கூறியது எத்துணை உண்மை!

(நபியே!) இவை (அனைத்தும்) மறைவானவற்றில் நின்றுமுள்ள விஷயங்களாகும்; இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம்; மேலும் மர்யம் யார் பொறுப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (குறி பார்த்தறிய) தங்கள் எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (3: 44)

8. திருக்குர்ஆன் விவரிக்கும் இறைதூதர்களின் வரலாறுகள் முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டதும் தெளிவான விளக்கங்களை உடையதும் ஆகும்.

இறைதூதர்களின் வலாற்றை விவரிக்கும் தன்மை பைபிளிலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது. மோசே (மூஸா நபி) ஸினாய் மலைக்குச் சென்றிருந்த சமயத்தில் இஸ்ரவேலர்கள் வணங்குவதற்காக பொன்னால் ஆன ஒரு காளைக் கன்றை உருவாக்கிக் கொடுத்தது மோசேயின் சகோதரனும் தீர்க்கதரிசியும் ஆன ஆரோன் (ஹாரூன் நபி) என்று பைபிளின் வரிகள் கூறுகின்றன. திருக்குர்ஆனில் மட்டுமல்ல பைபிள் கூட இறை தூதராக அறிமுகப்படுத்தும் ஹாரூன் நபி சிலைவணக்கத்துக்கு துணைபோனார்கள் என்பது அறிவுக்குப் பொருந்தாததாகும். இதே சம்பவத்தை திருக்குர்ஆன் விவரிக்குமிடத்து காளைக் கன்றை உருவாக்கி இஸ்ரவேலர்களுக்கு மத்தியில் சிலைவணக்கத்தைத் தூண்டியவன் இஸ்ரவேல் சமூகத்தில் உள்ள சாமிரி என்ற வழிகேடன் என்றும் அதன் காரணமாக அவன் இறைகோபத்திற்கு ஆளாகி நோயினால் பீடிக்கப்பட்டான் என்று கூறுகிறது (20: 85-97)

முடிவுரை :

இதுவரை குறிப்பிடப்பட்ட அனைத்து சம்பவங்களிலிருந்தும் திருக்குர்ஆன் கூறும் வரலாற்று சம்பவங்கள் பைபிளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது, அது முழுக்க முழுக்க இறைவேதம் என்பதும் தெள்ளத் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சம்பவங்களை விவரிக்குமிடங்களில் பைபிளில் காணப்படும் அபத்தங்கள், அறிவுக்குப் பொருந்தாதா விஷயங்கள், முரண்பாடுகள் எதுவும் திருக்குர்ஆனில் இல்லை. திருக்குர்ஆன் கூறும் வரலாறு படிப்பவர்களின் உள்ளத்தை உருக்குவதாகவும் இறையச்சத்தையும் சிறந்த படிப்பினையை வழங்குவதாகவும் உள்ளன. இவை அனைத்தும் திருக்குர்ஆன் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கற்பனையல்ல. அல்லாஹ் இறக்கிய உண்மை வேதம் என்பதற்கான சான்றுகளாகும்.
"விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக! உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை அவர் தவறான வழியில் செல்லவுமில்லை. அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை." (அல்குர்ஆன் : 53: 1-4) [1]

குர்ஆனில் திரித்துவமா?

குா்ஆனிலும்,சில வசனங்களில் அல்லாஹ் தன்னை நாம் என்றும்,  நமது என்றும் பயன்படுத்தியுள்ளான்,  இது ஏன் ? இதை வைத்து திரித்துவத்தை குர்ஆன் ஆதரிக்கிறது என எண்ணலாமா.?

இரண்டு விதமான பன்மைகள்:

ஒவ்வொரு மொழியிலும் இரண்டு விதமான பன்மைகள் உள்ளன.

ஒன்று - எண்ணிக்கையில் அல்லது அளவில்  ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கள் உண்டெனில்  அதனை பன்மை என்பதும், 

ஒரு மனிதருக்கு அளிக்கக் கூடிய  ‘மரியாதைப் பன்மை’ என்றும்  இரண்டு வகையான பன்மைகள் உள்ளன.

அ. உதாரணத்திற்கு ஆங்கில  மொழியில் –  இங்கிலாந்து நாட்டின் ராணி தன்னைப்  பற்றிக் குறிப்பிடும் பொழுது ‘ஐ’ என்று குறிப்பிடாமல் ‘வி’ என்று குறிப்பிடுவார். இதற்கு ‘மரியாதைப்  பன்மை’ (Royal Plural) என்று பெயர்.

ஆ. இறந்து போன இந்தியாவின்  முன்னாள் பிரதமர் ராஜீவ்  காந்தி ஹிந்தியில் பேசும்  பொழுதெல்லாம் ‘ஹம்  தேக்னா சாத்தா ஹை’ – நாம்  பார்க்க விரும்புகிறோம்’  என்று உரையாற்றுவதை வழக்கமாகக்  கொண்டிருந்தார். இங்கும்  ‘ஹமே’ என்கிற  ஹிந்தி வார்த்தைக்கு ‘நாம்’என்ற பொருளாகும். ‘ஹமே’ என்கிற  ஹிந்தி வார்த்தையை –  ஹிந்தி மொழியில் உள்ள  மரியாதைப் பன்மைக்கு உதாரணமாகக்  கொள்ளலாம்.

இ. அது போலவே அல்லாஹ், தன்னைப்  பற்றி அருள்மறையில் குறிப்பிடும்  பொழுது ‘நஹ்னு’ (நாம்  அல்லது நாங்கள் என்ற  பொருள்) என்னும்  அரபி வார்த்தை பயன் படுத்துகின்றான்.  இந்த  வார்த்தைக்கு ஒன்றுக்கு மேற்பட்டது என்கிற  அர்த்தத்தில் வருகின்ற பன்மை அல்ல. மாறாக மரியாதைப்  பன்மைக்கு பயன்படுத்தக் கூடிய வார்த்தை. இதே பாணியில் தான் அவ்வசனமும் அமைந்துள்ளது. 

இன்னும் சொல்லப்போனால், இயேசு கிறிஸ்து அவர்களோ, மரியம் அவர்களோ கடவுள் இல்லை என்று மிகத் தெளிவாக பல இடங்களில் குர்ஆன் தெளிவுப்படுத்தி உள்ளது.

இன்னும் கீழ்கண்ட வசனங்கள், இறைவனின் இலக்கணத்தை சரியாக விளக்கும்.

குர்ஆன் அத்தியாயம் 112 வசனங்கள் 1-4இதை தெளிவுபடுத்துகிறது .

1. "அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராக!

2. அல்லாஹ் தேவைகளற்றவன்.

3. (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.

4. அவனுக்கு நிகராக யாருமில்லை.
 [1]

இயேசுநாதரை ஏன் தேவனாக ஏற்க மறுக்கிறீர்கள்?

இயேசுநாதரை மட்டுமல்ல, முஸ்லிம்கள் இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் அனைவரையும் நம்புகின்றனர்.  இதில் ஆதாம் முதல் நோவா, தாவீது, சாலமன், மோசே, இயேசு உட்பட அனைத்து முந்தைய இறைத்தூதர்களும் அடக்கம். இது இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்று. 

"அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், ஆப்ரகாம், இஸ்மவேல், இஸ்ஹாக், யாகோபு மற்றும் (அவரது) வழித்தோன்றல்களுக்கு அருளப்பட்டதையும், மோசேவுக்கும், இயேசுவுக்கும் வழங்கப்பட்டதையும், ஏனைய நபிமார்களுக்கு தமது இறைவனிடமிருந்து வழங்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களுக்கிடையே பாகுபாடு காட்டமாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக. (திருக்குர்ஆன்  2:136)

இயேசு அவர்களை ஒரு இறைத்தூதர் என்று நம்பும் நாங்கள் ஏன் அவரை தேவனாக ஏற்று கொள்வதில்லை என்று பார்ப்போம். ஆதாம், நோவா, தாவீது, சாலமன், மோசே போன்ற முந்தைய இறைத்தூதர்கள் அனைவரும் போதித்த அதே ஏக இறைக் கொள்கையையே – அதாவது படைத்த இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்ற கொள்கையையே தான் இயேசு அவர்களும் போதித்தார் என்றே நாங்கள் நம்புகிறோம். இதுவே இஸ்லாத்தின் நிலைப்பாடும் கூட. 
இயேசு மக்களிடத்தில் பிரச்சாரம் செய்ததை குர்ஆன் சொல்கிறது. 

"இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடைசெய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை'' என்றே மஸீஹ் (கிறிஸ்து) கூறினார். (திருக்குர்ஆன் 5:72) 

ஆக, அல்லாஹ்வை / (பைபிளின் பிரயோகப்படி) பிதாவை தவிர வேறு எவரையும் வணங்கக்கூடாது என்பதே இயேசு அவர்களுடைய போதனை என்று அறிய முடிகிறது. இன்னும் சொல்லப்போனால், பைபிளிலும் இவ்வாறான கருத்துகள் காணக்கிடைக்கின்றன. 

வேதாகமத்தில் தேவன் ஒருவனைத் தவிர வேறு யாரையும் வணங்க கூடாது என்று இயேசு தெளிவாக கூறுகிறார்: 

"இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்."  - (லூக்கா, 4 அதிகாரம், 8வது வசனம்.) 

மேற்கண்ட வசனத்தில், இயேசு அவர்கள், சாத்தானை பார்த்து, "உன்னை படைத்ததே நான் தான், நீ என்னை வணங்கு என்று சொல்லவில்லை, மாறாக,தேவனாகிய அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வீராக என்று தான் சொன்னார்.
மேலும் இயேசு, தேவன் ஒருவனே என்றும் ஆணித்தரமாக கூறுகிறார்.

"இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்." (- மாற்கு, 12 அதிகாரம், 29வது வசனம்.)

ஒருவேளை, இயேசு அவர்கள் தன்னை கடவுளென மக்களுக்கு போதிப்பவராக இருந்திருந்தால், எவ்வாறு இப்படி போதிப்பார்..? மேற்கண்ட வசனத்தில், மக்களை அழைத்து, நம்முடைய கடவுள் ஒருவர் தான் என்று கூறுகிறார். "நம்முடைய" என்ற வார்த்தை உபயோகத்தின் மூலம், தான் கடவுள் அல்ல,தனக்கும் அவர்தான் கடவுள் என்பது சாமானியனுக்கும் புரிகிற எளிமையான விசயம் தான். :

இயேசு அவளிடம், “என்னைத் தொடாதே. நான் இன்னும் என் பிதாவிடம் திரும்பிச் செல்லவில்லை. ஆனால் போய் என் சகோதரர்களிடம், ‘நான் என் பிதாவிடமும் உங்களின் பிதாவிடமும் செல்கிறேன். நான் என் தேவனிடமும் உங்களின் தேவனிடமும் திரும்பிப் போகிறேன்’ என்று சொல்” என்றார். (யோவான் 20:17) 

மேற்கண்ட வசனத்திலுள்ள, "என் பிதா, என் தேவன்" என்ற வார்த்தைகள், அவர் கடவுள் அல்ல என்பதனை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. வேதாகமத்தில் ஒரு இடத்தில் கூட, இயேசு அவர்கள், தான் தேவன் என்றோ, தன்னை மக்கள் வணங்க வேண்டும் என்று போதித்தது போல் அமைந்த, எந்த குழப்பமுமில்லாத மிகத் தெளிவான நேரடியாக சொல்லும் ஒரு வசனம் கூட பைபிளில் இல்லவேயில்லை. இதை மனதில் வைத்துக் கொண்டு கீழே உள்ள வேதாகம வசனத்தை படியுங்கள்:

"இவ்விதமாய்க் இயேசு அவர்களுடனே பேசினபின்பு, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார்." மாற்கு 16 அதிகாரம் 19 வது வசனம்.

இயேசு தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார் என்று மேலே உள்ள வேதாகம வசனம் கூறுகிறது. இயேசுவும் தேவன் என்று நம்பினால், தேவன் அவர் அருகில் அமர்ந்துள்ள இயேசு (தேவன்) என்று இப்போது நாம் இரண்டு தேவன்களை காண்கிறோம்.  கள்ளம் கபடமற்ற ஒரு குழந்தையிடம் இந்த மாற்கு 16 அதிகாரம் 19 வது  வசனத்தில் எத்தனை தேவன்களை காண்கிறாய் என்று கேட்டு பாருங்கள். கண்டிப்பாக இரண்டு என்றே கூறும். இரண்டு தேவன்கள் இயேசு கற்பித்த இறைக் கொள்கைக்கு முரணாக அல்லவா உள்ளது? பல தெய்வ வணக்கம் ஒரு பெரும் பாவம்  என்று வேதாகமம் மிக தெளிவாக கூறுகிறது. 

"என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்." (யாத்திராகமம், 20 அதிகாரம், 3-5 வசனங்கள்.)

மேலும், இறைவனால் அனுப்பப்பட்ட எந்த இறைதூதரும் தன்னை தேவன் என்று ஒரு போதும் சொல்லவே மாட்டார். இந்த வேதாகம வசனத்தைப் பாருங்கள். "பின்பு, அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான்; அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே;" (மாற்கு 10 அதிகாரம் 18 வது வசனம்.) 

இந்த வசனத்தை புரிந்து கொள்ள ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். உங்களை ஒருவர் சூப்பர் ஸ்டார் என்று அழைத்தால், அதற்கு நீங்கள் "நீ என்னை சூப்பர் ஸ்டார் என்று சொல்வானேன்? ரஜினி ஒருவர் தவிர சூப்பர் ஸ்டார் ஒருவனுமில்லையே" என்று பதில் தந்தால், நீங்கள் ரஜினி இல்லை என்று தானே அர்த்தம். அதே போல், "இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே;" என்று இயேசு சொன்னால், இயேசு தேவன் இல்லை என்று தானே அர்த்தம். திருக்குர்ஆன் இந்த விடயம் குறித்துக் கூறுவதைப் பாருங்கள்:

எந்த மனிதருக்காவது வேதத்தையும், அதிகாரத்தையும், இறைதூதர் எனும் தகுதியையும் அல்லாஹ் வழங்கினால் (அதன்) பின் "அல்லாஹ்வை விட்டு எனக்கு அடிமைகளாக ஆகி விடுங்கள்!'' என்று மனிதர்களிடம் கூற இயலாது. மாறாக, "வேதத்தை நீங்கள் கற்றுக் கொடுப்போராக இருப்பதாலும், அதை வாசித்துக் கொண்டிருப்பதாலும் இறைவனுக்குரியோராக ஆகி விடுங்கள்!'' (என்றே இறைதூதர் கூறுவார்.) 3:79

இயேசு தான் ,தேவன் என்றோ, தன்னை மக்கள் வணங்க வேண்டும் என்று சொல்லவில்லை, இயேசுவை தேவன் என்று நம்பினால், இரண்டு தேவன்கள் ஏற்பட்டு "பல தெய்வ வணக்கம்" செய்த பாவத்திற்கு ஆளாவோம் என்பதனை நினைவில் வைத்து சிந்தித்து செயல்படுவோம்.

உங்கள் இறைவனின் பெயா் ?

எங்களது இறைவன் பெயர் ஜெகோவா ,உங்கள் இறைவனின் பெயா் என்ன???  என்ற கேள்வி கிறிஸ்தவ அன்பர்களிடத்தில் இருந்து முன்வைக்கபடுகிறது. 

இத்தகைய கேள்வியை நீங்கள் கேட்பதன் காரணம், இறைவனின் பெயா், ஜெகோவா (Jehovah) என்று அறியாமையில் நம்புவதுதான். பின்வரும்  பைபிள்  வசனத்தினால் அவ்வாறு நம்புகிறீர்கள். 

யாத்திராகமம் (exodus) 3:15 மோசேயிடம் , தேவன் மீண்டும், “இஸ்ரவேலர்களிடம், நீ  சொல்ல வேண்டியது இதுதான்: ‘உங்களுடைய முற்பிதாக்களின் தேவனும், ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமானவர் யேகோவா என்பவர் ஆவார். என் பெயரும்  எப்பொழுதும் யேகோவா ஆகும்.  அப்பெயரில்தான் தலைமுறை தலைமுறையாக ஜனங்கள் என்னை அறிவார்கள்.  யேகோவா என்னை உங்களிடம் அனுப்பினார்’ என்று ஜனங்களிடம் சொல்” என்றார். And God said moreover unto Moses, Thus shalt thou say unto the children of Israel, Jehovah, the God of your fathers, the God of Abraham, the God of Isaac, and the God of Jacob, hath sent me unto you: this is my name forever, and this is my memorial unto all generations. (Exodus 3:15) 

இந்த வசனத்தை படித்தால் ஜெகோவா கடவுள் பெயா் என்பது போல தான் தோன்றும். ஆனால், நாம் பைபிளின் மற்ற பதிப்புகளை (version) பார்த்தால்  இதன் உண்மை தன்மை புாியும். கீழ்காணும் ஏனைய பைபிள் பதிப்புகளில், ஜெகோவா (Jehovah)  என்பதற்கு பதிலாக The Lord/ God என்றே இருக்கும். 

EXODUS 3:15 (King James பதப்பில் ) And God said moreover unto Moses,  “Thus shalt thou say unto the children of Israel: ‘The LORD God of your fathers, the  God of Abraham, the God of Isaac, and the God of Jacob hath sent me unto you.’ This is My name for ever, and this is My memorial unto all generations. 

EXODUS 3:15 (DRA) And God said again to Moses: Thus  shalt thou say to the children of Israel: The Lord God of your fathers, the God of Abraham, the God of Isaac, and the God of Jacob, hath sent me to you: This is my name for ever, and this is my memorial  unto all generations. 

EXODUS 3:15 (ERV) And God said, “Tell the Israelites that you were sent by YAHWEH, the God of your ancestors—the God of Abraham, the God of Isaac, the God of Jacob. This will always be my name. It is how I want the  people to remember me from now on. 

EXODUS 3:15 (ESV) God also said to Moses, “Say this to  the people of Israel, ‘The LORD, the God of your fathers, the God of Abraham, the God of Isaac, and the God of Jacob, has sent me to you.’ This is my name forever, and thus I am to be remembered throughout  all generations. 

EXODUS 3:15 (AMP) God said also to Moses, This shall you say to the Israelites: The Lord, the God of  your fathers, of Abraham, of Isaac, and of Jacob, has sent me to you! This is My name forever, and by this name I am to be remembered to all generations. 

EXODUS 3:15 (CEB) God continued, “Say to the Israelites, ‘ The LORD, the God of your ancestors, Abraham’s God, Isaac’s God, and Jacob’s  God, has sent me to you.’ This is my  name forever; this is how all generations will remember me. 

இன்னும் எல்லா பதிப்புகளிலும் (வொ்சனில்) இருப்பதையும்  கீழுள்ள லிங்கில் பாா்த்து தெரிந்துக்கொள்ளவும். To see all Type of Translation click the below link.....
https://www.biblegateway.com/verse/en/ Exodus%203:15 

ஆக இதில் ஜெகோவா என்கின்ற  சொல்லிற்கு பதிலாக கடவுள் (Lord/God) என்றே  உபயோகிக்கப்பட்டுள்ளது, ஆதலால் ஜெகோவா(yhwh/jehovah) என்றால் ஹீப்ரு மொழியில் கடவுள் என்றே  அர்த்தம், மாறாக கடவுளின்  பெயரல்ல...

இப்போது ஜெகோவா என்னும்  வார்த்தை இயேசு (அலை)  அவா்களுக்கு தெரியுமா????

யூதா்கள், ஹிப்ரு மொழியில், கடவுளை குறிக்க YHWH என்ற நான்கு எழுத்துக்களை தான் உபயோகித்தனா், பின்பு ஜெகோவா என்ற  வார்த்தை எப்படி  வந்தது??? 

YHWH (יהוה)  என்னும நான்கு  எழுத்தை  வைத்துக்கொண்டு எப்படி கடவுளை  அழைப்பது, ஒரு பெயா் போன்று உச்சரிக்கமுடியும்படிக்கு,  YHWH என்ற வாா்த்தைகளில்,  கிரேக்க மொழியில் கடவுளை குறிக்கும் சொல்லான "AdOnAi" யில் ஒற்றைபடையிலிருக்கும்  A,O,A ஆகிய எழுத்துக்களை YHWH எழுத்துகளுக்குள் நுழைத்து  Y(A)H(O)W(A)H என்று அமைத்தனா், (லத்தின் மொழியில் Y என்பது J என  ஆக்கப்படும்,   Yehovah: Jehovah,  yoshua: Joshua)  இதையே Tetragrammaton என்பார்கள் .இவை ஆறாம் நூற்றாண்டுக்கு அல்லது  பத்தாம் நூற்றாண்டுக்கு பிறகு நடந்தது என்ற கருத்தப்படுகிறது. நம்மை படைத்த ஒருவன் இருக்கின்றான், அவனை சூப்பர் பவர் என பொது வழக்கில் சொன்னாலும், கடவுள் என்று தமிழிலும், காட் என்று ஆங்கிலத்தில் சொல்வது போல, அல்லாஹ் என்றால், நம்மை படைத்த அந்த படைப்பாளனை அரபியில் குறிக்கும் சொல்.

இயேசு தேவகுமரானாக இருக்க அவரை இறைத்தூதர் என்று சொல்வதேன் ?

இயேசு அல்லாஹ்வின் திருத்தூதர்' என்றும் ஒரே இறைவனாகிய கர்த்தரை (/அல்லாஹ்/படைப்பாளானை) மட்டும் மக்கள் வணங்க வேண்டும் என்று போதனை செய்த சீர்திருத்த வாதிகளில் ஒருவர்' என்றும் முஸ்லிம்கள் நம்புகிறோம் .

இறைவனுக்கு மகனா...?

இறைவன் தனித்தவன்
யாரிடமும் எந்தத் தேவையுமற்றவன்
அவன் யாரையும் பெறவில்லை
யாராலும் பெறப்படவுமில்லை
அவனுக்கு நிகராக யாருமே இல்லை
அவனே அகிலங்களைப் படைத்தவன்
பரிபாலிப்பவன்
ஆக்க, அழிக்க ஆற்றலுள்ளவன்
என்றென்றும் நிலையாக ஜீவித்திருப்பவன்.


இதுவே கடவுளைப் பற்றி அறிவுக்குப் பொருத்தமான உண்மை. கடவுளுக்கு மனைவி, மக்கள், அண்ணன், தம்பி, மாமன், மச்சான் போன்ற உறவினர்களைக் கற்பனை செய்து, கடவுளின் தன்மையை சிலர் மாசுபடுத்துகின்றனர். தங்களுக்கு வேதமுண்டு; அது தீர்க்கமான சான்றுகளைக் கொண்டது என்று நம்புகின்ற கிறித்தவச் சகோதரர்களும் இந்த மாயையில் வீழ்ந்து பைபிளின் சான்றுகளுக்கும், இயேசுவின் போதனைக்கும் மாற்றமாக, 'இறைவனுக்கு மகன் உண்டு' என்று நம்பி வருகின்றனர்.

கடவுளுக்கு மகன் தேவையில்லை! யார் மரணத்தையும், முதுமையையும், பலவீனத்தையும் எதிர்பார்க்கிறாரோ அவருக்குத் தான் சந்ததிகள் தேவை! யார் உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றின் பால் தேவையுடையவர்களாக இருக்கிறார்களோ அவர்களுக்குத் தான் - தங்களின் தள்ளாத வயதில் இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக - வாரிசு தேவை! மனிதனிடம் இந்தப் பலவீனங்கள் இருக்கும் காரணத்தினால் தான் அவன் வாரிசுகளை விரும்புகிறான்.
மரணமோ, முதுமையோ ஏற்படாது எனும் உத்தரவாதத்துடன் மனிதன் படைக்கப்பட்டிருந்தால் ஒரு போதும் அவன் வாரிசை விரும்ப மாட்டான். தன் மீது காரணமில்லாமல் சுமைகளை ஏற்றிக் கொள்ளவும் மாட்டான். மரணம், முதுமை போன்ற பலவீனங்களை எதிர்பார்த்திருக்கும் போதே,குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது சிரமம் என்றெண்ணி இரண்டோடு மனிதன் நிறுத்திக் கொள்கிறான். உருவான கருவைக் கூட கலைத்து விடுகிறான்.
சந்ததிகளால் தனக்கு ஆதாயம் இருக்கிறது என்ற நிலையிலேயே ஒரு அளவுக்கு மேல் குழந்தைகளை விரும்பாத மனிதன், குழந்தைகளால் எந்த ஆதாயமும் இல்லை என்றால் ஒருக்காலும் குழந்தைகளை விரும்ப மாட்டான். கடவுளை நம்புகின்ற மக்கள் கடவுளுக்கு மரணம் உண்டு என நம்புவதில்லை. கடவுள் களைப்படைந்து விடுவார் என்றும் நம்புவதில்லை. அவ்வாறிருந்தும் கடவுளுக்குச் சந்ததிகளைக் கற்பனை செய்து விட்டனர். கடவுளைச் சரியாகப் புரிந்து கொண்ட எவருமே கடவுளுக்குச் சந்ததி தேவையில்லை என்பதை மறுக்க மாட்டார்.

பைபிளின் படி பல தேவகுமாரர்கள் :

அதே நேரத்தில் பைபிளில் இயேசு அவர்களை மட்டும் தேவகுமாரன் என்று சொல்லப்படவில்லை மாறாக பலரையும் சொல்லியுள்ளது . அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: 'இவர் என்னுடைய நேச குமாரன்; இவரில் பிரியமாயிருக்கிறேன்' என்று உரைத்தது.(மத்தேயு 3:17)

'என்னுடைய நேச குமாரன்' என்று இயேசுவைப் பற்றி கர்த்தர் கூறியதாக பைபிளின் இந்த வசனம் கூறுகிறது. இயேசுவைத் தனது குமாரன் என்று கர்த்தரே சொல்லியிருக்கும் போது அவரை இறை மகன் என்று தானே கருத முடியும்? என்று கிறித்தவ நண்பர்கள் நினைக்கின்றனர்.

கர்த்தர் தனது நேசகுமாரன் என்று குறிப்பிட்டது தான் இயேசு இறை மகன் என்ற நம்பிக்கைக்கு அடிப்படை என்றால் இவ்வாறு நம்புவதில் கிறித்தவர்கள் உண்மையாளர்களாகவும், நேரான பார்வையுடையவர்களாகவும் இருக்க வேண்டும். பைபிளை நாம் ஆய்வு செய்தால் இயேசுவை மட்டுமின்றி இன்னும் பலரைத் தனது குமாரன் என்று கர்த்தர் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. பைபிளில் யாரெல்லாம் கர்த்தரின் குமாரர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளார்களோ அவர்கள் அனைவரையும் இறை மகன்கள் என்று கிறித்தவர்கள் நம்புவது தான் நேர்மையான அணுகுமுறையாக இருக்கும்.
பைபிளில் இறை மகன்' என்று குறிப்பிடப்பட்டவர்கள் பற்றிய விபரத்தைக் காண்போம்.

இஸ்ரவேல் இறை மகன்:

அப்போது நீ பார்வோனோடே சொல்ல வேண்டியது என்னவென்றால்  'இஸ்ரவேல் என்னுடைய குமாரன்; என் சேஷ்ட புத்திரன். எனக்கு ஆராதனை செய்யும்படி என் குமாரனை அனுப்பி விடு என்று கட்டளையிடுகிறேன். அவனை விட மாட்டேன் என்பாயாகில் நான் உன்னுடைய குமாரனை உன் சேஷ்டபுத்திரனைச் சங்கரிப்பேன் என்று கர்த்தர் சொன்னார் என்று சொல்' என்றார்.(யாத்திராகமம் 4:22,23)

இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன், எப்பிராயீம் என் சேஷ்ட புத்திரனாயிருக்கிறான்.
(எரேமியா 31:9)

இயேசுவை இறைவனின் குமாரர் எனக் கூறும் முந்தைய வசனத்தை விட இது தெளிவான வசனம் ஆகும். ஆனால் இஸ்ரவேலைக் கூறும் இவ்வசனத்தில் கர்த்தரே இவ்வாறு கூறியதாகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எனவே இயேசுவை விட இஸ்ரவேலர் தாம் கர்த்தரின் குமாரர் எனக் குறிப்பிடப்பட அதிகம் தகுதி பெறுகிறார். இயேசுவை கர்த்தரின் மகன் என்று நம்பும் கிறித்தவ நண்பர்கள் இஸ்ரவேலையும் கடவுளின் மகன் என்று ஏன் நம்புவதில்லை?  என்பதைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர். இறை மகன்கள் பட்டியல் இன்னமும் நீள்கிறது!

தாவீது இறை மகன்

நீர் என்னுடைய குமாரன்; இன்று நான் உம்மை ஜனிப்பித்தேன்' (சங்கீதம் 2:7) என்று கர்த்தர் தாவீதை நோக்கிக் கூறுகிறார்.

நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன். அவன் எனக்குக் குமாரனாய் இருப்பான். (முதலாம் நாளாகமம் 17:13)

சாலமோன் இறை மகன்:

அவன் (சாலமோன்) என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான். *அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்.* நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன். இஸ்ரவேலை ஆளும் அவனுடைய ராஜாங்கத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைப்படுத்துவேன் என்றார்.
(முதலாம் நாளாகமம் 22:10)

எப்ராயீம் இறை மகன்

இஸ்ரவேலுக்கு நான் பிதாவாக இருக்கிறேன். எப்ராயீம் என் சேஷ்டபுத்திரனாயிருக்கிறான்.(எரேமியா 31:9)

சாமுவேல் இறை மகன்

நான் அவனுக்குப் பிதாவாய் இருப்பேன். அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்.(இரண்டாம் சாமுவேல் 7:14)

இயேசு இறை மகன்' எனக் கூறப்படுவதால் இயேசுவை அழைத்து உதவி தேடக் கூடிய கிறித்தவர்கள் அதே வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ள மற்றவர்களை அவ்வாறு அழைப்பதில்லையே அது ஏன்? இத்தனை தேவகுமாரர்களிருக்க இயேசுவை மட்டும் இறைவனின் மகன்' எனக் கூறுவது பைபிளின் போதனைக்கே முரணானதாகும்.

எல்லா மக்களும் தேவ குமாரர்கள்:

நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்! (உபாகமம் 14:1)

இறை மகன்' எனும் அடைமொழி கடவுளின் புத்திரர்கள்' எனும் கருத்தில் பைபிளில் பயன்படுத்தப்படவில்லை; இறைவனின் அடியார்கள்' எனும் கருத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம். இறை மகன்' என்பதைக் கிறித்தவர்கள் எந்தப் பொருளில் விளங்கி வைத்திருக்கிறார்களோ அந்தப் பொருளில் பைபிளில் பயன்படுத்தவில்லை என்பதையும் இதிலிருந்து அறியலாம்.

இயேசுவின் வாக்கு மூலம் மேலும் எந்த இயேசுவைக் கிறித்தவர்கள் இறை மகன் என்று நம்புகிறார்களோ அந்த இயேசுவும் பல சந்தர்ப்பங்களில் நன் மக்களைக் கடவுளின் புத்திரர்கள்' என்று சொல்லியிருக்கிறார். 

சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்! அவர்கள் தேவனுடைய புத்திரர்கள் எனப்படுவார்கள்.
(மத்தேயு 5:9)

இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்.
(மத்தேயு 5:45)

அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும். உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்.
(லூக்கா 6:35)

நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்றுஆவியானவர் தாமே நம்முடைய ஆவியுடனே கூடச் சாட்சி கொடுக்கின்றார்.
(ரோமர் 8:16)

அப்பொழுது நான் உங்களை ஏற்றுக் கொண்டு உங்களுக்குப் பிதாவாயிருப்பேன். நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்கள் என்று சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்கிறார்.
(இரண்டாம் கொரிந்தியர் 6:18)

எல்லா மக்களையும் கர்த்தர் தமது குமாரர்கள் என்கிறார்.
இயேசுவும் அவ்வாறே கூறுகிறார்.
இன்றைய கிறித்தவத்தை வடிவமைத்த பவுல் என்கிற சவுலும் அவ்வாறே கூறுகிறார்.
இதிலிருந்து குமாரர்' எனும் பதம் நல்ல மனிதர்கள் எனும் கருத்திலேயே கையாளப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். தங்கள் மனோ இச்சைப் பிரகாரம் விளக்கம் கொடுத்துப் புரிந்து கொள்வதை விட பைபிளின் வெளிச்சத்தில் புரிந்து கொண்டால் தான் பைபிளை மதித்தவர்களாக ஆக முடியும். 

இறை மகன், இறைக் குமாரன் என்பன போன்ற சொற்களுக்கு இறைவனிலிருந்து பிறந்தவர்,அதனால் இறைவனாகவே ஆகிவிட்டவர் என்று பொருள் கொள்வதா?

பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதீர்கள்! பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். (மத்தேயு 23:9)

பூமியில் உள்ள ஒருவரையும் பிதா - தந்தை என்று சொல்லக் கூடாது என்று இந்த வசனத்தில் கட்டளையிடப்படுகிறது. அந்தக் கட்டளையின் பிரகாரம் நம்மைப் பெற்ற தந்தையைக் கூட தந்தை என்று கூறக் கூடாது. அவ்வாறு கூறினால் இந்தக் கட்டளையை மீறுவதாக ஆகும். ஆனாலும் ஒவ்வொரு கிறித்தவரும் தனது தந்தையை தந்தை என்று தான் கூறுகிறார். அப்படியானால் ஒருவரையும் பிதா என்று கூறக் கூடாது என்ற கட்டளையை அவர் மீறுகிறாரா? என்பதைச் சிந்திக்கும் போது தான் இங்கே பிதா' என்பது எந்தப் பொருளில் கையாளப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. மேலும் பிதா என்பது இரண்டு பொருளில் பயன்படுத்தப்படும் சொல் என்பதும் புரிகிறது.

படைத்தவன், கடவுள் என்ற பொருளும் இச்சொல்லுக்கு உண்டு. பெற்ற தந்தை எனவும் பொருள் உண்டு. படைத்தவன், கடவுள் என்ற பொருளிலேயே இங்கே இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது நிச்சயம்.

'பூமியில் உள்ள எவரையும் கடவுள் என்று கூறாதீர்கள். பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்கள் கடவுள்' என்று சொல்லிப் பார்த்தால் இதன் அர்த்தம் தெளிவாக விளங்குகிறது.

'பூமியில் உள்ள எவரையும் உங்கள் தந்தை என்று சொல்லாதீர்கள்! பரலோகத்திலிருப்பவரே உங்கள் தந்தை' என்று சொல்லிப் பார்த்தால் அது அனர்த்தம் ஆகிறது.

பிதா' என்பதற்குப் படைத்தவன்' என்பது பொருள் என்றால் அதற்கு எதிர்ச் சொல்லாகப் பயன்படுத்தப்படும் குமாரன்' என்பதற்கு படைக்கப்பட்டவன்' என்ற பொருளைத் தவிர வேறு பொருளிருக்க முடியாது.
பிதா என்பதற்கு இறைவன்' என்பது பொருள் என்றால் அதற்கு எதிர்ச் சொல்லாகப் பயன்படுத்தப்படும் மகன் என்பதற்கு அடியான்' என்பது தான் பொருளாக இருக்க முடியும்.

இந்தச் சாதாரண உண்மையைக் விளங்கிக் கொண்டால் 'இயேசு இறைவனுக்குப் பிறந்தவர்; அதனால் இறைவனாகவே ஆகி விட்டவர்' என்று கூற மாட்டோம்.

மற்ற மனிதர்களை எல்லாம் தேவகுமாரன் என்றெல்லாம் சொன்ன இடங்களில் வெறும் தேவகுமாரன் என்றே உள்ளது, ஆனால் இயேசுவை பற்றி சொல்லுகையில் , ஒரே பேறான/ ஜனப்பித்த குமாரன் (Begotten Son) என்று சொல்லப்பட்டுள்ளது .அதனால் தான் நாங்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று கூறலாம் . ஆம்,இயேசு அவர்களை பற்றி அவ்வாரே குறிபிடப்பட்டுள்ளது ;

பைபிளின் நான்கு இடங்களில் உள்ளது. 

(i) யோவான் 1 அதிகாரம் 14. அந்த வார்த்தை மாம்சமாகி,  கிருபையினாலும் சத்தியத்தினாலும்  நிறைந்தவராய்,  நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்;  அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. And the Word was made flesh, and dwelt among us, (and we beheld his glory, the glory as of the only begotten of the Father,) full of grace and truth. 

KJV (King James Version) பதிப்பு பைபிளில் இப்படியிருக்கிறது. ஆனால் NIV (New International Version) பைபிளில் இல்லை, இந்த "பேரான /ஜனப்பித்த " வாா்த்தையை அகற்றிவிட்டார்கள். ஏனென்றால் (மூலப்பிரதி தான் இல்லையே)  இருக்கின்ற பழைமையான பிரதியில் இந்த வாா்த்தை இல்லை, இடை சொருகப்பட்ட வார்த்தை என்ற காரணத்தினால் .

ஆதாரம்; கீழுள்ள லிங்கில் எல்லா பைபிள் பதிப்புகளையும் ஓப்பிட்டு பாா்த்து தெரிந்துக்கொள்ளுங்கள். https://www.biblegateway.com/verse/en/John%201:14 

(ii) யோவான்  3 அதிகாரம்  16. தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனைவிசுவாசிக்கிறவன்  எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய்  உலகத்தில் அன்புகூர்ந்தார்.  For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not  perish, but have everlasting life. 

இதுக்கும் இதே  நிலைமை  தான், ஒரே பேரான என்ற வார்த்தை இடையில் இட்டுக்கட்டப்பட்டது. மூலப்பிரதிகளில் இல்லை.https://www.biblegateway.com/verse/en/John%203:16 

(iii) யோவான்  3 அதிகாரம்  18. அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடையநாமத்தில்  விசுவாசமுள்ளவனாயிராத படியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று. He that believeth on him is not condemned: but he that believeth not is condemned already, because he hath not believed in the name of the only begotten Son of God.

இந்த வசனத்திற்கும் அதே நிலையே ..https://www.biblegateway.com/verse/en/John%203:18 

(iv) I யோவான்  4 அதிகாரம் 9. தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம்  பிழைக்கும்படிக்கு தேவன்  அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால்  தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.  In this was manifested the love of God toward us, because that God sent his only begotten Son into the world, that we might live through him.  

இந்த வசனத்திற்கும் அதே நிலையே ..https://www.biblegateway.com/verse/en/1%20John%204:9 

ஆக, இருக்கின்ற நான்கு வசனங்களில் வரும் வார்த்தைகளும் இட்டுகட்டப்பட்து என்பதனால் பல பைபிள் பதிப்புகளில் நீக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது.

இன்னொரு இடத்கில், கர்த்தர் ,தாவீதை ஜனபித்ததாக சொல்லப்படும் வசனத்தில் எந்த பிரிச்சனையும் இல்லை என்பது முக்கிய அம்சம் .

(சங்கீதம் 2 அதிகாரம் 7.) தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய  குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்; I will declare the decree: the LORD hath said unto me, Thou art my Son; this day have I begotten thee.

இந்த வசனத்தில் இருக்கும் 'ஒரே பேரான' என்ற வார்த்தை எந்த பதிப்பும் நீக்கப்படவில்லை. அதில் எந்த பிரச்சினையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இயேசுவை குறித்து கர்த்தர் சொல்கையில்,"இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன்(அடிமை) ..." (மத்தேயு 12:18) 

ஆக, குர்ஆன் மட்டுமல்ல பைபிளில் கூட இயேசு அவர்களை இறைவனின் அடியானாகவே போதிக்கிறது. இவ்வாறான பல காரணங்களால், நாங்கள் இயேசு அவர்களை கண்ணியமிக்க இறைதூதர் என நம்புகிறோம். 

ஆதி பாவம்

ஆதிபாவம் எனும் இஸ்லாத்தில் கிடையாது.மாறாக அவரவர் செய்த பாவத்திற்கு அவரவரே தான் பொறுப்பாளர்கள் . 

(பாவம் செய்யும்) எவரும் தமக்கு எதிராகவே சம்பாதிக்கிறார். ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான் – அல் குர்ஆன் 06:164. 

இது இஸ்லாத்தின் மிகப்பெரிய அடிப்படைக் கொள்கையாகும். இந்த அடிப்படையில் தான் கிறித்தவ மதத்தில் இருந்து முற்றாக இஸ்லாம் மாறுபடுகிறது. எல்லோரும் பாவிகளாகப் பிறந்து அந்தப் பாவத்தை ஏசு சுமந்து கொண்டார் எனக் கூறப்படும் சித்தாந்தத்தை இஸ்லாம் மறுக்கிறது. "ஒருவர் பாவம் செய்தால் அந்தப் பாவம் அவரைத்தான் சாரும். ஆதம் (அலை) பாவம் செய்தால் ஆதமுடைய பிள்ளைகள் யாரும் அந்தப் பாவத்தில் பங்காளிகள் இல்லை. எனவே பிறக்கும் போதே யாரும் பாவியாகப் பிறக்க மாட்டார்கள்'' என இஸ்லாம் கூறுகிறது. அனைவரது பாவங்களையும் சுமப்பதற்காக ஏசு பலி கொடுக்கப்பட்டார் என்று கிறித்தவர்கள் கூறுவதையும் இஸ்லாம் மறுக்கிறது. 

குற்றம் செய்யும் மனிதர்களைத் தண்டிக்க உலக நாடுகளில் சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. போப் ஆண்டவர் ஆட்சி செய்யும் வாடிகன் உள்ளிட்ட கிறித்தவர்கள் ஆட்சி செய்யும் நாடுகளிலும், மற்ற நாடுகளிலும் தந்தை செய்யும் கொலைக்காகவும், இன்ன பிற குற்றங்களுக்காகவும் மகனைத் தண்டிக்கும் வகையில் சட்டம் இயற்றப்படவில்லை. அவ்வாறு சட்டம் இயற்றுவது அறிவுக்கு எதிரானது என்பது உலக மக்கள் அனைவருக்கும் தெரிகிறது. தந்தை செய்யும் குற்றத்துக்கு மகன் தண்டிக்கப்படுவான் என்று எந்த நாட்டிலாவது சட்டம் இயற்றப்பட்டால் ஒட்டு மொத்த உலகமும் சேர்ந்து இது மனித உரிமைக்கு எதிரானது; காட்டுமிராண்டித்தனமானது என்று கொதித்து எழுந்து விடும். 

மனிதர்களின் சாதாரண அறிவுக்கே இது மடமை என்று தெரிகிறது என்றால் படைத்த இறைவன் இப்படி ஒரு முட்டாள்தனமான சட்டத்தை இயற்றுவானா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆதாம் பாவம் செய்தார் என்றால் அதற்கு அவர் மட்டுமே பொறுப்பு. அதற்காகப் பாவியாகக் கருதப்பட வேண்டும் என்றால் ஆதாம் மட்டுமே பாவியாகக் கருதப்பட வேண்டும். அவர் செய்த பாவத்தால் அவரது பிள்ளைகளும் எப்படி பாவிகளாவார்கள்? 

பைபிளும் கூட இக்கொள்கையை மிகத் தெளிவாகக் கூறுவதைப் பாருங்கள்! 

“பிள்ளைகளுக்காகப் பிதாக்களும், பிதாக்களுக்காகப் பிள்ளைகளும் கொலை செய்யப்பட வேண்டாம், அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலை செய்யப்பட வேண்டும்” (உபாகமம் : 24:16) 

“பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும். குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை. தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை. நீதிமானுடைய நீதி அவன் மேல் தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன் மேல் தான் இருக்கும்” (எசேக்கியேல் 18:20) 

“பிதாக்கள் திராட்சக் காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப் போயின என்று அந்நாட்களில் சொல்ல மாட்டார்கள், அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான். எந்த மனுஷன் திராட்சக் காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப் போகும்”  (எரேமியா 31:29,30) 

நமது பகுத்தறிவு எதைச் சரி காண்கிறதோ அதையே தான் பைபிளின் மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன. பைபிளின் போதனைப்படியும் அறிவுப்பூர்வமான பார்வையிலும் நாம் பாவிகளாகவே பிறக்கவில்லை எனும் போது நம்முடைய பாவத்தைச் சுமக்க இயேசு தனது உயிரைத் தியாகம் செய்யும் பேச்சுக்கே இடமில்லை. ஆதம் செய்த பாவத்தால் நாமும் பாவிகளாகப் பிறக்கிறோம் என்று வைத்துக் கொண்டால் இன்னொரு வகையிலும் இக்கொள்கை தவறாக இருக்கிறது.  

நாம் பாவிகளாகப் பிறந்தால் நாம் தானே அதற்காகப் பரிகாரம் தேட வேண்டும்? இதற்காக இயேசு ஏன் பலியாக வேண்டும்? அவர் பலியானால் அது அவரது பாவத்துக்குத் தான் பரிகாரமாக அமையுமே தவிர நம்முடைய பாவத்துக்கு எப்படி அது பரிகாரமாக ஆகும்?  இயேசுவின் போதனைகள் பைபிளில் எழுதப்பட்டுள்ளன. மனிதன் பிறக்கும் போது பாவியாகப் பிறக்கிறான் என்றோ, அந்தப் பாவங்களை நான் சுமந்து கொள்வதற்காக என் உயிரைப் பலி கொடுக்கிறேன் என்றோ இயேசு கூறியதாக பைபிளின் கூறப்படவில்லை.  

ஆதாம் செய்ததற்கு- பூமி சபிக்கப்பட்டு, அது முட்களை முளைப்பித்தது. அதன் பலனை வியர்வை சிந்தி சாப்பிட வேண்டும். ஏவாள் செய்ததற்கு பெண்களுக்கு பிரசவ வலியே தண்டனை (ஆதியாகமம் 3:17-18) 
பாம்பு உருவத்தில் இருந்தவன் பாம்பு அல்ல. சாத்தான்! பாம்பின் உருவத்தில் வந்த சாத்தானை சபித்து தண்டிக்காமல், பகுத்தறிவில்லாத பாம்பை ஏன் சபிக்கணும்? வயிற்றால் ஊர்ந்து மண்ணை திண்ண (?) செய்ய வேண்டும்??   
அம்மா ஏவாள் செய்ததற்கு, மற்ற பெண்களுக்கு ஏன் பிரசவ வேதனை?? இது நியாயமா? ஒரு வாதத்திற்கு ஆதிபாவம் இவர்களுக்கு கடத்தபட்டுள்ளது என்று வைத்து கொண்டால், மலட்டு தன்மையுள்ள பெண்களுக்கு இந்த பாவம் கடத்தபடவில்லை என்ற முடிவுக்கு வரவேண்டும்!!  
மேலும் இந்த பாவம் விவசாயிகளுக்கு மட்டுமே கடத்தப்பட்டதாக கருத வேண்டும் ஏனெனில் ஏனையோருக்கும் இந்த சாபத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை இந்த வசனங்களை ஒழுங்காக படித்தால் புரியும். இதை மீட்டு மன்னிக்க இயேசு இறந்தார் என்றால், பாம்பு வயிற்றால் ஊர்ந்து போகக்கூடாது. எந்த பெண்ணுக்கும் பிரசவ வேதனை இருக்க கூடாது!! அப்படி எதுவும் நிகழாததால், சிலுவை பலியால் எதுவும் நடக்கவில்லை என்றே புரிகிறது!! [2]

Saturday, November 18, 2017

பல அற்புதங்களை செய்தவரை இறைவன் இல்லை என்று சொல்வது நியாயமா?

இயேசு அற்புதங்கள் செய்ததினால் இறைதன்மை பெறுவாரா? சுயமாக அற்புதம் செய்தாரா?? 

நான் தேவனுடைய  ஆவியினாலேபிசாசுகளைத்  துரத்துகிறபடியால், தேவனுடைய  ராஜ்யம் உங்களிடத்தில்  வந்திருக்கிறதே. [மத்தேயு Mathew 12 அதிகாரம் 28.] 

நான் தேவனுடைய  விரலினாலேபிசாசுகளைத்  துரத்துகிறபடியால், தேவனுடைய  ராஜ்யம் உங்களிடத்தில்  வந்திருக்கிறதே. இறந்த லாஸரஸ்ஸை எழுப்பியப்போது என்னாவாயிற்று, தொடா்ந்து வாசிப்போம்.[லூக்கா Luke 11 அதிகாரம்  20.] 

அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப்போட்டார்கள்.  இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து:பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.  காரணத்தை சொல்கிறார்.[யோவான் John 11 அதிகாரம்  41.] 

நீர் எப்பொழுதும் எனக்குச்  செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்;  ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச்  சூழ்ந்துநிற்கும் ஜனங்கள்  விசுவாசிக்கும்படியாக அவர்கள்  நிமித்தம் இதைச் சொன்னேன்  என்றார். [யோவான் John 11 அதிகாரம்  42.] 

நான் என் சுயமாய்  ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான்  கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்;எனக்குச் சித்தமானதை நான்  தேடாமல், என்னை அனுப்பின  பிதாவுக்குச் சித்தமானதையே நான்  தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. [யோவான் John  5 அதிகாரம்  30.] 

ஜனங்கள்  அதைக்கண்டு ஆச்சரியப்பட்டு, மனுஷருக்கு இப்படிப்பட்ட  அதிகாரத்தைக்  கொடுத்தவராகிய  தேவனை மகிமைப்படுத்தினார்கள். [மத்தேயு Mathew 9 அதிகாரம்  8.] 

இஸ்ரவேலரே, நான்  சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைத் தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார். [அப்போஸ்தலர் Acts  2 அதிகாரம்  22. ] 

முற்காலத்தில்  மக்கள் கடவுளை விசுவாசிக்கும்பொருட்டு தனது தூதா்களுக்கு அற்புதங்கள்  செய்யவைத்து  முழுமையாக உதவினார்,  அற்புதங்கள்  செய்ததினால் எவரும்  கடவுள் ஆகமுடியாது .. பைபிள்  படி  கள்ளத்தீா்க்கதாிசிகலும் அற்புதங்கள்  செய்வார்கள், அதனால்  அவா் கடவுளாக முடியுமா??  

ஏனெனில்,கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி,  கூடுமானால்  தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய  அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். [மத்தேயு Mathew 24 அதிகாரம்  24.] 

வேறுசில தூதா்களும் அற்புதங்கள்  செய்துள்ளனா், அதனால்   அவா்கள் கடவுளாக முடியுமா ? 

எலிஸா  குருடா்களுக்கு பார்வைகொடுத்தார்(II Kings இராஜாக்கள் 6:17&20). 

வாற்கோதுமையின் இருபது அப்பங்களையும்  தாள் கதிர்களையும் 100 பேருக்கு பங்கிட்டு கொடுத்தாா் (பரக்கத்)   (II Kings இராஜாக்கள் 4:44) 

எலிஸா நாமனை குணப்படுத்தினாா் (II Kings இராஜாக்கள்  5:14). 

அதே போன்றதான எலிஸாவும்  செய்தார் (I Kings இராஜாக்கள் 17:22). 

எலிஸாவின்  எழும்பு பட்டதும் இறந்தவா் உயிர்ப்பித்தார் (II Kings இராஜாக்கள் 13:21). 

மோஸே  மற்றும் அவரது  மக்கள் சாவுக்கடலை கடந்தனா்(Exodus - யாத்திராகாமம் 14:22).