Tuesday, November 28, 2017

குர்ஆனில் திரித்துவமா?

குா்ஆனிலும்,சில வசனங்களில் அல்லாஹ் தன்னை நாம் என்றும்,  நமது என்றும் பயன்படுத்தியுள்ளான்,  இது ஏன் ? இதை வைத்து திரித்துவத்தை குர்ஆன் ஆதரிக்கிறது என எண்ணலாமா.?

இரண்டு விதமான பன்மைகள்:

ஒவ்வொரு மொழியிலும் இரண்டு விதமான பன்மைகள் உள்ளன.

ஒன்று - எண்ணிக்கையில் அல்லது அளவில்  ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கள் உண்டெனில்  அதனை பன்மை என்பதும், 

ஒரு மனிதருக்கு அளிக்கக் கூடிய  ‘மரியாதைப் பன்மை’ என்றும்  இரண்டு வகையான பன்மைகள் உள்ளன.

அ. உதாரணத்திற்கு ஆங்கில  மொழியில் –  இங்கிலாந்து நாட்டின் ராணி தன்னைப்  பற்றிக் குறிப்பிடும் பொழுது ‘ஐ’ என்று குறிப்பிடாமல் ‘வி’ என்று குறிப்பிடுவார். இதற்கு ‘மரியாதைப்  பன்மை’ (Royal Plural) என்று பெயர்.

ஆ. இறந்து போன இந்தியாவின்  முன்னாள் பிரதமர் ராஜீவ்  காந்தி ஹிந்தியில் பேசும்  பொழுதெல்லாம் ‘ஹம்  தேக்னா சாத்தா ஹை’ – நாம்  பார்க்க விரும்புகிறோம்’  என்று உரையாற்றுவதை வழக்கமாகக்  கொண்டிருந்தார். இங்கும்  ‘ஹமே’ என்கிற  ஹிந்தி வார்த்தைக்கு ‘நாம்’என்ற பொருளாகும். ‘ஹமே’ என்கிற  ஹிந்தி வார்த்தையை –  ஹிந்தி மொழியில் உள்ள  மரியாதைப் பன்மைக்கு உதாரணமாகக்  கொள்ளலாம்.

இ. அது போலவே அல்லாஹ், தன்னைப்  பற்றி அருள்மறையில் குறிப்பிடும்  பொழுது ‘நஹ்னு’ (நாம்  அல்லது நாங்கள் என்ற  பொருள்) என்னும்  அரபி வார்த்தை பயன் படுத்துகின்றான்.  இந்த  வார்த்தைக்கு ஒன்றுக்கு மேற்பட்டது என்கிற  அர்த்தத்தில் வருகின்ற பன்மை அல்ல. மாறாக மரியாதைப்  பன்மைக்கு பயன்படுத்தக் கூடிய வார்த்தை. இதே பாணியில் தான் அவ்வசனமும் அமைந்துள்ளது. 

இன்னும் சொல்லப்போனால், இயேசு கிறிஸ்து அவர்களோ, மரியம் அவர்களோ கடவுள் இல்லை என்று மிகத் தெளிவாக பல இடங்களில் குர்ஆன் தெளிவுப்படுத்தி உள்ளது.

இன்னும் கீழ்கண்ட வசனங்கள், இறைவனின் இலக்கணத்தை சரியாக விளக்கும்.

குர்ஆன் அத்தியாயம் 112 வசனங்கள் 1-4இதை தெளிவுபடுத்துகிறது .

1. "அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராக!

2. அல்லாஹ் தேவைகளற்றவன்.

3. (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.

4. அவனுக்கு நிகராக யாருமில்லை.
 [1]

No comments:

Post a Comment