ஆதிபாவம் எனும் இஸ்லாத்தில் கிடையாது.மாறாக அவரவர் செய்த பாவத்திற்கு அவரவரே தான் பொறுப்பாளர்கள் .
(பாவம் செய்யும்) எவரும் தமக்கு எதிராகவே சம்பாதிக்கிறார். ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான் – அல் குர்ஆன் 06:164.
இது இஸ்லாத்தின் மிகப்பெரிய அடிப்படைக் கொள்கையாகும். இந்த அடிப்படையில் தான் கிறித்தவ மதத்தில் இருந்து முற்றாக இஸ்லாம் மாறுபடுகிறது. எல்லோரும் பாவிகளாகப் பிறந்து அந்தப் பாவத்தை ஏசு சுமந்து கொண்டார் எனக் கூறப்படும் சித்தாந்தத்தை இஸ்லாம் மறுக்கிறது. "ஒருவர் பாவம் செய்தால் அந்தப் பாவம் அவரைத்தான் சாரும். ஆதம் (அலை) பாவம் செய்தால் ஆதமுடைய பிள்ளைகள் யாரும் அந்தப் பாவத்தில் பங்காளிகள் இல்லை. எனவே பிறக்கும் போதே யாரும் பாவியாகப் பிறக்க மாட்டார்கள்'' என இஸ்லாம் கூறுகிறது. அனைவரது பாவங்களையும் சுமப்பதற்காக ஏசு பலி கொடுக்கப்பட்டார் என்று கிறித்தவர்கள் கூறுவதையும் இஸ்லாம் மறுக்கிறது.
குற்றம் செய்யும் மனிதர்களைத் தண்டிக்க உலக நாடுகளில் சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. போப் ஆண்டவர் ஆட்சி செய்யும் வாடிகன் உள்ளிட்ட கிறித்தவர்கள் ஆட்சி செய்யும் நாடுகளிலும், மற்ற நாடுகளிலும் தந்தை செய்யும் கொலைக்காகவும், இன்ன பிற குற்றங்களுக்காகவும் மகனைத் தண்டிக்கும் வகையில் சட்டம் இயற்றப்படவில்லை. அவ்வாறு சட்டம் இயற்றுவது அறிவுக்கு எதிரானது என்பது உலக மக்கள் அனைவருக்கும் தெரிகிறது. தந்தை செய்யும் குற்றத்துக்கு மகன் தண்டிக்கப்படுவான் என்று எந்த நாட்டிலாவது சட்டம் இயற்றப்பட்டால் ஒட்டு மொத்த உலகமும் சேர்ந்து இது மனித உரிமைக்கு எதிரானது; காட்டுமிராண்டித்தனமானது என்று கொதித்து எழுந்து விடும்.
மனிதர்களின் சாதாரண அறிவுக்கே இது மடமை என்று தெரிகிறது என்றால் படைத்த இறைவன் இப்படி ஒரு முட்டாள்தனமான சட்டத்தை இயற்றுவானா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆதாம் பாவம் செய்தார் என்றால் அதற்கு அவர் மட்டுமே பொறுப்பு. அதற்காகப் பாவியாகக் கருதப்பட வேண்டும் என்றால் ஆதாம் மட்டுமே பாவியாகக் கருதப்பட வேண்டும். அவர் செய்த பாவத்தால் அவரது பிள்ளைகளும் எப்படி பாவிகளாவார்கள்?
பைபிளும் கூட இக்கொள்கையை மிகத் தெளிவாகக் கூறுவதைப் பாருங்கள்!
“பிள்ளைகளுக்காகப் பிதாக்களும், பிதாக்களுக்காகப் பிள்ளைகளும் கொலை செய்யப்பட வேண்டாம், அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலை செய்யப்பட வேண்டும்” (உபாகமம் : 24:16)
“பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும். குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை. தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை. நீதிமானுடைய நீதி அவன் மேல் தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன் மேல் தான் இருக்கும்” (எசேக்கியேல் 18:20)
“பிதாக்கள் திராட்சக் காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப் போயின என்று அந்நாட்களில் சொல்ல மாட்டார்கள், அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான். எந்த மனுஷன் திராட்சக் காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப் போகும்” (எரேமியா 31:29,30)
நமது பகுத்தறிவு எதைச் சரி காண்கிறதோ அதையே தான் பைபிளின் மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன. பைபிளின் போதனைப்படியும் அறிவுப்பூர்வமான பார்வையிலும் நாம் பாவிகளாகவே பிறக்கவில்லை எனும் போது நம்முடைய பாவத்தைச் சுமக்க இயேசு தனது உயிரைத் தியாகம் செய்யும் பேச்சுக்கே இடமில்லை. ஆதம் செய்த பாவத்தால் நாமும் பாவிகளாகப் பிறக்கிறோம் என்று வைத்துக் கொண்டால் இன்னொரு வகையிலும் இக்கொள்கை தவறாக இருக்கிறது.
நாம் பாவிகளாகப் பிறந்தால் நாம் தானே அதற்காகப் பரிகாரம் தேட வேண்டும்? இதற்காக இயேசு ஏன் பலியாக வேண்டும்? அவர் பலியானால் அது அவரது பாவத்துக்குத் தான் பரிகாரமாக அமையுமே தவிர நம்முடைய பாவத்துக்கு எப்படி அது பரிகாரமாக ஆகும்? இயேசுவின் போதனைகள் பைபிளில் எழுதப்பட்டுள்ளன. மனிதன் பிறக்கும் போது பாவியாகப் பிறக்கிறான் என்றோ, அந்தப் பாவங்களை நான் சுமந்து கொள்வதற்காக என் உயிரைப் பலி கொடுக்கிறேன் என்றோ இயேசு கூறியதாக பைபிளின் கூறப்படவில்லை.
ஆதாம் செய்ததற்கு- பூமி சபிக்கப்பட்டு, அது முட்களை முளைப்பித்தது. அதன் பலனை வியர்வை சிந்தி சாப்பிட வேண்டும். ஏவாள் செய்ததற்கு பெண்களுக்கு பிரசவ வலியே தண்டனை (ஆதியாகமம் 3:17-18)
பாம்பு உருவத்தில் இருந்தவன் பாம்பு அல்ல. சாத்தான்! பாம்பின் உருவத்தில் வந்த சாத்தானை சபித்து தண்டிக்காமல், பகுத்தறிவில்லாத பாம்பை ஏன் சபிக்கணும்? வயிற்றால் ஊர்ந்து மண்ணை திண்ண (?) செய்ய வேண்டும்??
அம்மா ஏவாள் செய்ததற்கு, மற்ற பெண்களுக்கு ஏன் பிரசவ வேதனை?? இது நியாயமா? ஒரு வாதத்திற்கு ஆதிபாவம் இவர்களுக்கு கடத்தபட்டுள்ளது என்று வைத்து கொண்டால், மலட்டு தன்மையுள்ள பெண்களுக்கு இந்த பாவம் கடத்தபடவில்லை என்ற முடிவுக்கு வரவேண்டும்!!
மேலும் இந்த பாவம் விவசாயிகளுக்கு மட்டுமே கடத்தப்பட்டதாக கருத வேண்டும் ஏனெனில் ஏனையோருக்கும் இந்த சாபத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை இந்த வசனங்களை ஒழுங்காக படித்தால் புரியும். இதை மீட்டு மன்னிக்க இயேசு இறந்தார் என்றால், பாம்பு வயிற்றால் ஊர்ந்து போகக்கூடாது. எந்த பெண்ணுக்கும் பிரசவ வேதனை இருக்க கூடாது!! அப்படி எதுவும் நிகழாததால், சிலுவை பலியால் எதுவும் நடக்கவில்லை என்றே புரிகிறது!! [2]

No comments:
Post a Comment